Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-057  (Read 1389 times)

August 18, 2025, 06:05:54 pm
Read 1389 times

RiJiA

கவிதையும் கானமும்-057
« on: August 18, 2025, 06:05:54 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-057


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: August 18, 2025, 07:39:26 pm by RiJiA »

August 19, 2025, 08:43:47 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-057
« Reply #1 on: August 19, 2025, 08:43:47 am »

கவிதை என்றாலே என் சிந்தையில் வருவது என் அம்முவின் நினைவலைகள் தான் அதுவும் எங்கள் இருவருக்கும் பிடித்த மழை கவிகள் என்றால் சொல்லவா வேண்டும் என் சிந்தனையின் கிறுக்கல்களில் சில வரிகள் நமது கவிதையும் காணமும் நிகழ்ச்சிக்காக அன்பர்கள் அனைவரும் மழையின் சிந்தனையோடு நமது தொகுப்பாளர் Rijia வின் குரல் மழையோடு கொஞ்சம் நனைவோமா....!


மனதோடு மழைக்காலம்.....


வானமகளின் வைரச்சலங்கைகள்
அறுந்து விழுந்தனவோ
மண்ணெங்கும் மழைத்துளிகள்;
உன்னைப் பார்க்கையில்
உயிரனுக்கள் மீண்டூம்
பிறந்தனவோ என்
வானெங்கும் விடிவெள்ளிகள்!!

முதன்முதலாய் என் விழியீர்ப்பு விசைகளில் நீ விழுந்தபோது
கனவுகளின் தேவதை
சிறகுகள் நீங்கி
சேலையில் நிற்கிறதோ!
என வியந்ததாய்
‌ஞாபகம்.
உன்னால் அறியாத
வெட்ககங்கள் பூசிக்கொண்டு
பூமீக்குச் சென்றது என்முகம்.

அந்நிமிடம் தொட்டு அடியேனின்
கடமைகளும் கனவுகளும்
காலத்தோடு உன்னுள் அடங்கின.
செல்போனில் உன் குரல் சினுங்கிட
பொழுதுகள் விடியும்.
உன்னை தூங்க வைத்த பின்தான்
இரவுகள் அடையும்..
இப்படியாய் என் நொடிகள்
ஒவ்வொன்றும் உன்னிடம்
அடைபட்டுகொள்கிறது
ஆனந்தமாய்............

ஓர்நாள்
அடைமழை உதவியுடன்
ஒற்றைக் குடையின்கீழ்
உன் கைப்பிடித்து நடக்கையில்
பச்சை நிற சேலையின்
முந்தானை கொண்டு என்
தலை துடைத்தாய்
அவ்வப்போது.
ஆனந்தம்
உன்னோடு எனக்கும்...
குடைப்பிடித்தாலும் தொடாமல்
விடமாட்டேன் என
உன்னை நனைத்த
மழையை நினைத்து
உள்ளம் வெந்தாலும்
இயற்கையை வென்றவள்
என்னவள் என்ற
பெருமைகள் எனக்குண்டு.
ஏனெனில் உன் சினுங்கலில்
சிலிர்க்கவே சிந்திய
துளிகள் என்னவளின்
அடிமைகள்;

குடையை விட்டு விலகி உன்
நடையழகை பார்த்தபொழுது தான்
எனக்கு புரிந்தது.
ஆம்,
பார்ப்பதற்கு பசுமை.
ஈரமான நந்தவனமும்
மழை சாரலில் சிறிது நனைந்த சேலையோடு
என ரசிக்கையில்
பொய்க் கோபத்தில்
ஜென்மங்கள் தாண்டி
அழைத்துச் சென்றாய்..

மழையோடு ஒதுங்கி
நின்ற பேருந்தில்
ஓரமாய் இடம் பிடித்தோம்
நனைந்தே இருவரும்.
இப்போது பயணம்.
ஓட்டுனரின் கட்டளைக்குப்
படிந்து பேருந்து
பாய்கையில் உயிரோடு
எனக்கு மரணம்.
கண்ணயர்ந்து உன்
தோளில் சாய்கையில்
மீண்டும் ஜனனம்....

