Advanced Search

Recent Posts

Pages: 1 ... 6 7 [8] 9 10
71
Birthday Wishes / Re: Happy Birthday Chuttiponnu
« Last post by AzhaGi on July 20, 2026, 12:01:50 am »
Happy Kuva Kuva Day Chutti sis😘❤️😘

72
Birthday Wishes / Happy Birthday Chuttiponnu
« Last post by RiJiA on July 19, 2026, 11:42:58 pm »
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (20 July 2026) Wishes To Our Lovable Friend CHUTTIPONNU Wishes Her All The Very Best & Good Luck👍


74



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 108இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 109இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#109


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
76

அழகான கவிதைதான் அம்மா


அம்மாவின் கருவறையில் தொடங்கியது மகளின் வாழ்க்கை,
அவள் கைகளில் வளர்ந்தது ஓர் அழகான கவிதை.
மகள் சிரித்தால் அம்மாவின் உலகம் சிரிக்கும்,
மகள் அழுதால் அம்மாவின் இதயம் வலிக்கும்.

முதல் நடை பழக கை கொடுத்தவள் அம்மா,
வாழ்க்கைப் பாதை காட்டி வழிநடத்தியதும் அம்மா.
மகளின் கனவுகளைத் தன் கனவாய் சுமந்தாள்,
அவள் வெற்றிக்காகத் தினமும் மனதில் வேண்டினாள்.

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்,ஆறுதல் தரும் ஒரு தோள் போதும்…
காலம் நம்மை மாற்றலாம் வயது நம்மை வளைக்கலாம்.
ஆனால் கை கோர்த்த நம் அன்பை,
எந்தக் காலமும் பிரிக்க முடியாது.

அம்மா இளமையாக இருந்தபோது,
தன் மகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தாள்.
அவள் கால்கள் தடுமாறும் போதெல்லாம்,
கை கொடுப்பதோடு தன்னம்பிக்கையும் கொடுத்தாள்

“வாழ்க்கை என்றால். போராட்டம் மகளே,
விழுந்தாலும் எழுந்து நடக்கக் கற்றுக்கொள்” என்றாள்;
எத்தனை துன்பங்கள் வாசல் தேடி வந்தாலும்,
அதைத் தைரியமாய் சமாளிக்கச் சொல்லிக் கொடுத்தாள்.

மகளுக்கு வெறும் தாயாக மட்டும் இல்லாமல்,
மனம் திறந்து பேசும் தோழியாகவும் இருந்தாள்.
அவள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்டுத் திருத்தி,
அழகான சிற்பமாய் மகளைச் செதுக்கியவள் தாய்.

இன்று அம்மாவின் கூந்தலில் நரை பூத்தாலும்,
அவள் முகத்தில் காலத்தின் கோடுகள் தெரிந்தாலும்.
அம்மாவைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,
மகளின் மனதில் ஒரு புதிய சக்தி பிறக்கிறது.

வயது அம்மாவின் தோற்றத்தை மாற்றலாம்.
ஆனால் மகளுக்குள் வாழும் அவளின் தைரியத்தை மாற்ற முடியாது…
ஏனெனில் ஒவ்வொரு மகளின் உயர்வுக்குப் பின்னாலும்,
அவளைத் தலைநிமிரச் செய்த ஓர் “அம்மா” இருக்கிறாள்!

காலங்கள் ஓட மகளும் வளர்ந்துவிட்டாள்,
அம்மாவின் நரை முடியைக் கண்டு கண் கலங்கிவிட்டாள்.
ஒருநாள் அம்மா கொடுத்த தோளின் ஆறுதலை,
இன்று மகள் திருப்பிக் கொடுக்கிறாள் அன்பினாலே.

அம்மாவின் கையைப் பிடித்து மெதுவாய் நடக்கிறாள்,
அவள் சொன்ன பழைய கதைகளை மீண்டும் ரசிக்கிறாள்.
வயது அம்மாவின் உடலை மட்டும் மாற்றலாம்,
மகளின் அன்பை எந்தக் காலமும் மாற்ற முடியாது.

