Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-041  (Read 9113 times)

April 08, 2024, 01:51:36 pm
Read 9113 times

RiJiA

கவிதையும் கானமும்-041
« on: April 08, 2024, 01:51:36 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-041


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: May 06, 2024, 06:09:10 pm by RiJiA »

April 09, 2024, 08:37:02 am
Reply #1

Shree

Re: கவிதையும் கானமும்-041
« Reply #1 on: April 09, 2024, 08:37:02 am »

மைக் கனவு...


ஓர் விரல் புரட்சி தான் நம் வாழ்க்கை என்று
        சிறுது அழகூட்ட தென்ப்படும் வியப்பு
விரலின் அழகை மெருகூட்ட அல்ல
        வாழ்கையின் எண்ணத்தை செறிவூட்ட
சிறிதேனும் மாறும் என எண்ணிக்கொண்டே
        சிறுதூரம் செல்வோம் என ஏங்கும் அவ்விரல்
சற்று திகைப்புடன் செலவழிக்கும் அந்நேரத்தின் மதிப்பு
        தன்னுடைய அனைத்தையும் மாற்றுமோ ?

மாற்றும் எண்ணமானது விரலோடு மற்றும் அல்ல
       அதனுடன் இருக்கும் எனக்கானதும் கூட
விரலின் பொறுப்பு அல்ல அந்த மாற்றம்
        அதனோடு அடங்கும் என் எண்ணத்தின் வெளிப்பாடும்
எண்ணிய அனைத்தும் செயலாற்ற
        அச்சிறு விரல் பொதுமெனில், செயல்படுமா நம் எண்ணம் ?
அனைத்தையும் மாற்றுமா என்றால் இயலாது, இருந்தும்
        மாற்றத்தின் விதையையாவது விதைப்போம்
மாறுவது என்னுடைய அனைத்துமாக இல்லை என்றாலும்
        அதை எண்ணி ஏங்கும் என் விரலின் மைக் கனவு...

       

ஶ்ரீ

April 12, 2024, 09:19:07 am
Reply #2

Twinkle2

Re: கவிதையும் கானமும்-041
« Reply #2 on: April 12, 2024, 09:19:07 am »
வருங்காலம் இளைஞர் சமுதாயாம்
சுயமாக சிந்திதல் ;
நல்லது கெட்டது பகுத்து அறிதல் ;

ஊடகத்தில் கருத்து சொல்வது , பகிர்தல் அதை மட்டுமே ,செய்யாமல்
நடைமுறையில் செயல் படுத்துவது நல்லது.;
நாம் ஒவ்வொருவரும் சுத்தமானால் , நாடு தானாக சுத்தமாகும் ..

கட்டுமரம் போல ஒட்டி இருப்போம்..
தனக்கு வந்தால் மட்டுமே அது கஷ்டம் என்று எண்ணாமல்
சுயநலம் தவிர்க்க  ஒற்றுமையாக வாழ்வோம் .

மக்களுக்கு  கொடுத்த இந்த குடி உரிமையை ;
விளையாட்டாய் என்னாமல்  .
ஒருதாய் மக்கள் ஒன்றாய் என்றும் நிற்க வேண்டும் ..

வருங்காலம் நம் கையில் தான் ;
கொடுக்கும் பனத்திற்காக தேர்வு செய்யாமல் :
நம் நாடு நம் மக்கள் ;
என்ற என்ணத்தோடு தேர்வு செய்க .....

April 12, 2024, 02:17:32 pm
Reply #3
Re: கவிதையும் கானமும்-041
« Reply #3 on: April 12, 2024, 02:17:32 pm »
வாக்குரிமை நம் வாழ்வுரிமை !
வாழ்ந்து பார்ப்போம் வாடா என்றே தேர்தல் களம் நம்மை அழைக்கிறது !
இளைஞனே நம் குலம் காக்க எழுந்து வா !
நோட்டுக்கு ஓட்டென்ற காலம் போகட்டும் !
வீட்டுக்கு வீடு ஓட்டென்று ஆகட்டும் !
வாக்குறுதிகளை நம்பி
நம் வாழ்வுரிமைகளை இழந்த காலம் நீங்கட்டும் !
நம்மை நாமே செதுக்கும் காலம் நம் கையில் வந்துவிட்டது.

சிறுதுளி மை தானென்று சிந்திக்காமல் விரல் நீட்டிய காலங்களை விரட்டியடிப்போம்.
நம்மை ஆள்பவர் யார் என்றே நாம் தீர்மானிப்போம் !
நம் தீர்மானிப்பில் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாகட்டும் !
நாடாளுமன்ற தேர்தல் நடுநடுங்கட்டும் !
கடமையை செய்வோம் என்று கடமைக்கு ஓட்டிடாமல்.
நம் கடமைகளை யார் தம் கடமையாக எண்ணுகிறார் என்றே சிந்தித்து வாக்களிப்போம் !
ஒரு நாள் மட்டும் விரலுக்கு மை பூசி
வாழ்நாளெல்லாம் முகத்துக்கு கரி பூசும்
தேர்தல் திருவிழா அல்லவோ இது !
வாக்குறுதிகளை நம்பி நம் வாழ்வுரிமைகளை விட்டுக் கொடுக்காதீர் !
நம் வாழ்வுரிமைகளை நம்பி நம் வாக்குரிமைகளை தீர்மானிப்போம் !
« Last Edit: April 13, 2024, 10:07:39 am by Sivarudran »

