Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - NATURE LOVER

Pages: 1 [2] 3
16
Birthday Wishes / Re: Happy Birthday Vels
« on: August 18, 2023, 04:30:24 pm »
Wish you a Happy birthday Vels bro🎉🎉🎉

17
Festival Day Wishes / Re: Happy Independence Day 2023
« on: August 15, 2023, 07:50:23 am »
Happy Independence day to all My GTC lovable friends🇮🇳🇮🇳🇮🇳

19
Festival Day Wishes / Re: Happy Friendship Day 2023
« on: August 06, 2023, 01:35:10 am »
Wish you a very Happy Friendship day to all My GTC lovable friends❤️❤️❤️❤️

23
வணக்கம்  Sangeetha Megam Team BULLET and LovelY

சங்கீத மேகம் நிகழச்சியில் நான் இரண்டாவது
முறையாக மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்

திரைப்படத்தின் பெயர்: லேசா லேசா
பாடியவர்கள்: Harish Raghavendra, Srilekha Parthasarathy, மற்றும் Franko
நடிகர்கள்: Shyam, Trisha
பாடல் வரிகள்: Vaali
இசை: Harris Jayaraj

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா
வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் ஒன்று. எனக்கு பிடித்த இந்த பாடலை நான் உயிராக நேசிக்கும் என் Aaliya விற்கு இந்த பாடலை நான் Dedicate செய்கிறேன்... இந்த பாடலை நானும் Aaliya வும், GTC நண்பர்களோடு சேர்ந்து கேட்க ஆசை படுகிறேன்.

மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்த சங்கீத மேகம் குழுவிற்கும், GTC FM க்கும் மற்றும் COFFEE BOY அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு என்றும் உங்கள் நண்பன்
NATURE LOVER

24
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY DEVA
« on: March 09, 2023, 09:57:22 am »
Wish you a Happy Birthday Deva machi😍😍🎉🎉🎊🎊

25
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY DIMPLE
« on: March 08, 2023, 05:05:28 am »
Wish you a Happy Birthday to you Dimple machi🎉🎉🎊🎊

27
"விஞ்ஞானம் அறிவியலும் வளர வளர!!
"விஞ்ஞானம் அறிவியலும் வளர வளர!!
"ஏனோ விரக்தியும் அதிகமாச்சு!!

"விட்டில் இருக்க அடங்க மறுத்த காலம் போயி.... இப்போ வாட்ஸ் அப் உள்ளே நம் பழக்கம் முடங்கிப் போச்சு!!!
"கூடிப் பேசி சந்தோஷமாக குலவியது இப்போ குரலக் கூட மறந்து போச்சு!!!
"இந்த போதை மிகுந்த கைபேசியால் இங்கு பல உறவும் மறந்தே போச்சு!!!

"பக்கத்தில் இருப்பவனை ஏனோ பார்க்கக் கூட தோனல... பத்து நிமிடம் நம் கைபேசியை மறந்து பயணிக்க முடியல"...

"ஆறு அங்குல அளவுல நீ உலத்தையே அடக்கிவச்ச"
"ஓடி விளையாடி திரிஞ்சவன நீ ஒரு மூலையில இருக்கவச்ச"
"சுறுசுறுப்பா இருந்தவன சோம்பேரியா ஆக்கிவச்ச....  உடல் உழைப்பை மறக்கவச்சி அவன் கொழுப்ப ஏத்திவச்ச"
"முகம் அறிந்த உறவுகளை முழுசா நீ மறக்க வச்ச....  முகம் தெரியாத மனிதர்களை நீ முகநூலில் தேடவச்ச"

"முகநூலில் கணக்கு வெச்சு நம்ம முற்றிலுமா முடங்கிப் போனோம்!!!
"முகநூலில் கணக்கு வெச்சு நம்ம முற்றிலுமா முடங்கிப் போனோம்!!!
"சுக துக்கம் அனைத்தையும் அதன் சுவரில் எழுதியே உறங்கிப் போனோம்!!!

"செல்ஃபியைக் கானும் போது"
"செல்ஃபியைக் கானும் போது"
எனக்கு ஒன்று மட்டும் புரியுது
உலகமே அனாதயாய் இன்று உலவுதுன்னு தெரியுது"

"வாட்ஸ் ஆப், பேஸ் புக் என்று டெக்னாலஜி வளர்ச்சியை நோக்கி போகுது!!!
"மனிதனின் சுற்றமும், நட்பும் வீழிச்சியை நோக்கி போகுது!!!

"பல நூறு மைல் தொலைவை நிமிடத்தில் தாண்டினாய்....  பிரிந்து வாழும் உறவுகளை பக்கத்தில் காட்டினாய்"
"அவசர உலகத்தில் மிக அவசியமாய் ஆகின்றாய்....  அலைக்கற்றை பல கொண்டு அகிலத்தை ஆள்கின்றாய்"
"மக்களை கட்டிப்போடும் வித்தையில் நீ வல்லவன்"
"உன்னைச் சரியாக கையாண்டால் என்றும் நீ நல்லவன்"

"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!!!
"கைபேசியை அளவோடு பயன்படுத்தினால் நம் அனைவருக்கும் நன்று!!!

