Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - MDU

Pages: [1] 2 3 ... 15
1
🌹 Happy Rose Day, என் உயிரின் உயிரே – MB 🌹

இந்த உலகத்துல
எல்லா மலர்களும் ஒருநாள் வாடும்…
ஆனா என் மனசுக்குள்ள
உன் காதல் மட்டும் நாளுக்கு நாள் மலருது…

ரோஜாவுக்கு மணம் இயல்பு,
என் வாழ்க்கைக்கு அர்த்தம் நீ…
நான் மூச்சு விடுற ஒவ்வொரு நொடியிலும்
உன் பெயர் தான் என் இதய துடிப்பு…

கஷ்டங்கள் முள்ளா குத்தினாலும்,
உன் ஒரு பார்வை போதும்
என் வலியெல்லாம் மறக்க…
உன் மடியில் தான் என் உலகம் அமைதியாகுது…

இந்த ஜென்மம் மட்டும் இல்ல,
எத்தனை ஜென்மம் வந்தாலும்
என் மனசு தேடும் ஒரே காதல்
நீ தான், MB …

Happy Rose Day,  என் கூட இல்லாமல் தொலைவில் நீ இருந்தால்லும்
என் உயிரின் வாசம் நீ 🌹❤️


MDU

2
உன் கையில் ஒரு ரோஜா கொடுத்த போது என் இதயத்தில் ஆயிரம் நினைவுகள்
சொல்ல முடியாத காதலை, ரோஜா மலரின் இதழ்கள் மட்டும் சொல்கின்றன

மலரின் மணத்தில் மகிழ்ச்சி பொங்க
ஆனல் ரோஜா  மலர்ரின் முள்ளின் மீது காதல் வலி.

சிரிப்பில் பிறக்கும் காதல் பூக்கள் பூக்கும் தருணம் ,
மௌனத்தில் வளரும் என் காதல் கதை .

கண்களில் மின்னும் காதல் கனவுகள்,
கண்ணீரில் கரையும் காதல் நினைவுகள்.

உன் அருகில் நான் சொர்க்கத்தில் இருப்பது போல இருக்க ஆசை பட்டேன் ஆனால்  என்னவோ
உன் நினைவில் நான்  ஆயுள் கைதி போல  மாற்றி விட்டது உன் நினைவுகள்.

சந்தோஷம் கூட சோகமாகும் நீ என்னை விட்டு பிரிந்த போது
சோகம் கூட இனிமையாகும் நீ என் பக்கத்தில் இருக்கும் போது

ரோஜா பூ போல நீ  என் இதயத்தில் உள்ளே வந்தாய்
கள்ளி காட்டு முள்ளு போல உன் பிரிவு என் நெஞ்சில் குத்தி சென்றாய்

ஒன்றாய் இருந்த நொடிகள் எல்லாம் இதயத்தில் எழுதப்பட்ட கவிதை.
பிரிந்த நாட்கள் வந்தாலும் கூட உன் நினைவு மட்டும் உயிராய் வாழும் என் இதயதில்

சொல்லாத சொற்கள் ஆயிரம் இருந்தாலும் உன் கண்கள் போதும் உன் நினைவுகள் புரிய.
மௌனம்கூட உன் அருகில் காதலாய் பேசுது தினமும்.

தொலைந்தாலும் உன்னைத் தேடும் என் மனசு,
தோற்றாலும் உன்னை விடாத என் காதல் இதயம்.

சிரித்த நாட்களும் உண்டு அழுத நாட்களும் உண்டு
எல்லாமே இனிய நினைவுகள் தான் எனக்கு

நீ தூரம் இருந்தாலும் பரவாயில்லை உன் காதல் மட்டும் என் அருகில்தான்.
மறக்க முடியாத என் காதல் நினைவுகள் இன்று உன்னோடு மட்டுமே முடியுமோ.

நீ என் கனவின் காதலி நாயகி ஆன பிறகு
நான் உன் காதலின் கைதி ஆகின்றேன்

இந்த ஜென்மம் போதாது உன்னுடன் நான் சேர்ந்து வாழ
முடிவில்லா என் காதலுக்கு ரோஜாவே சாட்சி சொல்ல வா என்று சொல்லி கொடுத்தது

உன் மூச்சின் வெப்பத்தில்  காற்று என் மீது விழுந்ததும் கரையும் நான்,
உன் கை விரல்கள் தொட்ட போது பனித்துளி போல உருகுது என் இதயம்

நீயே என் வாழ்க்கை கவிதை வரிகள் ஆகிறாய்
நீயே என் தினசரி சந்தோஷம் துன்பமும் ஆகிறாய் .

