2
« on: August 19, 2022, 03:48:53 pm »
என்னை சுற்றி அனைவரும் இங்கும் அங்கும்
வேகமாக ஓடவும் நடக்கவும் இருக்க
நான் மட்டும் தரையில் அமர்ந்து
என் இலக்கை அண்ணாந்து
வேடிக்கை பார்த்தேன்
வாழ்க்கையின் வெற்றிப்படிகளில்
ஏறும் முயற்சியில்
என் கால்களை ஊன்றி மெல்ல மெல்ல
நான் எழுந்து நிற்க
என்னால் நிற்க இயலாமல்
தரையில் விழுந்தேன்.
தயக்கம் என்னை தடுக்க
தோல்விகள் என்னை சோர்வுற செய்ய
வாழ்க்கைவெறுமையாய் தோன்றியது
வாழ்வின் தொடக்கம்
இவ்வளவு கடினமானதா?
என்று உள்ளம் குமுற..
விரக்தி அதிகமாக..
மனம் துவண்டது.
"தோல்விகள் இன்றி வரலாறு இல்லை
உன்னால் முடியும் முயன்று பார் "
என்ற என் தாயின் குரல்
என்னை உத்வேகம் ஊட்ட
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன் .
வெற்றியின் முதல்படி என்றும் கடினமானதே
என்பதை உணர்ந்தேன்
ஒவ்வொரு முறை நான் வீழும் பொழுதும்
என் தோல்விக்கான காரணத்தை அறிய முயன்றேன்
அதை சரி செய்யும் யுக்தியை கையில் எடுத்தேன்
என் இலக்கு விலகாமல்
முயற்சி செய்து கொண்டே இருந்தேன்
இன்று ஒவ்வொருமுறையும்
வெற்றியை முத்தமிடுகிறேன்.
அன்று முதல் இன்று வரை
நான் கடை பிடிக்கும் மந்திரம்
முயற்சி , தன்னம்பிக்கை,தெளிவான சிந்தனை !
தோல்வி என்றும் நிரந்தரம் இல்லை
முயற்சி இருப்பின் வெற்றிக்கு இல்லை எல்லை!