28
Festival Day Wishes / Re: Happy 1st Anniversary GTC 2.0
« on: January 14, 2023, 11:37:10 pm »
Happy 1st Anniversary to GTC

29
"பள்ளிக்கூடம் என்றுமே என் மனதில் பூங்காவனம்!!!...
"பள்ளிப்பருவம் என்றுமே என் நினைவில் பிருந்தாவனம்!!!...
"பள்ளிக்கூடம் என்னை ஈன்றெடுத்த மற்றொரு தாயின் சோலைவனம்!!!...

"என் தாயின் கருவில் பாதுகாப்பாக இருந்தேன்!!!
"இவ்வுலகிற்கு நான் கனவுகளோடு பிறந்தேன்!!!
" தாயின் பிரியாத அரவணைப்பில் அனைத்தும் உணர்ந்தேன்!!!

"வருடங்கள் கடந்தன திடிரென முதல் முறை பள்ளிக்குச் செல்ல ஒரு சின்ன பயம் உண்டானது"....
"என் மனதில் பயத்தையும், தோளில் புத்தகத்தையும் சுமந்தபடி பள்ளிக்கூடத்தை அடைந்தேன்... `அம்மா... அம்மா... என்ன விட்டுட்டு போகாதேம்மா என்று கதறி அழுதேன்"....
"என் அம்மாவோ என் குமுறல் அழுகையைப் பார்த்து கண் கலங்கி நின்றார்"....
"பள்ளிக்குச் சென்ற அந்த முதல் நாள் நான் ஒரு  அசத்துடனும், பயத்துடனும் அழுது கொண்டே பெண் ஆசிரியரின் முகத்தைப் பார்த்தேன்....
என் வகுப்பு பெண் அசரியரோ என்னை தூக்கிக்கொண்டு அழதே என் தங்கமே என்று கூறியது இன்றும் என் நினைவில் வைத்திருக்கிறேன்"....

"பள்ளிக்கூடம் என் உள்ளத்தில் அறிவை அள்ளிக் கொடுத்த ஞானச்சாலை"....
"என் பிஞ்சு விரல் பிடித்து அ...ஆ.... என்று சொல்லித்தந்த என் பெண் ஆசிரியரின் முகம்  31 வருடங்கள் கழித்தும் இன்றும் என் மனதில் பதித்திருக்கிறது"....
"பள்ளிக்கூடம் என் வாழ்க்கையின் பொன்னான பருவ நாட்களில் ஒன்று"....
"பள்ளிக்கூடம் என் நண்பர்களுடன் நான் சந்தோஷமாக குடியிருந்த நினைவுக்குடு"....
"பள்ளிக்கூடம் அன்று என் நண்பர்களுடன் துள்ளிக்குதித்து விளையாடிய ஆனந்தக்களம்"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது,  பந்துவீசி விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாடுவது மற்றும் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வது என பல சந்தோஷம் மிகுந்த அந்ந தருணங்கள் மிகவும் அற்புதமானவைகளே"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அந்த சந்தோஷமான தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியனவையே"....
"பள்ளிக்கூடத்தில் பள்ளிப்பருவத்தில் எனக்கு கிடைத்த என் ஆருயிர் நண்பர்களின் நட்பு  இன்று வரை எனக்கு கிடைத்த பொக்கிஷம்"....

"பள்ளி விடுமுறை தினங்களில் கூட பள்ளி செல்ல முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித ஏக்கம்"....
"நண்பர்களை காண முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித துக்கம்"....
"பரிட்சை நேரம்...வினாக்கள் இன்னும்... எத்தனை இருக்குன்னு எண்ணம்.. விநாடிகள் நகர.... பயமோ உதர.... நண்பனோ   விடை கொடுக்க....
பதில்  அளித்தேன் கை வலிக்க.... சந்தோஷமோ என் மனம்முழுக்க"....

"இப்படி என் பள்ளிக்கூட அனுபவத்தை சொல்லிக்கொண்டே போகலாம்"....
"என் வாழ்வில் மீண்டும் திரும்பக் கிடைக்காத அந்த நாட்களை எண்ணி திரும்பி பார்க்கும் போது கனத்த இதயமும் கண்களில் கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது"....
"கடவுள் என்னிடம் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்!!!
"எனக்கு என்னுடைய அம்மாவை திரும்பக் கொடு, எனக்கு என்னுடைய பள்ளி நாட்களை திரும்பக் கொடு என்று தான் கேட்பேன்"....

இப்படிக்கு
உங்கள் NATURE LOVER (இயற்கை நேசகன்)

Pages: 1 [2] 3