Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Sivarudran

Pages: [1] 2
1
வாக்குரிமை நம் வாழ்வுரிமை !
வாழ்ந்து பார்ப்போம் வாடா என்றே தேர்தல் களம் நம்மை அழைக்கிறது !
இளைஞனே நம் குலம் காக்க எழுந்து வா !
நோட்டுக்கு ஓட்டென்ற காலம் போகட்டும் !
வீட்டுக்கு வீடு ஓட்டென்று ஆகட்டும் !
வாக்குறுதிகளை நம்பி
நம் வாழ்வுரிமைகளை இழந்த காலம் நீங்கட்டும் !
நம்மை நாமே செதுக்கும் காலம் நம் கையில் வந்துவிட்டது.

சிறுதுளி மை தானென்று சிந்திக்காமல் விரல் நீட்டிய காலங்களை விரட்டியடிப்போம்.
நம்மை ஆள்பவர் யார் என்றே நாம் தீர்மானிப்போம் !
நம் தீர்மானிப்பில் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாகட்டும் !
நாடாளுமன்ற தேர்தல் நடுநடுங்கட்டும் !
கடமையை செய்வோம் என்று கடமைக்கு ஓட்டிடாமல்.
நம் கடமைகளை யார் தம் கடமையாக எண்ணுகிறார் என்றே சிந்தித்து வாக்களிப்போம் !
ஒரு நாள் மட்டும் விரலுக்கு மை பூசி
வாழ்நாளெல்லாம் முகத்துக்கு கரி பூசும்
தேர்தல் திருவிழா அல்லவோ இது !
வாக்குறுதிகளை நம்பி நம் வாழ்வுரிமைகளை விட்டுக் கொடுக்காதீர் !
நம் வாழ்வுரிமைகளை நம்பி நம் வாக்குரிமைகளை தீர்மானிப்போம் !

2
நானே நீ தானே
நீயே நான் தானே !
நம் தந்தையின் விந்தில் முந்தியவன் நீ
நம் தாயின் கருவறையில் முதலில் தூங்கியவன் நீ
அம்மாவின் அமுதத்தையும் அன்பையும் முதலில் பகிர்ந்தவன் நீ
தாயின் அரவணைப்பில் முதலில் ஆழ்ந்தவனும் நீ
தந்தையின் விரல் பிடித்து தத்தி தத்தி நடந்தவனும் நீ
உனது சாயல்கள் அனைத்தையும் எனக்கென தந்தவன் நீ
நீயும் நானும் வேறல்ல
இருவரும் ஓர் உயிர் என்றே எனக்கு உறைத்தவன் நீ
நீ கற்ற மொத்த வித்தைகளின் மிச்சம் மீதியை எனக்கென சொல்லித் தந்தவன் நீ
அம்மா என்று அழைத்த வாயாலும்
அப்பா என்று அழைத்த வாயாலும்
அண்ணா என்று அதிகமாய் அழைக்க அழகாய் பழகித்தந்தவன் நீதானே !
அன்னநடை நான் நடக்க
அண்ணன் நீயே அழகாய் கைப்பிடித்து
நடக்க வைத்தாயே !
நீ கடித்த எச்சில் மிட்டாயை
எனக்காய் உன் சட்டை பையில் சேமித்து வைத்து எடுத்து வந்து தந்தாயே !
அச்சு அசலாய் அப்பனை போல் நீ என் றும்
அச்சு அசலாய் அண்ணனைப் போல் நான் என்றும் ஆகிவிட்டேன்
உன் அறிவில் பாதி தந்தை என்றும்
என் அறிவில் பாதி நீ என்றும் சொல்லும்படி
 நீயே நானாக இங்கு நாளெல்லாம் நமதாக
அண்ணன் தம்பியாய் அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
-ஆம்
வாழ்வை அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

4
எங்கிருந்து வந்த தேவதை நீ - ஆம்
என்னைக் காக்க எங்கிருந்து வந்த  தேவதை நீ ?

எனக்காக வெயிலை விரட்டும் உன் வேக நடை !

எனக்காக மழையை முந்தும் உன்
முந்தானை குடை !

என் கண்ணில் தூசி பட்டால் புயலை புரட்டும் பூமகளே !

