Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: 1 2 [3]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-026
காதல் மங்கை.. தன் மும்தாஜ்காக அவன் எழுதிய வரிகளிங்கே...

அந்தி சாயும் நேரம்..
அழகான ஆக்ரா நதியோரம்..
நித்தம் விழும் நின் நிழல் ஒன்றே..
நீங்காத என் நிஜ தரிசனம்...

மெய் நிகர் அழகே.. நீ என் மேல்..
மெல்ல விழும் மழையே..
பொய்யொன்று உரைக்கையிலே..
முகம் பொலிவிழக்க காண்கின்றேன்..

நினைவுக்குள் வருகின்றாய்..
நீங்காத ஏக்கம் தருகின்றாய்..
முகிலாடை அணிகின்றாய்..
முழுமதி முகம் மறைக்கின்றாய்..
காற்புள்ளியிட்டு உன்னை தொடர..
விழிகளாலே போரிட்டு எனை வெல்கின்றாய்...

வெண்புரவியின் மேலமர்ந்து..
வெண்ணிலாவை உனை தரிசிப்பேன்..
வெட்கப்படும் உன் முகத்தை..
வெண்மையாக வரைந்தெடுப்பேன்..

தூரிகையால் மடல் எழுதி..
மாதே உனை கவர்ந்தெடுப்பேன்..
பேரெழில், பெருஞ் சீற்றம்..
பேச்சினாலே சரி செய்வேன்..
உன்னிதழ் உதிர்க்கும்...
ஒருகோடி வார்த்தைகளால்..
உள்ளூர உருகிப் போவேன்..

பக்கம் நின்று பார்க்கையிலே..
பளிங்கு சிலை போலிருப்பாய்..
யுகயுகமாய் தொடருந்து வந்து..
யுத்தமிட துணிய வைப்பாய்..

கொண்ட கடன் காதல் ஒன்றே...
நான் கொண்ட காதலுக்கு..
கட்டிடங்கள் நிகரில்லை..
எதிர்ப்புகளற்ற காதலில் இல்லை எதுவும்..
எதிர்ப்புகள் பல கடந்த காதல் காவியமாகி ததும்பும்..

அளவில்லா நேசத்தை, ஆழிக் குமிழ் போல் மறைக்காமல்...
உலகுக்கே தெரிய வைத்து
உள்ளத்திலே உயிர் கொடுப்பேன்...

கொள்ளையடித்த உன் மனதால்..
காதல் சிறையில் எனை
அடைத்தாலும்..
உன்னத தாஜ்மஹாலை..
உனக்காக நானும் எழுப்புவேன்..

June 13, 2023, 01:49:59 pm
1