வேறு யாரையும் மனது நினைக்கவில்லை
ஆனால் உன்னை மட்டும் என் கண்கள் தேடுகின்றன .

உன் தொடுதல் ஒரு மந்திரம் போல என் இதயம் மெதுவா துடிக்குது.
உன் அருகில் நான் இருக்கும் போது அந்த ஒரு நிமிடம் என்னையவே தொலைந்த போல தேடுகிறேன் .

உன் தோளில் சாயும் போது உலகமே நிறுத்தம் ஆகுது.
கவலை எல்லாம் தூங்கிப் போய் காதல் மட்டும் விழித்திருக்கு.

உன் சிரிப்பில் சிக்கிய என் காதல் வாழ்க்கை வெளியே வர நெனைத்தது இல்லை
உன் கண்ணீரை துடைக்க நான் எப்போதும் உன் கைக்குட்டை போல் உன்னுடன் இருப்பேன்

வானத்திலிருந்து இறங்கிய வெள்ளை சிறகுள்ள கனவு நீ,
பூவின் வாசனைக்குள் மறைந்த புன்னகை பரிசு நீ.

உன் கண்ணீரை துடைக்க எப்போதும் நான் உன்னோடு.
ரோஜாவுக்கு முள்ளு இருந்தாலும் உனக்கு நான் கவசம்

இந்த ஜென்மம் போதாது உன்னோடு,
இன்னும் பல ஜென்மம் வேண்டும்.

நீ என் இதயத்தின் ராணி நான் உன் குட்டி காதலன்
உலகம் மறந்தாலும் பரவாயில்லை நீ மட்டும் என் உலகம்.

இந்த ஜென்மம் போதாது உன்னோடு நான் வாழ
இன்னும் பல ஜென்மம் வேண்டும் உன்கூடவே நான் வாழ

ரோஜா மலர் உனக்காக இல்லை நீயே அந்த ரோஜா என்பதால
என் மூச்சின் கடைசி நொடி வரை உன்னையே தான் காதலிப்பேன்.

இப்படிக்கு,
என்றும் உங்கள் நண்பன்
MDU 🤍

3
என்னவளே…
உன் பெயரை சொல்லும் போதே
என் இதயம் மெதுவா சிரிக்குது.

உன் கண்களில் நான் தொலைந்தேன்,
அந்த தொலைவில்தான்
என் வாழ்க்கை கிடைத்தது.

உன் சிரிப்பே என் சொர்க்கம்,
உன் மௌனமே என் கவிதை.

என்னவளே…
இந்த உலகத்தில் எனக்கு கிடைத்த
அழகான அதிசயம் நீ தான் ❤️


MDU

4
வானத்திலிருந்து இறங்கிய
வெள்ளை சிறகுள்ள கனவு நீ,
பூவின் வாசனைக்குள் மறைந்த
புன்னகை பரிசு நீ.

கண்ணில் மின்னும் நட்சத்திரம்,
இதயத்தில் வாழும் தேவதை,
சிரிப்பில் உலகம் மறக்கும்
சின்னச் சின்ன ஏஞ்சல் நீ.

தொட்டால் கரையும் பனிப்போல,
பார்த்தால் மலரும் மலர்போல,
என் வாழ்க்கைக்கு வந்த அதிசயம்,
நீ தான் என் அழகான தேவதை


You are a dream that descended from the sky,
With white wings so bright and pure,
A hidden smile inside a flower’s fragrance,
A gift wrapped in sweetness and light.

A twinkling star within your eyes,
An angel living in my heart,
With your smile, the whole world fades away,
My tiny, precious little angel.

Like snow that melts when touched,
Like a flower that blooms when seen,
The miracle that came into my life,
You are my Cute Angel


MDU

5
Birthday Wishes / Re: Happy Birthday UNAKAAGA NAAN
« on: January 26, 2026, 01:44:48 pm »


MDU

6
Festival Day Wishes / Re: Happy Indian Republic Day 2026
« on: January 26, 2026, 12:59:18 pm »

7
Birthday Wishes / Re: Happy Birthday Athirai
« on: January 18, 2026, 10:57:50 am »
WISH YOU HAPPY BIRTHDAY ATHIRAI




MDU

8


Un Kuthama En Kuthama” – Azhagi

Paadal varum scene‑la:
- Parthiban and Nandita Das many years after meet aaguraanga
- Sandhikka koodiya santhosham illa…
- “Namma vaazhkai ipdi aagiduchu” nu oru silent pain
- Andha inner heartbreak‑a thaan indha paadal full‑a capture pannum
Idhu oru love song illa…
Idhu life epdi namma manasai maathidum nu sollum oru soulful poem.

