Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2 3 ... 10
Post info No. of Likes
Birthday Dates Registration - பிறந்தநாள் பதிவுகள் January - ஜனவரி  மாதம்



01- Priya S (Ritika) & SeLeNe(Aara,Samantha) Twinkle new
04- Vinothvijay
06- Teddybear
10- Chaan
12- Aaliya,Srinithi
13- Glass boy
16- Sivarudran
18- Donmama  (Don Always)
19- Kayal
24- Mr King & Selvam




-----------------------------------------------------
February - பிப்ரவரி  மாதம்

02- Black knight
04- Biker Boy
09- MiThRaN
12- Shakthi & Ratheesh
16- Pearl Queen
17- Maya_kannan
19- Ruban & Ragu
22- RiJiA
23 -Nani
28- Pikachuu

---------------------------------------
March - மார்ச் மாதம்

01-Rolex_Sir
05- Sudhar, VIP & Athira
06- iamcvr
07- DIMPLE
20- Fire Cracker , Priya Rajesh
21- Jackson
22- Maran
23- Roja
24- Popeye(Raju)


---------------------------------------
April- ஏப்ரல் மாதம்


07- Pappu
08- SiNaMika
03- Bliss
17- KITTY
17- Madhuri
20- CUTE & BarBie Queen(CINDERELLA)
20- Gun (Bullett)
26- Raman

---------------------------------------
MAY - மே  மாதம்

01- Abinesh
02- Eric Roshan
03- A1 PsychO
07- Dimple
07- DEMON
09- Mass
10- Varshu
12- DreaM GirL & Lovsha
12- Smile
12- Aljin
13- Eagle13 & Magizhan
14- Harinika
15- Ishan
16- Meera6
19- Guest1
12- Nithyasri
12- Mr Romeo
20- Weirdo & AdiThYa
23- Rudraa
24- MathiFR
25- Kanmani
27- Riyana
27- Vinoth94
29- SweetHeart , DaisY

---------------------------------------
June - ஜூன்  மாதம்

04- Anu Sri
04- PriyaManavale
06- Appu kutty & Charlie Chaplin
09- Aruna & MDU
11- MrMaddy
18- Arjun
20- Lusy Lusy
21- Nalina
24- Thor
24- Innocent boy
25- Stark


---------------------------------------------------
July ஜூலை மாதம்

02- Aaran
03- Janu
07- Dhiya
09- JPriya
10- Illiyana
12- Megha CHOCOLATY QUEEN
12- Yash
15- Ssaa (shaa)
16- Adheeran_JD
17- Vedha & Rithu (Miss Muffet)
20- Srinisha(CHUTTYGURL)
22- KiRaN_WoLfY
24- Ayesha
24- Shinchan
24- Kiara24
27- Dikshi
28- Helena/Mithra (Meera)
29- Nandhini (ANANTHI)
30- Kitkat

-------------------------------------------------
August  - ஆகஸ்ட்   மாதம் 

01-RamGwr
01- Kattathora & Reena
03- Zoya
05- Pandaa
07- Waterfall
09- SHREYA
11- Cherry
12- Chocky
15- Ice Boy & RED GIANT
18- Vels ,( innocent Boy)
19- Seetha
23- Akshaya
23- Mist
25- Vettukizzi
27- StayPositive
28- Anita
28- Mithraa
31- RajuRaju

----------------------------------------------

September  - செப்டம்பர்    மாதம் 

01- Akshitha
01- kakashi
04- SuNsHiNe(Sarayu) & iniya
06- KIlLivAlavAn
10- Nirmalniru
11- SweetGirl
17- Amuthan-MFT
20- Vijayarajan
21- Sathiz007
23- Dharshini
24- Aslan,,Kurő
25- Mansi & Nature LOVER
26- Limat
30- Neethu

-----------------------------------------------------
October  - அக்டோபர்  மாதம் 


02- PATRICK
06- Bhuvi
07- Sky_blue
09- Aadhi
11-Deva
13- Nikita,,BesTFrienD
13- Yashna (Malar)
13- VICKY
15- Viki143
18- Maya
26- Vijay3
28- TrueVenom
31- Santhosh


