See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: Happy Birthday Misty Sky
Wishing u a happy happy happy birthday 🎈 🎂 It's a happy year 🎉 As u wish, I really mean you to have something positively. 💜 Always be happy in the way you love all. It's a Happy happy birthday to you ❤️ 🍍 விழி வழியில் விவரிக்க முடியாது மொழி வழியில் நேசத்தொடு உன் தாயின் அன்பின் பொருளாய் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் September 25, 2024, 12:39:52 am |
1 |
Re: கவிதையும் கானமும்-054
என் வலியின் அடையாளம் இது ஒரு நிலை காணாத பதிவு… பிறரை சிரிக்க வைத்த நாட்களில் நான் அழுத சுவடிதான் இது. மௌனத்தின் மொழியில் பதிந்த மனம் கிழிந்த கவிதை… பார்க்க ஒரு வரி போல் தெரிந்தாலும், படிக்க ஒரு வாழ்க்கை போதும். Title: காதலின் கானல் நதி ஏழு ஆண்டுகள் எழுதப்பட்ட ஓர் நூல், அது முடிந்தது ஒரு கதையாய், ஆனால் பிறந்தது…ஒரு கவிதையாய். ஏங்கிய என் விழிகளில் நீர் சுமக்க, ஏதோ ஒரு கனவில் மட்டும் நீ என் காதலியாக!!! இங்கே எல்லாம் இருக்கிறது…. இனிமையான வீடு, உயர்ந்த வேலை, உணவு, உரிமை. இல்லாதது ஒன்றே ஒன்று…. இரவிலும் பகலிலும் என் சுவாசத்தின் அரைபாதியாகிய நீ… நானும்… நாமும். நீ பேசிக்கொண்டே இருக்கிறாய், தொலைவில் இருந்தும் விசாரிக்கிறாய், இருந்தும் நான் உனதில்லை என ஒப்புகொண்டவள் நீ… ஆனால் ஏன்? என் பக்கம் நிழலாய் நடக்கிறாய்? ஏன் இன்னும் கவனிக்கிறாய்? ஏன் நம் கையில் ஏதுமில்லை எனச் சொல்லிக்கொண்டே, என் வாழ்க்கையின் துணையாய் நிற்கிறாய்?? நம் கடைசி பயணம்…. பேருந்தின் ஒரு பயணக் காட்சி. நானோ நின்றேன்… நீயோ சென்றாய். நான் நினைத்தது… என்னை விட்டு சென்றது ஒரு பேருந்து மட்டும்தான்… ஆனால் இல்லை… அந்த சுழற்சியில் சுழன்றது சக்கரம் மட்டும் அல்ல, நீயே… என் காதலியான நீயும் அதோடு சென்றுவிட்டாய். நான் சாலையில் நின்றேன், உன் திரும்ப வராமையின் ஒவ்வொரு சத்தத்தையும் நினைவாய்க் கேட்டுக்கொண்டே… நீ ஒரு வலி… ஆனாலும் மருந்து. நீ ஒரு புண்… ஆனாலும் பாசமாய். நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நிம்மதி. அதே நேரம், நிம்மதியில்லா ஓர் நிலவை போல் நான்… “நீ ஏன் இப்படி நடக்கிறாய்?” எனக்கே தெரியவில்லை… நிழலாக வாழ, நேசித்தபடி விலக, நினைத்தபடி மறக்க, இது காதலா? உனக்கு புரியவில்லையா இந்த வேதனை! நீ நேசிக்கிறாய் இருந்தும் விலகுகிறாய். நீ நினைக்கிறாய் இருந்தும் நெருங்க மறுக்கிறாய் . நீ வாழ்த்துகிறாய் இருந்தும் என்ன பலன், கடந்து செல்ல என் பக்கம் பாதை இல்லை. இதுதானா உன் காதல். இருந்தும் இதுதான், என் நரகம். வெற்றி என் கையிலிருந்தும் வெறுமையாக உணர்கிறேன்… நீயின்றி!! என் எல்லா துன்பங்களிலும் நீ பின்னால் நின்றாய்… என் எல்லா தவறுகளிலும் நீ கண்டிப்பாய் இருந்தாய்!!! என் எதிர்பார்ப்புகளை நீ தாண்டினாலும், நீ என் நிழலுக்கே ஒளியாய் இருக்கிறாய். இருக்கட்டும்… பரிதாபம்தான். தொலைவில் நீ இருப்பதை தாங்கிக்கொண்டேன், என்னால் முடியாதென்றும் தெரிந்தபோதும் நீயே என் காதலியென்று நம்பிக்கையோடு இருந்தேன். நான் விரும்பிய அன்பில், நீ சுடர்விட்டு விலகினாய்… என் உயிரின் ஓரத்தில் நீ இருந்தாலும், என் வசமாக இருக்காத கானல் நீர் போல் நீ… எட்ட முடியாத நிழலாய், என் ஆசைகளைக் கரைத்தாய். நீ விட்டுப் போனது ஒரு நாள்… ஆனால் நான்…. நீயில்லாத நாட்களைக் கடக்க இன்று வரை முயல்கிறேன். Always peace ✌️ Harry Potter ❤️ May 24, 2025, 06:12:09 am |