- Music: Ilaiyaraaja – pure emotion
- Voice: Ilaiyaraaja – direct‑a heart‑ku varum
- Lyrics: Ilaiyaraaja – life philosophy mixed with poetry
Indha combination thaan indha paadal‑a
oru painful, beautiful memory journey‑a maathudhu.


9
Festival Day Wishes / Re: Happy Pongal 2026
« on: January 15, 2026, 01:41:43 am »

10
The Mystery of History program was truly impressive. The research was well done, and the presentation was engaging from start to finish. The concept felt fresh and different, which made the episodes very interesting. I’m really looking forward to more such intriguing mysteries in the coming days. Using a natural human voice instead of an AI voice would make the experience even better. Overall, it was a great effort keep going, team!

The 1st episode was amazing. Thank you, Love Me, and the GTC Team, for all the love and hard work. Keep shining!



MDU

11
Festival Day Wishes / Re: Happy New Year 2026
« on: January 01, 2026, 07:04:57 pm »
New hopes rise with 2026 dawn,
Let joy and peace in hearts be drawn.
Dreams come true, worries fade away,
Happy New Year—smiles every day!





MDU

12
எனக்கு நிறைய கவலைகள் கற்றுத் தந்த வருடம்,
கொஞ்சம் சந்தோஷங்கள் உயிர் கொடுத்த வருடம்.

கண்ணீரால் எழுதிய நாட்களும் கூட கொடுத்த வருடம்
புன்னகையால் கடந்து சென்ற நொடிகளும் இருந்த வருடம்

நம்பிக்கைகள் சில உடைந்தது,
ஆனால் என்னை நான் கண்டுகொண்டேன் வழி நடத்திய வருடம்

இழப்புகள் வலிக்க வைத்தது பாடங்கள் பல கையில் தந்தது இந்த வருடம்
அமைதியாய் வந்த சந்தோஷம் இதயத்தில் மெதுவாக தங்கியது இந்த வருடம்

வலி வளர்ச்சியாக மாறிய,
என்னை இன்னொரு மனிதனாக உருவாக்கிய வருடம்.

மௌனமாக அழ கற்றுக் கொடுத்தது,
அதே நேரம்
சின்ன சிரிப்பில் உயிர் கொடுத்தது இந்த வருடம்

நாட்கள் சில
பாறை போல கனமாக இருந்தது ஆனால் அந்த கனமான நாட்களை கடக்க வைத்ததும் இந்த வருடம்

GTC யில் பல இரவுகள் தனிமையில் கடக்க வைத்தத்தும் இந்த வருடம் சில நல்ல உள்ளங்கள்
என்னையே தேடி வந்ததும் இந்த வருடம் .

நம்பிக்கை தளர்ந்தபோதும் கைவிட மறுத்த இதயம்,
விழுந்தபோதும் மீண்டும் எழுந்தது இந்த வருடம்

கவலையிலே நான் வலுவானேன்,
சந்தோஷத்திலே நான் மனிதனானேன் என்பதை உணர்ந்தேன் நான் இந்த வருடம்

சந்தோஷத்தை அளக்கவில்லை வலியை அளவில்லாமல் தந்தது.
ஆனால் அந்த வலியில் என்னைக் கண்டுகொண்டேன்.

கண்ணீர் துடைத்த கை என் கையாய் மாறியது.
கவலை என் ஆசிரியன் சந்தோஷம் என் ஓய்வு.

இந்த வருடம்
என்னை முடிக்கவில்லை,
என்னை ஆரம்பித்தது இந்த வருடம்

இந்த வருடத்தில் கிடைத்த
மிக முக்கியமான பொக்கிஷம் அவள்.

இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் பிரியாமல்,
அவளாய் அவளே என் வாழ்க்கையில் தொடர வேண்டும்

புதிய வருடமும் பழைய அன்பை மாற்றாமல்,
பிரியாமல், பேசாமல்கூட அவளாய் அவளே.

என் வாழ்க்கையில் தொடர வேண்டும்.
இது தான் என் புதிய வருடப் பிரார்த்தனை.

இந்த வருடம் போலவே எல்லா வருடங்களிலும் அவள்
என் அருகில் இப்படியே இருக்க காலமும் கடவுளும் கருணை செய்ய வேண்டும்.

இந்த வருடம் எனக்கு கொடுத்த சிரிப்பையும்,
அன்பையும், வாழ்வின் அரிய பாடத்தையும் நினைத்தேன்.