April 13, 2024, 10:15:25 pm
Reply #4

My bestie

Re: கவிதையும் கானமும்-041
« Reply #4 on: April 13, 2024, 10:15:25 pm »
வாக்கு
வயது பதினெட்டெனில் மதியினில் நினை-வாக்கு !
வாக்காளர்பட்டியளில் பெயர் சேர்ப்பதை கன-வாக்கு! !
என்வாக்கு எனதுரிமையெனும் நிலைப்பாட்டை உரு-வாக்கு!
அனைவரின் கரம்பற்றி வாக்காளர்பட்டியலை வலு-வாக்கு!!
விலையின்றி மின்னணுயெந்திரத்தில் செலுத்திடும் உன்-வாக்கு!
பாரினில் உயர்த்திடும் நம்நாட்டின் செல்-வாக்கு!!
தேர்தலில் போட்டியிடுவோர்தம் கொள்கை சொல்-வாக்கு!
பகுத்தறிந்தே போட்டுவிடு என்றும் நல்-வாக்கு!!
வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று பதி-வாக்கு!
முறையே சட்டமியற்றுவதில் உன்பங்கினை மறை-வாக்கு! !
ஜனநாயக கடமைதனை நற்பாங்கினில் நிறை-வாக்கு!
மக்களாட்சியின் மாண்புதனை மென்மேலும் உயர்-வாக்கு! !
            நான்கு விரல்களின் தியாகத்தில் தான் ஒரு விரல் உயர்ந்து நிற்கிறது இந்த மை நமது தேசத்தின் வலிமை.

April 15, 2024, 03:43:07 pm
Reply #5

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-041
« Reply #5 on: April 15, 2024, 03:43:07 pm »
மாற்றம் ஒன்றே மாறாதது (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது



5 வருடத்திற்க்கு ஒரு முறை கையில் போடும் அடையாளம்
அடுத்த 5 வருடத்திற்ககான மக்களின் வாழ்விற்கான அடையாளம்

18 வயது வந்ததும் வருகிறது ஓட்டுப்போடும் உரிமை
போட்டபின்பு மக்கள் இருப்பதோ தனிமை

ஆட்சியை மாற்றவேண்டும் என்பதர்க்காக அல்ல இந்த தேர்தல்
நம்மை ஆட்சி செய்பவரினை நாமே தேர்ந்தெடுப்பதே இந்த தேர்தல்

விரலில் மை வைப்பார் ஓட்டுப்போடதருக்கு அடையாளமாய்
அந்த மை மறைவதற்குள் சொன்ன வாக்கு போய்விடும் மாயமாய்

அனைத்திலும் கலப்படம் நாடாகும் இ ந்த உலகத்தில்
ஓட்டுப்போடும் போது நடக்காத இந்த நகரத்தில்

காச வாங்கிட்டு போடுறியே ஓட்ட ,காச வாங்கிட்டு போடுறியே ஓட்ட
உனையலாம் நடுரோட்டுல வச்சிஅடிக்க வாங்கணும்டா சாட்ட ....

தேர்தலில் வெற்றியடைந்தால் தருவாங்கப்ப இலவசம்
இவங்கதான் மக்களை சோம்பேறியாகும் வேஷம்
இவங்கதான் மக்களை சோம்பேறியாகும் வேஷம்

ஒரு விரல் புரட்சின்னு ஊருப்பூர கத்துறோம்
தேர்தல் முடிஞ்சா வாயதானே பொத்துறோம்
ஏதும் கேட்காம நாம  வாயதானே பொத்துறோம்

கள்ள  ஓட்ட போடுற குடிமகன்
நல்ல ஓட்ட போடமா வீட்டுல இருக்க குடிமாகான்

எந்த வேலையும் செய்யாம சம்பளம் வரும் அரசியல் வாதிக்கு
அட வேலையை செஞ்சு கொடுத்த கிம்பளம் கிடைக்கும் அரசியல் வாதிக்கு

நண்பா நண்பி நா வரேன் டா அரசியலுக்கு
சரி அந்த கத நமக்கு எதுக்கு அதுக்கு இன்னும் காலம் இருக்கு


பெரிசு சிறுசு எல்லாமே அரசியல் பத்தி பேசி துள்ளுது
மச்சி அரசியல மாற்றம் ஒன்றே மாறாதது
ஏமாற்றம் ஒன்றே மாறாதது


நீலவானம்
« Last Edit: April 15, 2024, 04:00:52 pm by Passing Clouds »

April 17, 2024, 06:42:43 pm
Reply #6

Eagle 13

Re: கவிதையும் கானமும்-041
« Reply #6 on: April 17, 2024, 06:42:43 pm »
மக்களாட்சி மகத்துவமாம்!
தேர்தல் என்றும் தனித்துவமே?
நம் நாட்டின் உரிமையை மீட்க
வாக்களிப்போம்
ஒவ்வொரு தொகுதியிலும் பேரணி|
சில நேரம் தேர்தல் முடிந்தால்
நீ யார் இனி |
வீடு வீடாய் துண்டு பிரச்சாரம்!
 எங்கு பார்த்தாலும் வீட்டுச்சுவர்களில் விளம்பரம்
தொலைகாட்சிகளிலும் தேர்தல் நிலவரம்
விவாதம் வைத்தால் எளிதில கலவரம்
நம்பும்படி இல்லை சிலர் இந்நேரம்|
சரியான தலைவனுக்கு வாக்களி உன் நெஞ்சோரம்!
உன் கையில் இடும் மை!
நாட்டின் கனவுகளை பொய்யாக்காமல் பார்த்துக்கொள்!.