Advanced Search

Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
Birthday Wishes / Re: Happy Birthday GLASS BOY
« Last post by Globe on January 15, 2026, 09:29:03 pm »
22
Festival Day Wishes / Re: Happy Pongal 2026
« Last post by Globe on January 15, 2026, 09:18:03 pm »
23
Festival Day Wishes / Re: Happy Pongal 2026
« Last post by Ludo on January 15, 2026, 05:10:31 pm »
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
24
Festival Day Wishes / Re: Happy Pongal 2026
« Last post by MDU on January 15, 2026, 01:41:43 am »
25
தூங்காத இரவுகள்

காதலில் விழுந்தபின்
தூக்கமும் களைந்து போகும்,
கைபேசியே நமக்கு உயிராகும்.

நமது வாழ்வில் நடந்த ஒன்று –
இரவில் நிலவையே தோற்கடித்து
உறங்காமல் குறுஞ்செய்தி அனுப்பிய நாட்கள்.

நீ ஒரு ஓரத்தில்,
நானோ வெகு தூரத்தில்…
நம்மை இணைத்தது
அந்த சிறிய கைபேசியே.

இரவு பகலாகி,
விடிய விடிய குறுஞ்செய்திகள் செய்து,
பல நாட்கள் கொன்றோம்
கைபேசியை மின்கலம் இல்லாமல்.

ஒரு நாள் முழுவதும்
கையோடு  இருக்கும் அந்த கைபேசி,
“நீ என்னோடு இருக்கிறாய்”
என்ற உணர்வைத் தருகிறது.

என்னைச் சுற்றி
இருள் ஆட்கொண்ட வேளையில்,
உனது ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் முகத்தை ஒளிரச் செய்கிறது
கைபேசியின் வழியே.

கைவிரல்களின் ரேகை அழிய அழிய
செய்தி அனுப்பினேன்,
அழிந்தது ரேகை மட்டுமல்ல பெண்ணே
கைபேசியின் உள்ள
எழுத்து அச்சுகளும்தான்.

“என்ன இது,
கைபேசிக்கே கவிதை எழுதுகிரேனோ ?”
என்று எண்ணாதே…
நமது இரு இதயங்களின்
ஓசை ஒளிர்வது
அந்த கைபேசியிலிருந்துதான்.

இதயம் இல்லை, உயிரும் இல்லை
அந்த கைபேசிக்கு அனால்
பல காதலர்களின்
இதயங்களை இணைத்தது.

காதலர்கள்
முதன்முதலில் பகிர்ந்த முத்தமும்
கைபேசியின் வழியேதான்,
அதுவும் உண்மையில்
கைபேசிக்குத்தானே…

எல்லைகளை கடக்காமல்,
காதலை மட்டும் சுமந்து  சென்ற
அந்த தூங்காத இரவுகள்…



என்றும் அன்புடன்

நீலவானம்
26
"திரை தாண்டிய தேடல் நீயடி"
"திரையில் மலரும் என் காதலும் நீயடி"


"இரவின் மெல்லிய இருளில்,
என் கைப்பேசி ஒளிர்ந்திருக்க"
"இரவின் மடியில் உலகம் சாய்ந்திருக்க"
"என் கண்களில் உன் முகம் மட்டுமே நிறைந்திருக்க"
"என் கண் இமைகள் மூடாமல் உனக்காய் விழித்திருக்க"
"என் இதயமோ உன்னிடம் பேச துடித்திருக்க"
"உன்னிடமிருந்து எப்போது அழைப்பு வருமென என் மனம் தவித்திருக்க"
"நட்சத்திரங்கள் மின்னும் வானம் ஒருபுறம்"
"நம் நேசம் பேசும் திரை மறுபுறம்"

"இருள் சூழ்ந்த இரவினில் என்
இதயத்தில் உந்தன் நினைவு"
"அருகினில் நீ இல்லா நேரத்திலே இந்த மின்னணுத் திரை தான் நம் உறவு"
"சுவரோடு நான் சாய"
"திரையோடு நீ பேச"
"என் கையில் இருக்கும் சிறு மின்னணுத் திரையில் கண்ணாடிப் பிம்பமாய் உன் முகம் பார்க்கிறேன்"
"ஜன்னல் வழியே நிலவு நம்
சல்லாபத்தைக் கண்டு சிரிக்குதே"
"தனித்தனி அறையில் நாம் இருந்தாலும் நம் காதல் மட்டும் காற்றோடு இனிக்குதே"
"தனிமைச் சிறையில் நான் வாடினாலும், உன் குரல் கேட்கும் அந்தக் கணம் ஆனந்தமாகும்"
"சில நேரங்களில் நம் மௌனங்கள் கூட மொழியாகும்"
"இந்த நள்ளிரவு நமக்கொரு வழியாகும்"
"விடியும் வரை இந்த மின்மினி வெளிச்சம் நம் காதலைச் சொல்லும் ஒரு சாட்சியாகும்"