1 |
Re: கவிதையும் கானமும்-055
🌙 “நிலவான என் அப்பா” 🌙 நிலா எழுதி நிலவுக்கடியில் நின்று பாடும் கவிதை இருட்டின் மத்தியில், மூச்சு அடங்கும் அமைதியில், கல்லறைகள் நடுவே… நான் என் கால்களை மெதுவாக இழுத்துச் செல்கின்றேன், உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட கல்லை தேடுகிறேன்… அந்த கடைசி இடம், நீங்காத என் நினைவுகளின் தொடக்கம் இரவின் திசை பார்த்து நான் நடக்கிறேன், விண்ணின் மெல்லிய பசுமை காற்றில் நான் தேடுகிறேன் ஒரு சுவாசத்தை — அப்பா... உங்கள் வாசனையை… இங்கே... உங்கள் பெயர் எழுதப்பட்ட கல்லின் முன் நான் நிற்கிறேன் — ஒரு பிள்ளை, தன் சிறு வயதின் நிழல்களைத் தூக்கிக்கொண்டு உங்களை மீண்டும் பார்க்க ஆசைபடுகிறாள். நீங்கள் என்னை ‘நிலா’ என்று அழைத்த நாள் முதல், நான் நிலவையே என் அப்பா என்று நினைத்தேன்… அதன் ஒளியில் உங்கள் குரலைக் கேட்டேன், அதன் அமைதியில் உங்கள் அடையாளம் கண்டேன்… “நீ நிலா மாதிரி ஒளிரணும்” என்று சொன்ன நீங்கள், போகாதீங்கனு சொல்லக்கூட நான் வளர்ந்துவிட்டேன். அப்பா, நான் பெரியவளானாலும் உங்களுக்குள் குழந்தையாய்தான் இருக்கிறேன்… இப்போது உங்கள் கல்லறை என் தோளில் சாய்கிறது, உங்கள் நினைவுகள் என் இதயத்தில் கண்ணீராகிறன. உங்கள் குரல் இல்லாத இந்த உலகத்தில், நான் ஒரு ஓசையில்லா கவிதை... அப்பா… உங்களால தான் நான் வார்த்தைகள் எழுத ஆரம்பித்தேன், நீங்கள் சொல்லிக் கொடுத்த அந்த 'முதல் கவிதை'... இப்போ ஒவ்வொரு வரியிலும் உங்கள் சுவாசம் காற்றாகச் சேர்கிறது… நீங்கள் எனக்கு நிலா என்று பெயர் வைத்தீர்கள், ஏனெனில் நிலவைக் காணாமல் தூங்க மாட்டீர்களாம்... இப்போது நான் நிலவைக் காணும் ஒவ்வொரு இரவும், உங்களை நினைக்காமல் தூங்க முடியவில்லை… முதல்முறை நடக்க கற்றுக் கொடுத்த உங்கள் கை… இப்போ என் கையில் இல்ல… ஆனாலும் உங்கள் நிழல் என்னை வழி நடத்துகிறது, ஒவ்வொரு தடம் போலவே. உங்களுடன் சேர்ந்து கடல் பார்த்த நினைவுகள், நீங்கள் நகைச்சுவை கூறி சிரிக்க வைத்த நேரங்கள், நான் விழுந்த போது கையில் எடுத்த நிமிடங்கள் — அவை எல்லாம் என் கவிதையின் உயிர்… நீங்கள் இல்லாத இந்த உலகம் வெறுமையா இருக்கிறது, ஆனால் உங்கள் நினைவுகளால் நான்தான் நிறைந்து நிற்கிறேன்… நீங்கள் ஓர் அன்பு… உங்களை மறக்க முடியாத மழை… நான் இப்போது இந்த நிலவின் கீழ் உங்களிடம் பேசுகிறேன், கவிதை எழுதுகிறேன்… கண்ணீர் கலக்குகிறேன்… ஆனால் இதுதான் என் உயிர் சொல்லும் மொழி, அப்பா… உங்களுக்கான என் இதய உரை… நீங்கள் போனாலும்… உங்கள் கண்களில் எனை பார்க்கிறேன் நான். நான் எழுதும் ஒவ்வொரு வரியிலும் நீங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறீர்கள். Love u appa ❤️ June 04, 2025, 12:25:04 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-055
