Advanced Search

Author Topic: *~*தரையிறங்கிய நிலவு*~*  (Read 22959 times)

March 26, 2019, 10:54:56 am
Read 22959 times

AnJaLi

*~*தரையிறங்கிய நிலவு*~*
« on: March 26, 2019, 10:54:56 am »
அகிலமே இருண்டிருந்த
அந்திமாலை வேளையது
விட்டத்தைக் கண்டவாறே
விழுந்திருந்தேன் கட்டிலிலே

ஒளிவிளக்கு கைகளில்
ஏந்திவந்த பெண்ணழகு
உடன்வியந்து எழுந்தேனே
இளமஞ்சள் ஒளியினாலே
அழகுபொன் முகமது
அந்திநேர ஆதவனோ!!

தீண்டிடவே முற்பட
தலைகவிழ்ந்தொரு குறுநகை
வெண்ணிற ஆடையில்
வெட்கித்தான் சிவந்தாளோ
உரையாதோ!! நீளாதோ!!
உணர்த்திட்ட மின்னணைப்பு...