அது ஏனோ
விளங்கவில்லை
மழை வந்தால்
மனதுக்கு பிடித்தவள்
என உன்னை
அடையளம் காட்டி
ஏதேதோ
எழுதுகிறேன்.
எழுதிக்கொண்டே வருகையில்
கற்பணையின் எழுத்துகள்
குறைந்து போனது.
கண்தூக்கிப் பார்த்தால்
கணமழை காணாமல்
போயிருந்தது.
ம்ம்ம்ம்.........
இது தான்
மனதோடு மழைக்காலமோ.....?

August 19, 2025, 12:50:56 pm
Reply #2

Sivarudran

Re: கவிதையும் கானமும்-057
« Reply #2 on: August 19, 2025, 12:50:56 pm »
நீ குடை புடிச்சு
போற புள்ள முன்னால !
உன்னோட  இடை அழகு பாக்குறேனே பின்னால ! 

வெத்தல நெறத்துல சேல கட்டி !
வெள்ளந்தி மனசுல
உன் பேச்சு வெல்லக்கட்டி !

தனியா போற புள்ள நில்லேன்டி !
தவியா தவிக்கிறேன்டி
ஒரு வார்த்த சொல்லேன்டி !

திரும்பாம
போற புள்ள நில்லேன்டி !
ஏ திமிர குறைக்க ஒரு பார்வ பாரேன்டி !

அன்ன நடையழகு !
அம்சமான இடையழகு !
அழகா ஆடுதடி உன் கையோட குடையழகு !

மழ தண்ணி மண்ணுல சிந்த
மலர்க்கன்னி நீ என் கண்ணுல வந்த!

மேகம் கருக்குது புள்ள!
உன் மேல உள்ள மோகம் என்ன உருக்குது புள்ள !

ஆளில்லா ரோட்டுல அழகா பாடுற ஒரு பாட்டுல !
உன்ன அம்சமா வாழ வைப்பேன் ஏ வீட்டுல !

சிங்கார நடையழகி !
சில்லர சிரிப்பழகி !
சினுங்காம ஒரு வார்த்தை பேசேன்டி !
சீக்கிரமா உன்ன வளைக்க வாரேன்டி !

எட்டி எட்டி பாக்குறேன்டி நீ
எட்டாம போறது என்னடி சின்ன பொண்ணே !
உனக்கு எடுப்பான பட்டு சேல எடுத்து தாரேன்
வாயேன்டி !

கண்ணு மை அழகு !
கருப்பு கூந்தல் அழகு !
காஞ்சி பட்டழகு!
கருஞ்சிவப்பு பொட்டழகு !
என்ன கொஞ்சம் நீயும் தொட்டு பழகு !

தாலி வாங்கி வச்சிருக்கேன் தங்கத்துல !
தப்பு ஏதும் இல்ல
இந்த சிங்கத்துல !
தைரியமா வந்து நில்லு என் பக்கத்துல !

ஏ உசுரே நீதாண்டி
இனியும் என்ன உசுப்பேத்த வேண்டாடி !
வேகமா நீ போகாதே புள்ள !
ஏ மனசு சோகமாகுதே மெல்ல !

வெறுப்பு வேணாம்டி இந்த மாமன் மேல !
பொறுப்பா நடந்துப்பேன்டி
உனக்கு புருஷன் போல !

August 19, 2025, 01:50:55 pm
Reply #3

Niharv

Re: கவிதையும் கானமும்-057
« Reply #3 on: August 19, 2025, 01:50:55 pm »
.  💞🌧️ தாங்கா காதல் 🌧️💞

உன் நினைவில் நான் விழித்தால் விடியல்,
உன் புன்னகை நினைத்தால் என் வாழ்வு விழா.

உன் பெயர் சொல்லும் உதடுகளுக்கே,
தேவதைகள் பொறாமை கொள்ளும்.

மழைத்துளி விழும் ஒவ்வொரு நொடியிலும்,
உன் சுவாசமே எனக்கு இசை.

உன் கண்களில் சூரியன் உதிக்கும்,
உன் சிரிப்பில் சந்திரன் ஒளியும்.

தூரத்தில் நீ இருந்தாலும்,
என் உள்ளத்தில் நீ எப்போதும் அருகில்தான்.

