Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Ishan

Pages: [1] 2 3 ... 8
1
காதலின் காவியம் என்றும் அழியாத ஓவியம்



காதல் ......
சற்றே கணம்,
நூலிழை தீண்டல் போல்,
உன் மைவிழி தீண்டி,
மனம் என்னும் கோட்டையை
ஆக்கிரமிப்பு செய்தாய்யடி.....

உன் மதிமுகம் காண
மணிநேரம் கணக்கில்லாமல்
மங்கையின் வாசலை
என் இருவிழி தேடலில் தவிப்பை கண்டேனடி.....

உன் விழி பேசு மொழி புரியுதடி,
நீ புருவம் உசத்தும் கோவம் அறிந்தேனடி,
இதயம் பேசும் மௌனம்
தினம் என்னை கொல்கிறதடி....

ஆராதிக்கிறேன்....
அகப்பட்ட காதலில்
ஆசைகளும், அளவில்லா தவிப்பும்,
மனமும், மதியும் ஆரவாரம் செய்யும்
அவஸ்தைகள்தான் இதுவோ?.....

என் மனதை
களவு கொண்ட பேதையே,
உன்னை கண்டதும் ஏனோ? கார்முகில் சூழ்கிறதே....
என் உயிர் வரை சூறைக்காற்றை வீசுகிறதே....
வான் மழையும் தூவுகிறதே....
இக்கணம் எம் காதலையும் உணர்கிறேனடி....

காதலுக்கோர் தாஜ்மஹால்
கட்டி வைத்தானடி....
கல்லறை என்று சொல் இருந்தாலும்
ஷாஜகான் காதலை,
காதலுக்கு அதியச சின்னமாய்
காதலின் உறவுக்கு அழியா சுவடாய்...
இன்றும் உலக வரலாற்றில் வாழ்கிறதேயடி...

இங்ஙனம் காதலின் ஆழம் அதிலே உணர்தேனடி...

அதில் என் காதலும் ஓர் இலக்கியமாய் எண்ணுகிறேனடி...

2
Festival Day Wishes / Re: Happy First Anniversary GTC FORUM 2.0
« on: June 11, 2023, 11:04:43 pm »

4
தோல்வி என்பது தண்டனை,
நாம் தொடர்ந்து செய்யும் தவறுகளுக்கு....
மறுபுறம் வெற்றி என்பது விருது
நாம் தொடர்ந்து செய்யும் சரியான விஷயங்களுக்கு
தோல்வி நம்மை விரக்தியில் தள்ளுகிறது,
வெற்றி நம்மை வானத்துக்கு உயரச் செய்கிறது,

நான் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்,
நான் வெற்றியா தோல்வியா?
எந்தப் பக்கம் என்பதை
நான்  மட்டுமே முடிவு செய்ய முடியும்...

நான் எதிர்காலத்தை நோக்கி
முன்னேறுகிறேன்,
வாழ்க்கையை பின்னோக்கி மட்டுமே
புரிந்துகொள்கிறேன்.....

திரும்பிப் பார்க்கும்போது,
கடந்த காலத் தவறுகளை
நினைத்துப் புன்னகைக்கிறேன்......

நான் வெற்றியில் அல்ல,
தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டேன்
நான் தோல்வியுற்றபோது
நான் ஒருபோதும் விலகவில்லை
ஆனால் வெற்றிபெறும் வரை தோல்வியடைந்தேன்.....

தவறுகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்
பாடங்கள் தவறுகள் போல் மறைக்கப்படுகின்றன
தவறுகளில் இருந்து பாடம் கற்காமல்
இருப்பதுதான் ஒரே தவறு......

தவறுகள் தோல்விக்கு வழிவகுக்கும்
தோல்வி ஆபத்தானதும் அல்ல,
வெற்றி இறுதியானதும் அல்ல,
வெற்றி உறுதியான அடித்தளத்தை
அமைப்பதன் மூலம் கிடைக்கும்......

வெற்றிக்குப் பின்னால் தோல்விகளே
இதுவே வாழ்க்கையின் ரகசியம்.......

5
Birthday Wishes / Re: Happy Birthday RIYANA QUEEN
« on: May 27, 2023, 01:07:26 am »

6
Birthday Wishes / Re: Happy Birthday DEMON
« on: May 07, 2023, 11:39:15 pm »
WISH YOU HAPPY BIRTHDAY DEMON BRO

7
வணக்கம் சங்கீத மேகம் குழு
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்.....



திரைப்படம் : ஆட்டோக்ராப்
பாடல் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புதோழி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பாடலாசிரியர் : சிநேகன்
பாடகர் : யுகேந்திரன்




எனக்கு பிடித்த வரிகள் :

நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உளியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்


இந்த பாடல் எனக்கு பிடித்த பாடலில் ஒன்று,
இந்த பாடலில் வரும் கருத்துக்கள் தோழி ஒருத்தி இருந்தால் நண்பனுக்கு
வாழ்வு அழகா இருக்கும்னு சொல்கிற பாடல்



இந்த பாடலை எனது GTC FRIENDS ELLARUKUME DEDICATE பண்றேன்

8
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY CUTE & BULLETT
« on: April 20, 2023, 11:57:58 pm »
WISH YOU HAPPY BIRTHDAY BULLETT BRO AND CUTE

10
வணக்கம் சங்கீத மேகம் லவ்லி & புல்லட்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்.....


