மெத்த படித்த மேதைகளும், மெய்சிலிர்க்கும் பாடலொன்றை இசைமீட்ட கேட்கின்றேன்..! இசைக்கென்ற இனமுண்டோ? இதய ராகம் ஒன்றல்லவா அதன் மொழி..!
சலனமில்லா இருதயத்தில், சரணமது கேட்கையிலே சரணாகதி அடைகின்றேன்..!
இசையே போதுமென்று, இன்னிசையில் தஞ்சமடைந்தேன்..!
பட்டிக்காட்டில் ஒலித்தாலும்.. பாட்டுக்கொரு அர்த்தமுண்டு...! பட்டணத்தில் ஒலித்தாலும்.. பல்லவியில் புரிதலுண்டு..!
இசையின் பிறப்பிடம் இயற்கையென்பேன்..!
வாழ்வியலில் ஒன்றி போன, இசைக்கும் இயற்கைக்கும், பிரிவென்பதில்லை என்பேன்..!
இசையின்றி இல்லை இங்கே எவர் வாழ்வும்...!
இளவயதும் வயோதிகமும் விதிவிலக்கல்ல இசை முன்னே யாவும்...!
ஆராரோ தாலாட்டில், அழகாக அறிமுகமாகும் நம்மிடம்...! உறக்கத்திலும் தாயை போல தாலாட்டும் உறைவிடம் ..!
உருவமற்ற உணர்வலை..!
உற்சாகம், உவகை, காதல், கடமை , கோபம், நல்லது, கெட்டது , நட்பு, சொந்தம் என அனைத்திலும் பிரதிபலிக்கும் இதன் அலை...!
மொழிவளம் மெருகேறும் இசைவழி குரல் கேட்டால்..!.
ரணமான மனக் காயமும், மயிலிறகாய் மாறிப்போகும் இசைப் பாட்டால்...!
பிறப்பில் தொடங்கி, இறப்பிலும் தொடரும் இசை காதல்..!
ஒருமனதாக ஒலிக்கும் ஒற்றை காதல் இசை. .!
ஒப்பீடுகள் இல்லா ஓசை இசை..!
புல்லாங்குழலில் புதைந்திருக்கும் இசை கேட்டு, பூக்காத செடியிலும் பூ மலரும்..!
வானத்தில் வளர்பிறையும் நீடிக்கும் வசந்த கானமதை கேட்டால்..!
மானுடர் அறியா நம் மனநிலையும், மறக்காமல் தெரிந்து கொண்டு பின்தொடரும் மாயக் கள்வன் இசை..!
யாதொரு வரம்புமின்றி, மாறி மாறி இசை மீட்டி, மனதை மயங்க வைக்கும் வசியக்காரன்.!
காதலர்களின் காவலன் இசை..!
காதல் சண்டைகள், சமாதானம், என அனைத்திலும், களமாடும் இசையின்றி, காதலும் இல்லை காதலர்களுமில்லை..!
நிஜமான நிழலாக நம்முடனே பயணிக்கும்.. இந்த இசையோடு இயைந்த காதல்.. என்றுமே நமக்கான காதல்..!
இந்த வாழ்வே சங்கீதமாய் மாறிப் போனால் தான் என்ன.?
இசையை மிஞ்சிய ஏதேனும் இவ்வுலகிலுண்டோ..? என்ற
கேள்விக்கான விடையாக.. இசைஞானியின் இனிய இசையுடன் இந்த இரவும் மெல்ல நகர்கிறது விடியலை நோக்கி...