Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - NATURE LOVER

Pages: 1 2 [3]
31
வருடி விட்டு செல்லும்
உருவமில்லா காற்றைப் போல....
அவளின் அன்பில் நான் கரைந்து போய்விட்டேன்....
தேடினாலும் அவளின் அந்த அன்பு மீண்டும்
கிடைக்கப் போவதில்லை!!!!!
"பெண்னே உன்னுடன் நான் இருந்த நினைவுகளை
மறைக்கப்போவதும் இல்லை!!!
மறக்கப்போவதும் இல்லை!!!"

"முதல் முறை அவளின் அழிகிய நிலவு போன்ற முகத்தை பார்த்து தான் அழகின் பிரமிப்பின் உண்மையை உணர்ந்தேன்!!! ஆனால் இன்று அவளின் அழகிய நிலவு முகத்தை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய கண் விழிகளைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்!!!
ஆனால் இன்று அவளையே என் விழிகளால் நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் பேச்சின் ஓசையை கேட்டு தான் ஓசையின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய பேச்சின் ஓசையை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய சிரிப்பின் ஒலியைக் கேட்டு தான் ஒலியின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய சிரிப்பின் ஒலியை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை இப்படி ஒட்டு மொத்த அழகை படைத்த அந்த கடவுளின் அழகிய பிரம்மிப்பை கண்டு வியந்து போனேன்"!!!!
இன்று அவளின் பிரிவால் என்னையே நான் தொலைத்ததாக உணர்கிறேன்!!!

அவளின் மனம் புன்னகைத்த போது பூக்களும் மலர்ந்தது!!!
அவளின் மனம் வாடிய போது பூக்களும் வாடியது!!!
இங்கு பூக்கள் என்று நான் சொல்வது பெண்ணே உன்னைத்தான்! ஏனென்றால் பெண்னே நீயே ஒரு பூவைப் போன்றவள் தான்!!!
பெண்னே இன்று உந்தன் பிரிவால் என் மனமும் வாடிப் போனது!!!

சுவாசிக்க முடியாத ஒரு கிரகத்தில் என்னால் எப்படி உயிர் வாழ முடியாதோ, ஆதே போன்று தான் நீ இல்லாத இந்த வாழ்க்கையை வாழ நினைத்து வாழ முடியால் தினம் தினம் கண்ணீர் சிந்துகிறேன்!!!
பெண்னே உன்னையும், உன்னுடன் சந்தோஷாமாக கழித்த அந்த நாட்களையும் என்னால் மறக்கவும் முடியாது!... வெறுக்கவும் முடியாது!...

நம் உறவின் நினைவுகளை கண்ணீர் துளி விட்டு அழிக்க முயற்ச்சிக்கிறேன்!!
ஆனால் என் கண்ணீர் துளியிலும் கூட உந்தன் நினைவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து செல்கிறதே தவிர, உந்தன் நினைவுகளை  மட்டும் என் மனதில் இருந்து என்னால் அழிக்கவே முடியவில்லை!!!

தினம் தினம் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும். எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளை சந்தித்து விடமாட்டோமா என்கின்ற அந்த ஒரு தருணத்தை எதிர் நோக்கி நான் என் மனதில் மகிழ்ச்சியோடும், சந்தோஷ்சத்தோடும், வலிகளோடும், கண்களில் கண்ணீரோடும் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். என்னவளே உனக்காக!!!

TRUE LOVE NEVER EVER FAILS !!!
உண்மையான காதல் ஒருபோதும் தோல்வியடைவதில்லை!!!

இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்

32
என் அன்பு  மகளே,

உன் தாயின் கருவில் நீ மலர்ந்தபோது 
இந்த உலகிற்கு என்னை அடையாளம்  காட்டினாய்,
இந்த பூமியில் நீ பூத்த போது உலகை 
எனக்கு அடையாளம் காட்டினாய்!"
தவமாய் தவமிருந்து எம் தாயின் உருவில் பெற்ற என் தேவதையே ! கண்ணே.! கண்ணின்  ஒளியே !

நீ பிறந்த அன்று
ரோஜாப் பூவாய் உனைக் கையில் ஏந்தி ஒரு
ராஜாவாக உணர்ந்தேன்  உலகையே வென்றவனாய்.!
பா.. அப்பா.. என முதன் முதலாக நீ
பவழ வாய் திறந்து தித்திக்கும் தமிழில் பேசியதும்...
தத்தித் தவழ்ந்து நடை பழகியதும் உன்னை
ஈன்ற பொழுதின் பெரிதுவந்த
இனிய தருணங்கள் இன்று நினைத்தாலும்
இதயம் சிலிர்க்கிறது .!

முதன்முதலில், என் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, உன்னை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த அழகிய நொடியை என்னால் மறக்கவோ, விளக்கவோ முடியாது. அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...

உன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், உன் முழு கையையும் வைத்து என்னுடைய ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே எனக்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே! 
தினம் தினம் உன்னுடன் விளையாடும் அந்த அழகான இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ என் மார்பில் எட்டி உதைக்கும் சுகமும், உன் அழகிய கொஞ்சல் சிரிப்பும் என்னை வீழ்த்தும் அஸ்திரங்கள். என் ராஜகுமாரி உன்னை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ முதல் முதலாக என்னைப் பார்த்து அப்பா என்று கூறிய போது நான் மீண்டும் இப்பூமியில் பிறந்ததைப் போன்று உணர்ந்தேன்...

என் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த  உனது பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், எனக்கு  ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் எனக்கு காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடியது... எங்கே நீ கீழே விழுந்து விடுவாயோ என்று நானும் உன்னுடன் சேர்ந்து குழந்தையாகவே மாறிப் போனேன்...

என் விரல் பிடித்து நடந்த என் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், என்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் எந்தன் உடல் எங்கும் பரவியது. அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? என் பெண் பிள்ளையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவிதமான உணர்ச்சியை என் மனதில் உருவாக்கியது. அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.

காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் என் பெண் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். என் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி.... என் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் என் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் என்னைப் போன்ற அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!

இப்படி ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே.

அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே

இறுதியாக சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. வருங்காலத்தில் எனக்கு திருமணம் ஆன பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தால் மிகவும் மகிழ்ச்சியாய் உணர்வேன்... மீண்டும் என்னுடைய அம்மாவே இந்த பூமியில் பிறந்தது போல மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், பேரானந்தமாகவும் உணர்வேன்...

சற்று பெரிய கவிதை தான். என் கவிதையை பொறுமையாக வாசித்து காட்டியதற்கு மிக்க நன்றி...

இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்

33
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY MELLISAI
« on: November 07, 2022, 08:04:36 am »
Wish you a very Happy Birthday Mellisai 🥳🥳🎉🎉
God bless you 🙌🙌

34
Birthday Wishes / Re: Happy Birthday SEMMOZHI
« on: November 02, 2022, 03:56:33 pm »
Wish you a very Happy Birthday to you Semmozhi... 🎉🎉🥳🥳

35
Hi Arjun and all GTC users.
சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் முதல் முறையாக இந்த வாரம் பங்கு பெறுவதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
எனக்கு பிடித்த பாடல்: காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா. அன்பென்றாலே அம்மா
திரைப்படம் பெயர்: நியூ(NEW)
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் மற்றும் சாதனா சர்கம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள்: வாலி
இந்த பாடலில் தாயின் பெருமை பற்றியும் தாய்க்கு பின்பு தாரத்தின் பெருமை பற்றியும் மிக அழகான வரிகளால் இந்த பாடல் அமைந்திருக்கும்.
இந்த பாடலை இந்த பூமியிலிருந்து மறைந்து விட்டாலும் என்றுமே என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாய்க்கு மற்றும் எனக்கு இனி வருங்காலத்தில் வரக்போகும் என் மனைவிக்கும் இந்த பாடலை ஒலிப்பரப்புமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்...
மீண்டும் அர்ஜூன் மற்றும் அனைத்து GTC நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....
இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன் (NATURE LOVER)

36
இந்த தீபாவளி பண்டிகையில்
வெடியோடு சேர்ந்து துன்பங்களும் வெடித்து சிதற...
அளவோடு வெடி வெடித்து
அளவில்லாமல் அன்பை பகிர்ந்து
இனிப்புகள் போல் இல்லமும்
உள்ளமும் தித்தித்து இனிதே கொண்டாடி
மகிழுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
கந்தக பூமி தந்த பட்டாசு பரிசுகளை வெடித்து
மகிழ்ந்து இனிதே இன்புற்று கொண்டாடி
மகிழுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
இனிப்புகளோடும் இனிதாய், வெடிகளோடும் வேடிக்கையாய், உறவுகளோடும் ஒன்றாய்
கொண்டாடுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
குடும்பங்களோடு கோலாகலமாய்,
சொந்தங்களோடு மகிழ்ச்சயாய்,
பட்டாசுகளோடு வண்ணமயமாய்,
தீபங்களோடு ஒளிமயமாய் கொண்டாடுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
நல்லது நினைத்து, நல்லது செய்யும்
அனைத்து GTC நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!...
இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன் (NATURE LOVER)

38
Birthday Wishes / Re: Happy Birthday AADHI
« on: October 09, 2022, 12:44:15 am »
Wish u a very Happy Birthday to you AADHI 🎂🥳🎂🥳🎂🥳

39
மனிதர்களே சிந்தியங்கள் மரம் பற்றி...
மரம் வளர்க்க சொல்கிறேன் உன் கரம் பற்றி..     

குடம்குடமா தண்ணீரை  குடிச்சும் தாகம் தீரவில்லை !!
கோடையோட வெப்பமது கொஞ்சமும் மாறவில்லை!!
வெயிலுக்கு இளைப்பாற  மரமில்லை -ஆனாலும் 
மனிதனுக்கு மரம் வளர்க்க இங்கு மனமில்லை !!

மரம் வளர்ப்போம் ..
மரமே நமக்கு கடவுளின் கொடை....
வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை ..
மரமே பூமியின் பசுமை ஆடை
மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை?

கோடைக்கு இயற்கை  மரங்கள் அன்றி
குளிர்சாதன செயற்கையை  நீ நாடினால்
பக்கவிளைவில் பாதிக்கப்பட்டு
பாழாய் போயி விடும்  உன் உடல் !
உன் நலன் காக்கவும் உரிமையோடு
மரம் வளர்க்க சொல்லி நான்
வரைகிறேன் இதை எழுதுகிறேன் இந்த கவிதை மடல் !!.....

இனியும் மரம் வளர்க்காமல்
சுயநல மனிதனாய்  பூமியில்  நீ
சுற்றி வந்தால் காணாமல் அழிந்து போவது
மரங்கள் மட்டும் அல்ல உன்
வருங்கால சந்ததியும்தான்!!....

இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன்(NATURE LOVER)

Pages: 1 2 [3]