நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.
ஒரு நாள், அங்கே வந்த ஒருவர் செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.
நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.
பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.
திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.
அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.
அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.