வணக்கம் சங்கீத மேகம் குழு….
சங்கீத மேகம் 25 நிகழச்சியில் என்னால் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம். அது மட்டுமின்றி மீண்டும் முதலாவது இடம் என்னால் பிடிக்க முடிந்ததில் மிகவும் சந்தோசம். சங்கீத மேகம் குழுவினருக்கும் GTC
FM க்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!
எனக்கு பிடித்த பாடல்: ஆனந்த குயிலின் பாட்டு
திரைப்படம் :காதலுக்கு மரியாதை(1997)
பாடியவர்கள்: சித்ரா & மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: பழனி பாரதி
நடிகர்கள் : விஜய், ஷாலினி
எனக்கு பிடித்த வரிகள்:
கிளிகளின் கூண்டுக்குள்ளே…
புது உலகம் பிறந்ததே…
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே…
ஒரு வானம் விாிந்ததே…
பூமி எங்கும் கண்டதில்லை…
பாசத்தை உன் போலே…
வேறெதுவும் தேவை இல்லை…
அன்புக்கு முன்னாலே...
இந்த சொந்தங்கள் போதுமே…
எங்கள் இன்பங்கள் கூடுமே…
அன்பென்னும் தீபம் ஏற்றிய…
வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்…
வீடு என்றால் மோட்சம் என்றால்…
வீடு கண்டோம் நேசத்திலே...
இந்த வாரம் எனது குடும்பத்திற்காகவும் GTC குடும்பத்திற்காகவும் இந்த பாடலை கேட்கின்றேன். இந்தப் பாடல் எனக்கு பிடித்த 😍பாடல்களில் ஒன்றாகும்.
இந்த பாடல் அழகான குடும்பம், அதன் சந்தோசம், சகோதர பாசம் மற்றும் பல விடயத்தை கூறுகின்றது.
என்னுடய இரு அண்ணன்களும் என்னை மிகவும் அன்பாக பார்ப்பார்கள். அதுபோல் இப்பொழுது எனது மூன்றாவது அண்ணா Shaa கிடைத்துள்ளார். இப்பொழுது நான் அந்த பாடலில் வரும் நாயகி போல உணர்கிறேன்🤣🤣🤣😍.
நான் இந்த பாடலை Special a என் 3 அன்பு அண்ணன்களுக்காகவும்(Sanjay, Sanjeev, SHAA) மற்றும் எனது அக்காவுக்காகவும் கேட்கின்றேன். இந்த பாடலை GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுடன் கேட்டு மகிழலாம்.
எனது தாழ்மையான வேண்டுகோள்:
எனது அறிமுகம்(intro script) தோழி அனிதா எழுதினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மற்றும் எனது முதலாவது இடத்திற்குரிய பரிசு பாடலை Coffee BoY தெரிவு செய்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன். இது ஒரு GTC பயனராக(User) கேட்கின்றேன், ஒரு பணியாளராக(staff) இல்லை.நன்றி!!!!!
மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் மற்றும் GTC FM கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
சஞ்சனா(Sanju)😘.
பின் குறிப்பு: GTC இல் எனக்கு கிடைத்த இனிமையான காலத்துக்கும் மற்றும் உங்கள் அன்பிற்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் நண்பர்களே.நன்றி!!!!!