உன் குரல் கேட்டதுமே,
உலகம் முழுதும் அமைதியாகிறது.

நீ ஒரு பார்வை தந்தால்,
நாட்கள் எல்லாம் மலர்களாய் மலர்கின்றன.

உன் கரம் என் கரத்தைத் தொட்டால்,
வானமே பூமிக்கு இறங்கிவிடும்.

உன் அருகில் நிற்கும் ஒவ்வொரு நொடியும்,
நித்தியத்தைவிட இனிமையாய் இருக்கிறது.

நீயின்றி ஒரு நாளும் நான் வாழ முடியாது,
நீயே என் உயிரின் மூச்சுத் துளி.

வானம் சிதறினாலும் பரவாயில்லை,
உன் காதலில் தான் என் வானம் நிறைந்துள்ளது.

புயல் அடித்தாலும் நான் விழ மாட்டேன்,
உன் நினைவே என் நெஞ்சின் வேராகிறது.

உன் சிரிப்பு இல்லாமல் என் வாழ்வு வெறுமை,
உன் சுவாசம் இல்லாமல் என் உயிர் மவுனம்.

நீ தான் என் கவிதையின் தொடக்கம்,
நீ தான் என் வாழ்க்கையின் நிறைவு.

நீயின்றி நான் ஒரு நிழல்,
நீ இருந்தால் நான் முழு பிரபஞ்சம்.

என் உயிர் உன்னோடு கட்டுண்டது,
அதை அறுத்திட வானமே முடியாது.

உலகம் எல்லாம் என்னை விட்டு சென்றாலும்,
உன் காதல் மட்டும் என்னை அணைத்துக் கொள்கிறது.

என் இதயம் தாங்க முடியாத காதலில் மூழ்க,
நான் உயிரோடு வாழ்கிறேன் உன் பேரிலே!   
« Last Edit: August 19, 2025, 01:53:40 pm by Niharv »

August 19, 2025, 06:17:04 pm
Reply #4

Eagle 13

Re: கவிதையும் கானமும்-057
« Reply #4 on: August 19, 2025, 06:17:04 pm »
உரு பெற்ற மேகம் ஒன்று பூமியில்
உயிர் பெற்று வந்ததாம்!
அதை ஏற்றுக்கொண்ட பூமி அவளுக்கு
அழகான முகத்தை பரிசாக தந்ததாம்!
ஐம்பூதங்களும் அவளுக்கென அழகான
உருவம் பெற்று தந்ததாம்!
பறவைகள் இனம் அழிந்து வருவதால்
அவைகளின் குரலை வரமாய் பெற்றாளா ?
தெரட்டாச்சிலுங்கி செடிகளிடம் அவள்
வெட்கத்தை முறையாய்  கற்றாலா?
மழைத்துளிகளின்  ஓசையை விட அழகாய
சங்கீதம் பாடுகின்றன அவள் கால் கொலுசுகள்!
அவள் சின்ன சிரிப்பின் இடையே ஒவ்வொரு
கை அசைவிலும் சினுங்குகின்றன அவன்
கை வளையல்கள்!
அவ்வப்போது வரும் மின்னனிலே மிளிர்கின்றன
அவள் காதில் கம்மல்கள்!
மழை! அவளை இரசிக்க வந்ததென்று தெரியாமல் கையில்
ஏந்திக்கொண்டால் குடையினை!
மழை அவளை இரசித்தே ஆகவேண்டுமென்று கூட்டி வந்தது
பெரும்  படையினை!
அதை அறியாமல் மாட்டிக்கொண்டேன் நான்!
மழையில் நனைந்தபடியே அவளை பின் தொடர்வது தான் ஏன்?
நான் பின்தொடர்வதை அறிந்து புன்னகைத்தாள்|
என் விடலை பருவத்தை அபகரித்தாள்!
இன்னும் அங்கு மழை நின்றபாடில்லை!
நானும் என் மனதை வென்ற பாடில்லை!
வானம் எனக்காக இடிமின்னலுடன் கச்சேரி பாடாதா?
என் காதாலும் என்றோ ஒரு நாள்
மேளத்தாளத்துடன் அவளுடன் கூடாதா?
அவளின்றி என் வாழ்க்கையில் காலங்கள் நகராது.
அவள் என் வாழ்வில் வந்த நேரத்திற்கு நிகரேது!
எனக்கு பிடித்த ஒரு பாடல் இல்லை ஒரே ஒரு பாடல் நீ
ஏனென்றால்!
என் வாழ்வில் கிடைத்த தொலைக்க முடியாத தேடல்
நீ மட்டும்தான்!
பெண்ணே!
மனிதனுக்கு வாழ்க்கையில் தேவை உணவு உடை இருப்பிடம்'
நீ பதில் சொல்வாய் இந்த ஜென்மத்தின் எந்தன் பிறப்பிடம்|
« Last Edit: August 19, 2025, 06:22:38 pm by Eagle 13 »