எதிர்காலம் எப்போதும் அழகாய் இருக்க,
கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

கடந்த வருடம் கஷ்டங்களை போல கொடுக்காமல் மிகச் சிறந்த வழியை காட்டவும்,
கடந்த வருடம் கொடுத்த அனுபவங்கள் சிரிப்பும் கஷ்டங்களும் மனதில் நிறைந்தன.

ஆனாலும், நன்றி சொல்லும் மனமாய் நான் நிற்கிறேன்,
அன்பும் பாசமும் கற்றுக் கொண்டேன்.

புது வருடம் வந்தது இன்று கடந்ததை மறந்து நம்மைத் தொடங்கும் தருணம்.
சிரிப்பும் சந்தோஷமும் மனதில் நிறைந்து,
வாழ்க்கை ஒளி ஆரோக்கியம் பரப்பும் நேரம்.

விழிகளிலே கனவுகள் மலரட்டும் இதயத்தில் அன்பு முத்துகள் பரவட்டும்.
எல்லா தடைகளையும் கடந்து செல்லும் வெற்றி நம் பக்கம் நிற்கட்டும்.

13
Festival Day Wishes / Re: Merry Christmas 2025
« on: December 25, 2025, 12:44:54 am »
May the magic of Christmas bring hope to your heart and kindness to your days

14
உன் விழிகளில் விழுந்த என் பார்வை.
உயிரின் மொழி பேசத் தொடங்கியது.

கன்னம் தொடும் அந்த மென்மையான கை.
காலமெல்லாம் எனக்கு காவலானது.

ஒரு நொடிப் பார்வையில்
ஆயிரம் கனவுகள் விதைத்தாய்,

உன் மௌன சிரிப்பில்
என் காதல் கரை புரண்டு ஓடியது.

உன் கன்னத்தில் என் விரல்கள் பதித்த அந்த நொடியில்,
உலகமே நின்றுவிட்டது போல இருந்தது

பேசாத உன் கண்களில்
என் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்க ஆசைப்பட்டேன்.

உன் மூச்சின் சூட்டில் என் உயிர் , உயிர் பெற்றது,
என் பெயரை விட நீ அழைத்த ஒரு பார்வைதான் எனக்கு அடையாளமானது.

நீ அருகில் இருந்தால் போதும் என் கவலை எல்லாம் மறந்து
நான் உன் காதலன் ஆகி விடுகிறேன்.

ஒரு காலத்தில் உன் கைகள் என் முகத்தைத் தாங்கின,
இன்று அதே நினைவுகள் என் கண்ணீரைத் தாங்குகின்றன.

உன் முகத்தை தாங்கிய என் கை,
இன்று உன் நினைவுகளை கூட
தாங்க முடியாமல் நடுங்குகிறது.

நீ பார்த்த அந்த பார்வை இன்னும் உயிருடன்,
ஆனால் நீ இல்லை.அணைத்த அந்த கைப்பிடிப்பு மட்டும்
என் மனதை விட மறுக்கிறது.

நீ பார்த்த அந்த பார்வை
இன்னும் என் மனதில் உறைந்து கிடக்கிறது,
ஆனால் நீ இல்லை என்பதே என் உயிரின் தினசரி மரணம்

என்றென்றும், என்று சொன்ன அந்த வார்த்தைகள்
இன்று காற்றிலும் இல்லை நினைவிலும் இல்லை

ஆனால் அதை நம்பிய என் இதயம் மட்டும்
இன்னும் அன்றே நின்று துடிக்கிறது.

என் விரல்கள் தொட்ட உன் முகத்தை,
மீண்டும் ஒரு முறை கூடதொட்டுவிட முடியாமல் போன நாளிலிருந்து…

இரண்டு கைகள் இருந்தும் எல்லாவற்றையும் இழந்தவன் போல
நான் வாழ கற்றுக்கொண்டேன்.

அழ முடியாத வலியோடு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்,

நான் உயிரோடு இருப்பது
நீ திரும்ப வருவாய் என்பதற்காக அல்ல

நீ விட்டுச் சென்ற காதல் பார்வை,
கடைசி மூச்சு வரை

நான் உணர வேண்டும் என்பதற்காகத்தான்
என்னை உயிரோடு விட்டுச் சென்றதோ.

அந்த ஒரு பார்வையின் நினைவே
என் வாழ்க்கை முழுக்க வலியாகவும் வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.

15
Birthday Wishes / Re: Happy Birthday Vedhika
« on: December 10, 2025, 04:30:19 pm »
May your special day sparkle with joy and glow with smiles.
Your name itself means beauty, and your heart carries even more.
May every dream you chase come true,
and may your life be filled with love, luck, and endless happiness.

Stay smiling, stay shining, Vedhika ✨
Have a fantastic year ahead!


MDU

Pages: [1] 2 3 ... 15