ஈரைந்து மாதமாய் என்னை சுமந்து இடுப்பு நோக ஈன்ற அன்னையே !

என் கால்கள் நோகாமல் எனக்காக என்னை கையில் தாங்கியவளே !

என் கண்கள் தூங்காமல் போனால் நீ அதை தாங்காமல் தாலாட்டு பாடியவளே !

அடைக்காக்கும் கோழியாய் என்னை காக்கும் என் அன்பு தோழியே !

காலத்தின் கைதியாய் நீ இருக்க காலமெல்லாம் நான் வாழ கையில் எனக்கு கல்வி தந்தவளே !

முந்தி வரும் அம்புகள் உன் முதுகை தாக்க
மூத்த மகன் நான் படிக்க
என் கையில் புத்தகம் தந்தவளே !

ஆயிரம் தடைகள் அம்புகளாய்ஆழப் பதிந்தது உன் முதுகில்
அத்தனையும் தாங்கிக் கொண்டு என்னை அரவணைத்த என் அன்பு தாய் நீ தானே !

ஆயிரம் அம்புகள் என்னை நோக்கி வந்த போது அன்னை எனும் கேடையத்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தும் அன்புத் தாய் நீ தானே !

ஊரில் உள்ள அத்தனை குலசாமியும் ஒன்றாய் தெரிகிறது
 உன் உருவில் என் குலசாமி நீ என்று.

5
Birthday Wishes / Re: Happy Birthday Pikachuu
« on: February 28, 2024, 02:10:06 pm »
Happy birthday bro 🎂🎉

6
Birthday Wishes / Re: Happy Birthday RIJIA
« on: February 22, 2024, 10:06:49 pm »
காந்தர்வ குரல் அழகி !
கற்பூர பேச்சழகி !
கண்ணாடி சிரிப்பழகி !
அரட்டைக்கு அணியழகி !
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

7
Festival Day Wishes / Re: Happy Birthday Valentine'S Day 2024
« on: February 14, 2024, 12:29:44 pm »
Happy valentine's day

8
Birthday Wishes / Re: Happy Birthday Coffee BoY
« on: February 11, 2024, 03:51:43 pm »
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

9
எட்டி நீ நின்றாலும்
குட்டிக்கரணம் போடும் என் குட்டி இதயம் !
வானம் தூரல் போடும் வேலையில்
என் மனம் சாரல் வீச உன் அருகில் வருகிறது !
ஆளைக் கொல்லும் உன் கருவிழி மிரட்டலில்
ஆழ்ந்து போனவன் நானே !
அடியாத்தி இது என்ன முறைப்பு !
என் முறைப்பெண்ணால் எனக்குள்ளே தவிப்பு !
எத்தனை முறை சொல்லியும்
எடுத்தெறிந்து பேசும் இவளின் கோபம் இவளுக்கு தனிச்சிறப்பு !
என்னை  வெட்டி வீசும் இவளின் கத்தி புருவம்
என்னை புத்தி புரள செய்கிறதே !
பூடகமாக நான் என் காதல் சொல்லியும்
நாடகமாடியே என்னை கடந்து செல்கிறதே
உன் கால்கள் !
உன் நிழலை கூட நெருங்காதவன் நான்
நீ மழையில் நனைகையில் நெருங்கி வந்தேன் - உன்னை இறுக்கி அனைக்க அல்ல !
 மழைநீர் உன்னை உருக்கி விடாமல் காத்து நிற்க !
மெழுகு சிலை நீயென்றால் மெட்டிசைத்து பாடியிருப்பேன் மழையில் நீ நினைகையில் ! - நீயோ மெய் மணக்கும் சந்தன சிலையாச்சே !
உன்னை விட்டு விடவும் முடியாமல்
உன் அருகில் வந்து உன்னை தொட்டுவிடவும் முடியாமல்
நில்லாமல் நிற்கிறேன் நான்
ஒருமுறை முகம் திருப்பி பார்ப்பாயா
நான் யுகம் வாழ !