திரைப்படம் : கும்கி
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே என்ற பாடல்....
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடலாசிரியர் : யுகபாரதி
பாடகர் : ஹாிச்சரண்


எனக்கு பிடித்த வரிகள் :

கண்கள் இருப்பது
உன்னை ரசித்திட என்று
சொல்ல பிறந்தேன் கைகள்
இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்


இந்த பாடல் எனக்கு பிடித்த பாடலில் ஒன்று,
இந்த பாடலில் வரும் கருத்துகள் அவளை கண்ட நொடி நான் கொண்ட

இன்பம், அவளோடு வாழ்வு வேண்டும் என கூறும் பாடல் போல இருக்கும்....

அது போல இந்த பாடலை

என் என் அன்பானவளுக்காக கேட்கிறேன்

11
பெண்மையின் அழகு வெட்கம்.......

அவன் முகம் காண
தயங்கி தலை குனியும்
பெண்ணின் வெட்கம் அழகு.....

பெண்ணே !
உன் வெட்க்க வெளிச்சத்தில் 
கண் கூசி நிற்கிறேன்
கொஞ்சம் கண் திறந்து பாராயோ?

பெண்ணே !
எதை கேட்டாலும்
உன் வெட்கத்தையே தருகிறாயே !
உன் வெட்கத்தை கேட்டால் எதை தருவாயோ?

பெண்ணே !
வெற்றிலைக்கு நாக்கு சிவக்க காரணம்
உன் காதல் என்றதும்,
வெட்கத்தில் நீ சிவக்கிறாயே.....

பெண்ணே !
உன் வெட்கம் கண்டபின்
தொலைந்தது என்  தூக்கம்,
அதை, தேடியே கழிகின்றது
என் வாழ்க்கையின் ஏக்கம்.....

பெண்ணே !
உனக்காக காத்திருக்கும்  ஒவ்வொரு நேரமும்
தவணை முறையில்  மட்டுமே எட்டி பார்க்கிறது
இந்த, புன்னகையோடு கலந்த வெட்கம்.......

பெண்ணே !
உன் வெட்கத்தை ரசிப்பதற்க்காகவே
உன்னையே சீண்டி பார்க்க
தூண்டுகிறதே என் கைகளும்......

பெண்ணே !
என் வீட்டு மலர் செடியில்
தினமும்தான் பூக்கின்றன பூக்கள்
ஆனாலும், நான் விரும்பி ரசிக்கின்ற பூ
உன் முகத்தில் மலரும் வெட்கமென்ற பூவைதான்.....

பெண்ணே !
எந்நேரமும் உன் ஞாபகமே என்னுள்,
நேரில் உன்னை கண்டதில்லை - காணும்போது
நான் உனக்குள் கரைந்து போக வேண்டுமே.....

பெண்ணே !
மரியாதை கொடுத்து பேசும் அழகியே,
மனம் கவர்ந்த வெட்க அழகி நீயே.....

12
I CHOSEE N

NOON

13
நீண்ட நெடு நெடுவாய்,
வளைவும், நெளிவுமாய்
காலை நேர தென்றலில்,
ஓர் ரயில் பயணம்....

ஜன்னல்லோரம்
நெஞ்சினுள் சிலிர்க்க வைக்கும்
ஓர் இதமான காற்று.....

சற்றென்று மாறுகிறதே ஓர் வானிலை !

வானில் திடீரென்று ஓர் வானவேடிக்கை
மின்னலின் வெளிச்சக் கீறலும்,
செவிக்களுக்கு இசையாய்
இடி என்னும் மத்தளம் கொட்டி
மனதுக்குள் அச்சம் எழுப்புகிறதே.....

பரவசமூட்டும் தென்றலும்,
பயணத்தில் கடக்கும்
மரங்களும், செடிகளும்,
மகிழ்ச்சியில் சாய்ந்து சாய்ந்து
ஒரு சந்தோஷ வரவழைப்பை தருகிறதே....

கண்ணில் படும் தூரம் வரை
காரிருள் சூழுந்து,
நீல வண்ண வானத்தையும் மறைத்து
இரவையும் எழுப்புதே,

மென் சாரல் மழையும், தூறலும்
மேனியை மெய் சிலிர்க்க  வைத்து,
மெது மெதுவாய் என் தேகங்களை
தீண்டிச் செல்ல எண்ணுதே...

பயணத்தில் அங்கும் இங்கும் ஒரே கூச்சலும்,
எங்கோ ! குழந்தையின் அழுகுரலும்....
இடையில் தொலைபேசியின் மெல்லிசையும்,
மேலும் இப்பயணத்தின் அழகை கூட்டுதே....

மனம் அலை பாயும் தருணத்தில்
இப்பயணம் தன்னையும்
ஓர் சிந்தனை கவிதையில் ஆழ்த்துகிறதே....

14
வணக்கம் சங்கீத மேகம் லவ்லி & புல்லட்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்.....

திரைப்படம் : ரட்சகன்
பாடல் : கையில் மிதக்கும் கனவா நீ...
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஸ்ரீநிவாஸ்

எனக்கு பிடித்த வரிகள் :

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

இந்த பாடல் வைரமுத்து வர்ணிப்பு வார்த்தைகள் சொல்லவே

வேண்டாம், தான் விரும்பிய  பெண்ணை எப்படி தாங்கி

கொள்ளனுமுன்னு அழகா சொல்லிருபாரு....அது போல இந்த பாடலை

என் அன்பானவளுக்கு அற்பணிக்குறேன்

Pages: [1] 2 3 ... 8