August 19, 2025, 08:01:24 pm
Reply #5

MDU

Re: கவிதையும் கானமும்-057
« Reply #5 on: August 19, 2025, 08:01:24 pm »
அவளின் சிரிப்பே அவனுக்கு குடை



மழைத்துளி வீதியில் நீ நடந்த தருணம்,
செம்பருத்தி பூவுகள் கூட உனக்கே குடை ஆனது.

சிரிப்பில் காதல், கண்களில் நம்பிக்கை,
ஆனால் உள்ளம் சொல்லாத சோகத்தின் கதை.

என் நெஞ்சம் உன் அருகே ஓடி வந்தாலும்,
எட்ட முடியாத தூரத்தில் நின்றது என் கனவுக் காதல்.

காதல் தந்த சந்தோஷ  மழைத்துளி
 மேகத்தோடு கலந்தே வாழ்கிறது.

மழை வந்ததும் சாலை பேசுகிறது,
தேவதை செல்லும் பாதையில் குண்டும் குழியும் இருக்கின்றது  என்று

நீ நடந்த பாதை மென்மை போலினும்,
அதன் அடியில் சோகத்தின் குழிகள் மறைந்திருந்தன.

குடை பிடித்த உன் சிரிப்பு வானவில் ஆனாலும்,
கீழே கண்ணீர் துளியும் ஓவியம் ஆனது.

காதல் பாதை எப்போதும் சீராகாது,
குண்டும் குழியும் தான் இருக்கும்.

பாவாடைத் தாவணியில் நீ நடந்த தருணம்,
வானவில் தரையில் இறங்கி ஆடியது போலிருந்தது.

ஒவ்வொரு அடியிலும் காற்றே மலராய் விரிந்தது,
உன் சிரிப்பில் மழைத் துளிகளும் இசை கற்றது.

உன் சிரிப்பு தொட்டவுடன்,
என் உள்ளம் வானவில் ஆகிறது

சாலையின் சத்தம் தன்னையே மறந்து மௌனமாய் நின்றது,
உன் நடையின் ஓசை கவிதையாக என் உள்ளத்தில் நின்றது.



MDU

August 20, 2025, 02:19:02 pm
Reply #6

Wings

Re: கவிதையும் கானமும்-057
« Reply #6 on: August 20, 2025, 02:19:02 pm »
மழையில் ஒரு நடை பயணம்☔

மழை மென்மையாகவும், கனிவாகவும் பெய்யத் தொடங்கியது,
ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, மனதில் எந்த கவலையும் இல்லை.

என் சிவப்பு குடையை காற்றில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு,
நான் தெருவில் நடந்தேன், எந்த கவலையும் இல்லாமல்.

என் சேலை மெதுவாக ஆடியது, காற்று இசைத்தது,
மழையின் ஒவ்வொரு துளியும் அதன் சொந்த பாடலைப் பாடியது.

அங்கே அவன் என் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தான்,

சிரிப்பு நிறைந்த கண்கள், அவன் இதயம் அகலமாகத் திறந்திருந்தது.

மழை, சேறு அல்லது குளிரை அவன் பொருட்படுத்தவில்லை,
அவன் ஆவி சூடாக இருந்தது, அவன் தைரியம் மிகவும் தைரியமானது.

உலகிற்கு எந்த வலியும் இல்லை என்பது போல் அவன் சிரித்தான்,
அவனுடைய மகிழ்ச்சி மழையை பிரகாசமாக்க போதுமானது.