10
சங்கீத மேகம் குழுவிற்கு வணக்கம்.
மிகச் சிறப்பாக இயங்கி ஒன்று இருக்கும் சங்கீத மேகக் குழுவில் இன்று நானும் எனக்கு பிடித்த பாடலை கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஒவ்வொரு வாரமும் சங்கீத மேகம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த வாரமும் சங்கீத மேகம் நிகழ்ச்சி சிறப்புற என்னுடைய வாழ்த்துக்கள். இந்த வார சங்கீத மேக நிகழ்ச்சியில் என்னுடைய விருப்ப பாடலாக கண்ணன் வருவான் திரைப்படத்திலிருந்து காற்றுக்கு பூக்கள் சொந்தம் என்ற பாடலை என்னுடைய விருப்ப பாடலாக இங்கு பதிவு செய்கிறேன். இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடலின் வரிகள் அனைத்தும் மிகவும் இனிமையாக இருக்கும் தனக்கான ஒரு பெண்ணைத்தேடும் வகையில் அமைந்திருப்பதால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சங்கை நெரிக்கும் சோகம் கூட
சங்கீத மேகம் கேட்டால் கலைந்தோடும். நன்றி.

11
மரமாகிப் போனேன் நான் - ஆம்
அவள் என்னை கட்டி அணைத்து
காதல் சொல்கையில் தானே மரமாகிப் போனேன் நானே !
நான் துளிர்விட நினைக்கையில் அவள் என்னை தொட்டுவிட்டாள் !
என் உடம்பில் கிளைகளும் இலைகளும் முளைத்து முறுக்கேறியது
அவள் என்னை மூளை சலவை செய்கையில் !
அவள் தொட்ட இடம் துளிர்விட்டது !
களிறு போல் என் தோல் தடித்து போனது !
காதல் சொல்லி என் பக்கம் வந்த கன்னியவள் கைப்பட்டதும் -ஆம்
களிறு போல் என் தோல் தடித்து போனது !
அவளின் வேர்வைத் துளி பட்டு நிலத்தில் நான் வேர் விட்டுப் பாய்ந்தேன் !
இச்சையோடு அவள் என் அருகில் வர
என் உடம்பில் பச்சையம் பல கோடி கூடியது!
காயாத சருகுகள் என்னில் பல உண்டு
அவள் தன் காதல் சொல்லியதால்!
வாடாத கிளைகள் என்னில் பல உண்டு
வண்ணக்கிளி அவள் என்மேல் வாழ்ந்து வருவதால் !
உதிராத பூக்கள் என் மேல் பல உண்டு -அவள்
உள்ளத்தை அள்ளி என் மேல் வைத்த காரணத்தினால் !
வெம்பாத பழங்கள் என்னில் பல உண்டு
வெட்கப்படும்
 பாவை- அவள்
 என் மேல் விருப்பம் கொண்டதால் !
ஆசை மங்கை அருகில் இருக்க ஆயுள் கூடி போன மரமானேன் நான்-  ஆம்
ஆண்டெல்லாம் வளர்ந்து செழிக்கும் மரமாகி போனேன் நான் !
யாரும் என்னை வெட்டிவிடாமல்
 என்னை கட்டி அணைத்து காலமெல்லாம் காத்து நிற்கும்  இவளோடு
என் காலமும் காதலும் நாளெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது !

13
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !
தாவிக்குதித்துச் செல்லடா தடையை மீறி வெல்லடா !
ஈராயிரம் ஆண்டுகளாய்
எம் இனப்பெருமை ஏறுதழுவுதல் என்றே
திமிரி நிற்க்கும் திமிலை வீரத் திமிரோடு பிடித்தே செல்லடா !
முகத்திற்கு முன்னிற்கும் காளைக் கோடுகளை முந்திச்சென்றே மோதிடடா !
வாடிவாசல் காளைகளின் வால் பிடித்தே வாழ்த்திடடா தமிழின் பெருமையை !
தாழ்ந்து போகாதவன் தமிழன் !
வீழ்ந்து போகாதவன் தமிழன் !
தடைகளைக் கண்டு சோர்ந்து போகாதவன் தமிழன் !
கட்டவிழ்த்து வரும் காளைகளை கட்டியணைத்தே -நம் இனவீரம் சொல்லடா !
சங்க இலக்கியம் பேசிய வீரத்தினை சங்கம் வைத்தே வீடு தோறும்
சொல்லடா !
சரித்திரம் பேசும் தமிழின் வீரத்தினை சாக விடமாட்டோம் என சத்தமிட்டு சொல்லடா !
வீரத்தின் விளைநிலம் தமிழ் இனம் என்றே
வீதி எங்கும் நிற்கும் எம் காளைகளைப் பாருங்கள் !
காளை அடக்குதல் எம் கலாச்சாரம் !
காளைக் கோடுகளை பாய்ந்துப்பிடித்தல் எம்
பாரம்பரியம் !
தடையை தகர்ப்போம் !
தாவிக் குதிப்போம் !
தமிழனாய் நிற்போம் !
சலங்கை ஒலிக்கட்டும் !
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் !

