Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-027  (Read 11721 times)

June 28, 2023, 12:52:39 am
Read 11721 times

Administrator

கவிதையும் கானமும்-027
« on: June 28, 2023, 12:52:39 am »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-027


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: July 17, 2023, 06:47:38 pm by Administrator »

June 29, 2023, 06:35:48 pm
Reply #1

Eagle 13

Re: கவிதையும் கானமும்-027
« Reply #1 on: June 29, 2023, 06:35:48 pm »
மூவர்ண கொடியுடன் முப்படையும்

எதிரிகூட்டம் அதனிடம்
அடிபணியும்!

இந்திய இராணுவம் அது நாட்டின் ஆணவம்!
எல்லைகளை எதிரிகள் சூழ்ந்தால்
போர் புரியும்!
போருக்குபின் உயிர் இருக்குமா? என்று யாருக்கு தெரியும்!
வேலையுள்ள நாட்களில்,

தினமும் வீடுவாசல் இல்லை!
சொந்தம் பந்தம் முகம் காண்பது வெகுநாட்களாகும் தொல்லை!
 வங்களாதேசம் எனும்,

 ஒரு தேசத்தை உருவாக்கியது!
 ஒரு சமூகத்திற்கு ஒரு நாட்டையே பரிசாக்கியது!
 பின் பலபேர்,
கார்கிலில்   தான் வாழ்க்கை தியாகம் செய்தனர்!
நாட்டின் அமைதியை உறுதி செய்தனர்!

போரின்போது,

பங்கு பெறுகிறார்கள்!

போரில்லாத போது!

இயற்கை சீற்றங்களுக்கு எதிராண போராட்டங்களில் தோள் கொடுக்கின்றனர்.!

விண்ணிலும் மண்ணிலும்

நீரிலும், நாட்டிற்காக நின்று போர்புரிகின்றனர்!
மேலும்

பச்சோந்தி போல்,

மலைபோல் மாறியும்

செடியோடு செடியாக மாறியும் ஊடுருவி போர்புரிகின்றனர் !

அகிம்சையால் விடுதலை பெற்ற நாட்டிற்கு ! போரட்டாமாக இவர்கள் போராடி அமைதியை கொடுக்கிறார்கள்!
நாட்டிற்காக தினம் நாடோடி

 ஆனார்கள்! .
 உலகிலுள்ள அத்தனை மனிதர்கள்

திருந்தும்வரை! இவர்களை போல்,
ஒவ்வொரு நாட்டிலும் தன் நாட்டை காக்க இராணுவ வீரர்கள் வீட்டை விட்டு

ஓடோடி போவார்கள்!.


« Last Edit: July 02, 2023, 08:48:25 pm by Eagle 13 »

June 30, 2023, 02:09:22 am
Reply #2

Sanjana

Re: கவிதையும் கானமும்-027
« Reply #2 on: June 30, 2023, 02:09:22 am »
இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கம்…

மரணம் அவர்களுக்கு ஒரு பயம் அல்ல,
தாய்நாட்டைப் பாதுகாப்பதே அவர்களின் குறிக்கோள்,
நாட்டிற்காக இரவும் பகலும் போராடுபவர்கள்,
அவர்கள் செய்யும் பெரிய சேவை
பல யுகங்கள் போற்றப்படவேண்டியது…

பயங்கரவாதம் நிறைந்த உலகில்,
நாம் பாதுகாப்பான காற்றை சுவாசிக்கவும்,
நம் வீட்டில் அமைதியாக வாழவும்,
கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் கடமையைச் செய்பவர்கள்,
அவர்களின் பணி போற்றப்படவேண்டியது…

கடுமையான போர்கள் நம்மை அழித்திருக்கும்,
எங்களுக்காக அவர்கள் எல்லையில் இருப்பவர்கள்,
அவர்களால் நாம் உயிருடன் இருக்கிறோம்,
அவர்களின் தியாகம் இல்லை எனில்,
நாங்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்க முடியாது….