அன்று மகளுக்கு உலகமே அம்மாவாக இருந்தாள்,
இன்று அம்மாவுக்கு உலகமே மகளாக மாறிவிட்டாள்.
தலைமுறைகள் மாறினாலும் மாறாத ஓர் உறவு,
அம்மா–மகள் அன்பு… வாழ்க்கையின் அழகான வரவு! ❤️

கடைசி வரை நீ என் அருகில் இருந்தால்,
வாழ்க்கையின் கடைசி பக்கமும் அழகான கவிதைதான் அம்மா. ❤️❤️❤️

இப்படிக்கு உங்கள்❤️ MDU❤️
77
Azhiyaatha Agaram - Amma

Annai yendra  agaramondril ,
Agilam muluvathum adangiyathey ,
ulagam uravena uraittapin
uyirin uravena irunthaval nee allava,

aruviyaai anbai polinthaval
amuthamaai uyiril kalanthaval,
thunbam thanakena taaanggiyaval,
inbam enakena eeenthaval.

naraittha koonthal naatkal uraikum
nadunggum karanggal thiyaagam uraikum,
sollaathu seitha seigai ellam ,
soll ondril adanggaaa kaaviyanggal.

veedu yendra solluku uyir thanthavaley , 
uravu endra solluku porul thanthavaley,
thaalaattu thantha tendraley ,
thaaanggum nizhalaai nindravaley,

kanneer sinthiyum sirikka katraai,
kaayaam taanggiyum kanivai vithaittai,
un anbuku alave illai \
un aravanaipuku inaiye illai,

kovil thedum theivam yetharkku ,
kodii theivam en thaayin uruvatthil







அழியாத அகரம் – அம்மா

அன்னை என்ற அகரமொன்றில்,
அகிலம் முழுவதும் அடங்கியதே.
உலகம் உறவென உரைத்தபின்,
உயிரின் உறவென இருந்தவள் நீ அல்லவா?

அருவியாய் அன்பைப் பொழிந்தவள்,
அமுதமாய் உயிரில் கலந்தவள்.
துன்பம் தனக்கெனத் தாங்கியவள்,
இன்பம் எனக்கென ஈந்தவள்.

நரைத்த கூந்தல் நாட்கள் உரைக்கும்,
நடுங்கும் கரங்கள் தியாகம் உரைக்கும்.
சொல்லாது செய்த செய்கை எல்லாம்,
சொல் ஒன்றில் அடங்கா காவியங்கள்.

வீடு என்ற சொல்லுக்கு உயிர் தந்தவளே,
உறவு என்ற சொல்லுக்கு பொருள் தந்தவளே.
தாலாட்டு தந்த தென்றலே,
தாங்கும் நிழலாய் நின்றவளே.

கண்ணீர் சிந்தியும் சிரிக்கக் கற்றாய்,
காயம் தாங்கியும் கனிவை விதைத்தாய்.
உன் அன்புக்கு அளவே இல்லை,
உன் அரவணைப்புக்கு இணையே இல்லை.

கோவில் தேடும் தெய்வம் எதற்கு,
கோடி தெய்வம் என் தாயின் உருவத்தில்.


78
பாட்டி ❤️ என் முதல் வீடு 🫶🏻

சொர்க்கம் என்பது ஒரு இடம் இல்லை... நம்மைப் புரிந்துகொள்ளும் ஒரு மனிதரின் தோள்தான்.

இந்த உலகத்தில் பல உறவுகள் வந்து போகும்... சிலர் நம்முடன் சில நாட்கள் பயணிப்பார்கள்... சிலர் சில நினைவுகளை மட்டும் விட்டுவிட்டு பிரிந்து போவார்கள்...

ஆனால்... ஒரு உறவு மட்டும்... காலம் கடந்தாலும் மாறாது... அது பாட்டியின் அன்பு.

நான் பிறந்த நாள் முதல்... என் பெயரை விட, என் சிரிப்பை அதிகமாக நேசித்தவள் நீ...

அம்மா கோபப்பட்ட நேரத்தில்... என் பக்கம் நின்று, "சின்ன குழந்தை தானே..." என்று என்னைக் காப்பாற்றியது நீ...

அப்பா கண்டித்த நேரத்தில்... என் கண்ணீரைத் துடைத்து, "ஒரு நாள் நீ பெரிய ஆள் ஆவாய்..." என்று நம்பிக்கை கொடுத்தவளும் நீ...

உன் கை பிடித்து நடந்த அந்த சிறு வயது... இன்றும் என் நெஞ்சில் அழியாத ஓவியம்...

உன் மடியில் படுத்து தூங்கிய இரவுகள்... இன்றும் எனக்கு சொர்க்கத்தை நினைவுபடுத்துகின்றன...

