1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-058
« on: September 02, 2025, 09:22:37 pm »
பத்து மாதங்கள் சுமக்கும் தாயின் இன்பச்சுமையை மார்பின் சிகை கொண்டு தாங்குவாய் என்றால் மிகை ஆகாது,
என் கால்கள் தரையை வருட விடாமலே நடை பழக்குகிறாய்,
மண்ணில் விழுந்து தோல் சரிந்தால் மனம் ஒடைந்து சரிய அமர்வாய்
வீட்டின் வாசப்படியை உன் நிழல் வருட,
என் விரிந்த கண்களின் மயத்தில் ஒன்றுக்கூடும் ஒளி விளக்கின் ஈரம் சொல்லும் நீ யார் என்று
என்ன நிகழ்ந்தும் அவர் கண்ணீர் சிந்த நான் கண்டதில்லை,
கண்டெடுத்த முத்தானவள் நான், என் சிரிப்பில் மகிழ்ந்து சிரகடிக்கவே, அழுக தோண்றவில்லை என்று சொல்வாய்
உலகை சுற்றி வலம் வர ஆசை இல்லை,
உன்னை சுற்றி வரும் சிறுமியாகவே இருப்பதில் நிம்மதி
கையோடு அள்ளி என்னை வானை நோக்கி எறிவாய்,
அச்சத்தில் மிதந்து நிற்பேன்,
விழுந்து விடுவேனோ என்று எண்ணி அல்ல,
தாங்கி பிடிப்பது எப்பொழுதும் உந்தன் கரங்கள்ஆகவே இருக்க வேண்டும் என்று