யார் இவள்.....? விடியாத இரவு... அங்கே ஓர் நிலவு மட்டுமல்ல, இரு நிலவு காட்சி கொள்கிறது.... சுற்றி இருக்கும் மரங்கள் அவள் அழகில் கிசுகிசுக்கின்றன... வவ்வால்கள் துள்ளி குதித்து றெக்கை விரிகின்றன.... புதையுண்ட பிணங்களை மீண்டும் உயிர்த்தெழ வைத்தாள் அவள் பேரழகில்... யார் இவள்...? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவள் கதை சொல்கின்றன... இருந்தும் அவள் பார்வை மட்டும், அந்த மாளிகையை விட்டு அகலவில்லை... அவள் வருகையை கண்ட அந்த மாளிகையின் கதவுகள் தானாகவே திறக்கிறன... இருள் சூழ்ந்த அந்த அறையில்.... நிலவொளியில் அவள் நிழல் மட்டுமே அவளுக்குத் துணையாக.....யார் இவள்? அவள் இதழின் ஓரம் சிறு புன்னகை மலர்கின்றது... எங்கையோ எப்பவோ கேட்ட ஓர் இசை... அந்த இசை ஒலிக்கும் திசையை நோக்கி விரைந்தது அவள் கால்கள்... அறையின் கதவு தானாகவே திறக்க.. காத்திருந்தது பேரதிர்ச்சி.... அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை... அருகில் சென்றாள்... வினா எழுப்பினாள்... கின்னரப்பெட்டியிலிருந்து (piano) ஒலித்த அந்த இசையை மீட்டியது நீயா? யார் நீ? உனக்கு உனக்கு எப்படி தெரியும் இந்த இசை? யார் நீ.....? என்று வினா எழுப்பிக் கொண்டே அந்த முகத்தை பார்க்க முயல்கிறாள்... மீண்டும் மீண்டும் பார்க்க முயல்கிறாள்.. இருந்தும் பலனில்லை... சற்று அமைதிகொண்டாள்... மயான அமைதியில் ஓர் கம்பீர குரல் ஒலித்தது... "இங்க என்ன பண்ற? "எதுக்கு இங்க வந்த? "செஞ்சதுலாம் போதாதா? "யார் நீ யார் நீ என்று கதறுகிறாயே நீ யார் என்று நான் சொல்லவா...? சொல்லடி என் அழகு பெண்ணே.. நீ யார் என்று நான் சொல்லவா... ? உன் வாழ்க்கை பக்கங்களில் நான் எழுதப்படாத கதை.... இன்னும் சொல்ல போனால் என் தலை எழுத்தை கிறுக்கியவள் நீ... என்ன யோசிக்கிற? உன்னை சுமந்த இந்த இதயத்தில் இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டி கொண்டுதான் இருக்கிறது போ இங்கிருந்து..... போயிறு...போயிறு... ஆனா போகும் போது திரும்பி மட்டும் பார்க்காமல் போ,,,என்று சொன்னது அந்த ஆன்மா... அந்த மாளிகையை விட்டு பிரிய மனமில்லாமல் அழுதபடி அங்கிருந்து வெளியேறினாள்..... ஒலித்த இசை... பார்த்த உருவம்... கேட்ட குரல்... இவை யாவும் நிஜம் தானா என்று யோசிக்க தொடங்கினாள்... "ஒருமுறை அந்த மாளிகைய திரும்பி பார்க்கலாமா?.. இல்ல வேண்டாம்... ஒருவேள பார்த்தா என்ன ஆகும்..? பார்க்கலாமா...? வேண்டாமா ... பார்க்கலாமா...? வேண்டாமா... ? இல்ல பார்க்கலாம்.. என்ன ஆனாலும் பரவால" என்று யோசித்த அவள்,, இதயம் வேகமாக துடிக்க... சற்று தயகத்தோடு,,, திரும்பி பார்க்கிறாள்.. "இது முடிவல்ல.......ஆரம்பம்" June 05, 2025, 05:46:35 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-055
பயணங்களில் என்றுமே பாதுகாப்பாய் உணர்ந்ததில்லை - என்றுமே பயம் என் சக பயணி எதிர்பாராமல் ஒருநாள் எம்மிருவரையும் ஒரு வாகனம் உள் இழுத்துக்கொண்டது. உள்ளே ஐவரை கண்டேன். என் சக பயணி அவள் என்னை முந்திக்கொண்டு அவர்களிடம் கெஞ்சினாள். ஏன் என்னை கடத்தினீங்க? என்னை எதுவும் செஞ்சிடாதீங்க . . . அண்ணா . . ஐயோ . . அவளின் குரல் அவர்களால் மெளனிக்க வைக்கப்பட்டது. போராடிப்பார்க்க மனம் சொல்லியது, அதற்குள் என்னை கைகளிலும் கால்களிலுமாக ஒவ்வொருவர் பிடித்துக்கொள்ள துகிலுரிக்க தொடங்கினார்கள். உதறிப்பார்த்தேன்; உதைந்து