நீ சொன்ன கதை... நீ பாடிய தாலாட்டு... நீ கையால் ஊட்டி வைத்த சோறு... இவை எல்லாம் சாதாரண நினைவுகள் அல்ல... என் வாழ்க்கையின் அழகான பக்கங்கள்...

இன்று நான் வளர்ந்துவிட்டேன்... உன் முடி வெள்ளையாகிவிட்டது... உன் கைகள் நடுங்குகின்றன... உன் நடை மெதுவாகிவிட்டது...

ஆனால்... உன் அன்பு மட்டும்... முதல் நாள் இருந்ததை விட இன்னும் அதிகமாகவே இருக்கிறது...

சிறு வயதில்... நான் பயந்தால், நீ என்னை அணைத்து ஆறுதல் சொன்னாய்...

இன்று... நீ சோர்ந்தால்... உன் பக்கத்தில் உட்கார்ந்து, உன் கையைப் பிடிப்பது... என் கடமை...

காலம் நம் இருவரையும் மாற்றியிருக்கலாம்... ஆனால்... நம் உறவை மாற்ற முடியவில்லை...

இந்தப் படத்தில் நான் பார்ப்பது... ஒரு பாட்டியும் ஒரு பேத்தியும் மட்டும் அல்ல...

ஒரு வாழ்க்கையின் முழு பயணம்...

ஒரு கை... பிறந்த குழந்தையைத் தூக்கி வளர்த்தது...

அதே கையை... இன்று வளர்ந்த பேத்தி பிடித்து, "நீ தனியாக இல்லை..." என்று சொல்கிறது...

சில வார்த்தைகள் பேச வேண்டிய அவசியம் இல்லை...

சில உறவுகள்... மௌனத்திலேயே ஆயிரம் கதைகள் சொல்லிவிடும்...

இந்த அணைப்பு... "உனக்கு நான் இருக்கிறேன்..." என்ற உறுதி...

இந்த சாய்ந்த தோள்... "உன் கஷ்டம் என் கஷ்டம்..." என்ற பாசம்...

இந்த அமைதி... "இதுதான் வீடு..." என்ற உணர்வு...

நாளை... காலம் யாரையும் காத்திருக்காது...

ஒரு நாள்... இந்த பெஞ்ச் காலியாக இருக்கலாம்...

ஆனால்... அந்த இடத்தில் உட்கார்ந்த நினைவுகள்... அந்த சிரிப்புகள்... அந்த கதைகள்... அந்த கை பிடித்த சூடு...

என்றும்... இதயத்தில் வாழும்...

ஏனென்றால்...

பாட்டி என்பது ஒரு உறவு அல்ல...

அவள் ஒரு தாயின் மறு உருவம்...

அவள் ஒரு குடும்பத்தின் வேர்...

அவள் ஒரு வீட்டின் தெய்வம்...

அவள் இருக்கும் வரை நாம் குழந்தைகள்...

அவள் நினைவுகள் இருக்கும் வரை... அவள் நம்முடன்தான்...

"சில அன்புகளுக்கு முடிவு இல்லை...
பாட்டியின் அன்பு... அதில் முதல் இடம்." ❤️
79
Birthday Wishes / Re: Happy Birthday NANNA
« Last post by AzhaGi on July 14, 2026, 01:55:22 am »
HAPPA BIRTHDAY NANNA.. 💐🧡

80
அம்மாவும் நானும்...

அம்மா,
நீ என்னை கருவில் சுமந்த நொடி முதல் அணைத்துக் கொண்டாய்,
நான் உன்னை உன் இறுதி மூச்சு வரை அணைத்துக் கொண்டேன்...

நான் ஒரு துளி உயிராய் உருவான நொடியிலிருந்து,
அவள் தனக்காக வாழ்வதை நிறுத்தி விட்டாள்,
எனக்காக மட்டும் வாழத் தொடங்கினாள்.
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும்,
அவளின் ஆயிரம் வலிகள் துணையாக இருந்தன...

பத்து மாதங்கள்…
தன் உயிரையே பணயம் வைத்து,
என்னை பொக்கிஷமாக சுமந்தாள்.
நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக,
அவள் எத்தனை முறை அழுதாளோ
அதை யாரும் அறிந்ததில்லை...