இரவு பகல் வித்தியாசம் தெரியாதவர்கள்,
எப்போதும் போராட தயாராக இருப்பவர்கள்,
குளிர் அல்லது வெப்பமான நாட்களைப் பற்றி பொருட்படுத்தாதவர்கள்,
தங்கள் சொந்த வாழ்க்கையை ஒருபோதும் உறுதியாக நம்பாதவர்கள்,
அவர்கள் தங்கள் குடும்பத்தை சந்திப்பார்களா என்று தெரியாதவர்கள்…

அனைவரும் எழுந்து மரியாதை கொடுங்கள்,
அவர்களின் தியாகம் நமது சுதந்திரத்திற்காக,
ஒவ்வொரு நாளும் வீரம், நம்பிக்கை மற்றும் வலிமையுடன் போராடுபவர்கள்,
அவர்களின் தியாகம் மற்றும் தேசபக்தியை போற்றுவோம்,
மரணம் அவர்களுக்கு என்றும் நிரந்தரம் அல்ல…



SALUTE TO ALL BRAVE SOLDIERS(WORLDWIDE) AND THEIR FAMILIES...
« Last Edit: June 30, 2023, 02:21:27 am by Sanjana »

June 30, 2023, 04:30:01 am
Reply #3

Ruban

Re: கவிதையும் கானமும்-027
« Reply #3 on: June 30, 2023, 04:30:01 am »
நான் எழுதும் இந்த வரிகள்
என் தாய் நாட்டிற்காய் போர் புரிந்து
மரித்த ஒவ்வொரு வீரர்களுக்கும்
எனது வரிகளை சமர்ப்பிக்கிறேன்

எங்கள் பாரத நாட்டை பாழாக்கும்
பாவிகளிடமிருந்து பாதுகாக்க புறப்பட்டனர்
எங்கள் பாரத திருமகன்கள் போர் வீரர்களாய்
பாயும் புலிகளாய் எதிரில் வரும் எதிரிகளை

நொறுக்க உயிர் கொண்டு எழுந்த
எங்கள் யுத்த வீரர்கள் அவர்கள் முப்படைகள்
பாரதம் என்பது எங்கள் உயிர் மூச்சு அதை
தொட நினைத்தால் போய்விடும் எதிரியின் மூச்சு

பாரதமே எங்கள் தாயடா தாய்க்கு நிகர் யாருடா
பிள்ளையை கருவறையில் சுமப்பவள் தாய்
நாட்டிற்காக மறித்த வீரர்களை
கல்லறையில் சுமக்கிறால் பாரதத்தாய்

எல்லையை காக்க எங்கிருந்தோ இருந்து
வந்த நாங்கள் இன்று ஒன்றாய் ஒருங்கிணைந்து
நிற்கிறோம் ஒரே தாயின் மகன்களாய்
பாரதத் தாயின் புதல்வர்களாய்

விண்ணிலே பறந்து எல்லையை காக்கும்
வீரமங்கைகளுக்கு முதல் வணக்கம்
விண்ணை கிழித்து சொல்லும் விமானத்தில்
எதிரியோடு விளையாடும் வீரமங்கைகள்

பாரத தாயின் மகள்களே நீங்கள்
தேசத்திற்கு கிடைத்த மாணிக்கங்கள்
இந்திய நாட்டை இமைய்ப் பொழுதும் காக்கும்
வீரமங்கையே நீ எதிரியை வீழ்த்தும் வேங்கையே
« Last Edit: July 01, 2023, 12:28:39 am by Ruban »
💚 RuBaN 💚

July 01, 2023, 11:27:46 am
Reply #4

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: கவிதையும் கானமும்-027
« Reply #4 on: July 01, 2023, 11:27:46 am »
ராணுவ வீரனே !!

இம்மண்ணின் மைந்தனே !!
ரத்தம் சிந்தி யுத்தம் காணும் போர் வீரனே !!
தன்னம்பிக்கையும், சாதுர்த்தியமும்
நிறைந்தவனே !!
எந்நாட்டின் ராணுவ வீரனே !!

சொந்தம், பந்தம் யாவும்
என் நாடே என்று உரைப்பாரே.....
இன்பம், துன்பம் எதுவானாலும்
என் எல்லையே என்று இருப்பாரே....
மனதிலே வேதமாய்,
என்றும் ஜெய்ஹிந்த் என்றே ஒலிப்பாரே.....