"நம் இருவரின் அறைகள் நடுவே பெரும் தூரங்கள்"
"ஆனாலும் குறையவில்லை நம் காதலின் ஈரங்கள்"
"மைல்கல் தூரத்தில் நாம் பிரிந்திருந்தாலும், காதலெனும் நூலில் நாம் பிணைந்திருக்கிறோம்"
"உன் புன்னகையின் சிரிப்பொலி கேட்டு என் இதயம் மகிழ்ந்திட"
"தூரம் என்பது இங்கே சுருங்கிப் போகிட"
மின்னணுத்திரைகள் கூட நமக்கு வரமாய் மாறிட"
"உன் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதையாய்"
"என் பார்வைகள் அதை ரசிக்கும் ஓவியமாய்"
"காலங்கள் கடந்து நின்றாலும் நம்
காதல் மட்டும் மாறாத காவியமாய்"

"பகலில் நடந்த சின்னச் சின்ன கதைகளும், ரகசியங்களும் ஒவ்வொன்றாய் நீ சொல்லச் சொல்ல அங்கே சந்தோஷ மழையில் நான் நனையத் தொடங்கினேன்"
"நீ அழகாய் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்தச் சத்தம், என் அறையின் தனிமையை அறவே விரட்டுதடி"
"காதலோடு கிண்டலும், கேலியும் நம் பேச்சில் கலந்திருக்க"
"நேரம் போவதே தெரியாமல் நாம் இருவரும் தூங்காமல் விழித்திருக்க"
"நம் உரையாடலில் என் நெஞ்சமோ சந்தோஷ வெள்ளத்தில் பொங்குதடி"
"சார்ஜ் குறைகிறது என நீ எச்சரிக்க"
"காதல் குறையவில்லையே என நான் வம்பு இழுக்க"
"மின்சாரக் கம்பிகள் வழியே பாயும் மின்னோட்டமாய், நம் மகிழ்ச்சி இருபுறமும் கரைபுரண்டு ஓடுதடி"

"இந்த நள்ளிரவு உரையாடல்கள் ஓயப்போவதில்லை தூக்கம் நம்மைத் தழுவும் வரை அல்ல"
"நம் காதல் உலகை ஆளும் வரை"
"நூறு ஜென்மம் எடுத்தாலும் நான் உன் மேல் வைத்த காதல் குறையாது"
"உன் முகம் பார்த்து நான் வாழ இந்த ஒரு யுகம் போதாது"
"விண்மீன்கள் உதிர்ந்து போனாலும், நம் விழி பார்த்த காதலின் ஒளி என்றும் மங்காது"
"சுவர்கள் மறைந்து, திரைகள் உடைந்து, நம் இருவரின் கரங்கள் கோர்க்கும் அந்த நிஜமான விடியலுக்காய் காத்திருக்கிறது என் உயிர்"
"நம் விரல்கள் கோர்க்கும் அந்தப் பொன்னாள் வரை, காலத்தின் ஒவ்வொரு நொடியும் உன் நினைவால் நிரம்பட்டும்"
"மின்னணுத் திரையின் எல்லைகள் தாண்டி, நம் காதல் அண்டத்தின் எல்லைகளைத் தேடிப் பறக்கட்டும்"

"நம் நள்ளிரவு உரையாடல்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை இருண்ட இரவில் ஒளிர்ந்த அணையாத காதல் தீபங்கள்"
"விடியலை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்"
"ஒவ்வொரு தடையும் நம் காதலின் பாதையில் தூசியாகட்டும்"
"இருள் விலகிச் செல்லட்டும்"
"புதிய விடியல் புலரட்டும்"
"நம் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்"
"நம் உறவு என்றும் பிரகாசமாகட்டும்"
"இணையம் இன்றி உலகம் இயங்காது என்பார்கள், உன் இணை இன்றி என் இதயம் இயங்காது"