14
ஆசபட்டேன் ஆசப்பட்டேன்
பள்ளி செல்ல ஆசபட்டேன் !
அம்மா கை புடிச்சு
ஆசை நடை நடந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே !
அப்பா சைக்கிளில் அசைந்து அசைந்து பள்ளி போக ஆசைப்பட்டேனே!
தலைமகன் எந்தன் தலையில் உச்சிவகுந்தெடுத்து
ஊர்வலம் போகும் தேர் போல அலங்காரித்து
அழகு சீருடை தான் அணிவித்து.
சீக்கிரமாய் என்னை பள்ளி கிளப்பும் -என்
சிரித்த முகத் தாயே !
வருந்துகிறேன்  நம் நிலை கண்டு .
கஷ்டமில்லாம நாம வாழ
இஷ்டம் இல்லாம இரும்பு பட்டறைக்கு வேலைக்கு போறேனே !
என் கூட்டு பிள்ளைங்க
எகிரி குதிச்சு விளையாடயிலே  - அத
எட்ட நின்னு பார்க்கும் என் மனசு .
விட்டுட்டு போக தோணுது பாதியிலேயே
நான் பார்க்கும் வேலையை விட்டுட்டு போக தோணுதே !
வழியில வாத்தியாரை பார்க்கும்போது வணக்கம் சொல்லி
வாரேன் உங்களோடு பள்ளிக்குன்னு வாய் சொல்ல துடிக்குதே !
வறுமையின் கொடுமை நினைவுக்கு வரவே
வாய் மூடிய பதுமையாய் வந்துடுவேன் பட்டறை வேலைக்கு !
படிக்க இஷ்டப்பட்டு துடிக்கும் இதயம் இரும்பு அடிப்பதா ?
சுழன்று விளையாடும் வயதில் சுத்தியல் பிடிப்பதா ?

சுமைகளை சுகம் எனத் தாங்கும் வயதில்லை எனக்கு - ஆம்
சுகங்களை சுமையில்லாமல் தாங்கும் வயதே எனக்கு.
உள்ளுக்குள் ஊஞ்சலாடுது வயசு !
வீட்டுக்குள் வறுமையால்
திண்டாடுது மனசு !

நித்தமும் சுத்தியல் பிடிக்கும் நினைவுகள்
நெஞ்சுக்குள்ளே படபடக்குதே !
பென்சில் பிடிக்கும்  ஆர்வங்கள் என்னுள்ளே
 பேரின்பம் கொள்ளுதே !
கையெல்லாம் காய்ச்சு போச்சு
கை நாட்டு நானென்றாச்சு ‌-
சமூகமே
விழி இழந்த - என் வாழ்க்கைக்கு
வழிகாட்ட வாருங்கள் !
வலி சுமக்கும் என் கரங்களுக்கு
விடை கொடுக்க வாருங்கள் !

15
அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.
இந்தப் பாடல் வைரமுத்து வரிகளில் எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் பரத்வாஜ் இசையில் அமைந்துள்ளது. தமிழ் திரைப்பட பாடல்களில் மிகவும் சவாலான திரைப்பட பாடல் இது . இந்த திரைப்படப் பாடல்ளில் வைரமுத்துவின் வரிகளில் எந்த வரியையும் தவிர்த்து விட்டு இந்த பாடலை கேட்க இயலாது அனைத்து வரிகளுமே மிகச்சிறப்பான வரிகள். எனக்கு இந்தத் திரைப்படப் பாடல் மீது தனி விரும்பம் உண்டு.‌ எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்பதே சிறப்பு.

Pages: [1] 2