1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-063
« on: January 13, 2026, 04:52:28 pm »
தனிமைப் படுக்கையில் - நாம்
தனித்தனித் தீவுகளாய்...
கண்கள் பார்த்துக் கொள்ளவில்லை - ஆனால்
கனவுகள் கைகோர்த்துக் கொள்கின்றன..
கைகள் தீண்டிக் கொள்ளவில்லை - ஆனால்
காதல் இதயத்தைத்
துளைக்கின்றது...
இரு வேறு திசைகளில் நாம் இருந்தாலும்,
ஒரே நிலவை ரசிப்பதில் முடிகிறது நம் காதல்.
அலைபேசித் திரைகள் வழி
அன்பைப் பரிமாறும் அகதிகளாய்!
மைல் கற்கள் நமக்கிடையே
மௌனப் போர் செய்தாலும்,
கண்ணாடித் திரைக்குப் பின்னால்
கலையாமல் இருக்கிறது உன் முகம்...
இரவு நேரத்து அமைதியில்
இதயத் துடிப்பு மட்டும் உரக்கக் கேட்கிறது...
நீ அனுப்பும் 'குறுஞ்செய்தி' சத்தத்தில்
என் அறை முழுவதும் வெளிச்சம் பூக்கிறது!
என் அறையின் இருளை மட்டுமல்ல,
என் வாழ்வின் தனிமையையும் போக்குகிறது.
நேரில் பார்க்க முடியாத ஏக்கங்களை எல்லாம்,
சின்னச் சின்ன 'குரல் பதிவுகளில்' தேடித் தீர்க்கிறேன்.
உன் குறுஞ்செய்தியின் சிறு அதிர்வு போதும்,
என் பகல் பொழுதுகள் அழகாக மாறிப்போக...
உன் அழைப்பிற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்,
ஒரு யுகமாய் நீண்டு என் பொறுமையைச் சோதிக்கிறது.
தொலைவில் இருக்கிறாய் என்பதால் அன்பைக் குறைக்கவில்லை...
மாறாக, ஒருமுறை உன்னைத் தொட்டுவிடும் ஆசையில்
அன்பு இன்னும் ஊற்றெடுத்துப் பெருகிக்கொண்டே இருக்கிறது.
நிழற்படங்கள் வழி உன் முகம் பார்த்து,
திரையை வருடி முத்தமிடும் தருணங்கள்...
வலிக்கின்ற சுகமான அனுபவங்கள்!
நம் சந்திப்பிற்கான அந்த ஒரு நாள் வரும்...
அன்று காலங்கள் நமக்காகக் காத்திருக்கும்,
நாம் கடந்த வந்த இந்தத் தூரங்கள் எல்லாம்
அன்று நம் மௌனத்தாலும் அணைப்பாலும் கரைந்து போகும்.
காத்திருப்போம்...
ஏனென்றால், நீண்ட காத்திருப்பிற்குப் பின் கிடைக்கும் காதல்,
எப்போதும் விலைமதிப்பற்றது!
தூரம் ஒரு பாரமல்ல...
துணையாய் நீ இருக்கும் வரை!
என்னவனே💖