"என் உலகம் உன்னைச் சார்ந்தே சுழல்கிறது"
"உன் வருகைக்காக இந்த இதயம் ஏங்குகிறது"
"உன் பிரிவின் வலி தாங்காமல் தவிக்கிறேன்"
"நம் காதலை நெஞ்சில் சுமந்து உனக்காய் காத்திருக்கிறேன்"
"சீக்கிரம் வந்துவிடு, ஒவ்வொரு நொடியும் விடியலாய் புலர"
"என் வாழ்வில் வசந்தம் மலர"
"நீ வருவாயென உனக்காய் காத்திருக்கிறேன்,
என் பிரியமானவளே,
என் அன்பிற்குரியவளே,
என் என்னவளே" 💜💜

சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் MISTY SKY 💜💜
27
Festival Day Wishes / Happy Pongal 2026
« Last post by RiJiA on January 13, 2026, 11:49:04 pm »
GLOBAL TAMIL CHAT Team Conveys
Wishes To  All GTC FRIENDS 🌾Happy Pongal🌾

Wishing You  A Pongal That Is Bright And Fantastic. As Pongal Arrives, May Your Heart Be Filled With Joy. Happy Pongal 2026🌾🌞

🌾🌞 மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப் பொங்கல் வாழ்த்துகள்🌞🌾


28
​தனிமைப் படுக்கையில் - நாம்
தனித்தனித் தீவுகளாய்...
கண்கள் பார்த்துக் கொள்ளவில்லை - ஆனால்
கனவுகள் கைகோர்த்துக் கொள்கின்றன..

கைகள் தீண்டிக் கொள்ளவில்லை - ஆனால்
காதல் இதயத்தைத்
துளைக்கின்றது...

இரு வேறு திசைகளில் நாம் இருந்தாலும்,
ஒரே நிலவை ரசிப்பதில் முடிகிறது நம் காதல்.

அலைபேசித் திரைகள் வழி
அன்பைப் பரிமாறும் அகதிகளாய்!
​மைல் கற்கள் நமக்கிடையே
மௌனப் போர் செய்தாலும்,
கண்ணாடித் திரைக்குப் பின்னால்
கலையாமல் இருக்கிறது உன் முகம்...

​இரவு நேரத்து அமைதியில்
இதயத் துடிப்பு மட்டும் உரக்கக் கேட்கிறது...

நீ அனுப்பும் 'குறுஞ்செய்தி' சத்தத்தில்
என் அறை முழுவதும் வெளிச்சம் பூக்கிறது!

என் அறையின் இருளை மட்டுமல்ல,
என் வாழ்வின் தனிமையையும் போக்குகிறது.

நேரில் பார்க்க முடியாத ஏக்கங்களை எல்லாம்,
சின்னச் சின்ன 'குரல் பதிவுகளில்' தேடித் தீர்க்கிறேன்.
​உன் குறுஞ்செய்தியின் சிறு அதிர்வு போதும்,
என் பகல் பொழுதுகள் அழகாக மாறிப்போக...

உன் அழைப்பிற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்,
ஒரு யுகமாய் நீண்டு என் பொறுமையைச் சோதிக்கிறது.

​தொலைவில் இருக்கிறாய் என்பதால் அன்பைக் குறைக்கவில்லை...
மாறாக, ஒருமுறை உன்னைத் தொட்டுவிடும் ஆசையில்
அன்பு இன்னும் ஊற்றெடுத்துப் பெருகிக்கொண்டே இருக்கிறது.

நிழற்படங்கள் வழி உன் முகம் பார்த்து,
திரையை வருடி முத்தமிடும் தருணங்கள்...
வலிக்கின்ற சுகமான அனுபவங்கள்!

​நம் சந்திப்பிற்கான அந்த ஒரு நாள் வரும்...
அன்று காலங்கள் நமக்காகக் காத்திருக்கும்,
நாம் கடந்த வந்த இந்தத் தூரங்கள் எல்லாம்
அன்று நம் மௌனத்தாலும் அணைப்பாலும் கரைந்து போகும்.
​காத்திருப்போம்...

ஏனென்றால், நீண்ட காத்திருப்பிற்குப் பின் கிடைக்கும் காதல்,
எப்போதும் விலைமதிப்பற்றது!

தூரம் ஒரு பாரமல்ல...
துணையாய் நீ இருக்கும் வரை!

என்னவனே💖
29

காதல் இரவின் கடிதங்கள் - நினைவுகளும் ஏக்கமும்

பிரிவின் சுவரைத் தாண்டி, 
பிரிந்த நெஞ்சங்கள் பேசும் நேரம் இது… 
மௌனமான இரவின் மெல்லிசை, 
நம் உரையாடலின் பின்னணி ஆகிறது. 

விசிறும் திரை, இரு அறைகள், 
ஆனால் ஒரே கனவின் பாதை. 
உன் திரையில் என் பெயர் ஒளிரும் போதே, 
என் இதயத்தில் உன் சிரிப்பு பூக்கும். 