-------------------------------------------------------
November  - நவம்பர்  மாதம் 

01- JodhA
02- Semmozhi
04- Black Forest
07- Mellisai
12- CottoN CandY
14- UniverseLife
15- SILENT GIRL
18- Vinoth Vijay
18- Sembaruthi
19- karthiik
19- Jamine Jazz
20- Hasan
22- Nacthara
24- Karthick Sri
25- Octavian
27- Shree
28- Mouse
29- Manoj


------------------------------------------------------------
December  - டிசம்பர்   மாதம் 


01- Sindu,,NillA,,Shivani
04- Wings
07- Aeiou
08- Zaaysha
09- Rhiya
11- Lovely
12- Kashmira
18- Deepu rocks
21- Killer
23- Madhu (MIRROR)
24- Sanjana
31- Black Sun & Fluffles





March 19, 2019, 09:37:59 pm
1
σvvσru pαdαlílum - єnnαvαlє (2000) Movie : Ennavale   
Music : S. A. Rajkumar
Year : 2000   
Singers : P. Unnikrishnan


Code: [Select]
பாடல் வரிகள்:-

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்,

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,

ஆணுக்கும் பெண்ணுக்கும் நெஞ்சுக்குள்ளே
கானமுண்டு,இசை ஞானமுண்டு,
மேடையில் பாடலை பாடிச்செல்ல
ஆசை உண்டு,கொஞ்சம் நாணமுண்டு,
சுதி சேருமுன்னமே, சுகம் பாடு அண்ணமே,
குயிலின்  காட்டில் குருவிகள் பாடாதா,,,,,ஆ,
ஓடுகின்ற  நீரிலே பாசி சேராது,
பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது,,

ஓ,,,,,ஓ,,,ஓ,,,
கானங்கள் பாடும் ஊரில் காற்றோடு ஈரம் கூடும், இராகங்கள் மேகம் சேர்த்து மழையும் கொண்டு வரும்,,,,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நெஞ்சிலே  சுகமிருக்கு  நெஞ்சே,இசை நெஞ்சே,
ஒவ்வொரு நெஞ்சத்தின் ஆழத்திலும் சோகமுண்டு, கண்ணீர்   ஈரமுண்டு,
அந்தந்த சோகத்தை ஆற்றி வைக்க  பாடல் உண்டு, பொங்கும் ராகமுண்டு,
உள்ளார்ந்த உள்ளமே, தன்பாடல் ஆகுமே,
தாய் மடி போல ஆறுதல் தந்திடுமே,
வேர்வை பூக்கும் வாழ்க்கையில் தென்றலின் பாடல்தான்,
ஈரம் தீரும் வாழ்க்கையில் சாரளின் பாடல்தான்,

ஓ,,,,,,,,ஓ,,,,,,,,,,ஓ
தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்.

தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,..!!

<a href="https://www.youtube.com/v/O8f8l78C79s" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/O8f8l78C79s</a>

July 13, 2019, 11:48:46 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....

Vaanmugil nejamave romba azhaga erku enum unga kavithai varanum ethir pakren

February 12, 2023, 08:54:18 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....


கவிதைக்கு உயிர் அதில் இருக்கும் வார்த்தைகள் தான்.வாண்முகில் உன் கவிதை அழகு என்று சொல்லுவாத இல்லை உன் சிந்தனை அழகு என்று சொல்லுவாத.... என்னிடம் வார்த்தைகள் இல்லை உன்னை பாராட்ட... ரொம்ப அழகா இருக்கு வாண்முகில் ♥️♥️

March 01, 2023, 02:42:02 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... வாழ்வும் வரமும்.....

பெண்ணின் வாழ்வு.....

பிரம்மன் படைத்த படைப்பே....

பெண் என்ற உருவமே.....

அற்புதமே,
சொல்லுக்குள் அடங்காத அதிசயமே.....