நான் அவனை ஒரு முறை பார்த்தேன், என் இதயம் மென்மையாக அறிந்தது,

இந்த தருணம் மாயாஜாலம் எளிமையானது ஆனால் உண்மை.

நான் பிடித்த குடை மழைக்கு மட்டுமல்ல,
காதல் நிலைத்திருக்க ஒரு கேடயம் போல உணர்ந்தேன்.

என் தோலை முத்தமிட்ட ஒவ்வொரு துளியும்,
காதல் எங்கிருந்து தொடங்குகிறது என்ற வாக்குறுதியை நிறைவேற்றியது.
தெரு காலியாக இருந்தது, ஆனால் அது உயிருடன் இருப்பதாக உணர்ந்தது,
அவனது மென்மையான சிரிப்பால், என் ஆன்மா உயிர்வாழும்.

நாங்கள் அணிந்திருந்த வண்ணங்களில், வானம் அதன் சாயலைக் கண்டது,
என் சேலையின் நீலம், சிவப்பு பிரகாசித்தது.

அவர்கள் ஒன்றாகச் சொல்லப்படாத ஒரு கதையை வரைந்தனர்,

மழையில் நனைந்தl காதல், தூய்மையானது மற்றும் தைரியமானது.

குடை மழையிலிருந்து பாதுகாக்க வேண்டும்,

மகிழ்ச்சியிலும் வலியிலும் நான் உங்களுடன் இருப்பது போல.

மழைத்துளிகளுக்கும் எனக்கும் இடையில் அது நிற்பது போல,
நான் என்றென்றும் உங்கள் பக்கத்தில் நிற்பேன்.

நம் தலைமுடி வெள்ளி மற்றும் வெண்மையாக மாறும்போது,
நாம் இன்னும் ஒரு மென்மையான இரவில் மழையில் நடப்போம்.

கைகோர்த்து, இதயங்கள் இன்னும் ஒரே மாதிரியாக,
பொழியும் மழையில் அன்பை கிசுகிசுக்கிறோம்.

எனவே புயல் வரட்டும், மேகங்கள் தங்கட்டும்,
ஏனென்றால் நான் அவருடன் நடப்பேன், என்ன நடந்தாலும்.

ஒவ்வொரு அடியிலும், நான் இந்த உண்மையைச் சுமந்து செல்கிறேன்,
காதல் நித்தியமானது, இளமையில் என்றென்றும்.
« Last Edit: August 20, 2025, 02:44:05 pm by Wings »

August 20, 2025, 05:50:18 pm
Reply #7

Thendral

Re: கவிதையும் கானமும்-057
« Reply #7 on: August 20, 2025, 05:50:18 pm »
ஹலோ நான் காதல் பேசுகிறேன்... 

         நான் கடந்து வந்த கவிதை ...
             அவனும்... அவளும் !!!


நட்பு:
 அவள் நட்பு வட்டத்திலே ..அவன்
அறியா நேசம் வளர்த்த ..அவன்
 தினமும் சேர்ந்து சிரித்த போதும்
தினமும் பேசி மகிழ்ந்த போதும்
கைகோர்த்து ஊர் சுற்றிய போதும்
நட்பாய் சினேகமாய் நண்பனாய்..அவனும்..அவளும் !!!


 காதல்:
 நட்புடன் நேசமும் காதலாய் வளர
கூறாத சொற்களுடன் ..அவன் !!
கேளாத அறியாத ..அவள் !!
நண்பர்கள் கூட உணர ...அவளோ.. பேதையாய் ..!!
அவன் மனம் உரைக்க மறுத்ததேன்
அவள் மனம் உணர மறுக்கப்பட்டது ஏன் ????

காத்திருத்தல் :
உணராத காதல் ..ஒரு வலி !!!
உரைக்காத காதல் ..எதில் சேர்த்தி ???

நண்பியாய் அவள் முன் செல்ல
காதலுடன் அவன் அவள் பின்னே
காத்திருத்தலும் சுகமோ... என் கண்ணே !!
 உன் மனமும் மாறுமோ ..அடி பெண்ணே !!