கடிதம் எழுதும் பழக்கம், 
என் காதலின் உயிர் மூச்சு. 
ஒவ்வொரு வார்த்தையும் உன் கைகளில் விழும் போது, 
என் இதயம் உன் அருகில் துடிக்கிறது. 

வாரத்திற்கு ஒருமுறை வரும் அழைப்பு, 
சில நிமிடங்கள் மட்டுமே நீளும். 
ஆனால் அந்த சில நிமிடங்கள், 
என் வாழ்நாளின் முழு மகிழ்ச்சி. 

“எப்படி இருக்க?” என்ற உன் குரல், 
என் ஏக்கத்தின் இருளை உடைக்கும் ஒளி. 
அழைப்பின் முடிவில் வரும் மௌனம், 
என் இதயத்தில் ஆயிரம் நினைவுகளை விதைக்கிறது. 

குறுஞ்செய்தியில் வந்த உன் சொல், 
மின்னஞ்சலில் மலர்ந்த நீண்ட வரிகள், 
உரையாடல் சாளரத்தில் மலர்ந்த சிரிப்பு
என் இரவின் கனவுகளாய் மாறின. 

அந்த கடைசி குறுஞ்செய்தி, 
அந்த கடைசி மின்னஞ்சல், 
அந்த கடைசி அழைப்பு, 
அந்த கடைசி கடிதம்
இப்போது நினைவுகளின் பொக்கிஷம். 

இன்னும் காத்திருக்கிறேன்… 
ஒரு புதிய கடிதம், 
ஒரு மின்னஞ்சல், 
ஒரு குறுஞ்செய்தி, 
ஒரு அழைப்பு
உன் குரல், உன் வார்த்தை, 
என் இரவின் ஏக்கத்தை உடைக்கும் ஒளியாக. 

கடந்த காதல், கடந்த இரவுகள், 
நினைவுகளின் நிழல்களில் நடக்கும் பயணம். 
“நீங்காத” என்று சொன்ன வார்த்தைகள், 
இப்போது “நினைவாக” மாறியிருக்கின்றன. 

மாறிய வழிகள்… 
மாறாத உணர்வுகள்… 
இப்போ, அந்த சுவரின் இரு பக்கங்களிலும், 
ஒரே காதல்… ஒரே ஏக்கம்… ஒரே நெஞ்சம்.


30
குறிப்பு:-
 நான்  இதில் குறிப்பிடப்பட்ட படத்தை கொண்டு தொலை தூரத்தில்  உள்ள இரு ஆன்மாக்களின் காதல் புரிதல் உரையாடலை  கருத்தில் கொண்டு  எழுதிய கவி ..  குறிப்பிட்ட பயனர்களையோ தனி நபர்களையோ காயப்படுத்தும் வகையில் யாம் எமது படைப்பை வெளியிடவில்லை  என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் ...கற்பனை படைப்பாயினும் கதை மாந்தர்கள் நிஜமாகும்...







தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

நீயும் நானும்
நிலவும் நதியும் போல
நிலவின் உருவம் நதி மீது
வானத்தின் நீலம் காணது
வார்த்தைகள் வசப்படவில்லை
உள்ளத்தில் உதிக்கும் வர்ணனை
சொல்ல..,

தொலைதூரத்தில் நீ
உன்னில் தொலைந்து
போகிறேன் நான்..

நிசப்தமான இரவில்
உன் சப்தம் கேட்டாலே
துள்ளி குதிக்கும் சிறுபிள்ளை போல
எனது உள்ளம்...

நீ இல்லா இரவின் நொடிகள்
தூக்கமற்று போகிறதேனோ..?
உலகின் அழுத்தங்கள் ஆயிரம்
மனதில் வருத்தங்கள் ஆயிரம்
கண்மணி உன் சப்தம் கேட்ட நொடி
மறைந்து விடும் நூறாயிரம் துன்பங்கள்
நான் அமைதியாக நித்திரை கொள்வேன்.

அமைதி கொள்ள ஆன்மா தேடும்
உறைவிடம் நீ
குயிலின் கீச்சிடும் குரலோ
மயிலின் அகவலோ
சிறப்பாகுமோ உன் குரலொலி முன்னே..?

நான் எங்கே என்று ஆவலாய்
தேடும் உன் அன்பிற்கு ஈடாகுமோ
இப்பிரபஞ்சம்..?

என் உலகில் என்னவளின்றி
ஏதுமுண்டோ..?

