11
« on: September 05, 2023, 06:55:34 pm »
அம்மா நீ தான் என் முதல் உயிர் பெண் தோழி!!!
அம்மா என் உருவத்தையும்,
என் முகத்தையும் காணும் முன்பே,
என் குணத்தை அறியும் முன்பே
நான் உன் கருவில் இருக்கும் போதே என்னை காதலித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
அம்மா என்னை ஈன்றெடுக்கும் முன்பே என்னை கட்டித் தழுவி அரவணைத்து கொண்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
அம்மா என் குரல் கேட்கும் முன்பே உன் மெல்லிய குரலில் என்னோடு உரையாடிய என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
அம்மா என்னை ஈன்றெடுத்த பின்பு முதன்முதலில், என் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
அம்மா என்னை உன் மார்பிலும், தோளிலும் சுமந்து என் முகத்திலிருந்து எனது பிஞ்சு பாதங்கள் வரை முத்தத்தால் என்னை கொஞ்சி ரசித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
அம்மா இரவு, பகல் என்றும் பாராமல் சிப்பிக்குள் முத்து போல என்னை அன்போடு பாதுகாத்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
மா... மா... அம்மா என முதன் முதலாக வாய் திறந்து தித்திக்கும் தமிழில் பேசியதை பார்த்து என்னை கட்டி அணைத்து கொண்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
நான் தத்தித் தவழ்ந்து நடக்கும் போது என் அழகை ரசித்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
நான் தடுமாறி கீழே விழுந்த போது எனக்காக கண்ணீர் சிந்திய என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
சாலையில் செல்லும் போது மழையிலும், வெயிலிலும் உன் சேலையின் முந்தானையில் என் மேனியை பாதுகாத்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
மழையில் விளையாடி நனைந்த என்னை பாசத்தோடு என் தலையை துவட்டி விட்ட என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
எனது பள்ளி பருவத்திலும் சரி
எனது கல்லூரி பருவத்திலும் சரி
எனது வெற்றிகளை பெருமையோடு மற்றவர்களிடம் கூறி புன்னகையோடு
என்னைப் பாராட்டி நான் பெற்ற வெற்றிக்கு எனக்கு உறுதுணையாய் இருந்த என் முதல் (உயிர்த் தோழி) நீயே அம்மா!!!
நான் சோர்ந்து போய் வந்தாலும் சரி
நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி
உன்னால் முடியுமென்று என்னை தட்டி தோள் கொடுத்து என்றுமே எனக்கு ஆதரவு கரமாக இருந்த முதல் (உயிர்த் தோழி).... நீயே அம்மா!!!
அம்மா மற்றவர்கள் என்னை திட்டினாலும், ஏசினாலும் யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்காமல் ஆதரித்த என் முதல் (உயிர்த் தோழி)....
நீயே அம்மா!!!
அம்மா நான் பிறக்கும் வரை என்னை உன் கருவினில் சுமந்து!!!
நீ இறக்கும் வரை என்னை உன் இதயத்தில் சுமந்த!!! என் வாழ்வின் சிறந்த (உயிர்த் தோழி) நீயே அம்மா....
தனிமையில் அழுகிறேன் உன்னை நினைத்து தினமும்!!!
அம்மா என் (உயிர்த் தோழியே) எனக்கு நீ வேண்டும்....
அம்மா என் (உயிர்த் தோழியே) மீண்டும் நீ வேண்டும் வருவாயா!!!
அம்மா என் (உயிர்த் தோழியே) என் ஏக்கம் தீர்ப்பாயா!!!
அம்மா... என் (உயிர்த் தோழியே) பாசத்தின் வறுமையில் ஏங்கித் தவிக்கிறேன்....
அம்மா... என் (உயிர்த் தோழியே) உன் நேசத்தை கொண்டு என் ஏக்கத்தை தீர்க்க மீண்டும் வருவாயா....
காத்திருக்கிறேன் அம்மா உனக்காக என் முதல் உயிர்த் தோழியே!!!
அன்னையும் நீயே என் ஆருயிர் நண்பியும் நீயே!!!
என் ஆதி முதல் அந்தம் வரை என் நினைவுகளில் என்றும்
முதல் அன்னையும் தோழியும் நீயே!!!
இவ்வாழ்க்கையையும் இந்த உலகையும் அறிமுகம் செய்த அன்னையே உன் புதல்வனின் அன்பின் ஆசையும் ஏக்கமும் நிறைந்த இவ்வரிகளை என் அன்பின் அன்னை தோழிக்கு சமர்ப்பிக்கிறேன்!!!
இப்படிக்கு உங்கள்,
NATURE LOVER (இயற்கை நேசகன்)