 ஒரு முறை கூட அவள் ஏன் உணரவில்லை ??
ஒருவேளை உணர்ந்திருந்தால் ??
ஆயிரம் வினாக்களுடன் !!!
ஒரு பதிலாவது கிடைக்குமோ என நான் ???  ....காதல் !!!!

ஹலோ நான் காதல் பேசுகிறேன்....!!!

உலகில் முதல் அழகிய சொல் காதல் !!!
ஆம் ...நான் காதல் பேசுகிறேன் !!!

உயிர்கள் அனைத்திலும் ...நான் - ஒய்யாரமாய்
ஊஞ்சலிட்டு ஆட வைக்கிறேன்!!!

என்னை உணராத இதயமும் உண்டோ
இம்மண்ணில் தேடி பார்க்கிறேன்!!!

 இதோ இவன் -என் பார்வை பட்டதால்
கனிந்து காதலாகி  கரைந்து !!!
எங்கே அவள் ????

கார்மேகம் பூமி தொடும் அத்தருணம்
மண்மணம் வீசும் - சுகம் ..அவ்வுணர்வு தூறலாய்
 அவளை நனைக்க காத்திருக்கும் நான் ....

ஹலோ நான் காதல் பேசுகிறேன்... 
சொல்லாத காதல் பல ...
சேராத காதல் பல..
 உணராத காதல் ...அது கொடுமை!!!
அவனும் அவளும் ...இவர்களுடன்
சொல்லாத சேராத உணராத நானும்..

 ஹலோ நான் ...💗தென்றலாய்💗 ..காதல் பேசுகிறேன் 💗 !!!
« Last Edit: August 20, 2025, 07:31:40 pm by Thendral »

August 20, 2025, 09:16:04 pm
Reply #8
Re: கவிதையும் கானமும்-057
« Reply #8 on: August 20, 2025, 09:16:04 pm »
உன் முகம் பார்க்க தவிக்கும் அவன்”

எங்கு தொடங்கினோம் உன்னோடு நானே,
உறவெனத் தெரியாமல் உயிரோடு நானே.
“ட்ரூத் ஆர் டேர்?” என்ற கேள்வி போல,
தோன்றியது காதல்—தீப்பொறி சோலை.

விளையாட்டின் கேள்வியில் வந்தது பாசம்,
விளையாட்டின் வார்த்தையில் நின்றது நேசம்.
சொல்லாமல் வளர்ந்தது உணர்வு பெரிது,
சொல்ல வார்த்தை போதவில்லை—இதயம் நிரம்பியது.

மழை பெய்த பாதையில் நீ நடந்தாய் முன்புறம்,
நம் காதலோடு நான் நடந்தேன் எப்போதும் பின்புறம்.
உன் முகத்தை மறைத்தது குடையின் கருமை,
அதிலே நீயே சொன்னாய் மௌனத்தின் உருமை.

அன்பே…!

குடை நீ சுமப்பது பாரமல்லவோ காதலி?
குடும்பம், கட்டுப்பாடு, கனவுகளைத் தடுத்தலி.
அந்தக் குடை வலி—அந்தக் குடை சங்கிலி,
அந்தக் குடை மழையில் மறைந்ததே மாங்கலி.

நீ காட்டாத முகத்தை நான் காணும் கனவிலே,
நீ மறைத்த சிரிப்பை நான் உணரும் இரவிலே.
என் கையைப் பிடித்தால் உன் பயங்கள் கரையும்,
என் அருகில் நடந்தால் உலகங்கள் மறையும்.

இன்னும் நேரில் பார்க்கவில்லை என் பார்வை,
ஆனால் மனதில் நிறைந்தது உன் உருவ பாரை.
உன்னை காணும் நாளை எண்ணி காத்திருக்கும்,
என் காதல் தீயாய் தினமும் எரிகிறது.

நான் விரும்புவது ஒன்றுதான்,
உன் முகத்தை நாளும் காண வேண்டும்.
உன் சிரிப்பு சூரியமாய் எனை ஒளி செய்ய,
உன் முகமே என் வாழ்வை நிறை செய்ய.