என்னை கையில் ஏந்திய நாள் முதல்,
நானே அவளின் உலகமானேன்,
அவளையே அவள் மறந்தாள்.
எனக்காக இரவுகள் முழுவதும் விழித்தாள்.
எனக்காக பசியோடு உறங்கினாள்,
எனக்காக கண்ணீரை மறைத்து சிரித்தாள்,
தனக்குத் தெரியாத உலகத்தையும் கற்றுக்கொண்டாள்,
எனக்குத் தெரிந்த உலகமாக மாற்றிக் கொடுத்தாள்...

“என் மகள் உயர வேண்டும்”
என்ற ஒரே கனவுக்காக,
தன் இளமையையே தியாகம் செய்தாள்,
தன் ஆசைகளை அடக்கம் செய்தாள்,
என் ஆசைகளை உயிராக வளர்த்தாள்.
நான் தோற்ற ஒவ்வொரு முறையும்,
என்னை விட அதிகமாக உடைந்து போனவள் அவள்.
நான் வென்ற ஒவ்வொரு நாளிலும்,
என்னை விட அதிகமாக மகிழ்ந்தவள் அவள்...

நிம்மதி தேடி,
பல முறை அவள் தோளில் சாய்ந்திருக்கிறேன்.
என் கதைகள் அனைத்தையும்,
சலிக்காமல் கேட்ட ஒரே உயிர் அவள் தான்,
என் அம்மா...

என் கண்ணீரின் மொழியை,
வார்த்தையில்லாமல் புரிந்த ஒரே இதயம்,
அம்மாவின் இதயம்...

நான் வாழ்வில் உயர வேண்டும் என்று,
தினமும் இறைவனிடம் வேண்டியவள் அவள்.
இன்று,
நான் உயர்ந்த இடத்தில் நிற்கிறேன்.
ஆனால்,
என்னை அந்த உயரத்திற்கு கொண்டு வந்த அவள்,
என்னை விட்டு உயர்ந்த உலகத்திற்குச் சென்று விட்டாள்.

இப்போது,
அவள் மடியில் தலை வைத்து அழ வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
என் கண்ணீரை துடைக்க,
அவள் கைகள் இல்லை...
“அம்மா” என்று ஒருமுறை அழைக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
அந்த அழைப்புக்கு பதில் சொல்ல,
அவள் குரல் இல்லை...

இன்று என்னிடம் பணம் இருக்கிறது,
புகழ் இருக்கிறது,
வாழ்க்கை இருக்கிறது.
ஆனால்,
அம்மா மட்டும் இல்லை...

அவளுடன் வாழ்ந்த ஒவ்வொரு நினைவும்,
என் இதயத்தில் என்றும் உயிரோடு இருக்கிறது.

சில இரவுகளில், வானத்தைப் பார்த்து பேசுகிறேன்.
“அம்மா… நீ கேட்கிறாயா?” என்று,
பதில் வருவதில்லை.
ஆனால்,
கண்ணீர் மட்டும் பதிலாக வருகிறது...

இறைவா,
எனக்கு இன்னொரு பிறவி கொடுத்தால்.
இந்த முறை,
அவள் என் அம்மாவாக வேண்டாம்,
நான் அவளுக்கு அம்மாவாகப் பிறக்க வேண்டும்...

அவள் செய்த ஒவ்வொரு தியாகத்திற்கும்,
அவள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும்,
அவள் இழந்த ஒவ்வொரு கனவிற்கும்,
நான் ஈடாக வாழ வேண்டும்.
அவளை என் உயிரைவிட மேலாக நேசிக்க வேண்டும்...

அவள் கடைசி மூச்சு வரை,
என் மடியில் சாய்ந்து,
சிரித்துக்கொண்டே வாழ வைக்க வேண்டும்.
ஏனென்றால்,
இந்த உலகத்தில்,
“அம்மாவின் அன்புக்கு ஈடாக எந்த அன்பும் இல்லை…”
“அம்மாவின் தியாகத்திற்கு ஈடாக எந்த தெய்வமும் இல்லை…”
“அம்மா உயிரோடு இருக்கும் வரை தான் நாம் குழந்தைகள்…”

அம்மா மறைந்த பிறகு,
வயது எவ்வளவு இருந்தாலும்,
நாம் அனாதைகள்தான்...

அம்மா,
நான் உன்னை என்று சுமப்பேனோ,
உன்னை என் இறுதி மூச்சு வரை அணைப்பேனோ...

I miss u Amma, I love u Amma...(Я люблю тебя, мама. Я очень по тебе скучаю.)

    இப்படிக்கு
    என்றென்றும் உங்கள் அழகி(MA)
Pages: 1 ... 6 7 [8] 9 10