Advanced Search

Author Topic: கற்றாழை ஜெல்லில் உள்ள பயன்கள்  (Read 15234 times)

June 21, 2018, 02:17:14 pm
Read 15234 times

NiLa

கற்றாழை ஜெல் நமது கூந்தலுக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
கூந்தல் வளர்ச்சி

கற்றாழை ஜெல்லில் புரோட்டியோலைடிக் என்சைம் உள்ளது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பட்டு போன்ற கூந்தல்

கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை உடனடியாக பட்டு போன்று மென்மையாக மாற்றி விடும். எனவே உங்கள் கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும். இனி எந்த ஹேர் ஸ்டைலையும் நீங்கள் போட்டு அசத்தலாம்.
கூந்தல் அடர்த்தி

இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.

அழற்சி

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றைப் போக்குகிறது.
பூஞ்சை எதிர்ப்பு பொருள்

கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.
போஷாக்கு

கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஈரப்பதம்

கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நீர்சத்தை கொடுக்கிறது.
வளரும் இடங்கள்


கற்றாழை பேக்

தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய்
    கற்றாழை ஜெல்
    பயன்படுத்தும் முறை

இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தல் அசைந்தாடும்.
பயன்கள்

கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். எனவே இனி பிளவுபட்ட முடியை நீங்கள் வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல போனால் கற்றாழை ஒரு ஹேர் சூப்பர் ஹீரோ என்று சொல்லலாம். என்னங்க இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க. இனி நீங்களும் ராபுன்ஷல் கூந்தலழகி ஆகலாம்