குடையை விட்டு வெளியே வா கண்ணே,
உன் முகத்தை காட்டிவிடு இங்கே.
உன் பார்வை மழையில் நனைந்து,
என் உயிரை வாழ விட்டு விடு.

காதல் என்றால் அது நீயே,
வாழ்வு என்றால் அது நாமே.
மரணமில்லா பந்தமாய்,
மாறாத நேசமாய்.

உன் முகம் பார்க்கத் தவிக்கும்,
உன்னுடைய அவன் ❤️

August 20, 2025, 09:24:33 pm
Reply #9
Re: கவிதையும் கானமும்-057
« Reply #9 on: August 20, 2025, 09:24:33 pm »
காதல்

எங்கோ பிறந்த இருவர்
ஈருடல் ஓர் உயிராய்
சங்கமிக்கும் அற்புதம்
காதல்....

எல்லைகள் வகுத்து
எதிர்பார்த்து வருவதில்லை
காதல்....

பேதங்கள் கண்டு
பேதமை கொள்ளாது
காதல்...

உள்ளங்கள் பரிமாற்ற
உறைகின்ற நொடிகள்
உணர்தும் உன்னதம்
காதல்...

கண நேரம் காணாது
காத்திருப்பும் கண்களை
கலங்கடிக்கும்
காதல்...

அவ(னி)ளின் குரலை
கேட்க குழந்தையை
போல் மாற்றிவிடும்
காதல்....

செல்ல சண்டைகள்
ஆயிரம் கோபத்தில்
உதிர்த்த சொற்கள்
ஆயிரம் எதுவும்
அசைப்பதில்லை  அதுவே காதல்....

அவனும் அவளும்
அளவில்லா அன்பினில்
அடைத்து வைக்கும்
இன்பச்சிறையே காதல்.....



அண்டில் பறவைகள்
ஒன்றை விட்டு ஒன்று
இருப்பதில்லை
அதுவேகாதல்....

அவனுடன் அவளும்
அவளுடன் அவனும்
இருப்பதை நேசிப்பர்
இடையினில் எவர்க்கும்
இடமில்லையே
இதுவே காதல்..

சொர்க்கம் நரகம்
ரெண்டும் ஒன்றாய்
போரும் அமைதியும்
ரெண்டும் ஒன்றாய்
இரவும் பகலும்
ரெண்டும் ஒன்றாய்
குளிரும் அனலும்
ரெண்டும் ஒன்றாய்
அன்பும் கோபமும்
ரெண்டும் ஒன்றாய்
அழுகை சிரிப்பும்
ரெண்டும் ஒன்றாய்
ஒருங்க பெற்றது காதல்.....

உண்மை காதல் மரணிப்பதில்லை
மரணம் தாண்டி தொடரும்...
உண்மை காதலில் விருப்பம் உண்டு.
தற்கால காதலில் நம்பிக்கை
இல்லை..

எதிர்பார்ப்புகளும் தேவைகளும்
காதலை தீர்மாப்பதில்லை
அவ்வாரு இருப்பின் அது காதல் இல்லை..

காதல் அவர்களை அவர்களின்
இயல்பில் ஏற்றுக்கொள்ளும்
இயல்பை மாற்ற வந்தால்  அது காதலே இல்லை...

உண்மைகாதலில் சுதந்திரமுண்டு
காட்டாயமும் கட்ப்படுத்தலும் இல்லை..

காதலில் கரைந்துருகிபோவர்
இருவரும் ..


சண்டைகள் கருத்தியல்
வேறுபாடுகள் வந்தாலும்
இருகப்பற்றிகொள்ளும்
உண்மைகாதல்....

என்னவளின் காதலை நானும்
என்காதலை அவளும்
உயிருடன் கலந்து
உணர்வுடன் வளர்க்கிறோம்
குழந்தையை போல
இவ்வாறு நீங்கள் உணர்ந்தால்
உத்தம காதல் அதுவே...

காதல் மாயம் செய்யும்
காயம் செய்யும்
அளவற்ற அன்பினில்
அமிழ்ந்துவிடுங்கள்
காதல் என்றுமே தொடரும்.❣️❣️❣️❣️❣️❣️❣️💗💖💖💗💗💗💗💗💖💖💖💖..