சிக்கன் நகட்ஸ்
அமெரிக்கா, ஐரோப்பாவில் “நகட்ஸ்’ மிகவும் பிரபலம். கோழி இறைச்சியை வெட்டும் போது, சிதறும் இறைச்சியை சேகரித்து “நகட்ஸ்’ தயாரிப்பர். கோழித் தோலை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி “நகட்ஸ்’ தயாரித்தாலும், சுவையாக இருக்கும் என்கிறார், மதுரை சங்கம் ஓட்டல் சமையல் நிபுணர் சண்முகம்.
தேவையானவை
* கோழி இறைச்சி (நெஞ்சுப் பகுதி) – 450 கிராம்
* முட்டை – ஒன்று
* மைதா – 50 கிராம்
* பூண்டு – 10 கிராம்
* மிளகு – ஐந்து கிராம்
* சாலட் எண்ணெய் – 10 மில்லி (கடையில் கிடைக்கும்)
* பிரெஞ்ச் கடுகு பேஸ்ட் – ஐந்து கிராம் (கடையில் கிடைக்கும்)
* எலுமிச்சை சாறு – ஒரு பழம்
* பிரெட் தூள் – 200 கிராம்
* எண்ணெய் – பொறிக்க
* உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
* இறைச்சியை சுத்தம் செய்து, பிரெட் தவிர, மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊறவைத்த இறைச்சி கலவையை, பிரெட் தூளில் புரட்டி எடுத்து பொறிக்க வேண்டும்.
இதற்கு “அயோலி சாஸ்’ தனியாக தயாரிக்க வேண்டும்.
* வெஜிடபிள் மயோனீஸ் கடையில் கிடைக்கும்.
* வெண்ணெய் போலிருக்கும். வெள்ளைப்பூண்டு சிறிதளவு, பார்ஸ்லி இலை சிறிதளவு எடுத்து பொடியாக நறுக்க வேண்டும்.
* மயோனீஸ், பூண்டு, இலை, உப்பு, மிளகு சேர்த்து நன்கு கலக்கினால் சாஸ் தயாராகிவிடும்.
சமையல் நேரம் : 25 நிமிடங்கள்.