சிரிப்பாய் நீ சில நேரம்
அச்சிறு சிரிப்பில் என்னை
சிறை வைத்து செல்வாய்
நான் ஆயுள் கைதியாவேன்
உன் சிறையில் மட்டும்..

சில நேரம் நீ அழுவாய்
அத்தருணம் மரணத்தை
உணர்வேன் நான்..


குறுஞ்செய்தி வருகைக்காக
குறும்புகள் செய்ததுண்டு..
ஓயாத உரையாடல்
நம்மில் பல உண்டு..

சண்டைகள் இல்லா காதலுண்டோ..?
ஆம் நம் சண்டைக்கு காரணம்
நாம் அறிவோம் ..

நீ வேண்டுமென நானும்
நான் வேண்டுமென நீயும்
நித்தம் ஆயிரம் சண்டைகள் செய்ததுண்டு..

உன் சுதந்திரத்தில் நானும்
என் சுதந்திரத்தில் நீயும்
கட்டுபாடுகள் விதித்தில்லை..

உன்னை நீயாகவும்
என்னை நானாகவும்
நாம் ஏற்றுக் கொண்டோம்..

பொறுத்து போவதும்மில்லை
மாற்றிக்கொள்வதுமில்லை
ஏற்றுக்கொள்வதே காதலென்பதை
உணர்ந்ததாலே சண்டைகளே
நம்முன்னு சரண்ணடைந்தது..

திகட்டி போகும் அதீத

தேடல் அதீத பாசம்

அதீத காதல்

இவைகளை நான் நீ சொல்ல கேட்டதுண்டு..

ஆனால் காணது காணது

திகட்டவும் செய்யாது என்று உலகில்  ஒன்று

உண்டெனில் அது எனக்கு நீயாகவே இருப்பாய்..

குறை நிறைகள் கண்டு

கலக்கம் கொண்டது இல்லை

நம்மில் நாம் ...

சொல்ல வார்த்தைகள் இல்லை
நீ பேசும் போது 
நான் மெளனமாக இருந்தால்
உரிமையுடன் அதட்டு வாய்
நீ கடிந்து கொள்வதும் அழகடியே..
எனக்கு புரிதல் குறைவு
எப்பெண்ணும் அவ்வாறு பல
முறை பதில் கூறாள்..
நீயோ புரியும் வரை உடனிருப்பாய்..

விலகிச்செல்ல காரணங்கள் பல
உண்டு ..
உன்னை கோபத்தால் நான்
உடைத்த போதும்
உன் அன்பால் என்னை நீ மட்டுமே
தேற்றினாய்..

மாறிவரும் உலகில் பலர்
உறவை மதிப்பதில்லை
என்னவள் நீயே
நம் உறவை பெரிதென
காத்து நின்றாய்..

பொன்னோ பொருளோ
மண்ணோ மனையோ
எதுவும் ஈடாக
உன் முன்னே..

என் காலையின் தொடக்கம்
இரவின் உறக்கம்
உன்னில் தொடங்கி
உன்லே முடிவடைய வேண்டும்
மரணம் வரையல்ல
நித்தியமாக நீ இருக்க
நான் வேண்டுகிறேன்
இறையை..

காதல் வார்த்தையல்ல
வாழ்வியல் ..
மங்கி போவதும்
மறைந்து போவதும்
காதாலல்ல..
என் காதல் யாதென
பெண்ணே உன்னிடம்
சுருங்கச் சொல்வதெனில்
நாளும் வளர்கிற
உன்மீது பொழியும்
பாசமும் போதாது போதாது ..
நீ  திகட்டா அமுது
நீ எனக்கு போதாது போதாது..
காதலில் விழுந்தேன்
என்று யாம் சொல்லோம்
நீ என்னுள்ளும்
யாம் உன்னுள்ளும்
மூழ்கி போனோம்..
பல பெண்களை நான் காணலாம்
என் நினைவெல்லாம் நீ
என்பதால் சலனம் கொள்ளாது
என் மனம்...
பல ஆண்கள் உன் கவனத்தை
கவரவும் முயற்சிக்கலாம்
ஆனாலும் பலனில்லை
சலனம் கொள்ளாது
உன் மனம்..
நான் ராமன் அல்ல
அசுரன் ஆயினும்
என்னவளே
உன்னால்
உன்னதமானேன்.
என்னிருளொளி
உணர்ந்தவள் நீ
உன்னடமே
உண்மையை காண்கிறேன் ..
பயம் குழப்பம் நம்
உறவில் இல்லை
இருள் சூழினும்
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...❤️💕🕊️✨









Pages: 1 2 [3] 4 5 ... 10