தாய் நாட்டின் மகனாய்
தன்னை தத்துக்கொடுப்பாரே...
அன்பு, நேசம், பாசம், யாவும்
தனக்குள்ளே தகர்த்தெறிவாரே....

காடு, மேடு, பனி என்று பாராமல்
காத்திடும் வீரனே,
தாயகமே தன் வீடாய் என்னும் புதல்வனே,
மூவர்ணக்கொடியை நிலை நாட்ட
வந்த வெற்றி வீரனே....

இது என் நாடு இந்தியா,
என்று போராட
மனதினை வலிமையாக்கி,
பீரங்கி குண்டுகளிலும்,
துப்பாக்கி முனைகளிலும், 
எதிரிகளை வீழ்த்திடுவாரே...

தயக்கம் ஏதுமின்றி,
தன் உயிரை நாட்டிற்கு விதைப்பாரே....
இவரே நம் தாயகம் காக்கும் வீரத் தமிழரே....
நம் ராணுவ வீரனே !!
« Last Edit: July 01, 2023, 11:43:18 am by Vaanmugil »

July 08, 2023, 12:45:47 pm
Reply #5

Dhiya

Re: கவிதையும் கானமும்-027
« Reply #5 on: July 08, 2023, 12:45:47 pm »

கலி யுகத்தில் கடவுள் தோன்றுவதில்லை என்பர், காவல் தெய்வமாய் நீங்கள் இருப்பதை அறியாதவர்....

தொல்காப்பியத்தின் நடுகல் தொடங்கி இன்றைய புதுக்கவிதை வரை உங்கள் வீரத்தை பறைசாற்றாத நூல் தமிழில் உண்டோ...

மதம் மொழி இனம் அனைத்தையும் கடந்து பாரதம் ஒன்றே மூச்சு தாய் திருநாட்டை காப்பதே கடமை என்று ஒன்றாய் சேர்ந்த சக்தி நீங்கள்...

கடும் குளிரிலும் அசாதாரண சூழ்நிலையிலும் உன் மன உறுதியினால் இயல்பாய் பொருந்திப் போனவன் நீ....

கைபேசி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மட்டுமே கொண்டு வருடம் முழுக்க குடும்பத்தை மனதில் சுமப்பவன் நீ...

தீய சக்திகளிடம் இருந்தும் பேரிடரின் பொழுதும் உன் உயிரை துட்சமாய் மதித்து எங்கள் உயிரை காப்பவன் நீ....

உன்னை ஈன்றவளும் உனக்குள் கலந்தவளும் உன்னால் பிறந்தவளும் பெருமிதம் கொள்ளும் பேராண்மை நீ...

ஒரு நடிகனுக்கு கிடைக்கும் புகழை விட ஒரு ராணுவ வீரனுக்கு பேரும் புகழும் கிடைத்திடல் வேண்டும்...

ஒவ்வொரு ராணுவ வீரனின் குடும்பத்திற்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும்....

போரில் வீர மரணம் எய்தியவரின் குடும்பத்தை தாங்கிப் பிடிக்க கரங்கள் நீள வேண்டும்...

அவன் தலைமுறையே பசி இன்றி தன்மானத்துடன் நிறைவாய் வாழ வழி செய்ய வேண்டும்...

வீரக்கனவனை இழந்த கைம்பெண்ணை மணக்க மனங்கள் பெரிதாக வேண்டும்....

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் வீட்டிற்கு ஒரு ராணுவ வீரனை அனுப்பும் உறுதி வேண்டும்....

காவல் தெய்வமாய் நீ இருப்பதால் கவலை இன்றி நாங்கள் உறங்குகிறோம்... அதற்கு கைமாறாய் உன் குடும்பத்தையே காக்கும் பொறுப்பு எங்களுக்கும் உண்டு... நிம்மதியுடன் உறங்கு தோழா....

வந்தே மாதரம்....





« Last Edit: July 08, 2023, 12:47:55 pm by Dhiya »