1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-071
« on: July 21, 2026, 10:33:02 pm »
பாக்கு மடிக்கும் விரல்களிலே...
பாசம் மடிந்ததைக் கண்டதுண்டு...
சுருக்கு விழுந்த முகத்திலே...
சூரியன் சிரித்ததைக் கண்டதுண்டு..
வெற்றிலை வாசம் வீசும் மடியில்...
விழுந்து கிடந்தது என் பாக்கியமடா ...
கதை சொல்லும் ஒவ்வொரு இரவும்...
கனவாய் மாறிய காவியமடா..
பாக்கெட்டில் வைத்த அந்த ஐம்பது ரூபாய்...
இன்று கோடிக்கும் கிடைக்காத செல்வமடா
சாப்பிடு ராஜா..என்ற வார்த்தை,
பசியை விடப் பெரிய விருந்தாய்.
சோறு உருட்டிய கரங்களிலே...
சொர்க்கத்தைத் தொட்டதுண்டு...
அம்மா கோபம் மழையாய் வந்தால்...
ஆலமரமாய் நீ நிழலானாய்...
அப்பா கோபம் புயலாய் வந்தால்...
அணையாத தீபம் நீயானாய்..
உலகம் என்னை படித்தவன் nu சொன்னது...
உத்தியோகம் என்னை நேர்மை nu சொன்னது...
உன் கண்ணு மட்டும் இன்னைக்கும்..
"ஏய்... சட்டையில பட்டன் போட்டுக்கிட்டியா?"ன்னுதான் கேட்டது
உன்னுடைய சுருக்குப்பை திறந்தாலே
சில்லறை காசு மட்டும் இல்லை...
சிதறிக் கிடக்கும் என் சிறுவயது நினைவுகளும் இருக்கும்...😢
சுருக்குப்பையைப் பற்றி எழுத வந்தேன்...
வரிகள் நீளவில்லை...
கண்ணீர் தான் நீளுகிறது...
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்
என்றும் என் பாட்டியின் சீயான் ஆக.. என் பாட்டி ku சமர்ப்பிக்கிறேன்❤️
பாசம் மடிந்ததைக் கண்டதுண்டு...
சுருக்கு விழுந்த முகத்திலே...
சூரியன் சிரித்ததைக் கண்டதுண்டு..
வெற்றிலை வாசம் வீசும் மடியில்...
விழுந்து கிடந்தது என் பாக்கியமடா ...
கதை சொல்லும் ஒவ்வொரு இரவும்...
கனவாய் மாறிய காவியமடா..
பாக்கெட்டில் வைத்த அந்த ஐம்பது ரூபாய்...
இன்று கோடிக்கும் கிடைக்காத செல்வமடா
சாப்பிடு ராஜா..என்ற வார்த்தை,
பசியை விடப் பெரிய விருந்தாய்.
சோறு உருட்டிய கரங்களிலே...
சொர்க்கத்தைத் தொட்டதுண்டு...
அம்மா கோபம் மழையாய் வந்தால்...
ஆலமரமாய் நீ நிழலானாய்...
அப்பா கோபம் புயலாய் வந்தால்...
அணையாத தீபம் நீயானாய்..
உலகம் என்னை படித்தவன் nu சொன்னது...
உத்தியோகம் என்னை நேர்மை nu சொன்னது...
உன் கண்ணு மட்டும் இன்னைக்கும்..
"ஏய்... சட்டையில பட்டன் போட்டுக்கிட்டியா?"ன்னுதான் கேட்டது
உன்னுடைய சுருக்குப்பை திறந்தாலே
சில்லறை காசு மட்டும் இல்லை...
சிதறிக் கிடக்கும் என் சிறுவயது நினைவுகளும் இருக்கும்...😢
சுருக்குப்பையைப் பற்றி எழுத வந்தேன்...
வரிகள் நீளவில்லை...
கண்ணீர் தான் நீளுகிறது...
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்
என்றும் என் பாட்டியின் சீயான் ஆக.. என் பாட்டி ku சமர்ப்பிக்கிறேன்❤️
