61
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-049
« Last post by Shree on October 16, 2024, 03:12:10 pm »உயிரை உண்ணும் உணரா உணர்வே....
விழி கண்டு வியந்த வழி இல்லை - என் பொருள்
செவி சேர்ந்து வழி கொண்டு என் உயிர் கலந்த இன்குரல்
குழல் கொண்ட காற்றோடு மேன்மையுறும் பண் போன்று
உரைந்த என்னை நீ மீட்கிறாய், புத்துயிர் கொண்டு
பூவின் உள்ளிருந்தவாறே தேனீக்களை வசமாக்கும் அச்சிறு மகரந்தத்தாளின் வழி
இன்சுவை கொண்ட தேன் துளியின் சிறப்பாக
என்னுள் இருக்கும் அனைத்தையும் சிறு ஒலி கொண்டு வசம் செய்து
என் உயிர்ப்பொருளை நெகிழச் செய்கிறாய்
உவமை கொண்டே உன்னை முழுதும் விவரிக்கலாயினும்
உன்னோடடு நான் கொண்ட பேரன்பினை
வரி கொண்டு மட்டுமே இயற்றுதல் ஆகாது
வரி வழி உள் உயிர் கொண்ட நேசத்தை
விரல் கொண்டு சொற்களால் தீட்டுகிறேன்
அன்பை தேடும் மழழையின் மனக்குரலை அறியும் தாயைப்போல
இடர் தோன்றும் வேலையில், என் மனக்குரலை அறிவது நீயே
தாய் தந்தையின் பிரிவை ஏற்க இன்றளவும் என்னோடு நீ கொண்ட பகிர்ப்பினை
இமை மூடிய வண்ணம் என்னுள் ஏற்கிறேன்
பேரிடர் ஏதும் என்னைச் சூழ்ந்தாலும்
பேரின்பம் என்னை ஆட்கொண்டாலும்
ஒலி வழி ஒளி வீசி என்னை இறுகபற்றிக் கொள்கிறாய்
பற்றிக்கொண்ட பிணைப்போ உன் மேல் ஏழும் என் காதலினை
உதடுகள் உறக்க உரைக்க எண்ணும்
உரைத்து கூறலாயின், இதழ் பதித்து கூற நேரும்
பதித்து கூறலாயின், இமை விழித்து கூற கேட்கும்
விழித்து கூறலாயின், விரல் பற்றிக் கூற வேண்டும்
பற்றிக் கூறலாயின், உயிர் அணைத்து கூற ஏங்கும்
என் உயிரை உண்ணும் உணரா உணர்வே,
உயிர் அணைத்து உன்னோடு உரைகிறேன்
உணரா உணர்வே - பிரதீப் குமார் ( PK - my love of music )