Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - AnJaLi

Pages: [1] 2 3 ... 18
2
Games - விளையாட்டு / Re: Letter Words - A -Z
« on: March 08, 2025, 06:16:54 pm »
Z - Zebra have stripes

3
I choose "S"

Sunrise

4
Games - விளையாட்டு / Re: User below me...
« on: March 08, 2025, 06:12:18 pm »
No

User below me is short tempered

5
Festival Day Wishes / Re: Happy Women's Day 2025
« on: March 08, 2025, 06:08:59 pm »

6
Birthday Wishes / Re: Happy Birthday IAMCVR
« on: March 07, 2025, 06:14:51 pm »

7
Birthday Wishes / Re: Happy Birthday VIP
« on: March 07, 2025, 06:08:42 pm »

8
புளியோதரை

வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
புளி - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 15 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
கடலை பருப்பு - ஒரு பிடி
உளுந்து - ஒரு பிடி
வேர்க்கடலை - ஒரு பிடி
கடுகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
மிளகு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தனியா, எள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
முதலில் மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளியை அதிக நீர் விடாமல் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, வேர்கடலை, உளுந்து சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

ஒரு தேக்கரண்டி கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

பாதியளவு காய்ந்த மிளகாய், எள் சேர்த்து நிறம் மாறாமல் வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும். ஆறிய பொருட்களை கொரகொரப்பாக அரைத்து பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அடுப்பை குறைத்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

சற்று கெட்டியானதும் பொடித்த பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான புளியோதரை செய்ய புளிக்காய்ச்சல் ரெடி.

தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான புளியோதரை தயார்
 

9
தேங்காய் சாதம்

தேங்காய் துருவல் - கால் கப்
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப
 
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து விடவும்.

சுவையான தேங்காய் சாதம் தயார்.
 
தேங்காய் எண்ணெய் சுவை பிடிப்பவர்கள் தேங்காய் எண்ணெயிலே செய்யலாம். தேங்காயை சேர்த்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்

10
காளான் பிரியாணி

காளான் - 15
பாஸ்மதி அரிசி - 2 கப்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
முந்திரி - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2
புதினா - 15 இதழ்
மல்லித் தழை - கைப்பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க
நெய் - ஒரு தேக்கரண்டி
 
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.

பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.

பின் தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கி புதினா மற்றும் மல்லித் தழையை சேர்க்கவும்.

நறுக்கிய காளானை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்

5 நிமிடம் கழித்து தூள் வகைகளை சேர்த்து தேவையான உப்பை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

பின் குக்கர் பாத்திரத்தில் இந்த கலவையையும், அரிசியையும் சேர்த்து, அரை தேக்கரண்டி நெய், ஒரு பட்டை, சிறிதளவு புதினா, மல்லித் தழை போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

பிரியாணி ஆனதும் அரை தேக்கரண்டி நெய் விட்டு கிளறி எடுக்கவும். சுவையான, ஈஸியாக செய்யக் கூடிய காளான் பிரியாணி தயார்.

11
பாலக் ரைஸ்

அரிசி - ஒரு கப்
கீரை - ஒரு கப் [ஸ்பினாச் / அரைக்கீரை / சிறுகீரை]
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்கறி கலவை [உருளை, கேரட், காலிஃப்ளவர்]
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி [விரும்பினால்]
கறிவேப்பிலை
 

காய்கறிகளை நறுக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் நீக்கவும். கீரையை சுத்தம் செய்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்னெய் விட்டு சோம்பு தாளித்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி அதில் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை மிக்ஸியில் அரைக்கவும்.

மீண்டும் மீதம் உள்ள எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் அரைத்த கீரை விழுதை சேர்த்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

கீரை நன்றாக வதங்கி, மசால் வாசம் போனதும் 2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நீர் கொதித்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு அரிசியை சேர்த்து கொதி வந்ததும் சிறுதீயில் மூடி சாதம் வெந்ததும் எடுக்கவும். சுவையான பாலக் ரைஸ் தயார்.
 
இதில் பாசுமதி அரிசி, சீரக சம்பா அரிசி, புழுங்கல் அரிசி என எதை விரும்பினாலும் சேர்க்கலாம். ஆனால் அரிசிக்கு ஏற்றபடி நீர் அளவு பார்த்து சேர்க்கவும். குழந்தைகளுக்கு என்றால் நெய்யில் வறுத்த முந்திரி, பச்சை பட்டாணி கூட சேர்த்து புலாவ் போல் செய்யலாம்.

12
எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர்.   அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று.  இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.

1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி


பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.  இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன.  இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர்.  இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி

இது பரோடிட்  சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது.   இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன.  இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது.  இது அதிக என்ஸைம்களைக் கொண்டது.  இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது.  இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது.  இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல்  வாழலாம்  என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது.   மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது.  வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும்  அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள்.  அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.


மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள்.  இந்த உமிழ்நீரானது  உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக  வெளியே துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும்  நீர் அல்ல.  அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.

13
1. Chamomile tea : Known for its calming effects and is frequently used as a sleep aid.

2. Peppermint tea : Most popularly used to support digestive health, it also has antioxidant, anticancer, antibacterial, antiviral properties, nausea, stomach pain, and other symptoms of irritable bowel syndrome

3. Ginger tea : Effective at relieving nausea, especially in early pregnancy, although it may also relieve nausea caused by cancer treatments and surgery

4. Hibiscus tea : Offers healthful properties and significantly reduce total and LDL (bad) cholesterol, along with blood pressure

5. Echinacea tea : A popular remedy that’s said to prevent and treat the common cold

6. Rooibos tea : May have anti-allergy effects and may inhibit the formation of osteoclasts

7. Sage tea : Known for its medicinal properties and potential benefits for brain health

8. Lemon balm tea : May increase the body’s natural antioxidant enzymes, which help protect the body from oxidative damage, improved arterial stiffness, which is a risk factor for heart disease, stroke, and mental decline

9. Rose hip tea : May help reduce inflammation and improve symptoms related to rheumatoid arthritis and osteoarthritis, including pain

10. Passionflower tea : Traditionally used to relieve anxiety and improve sleep

14
Games - விளையாட்டு / Re: THIS OR THAT
« on: February 28, 2025, 08:52:14 pm »
Cooking (But i like both  ;D)

Sunset or Sunrise

15
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: February 28, 2025, 08:45:55 pm »
Like

Walking along the beach

Pages: [1] 2 3 ... 18