Advanced Search

Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
Birthday Wishes / Re: Happy Birthday GLASS BOY
« Last post by iamcvr on January 13, 2026, 12:52:35 am »
🎉🎂 Happy Birthday Glass BoY 🎂🎉
Wishing you all the happiness in the world on your journey ahead!



Be Happy Keep Smiling Always!
32
Birthday Wishes / Happy Birthday GLASS BOY
« Last post by RiJiA on January 12, 2026, 11:54:48 pm »
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (13 Jan 2026) Wishes To Our Lovable Friend  GLASS BOY Wishes Him  All The Very Best & Good Luck👍



33
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-063


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
35
தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 மூடி
மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 3
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து




செய்முறை:

காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.

தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்க வேண்டும்.
36
நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும் நண்டு மசாலாவா... சொல்லவே வேணாம்... நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க....!

தேவையான பொருட்கள்:

நண்டு - 2 பெரியது
தேங்காய் (துருவியது) - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 25
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு


செய்முறை:

* நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

* இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும்.

* இடையிடையே கிளறி விடவும்.

* 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நண்டில் இருக்கும் தண்ணீ­ர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும்.

* சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.
37
General Discussion / Re: BLACK & WHITE
« Last post by RiJiA on January 07, 2026, 05:34:54 pm »

CHUTTIPONNU  Siss Nice & Thank you❣





Pages: 1 2 3 [4] 5 6 ... 10