உதாசீனம் செய்ய, 
இவள் "பெண்" என்ற பெயரே வேதமே.....

உள்ளத்தில் உறுதுணை அதிகமே....

உதிரத்திலும், உற்சாகத்திலும் பெண் என்ற வீரமே.....

இவளின் உழைப்பே பாதி வாழ்வே......

வன்மம் செய்ய சிலரே,
வக்கிரமம் பிடித்த கொடுமைகாரரின்
மத்தியில் இவளின் வாழ்வு போராட்டமே.....

மறு வாழ்வுக்கு அர்த்தமே....
இவளே தேவதையின் அம்சமே...

பெண் என்ற பிறப்பே வரமே,
ஆனாலும்,
வாழ்வின் எல்லை வரை போராட்டமே......

வாழ்க்கை துணை வரமாய் அமைந்தால்
வாழ்வில் அவள் கொண்ட இன்பம்
வேறோன்றிருக்கும் ஈடில்லையே....
..

March 04, 2023, 05:29:20 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
மழலையின் மகத்துவம்.......

அழகு மழலையே !!!

பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....

உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....

உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....

உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....

தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!

அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....

எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....

மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே......


பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே
Beautiful lines sisy vaanmugil 💞

March 08, 2023, 06:38:40 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....



SUPERB  LINES SISS 👏👏

March 08, 2023, 09:45:19 pm
1
NILA HERE Hey Hi friends,
          Na Inga new nu solalamaa nu therila bcos Inga almost elarkitaum pesiruken. But sarithiram enapathu pesanumnaa oru intro kodukanum la..Eee..

Valavala nu pesama vishayathuku varen.. Ena pathi solanumna na konjam amaithiyaana ponnu konjam shy type athigama pesa maten. Eruka edamae theilriyathu. So na romba amithiya eruntha thapa eduthukathenga..


Apram ena pathi Vera ena solalam... Actually na semmaya samapen. My anna and me Run a food cart. Athu poga enaku oru bathroom kodutheengana na Nala paaduven. Because I'm a bathroom singer. Aparam vaalkai la ne urupadiya enama panirukanu keteengana Aloo esoose me na intha year en degree complete pana poren(pin kurippu arrears onu kooda ela)


Aparam ena pola amaithiya eruka virumburavanga contact me @nila_adakamanaponnu@gtc
Konjam vaayadinaa kooda OK thaan na adjust panipen. Aga motham vanga elam friends agi kalam 🥳



                      Ipadiku ungal Nila



March 10, 2023, 04:10:52 pm
1
Re: என் கவிதை முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.

April 15, 2023, 04:13:47 pm
1
Re: என் கவிதை காய்ச்சல்

தொட்டு பார்க்கும் அன்னையின் கரம் போல காலை கண்விழிப்பில் கதகதப்பு தாண்டி ஒரு உஷ்ணம் என்னை தொட்டு செல்கிறது.

தேநீருடன் தொடங்கும் நாளின்று நா வரண்டு சுவை உணர்வுகள் கசந்து கிடக்கிறது.

சோர்ந்து போன கண்களும் தூங்க மனமின்றி வெறுமனே கண்களை மூடிக் கொண்டது.

சுறுசுறுப்பாக காற்றில் பறக்கும் கால்களும் சுமையாக சுருண்டு கிடக்கிறது.

நிழலாக பின்தொடரும் அம்மா கூட கஞ்சியும், காய்ந்து போன ரொட்டியையும் கையில் வைத்து காத்திருக்கிறாள்.

மாத்திரையின் வாசம் நினைக்கும் போதே குமட்டல் வந்து ஓட வைக்கிறது.

சக்கரம் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தால் என்றோ ஒருநாள் அச்சாணி முறிந்து அதன் அஸ்திவாரம் அசைந்து போகும்.

மனித வாழ்க்கையிலும் ஓய்வாக காய்ச்சல் வந்ததாக எண்ணி ஓட்டத்திற்கு இடைவெளி கொடுப்போம்.

April 15, 2023, 04:20:05 pm
1