Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Vedhika

Pages: [1]
1
   உன் விழிகளில் தொலைந்தவள்

காற்றைக் கண்டவுடன் நடனமாடும் மரங்களைப் போல, அவன் கண்களைக் கண்டதும் என் மனமும்  நடனமாடுகிறது.

அந்தக் கண்களின் ஓரத்தில் ஒரு கவிதை

என்னுள்ளே தினமும் வாசிக்கிறது..

என் உலகம் முழுவதும் அவன் விழிகளின் பிம்பமாய்..
அந்த பிம்பங்கள் மௌனமாய் என்னிடம் பேசுகின்றன..

மௌனங்கள் முதன் முதலாய் சத்தம் போடுகின்றன..

மௌனமாய் பேசியே வார்த்தைகளை தின்றாய்..

மெல்லமாய் வீசியே என்னை நீ கொன்றாய்..

உன் விழியின் கருவிழிக்குள் நான் தொலைந்த தருணம் தான் எனக்குள் காதல் பிறந்தது..

அது நீ இட்ட இமைகளின் சிறை, அந்த சிறை வானம் போல அளவற்ற ஆழம்....

அதில் மூழ்கிப் போகவும் சம்மதம் மீண்டும் கரை சேரவும் விருப்பமில்லை..

இனிப்பை விட சுவை மிகுந்ததாய் நம் கனவுகள் மாறியிருக்கின்றன..

நந்தவனங்களும் பூஞ்சோலைகளும் குவிந்து வாசம் பரப்பும் மதிமயங்கும் மாலைப் பொழுதில் உன் மார்பில் சாய்ந்து நான் கனவு காண வேண்டும்..

மழைநாள் இரவொன்றில் ரெட் பல்சரில் (Red Pulsar) உன்னோடு நெடுந்தூர பயணம் சென்றிட வேண்டும்...

கடலோடு காடும் மலையோடு மழையும் உன்னோடு சேர்ந்து ரசித்திட வேண்டும்..

உயிரோடு கலந்தவனே உறவாய் உன்னில் சேர்ந்திடவே உறைவிடம் வந்தேன் உன்னிடமே..

உயிரே... என் உயிரே.. உயரப் பறந்தேன் உன்னால்.. சிறகடிக்க மறந்தேன் இந்நாள் எனக்கென கிடந்தேன் தனியே சிலையென வடித்தாய் கள்வனே!

அந்தச் சிலைக்கு உயிரையும் கொடுத்த காதலனே..

என் உயிர் பிரியும் தருணம் உன் மடியில் நான் துயில் கொள்ள வேண்டும்

உன் விழிகளைப் பார்த்துக் கொண்டே என் இமைகள் மூட வேண்டும்.

Pages: [1]