பார்த்தேன்; முடியவில்லை, இறுக்கிப்பிடித்துக்கொண்டார்கள். முழுதாய் நிர்வாணமாக்கிவிட்டு இறுக்கத்தை தளர்த்தினார்கள், இயலுமென்றால் தப்பித்துக்கொள்ளச்சொன்னார்கள், இப்படியே தப்பித்தால், வசைச்சொற்களாலும், வசதிக்கேற்ப மாற்றப்பட்ட கதைகளாலும், இச்சமூகமே என்னை வன்புணரும் Leaked videos ஆக. இயலாமையில் அங்கேயே இறக்கத்தொடங்கிவிட்டேன், மீண்டும் பிடிகள் இறுக்கமாக்கப்பட, அணுவணுவாய் இரையாகி அசைவற்றும் இரைமீட்டப்பட்டு முழுதாய் இறந்து முடிக்க மூன்று நாட்கள் ஆனது. என் குரல் எவரிற்கும் கேட்கவில்லை, எவரையும் இரங்க வைக்கவுமில்லை. உயிர் ஊசலாடும் உருச்சிதைக்கப்பட்ட உடலாய் தெருவில் எறியப்பட்டுக்கிடந்தேன். இப்போது மண்ணிற்குள் நான் - எனை பெற்றவர்கள் கதறி அழுவதை மட்டுமே மங்கலாக பார்க்க முடிந்தது. என் ஆசைகள், கனவுகள், அத்தனையும் அஸ்தமித்தது மட்டும் தெளிவாக தெரிந்தது. நன்றாய் படித்து முடித்து, நல்ல வேலையோடு அத்தனைக்கும் காரணமான பெற்றவர்களை நன்றாய் பார்த்துக்கொண்டு, காதலித்து, மனம் பொருந்தி, திருமணம் கண்டு, பிள்ளைகளோடும் வாழ அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது. அவை மண்ணோடு மண்ணாகின. என்னோடு சேர்த்து என் கனவுகளும் கல்லறைகளாய் நிற்க என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை மட்டும் இம் மண் எப்படி சந்தோசமாய் வைத்திருக்கிறது? தினமும் எனைப்போலவே பல ஆயிரக்கணக்கில் கல்லறைகள் முளைக்கின்றனர். நான் ஏன் என்றுமே உயிராய் பார்க்கப்படவில்லை? அன்று வரை உடலாய், இன்று வெற்று கல்லறையாய். கல்லின் ஈரம் யார் உணர்வார்? இவர்கள் யாரும் பெண்களோடு பிறக்கவில்லையா? இல்லை இவர்களோடு பிறந்தவர்கள் மட்டும் தான் பெண்கள், ஏனையோர் காம-இச்சை தீர்க்கும் வெற்றுடலைகளா? இவர்களையும் பெண் தானே பெற்றிருப்பாள்; அவள் ஏன் எதையுமே இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை? பயம் என் சக பயணி, பயம் ஊற்றித்தான் இவ்வுலகம் என்னை வளர்த்தது. பாடசாலை, வேலை, ஏன் பக்கத்துக்கடைக்கு கூட அவள் கூடவே வரவைக்கப்பட்டாள். இன்று என்னாலும் அவள் பல மடங்காகி என் சக பெண்களோடு பயணித்துக்கொண்டிருப்பாள். என்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள்? சட்டம் திறம்பட செயற்பட, சட்டத்தோடு மக்கள் மனமும் தூர்வாரப்பட, தம் வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம் வெளியாருக்கு இன்னொரு நியாயம் என நினைக்கும் ஆண்கள் மனம் மாற, அனுமதியின்றி எங்களை நெருங்கவே அவர்கள் மனம் சங்கடப்பட, அன்று தான் அவள் எங்களை விட்டு நீங்குவாள். என்ன தான் செய்யலாம் எங்களை சீரளிப்பவர்களுக்கு? எங்களை இழந்த எம் குடும்பத்தின் கைகளிலேயே கொடுத்து விடலாம். அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் என சட்டம் இயற்றி விடுங்கள். நடக்கும் கொடூரக்கொலைகளோடு மொத்தமாய் குறையும் இச்செயல்கள் எல்லாம். அனைவரையும் போலவே ஆசைகள் எனக்கும் இருந்தது. அவை மண்ணோடு மண்ணாகின. கடைசி ஆசையேனும் யாரும் கேட்டு நிறைவேற்றுவார்களா? தெரியவில்லை, இருந்தாலும் கேட்கிறேன். மக்களே, அரசாங்கமே எனக்கு நடந்ததை போல் இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். June 06, 2025, 05:12:59 am |
1 |