Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Harry potter

Pages: [1] 2
1
உன் முகம் பார்க்க தவிக்கும் அவன்”

எங்கு தொடங்கினோம் உன்னோடு நானே,
உறவெனத் தெரியாமல் உயிரோடு நானே.
“ட்ரூத் ஆர் டேர்?” என்ற கேள்வி போல,
தோன்றியது காதல்—தீப்பொறி சோலை.

விளையாட்டின் கேள்வியில் வந்தது பாசம்,
விளையாட்டின் வார்த்தையில் நின்றது நேசம்.
சொல்லாமல் வளர்ந்தது உணர்வு பெரிது,
சொல்ல வார்த்தை போதவில்லை—இதயம் நிரம்பியது.

மழை பெய்த பாதையில் நீ நடந்தாய் முன்புறம்,
நம் காதலோடு நான் நடந்தேன் எப்போதும் பின்புறம்.
உன் முகத்தை மறைத்தது குடையின் கருமை,
அதிலே நீயே சொன்னாய் மௌனத்தின் உருமை.

அன்பே…!

குடை நீ சுமப்பது பாரமல்லவோ காதலி?
குடும்பம், கட்டுப்பாடு, கனவுகளைத் தடுத்தலி.
அந்தக் குடை வலி—அந்தக் குடை சங்கிலி,
அந்தக் குடை மழையில் மறைந்ததே மாங்கலி.

நீ காட்டாத முகத்தை நான் காணும் கனவிலே,
நீ மறைத்த சிரிப்பை நான் உணரும் இரவிலே.
என் கையைப் பிடித்தால் உன் பயங்கள் கரையும்,
என் அருகில் நடந்தால் உலகங்கள் மறையும்.

இன்னும் நேரில் பார்க்கவில்லை என் பார்வை,
ஆனால் மனதில் நிறைந்தது உன் உருவ பாரை.
உன்னை காணும் நாளை எண்ணி காத்திருக்கும்,
என் காதல் தீயாய் தினமும் எரிகிறது.

நான் விரும்புவது ஒன்றுதான்,
உன் முகத்தை நாளும் காண வேண்டும்.
உன் சிரிப்பு சூரியமாய் எனை ஒளி செய்ய,
உன் முகமே என் வாழ்வை நிறை செய்ய.

குடையை விட்டு வெளியே வா கண்ணே,
உன் முகத்தை காட்டிவிடு இங்கே.
உன் பார்வை மழையில் நனைந்து,
என் உயிரை வாழ விட்டு விடு.

காதல் என்றால் அது நீயே,
வாழ்வு என்றால் அது நாமே.
மரணமில்லா பந்தமாய்,
மாறாத நேசமாய்.

உன் முகம் பார்க்கத் தவிக்கும்,
உன்னுடைய அவன் ❤️

2
முடிவில்லா புரிதல்

உன்னை புரிந்து கொள்ள நான்
மீண்டும் ஒரு ஜென்மம் பிறந்து வர வேண்டும்.
ஏன் தெரியுமா, புரிந்து கொள்ள நினைத்த போது
பிரிந்து செல்ல வேண்டி இருந்தது.
பிரிந்து செல்லுகையில்
புரிந்து கொண்டு இருக்கலாமோ என்று மனம் திண்டாடியது.
புரிதல் ஒரு புரியாத கதையானால்
நம் காதலே ஒரு தொடர்கதை.

Always love and peace ❤️
Harry Potter ❤️

4
அவளை எத்திய அந்த நொடி
முடிவில்லா பாசம்… வார்த்தை இல்லாத கவிதை,
அவள் கையிலே என் கை –
வாழ்க்கை இப்போது ஒரு புது அர்த்தம் பெற்றது.

சில நொடிகள் பேசவில்லை,
ஆனால் என் வாழ்க்கை பேச ஆரம்பித்தது!

Hi SM team, Enada KG nu nenachiten nu pakurigala athan illa. Apram en da intha kavithai nu ketingana, Nama keka pora song apdi. Athan Oru small damal dumal kavithai.

Actually Enaku “Kizhaku seemaiyile” movie la irunthu “Maanoothu manthaiyila” song play panunga.

Nan intha song kekura apo Ellam enga veetu kutty papa nyabagam. Avanga porathu 1 year aguthu 20th July avanga birthday. Kutty ah iruka apo pathathu ipo video call la pesura but irunthalum nan romba miss panra Oru soul en akka ponnu.

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சசி ரேகா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்


5
மறக்க முடியாத என் நிமிடங்கள்

கல்லாய் மாறிய என் கனவுகளின் பயணம்!!!

சிறுவயதில் சிரித்தேன், சிறகு இல்லாமல் பறந்தேன்,
சின்னதாய் சொந்தங்கள், இருந்தும் சிங்காரமாய் நின்றேன்,
மழலைக் கனவுகளில் கலந்தேன்,
மழையில் நனைந்த பூவை போல் மிதந்தேன்.

படிக்கவே வந்தேன், வேலைக்கு ஓடிய பாதையில்,
படர்ந்தது கனவுகள், பசுமையில்லா பாதையில் .
பணத்தால் பறந்து போன என் பதற்றக் காலம்,
படிப்புக்கே பிழைப்பாய் மாறிய பயணம்.

நட்பில் நான் நிழலாய் இருந்தேன்,
நண்பர்கள் பேசும் வரை சிரித்தேன்,
நெஞ்சத்தில் அந்த குரல்கள் புதைந்துகொண்டிருந்தது,
இன்று அந்தக் குரலும் காற்றில் அழிந்தது.

பனித்துளிகளோடு வந்த என் கல்லூரி நாட்கள்,
பாரம்பரியங்களை விட்டுப் போன சாயல்கள்.
பார்ட் டைம் வேலை என்ற பெயரில் பரந்த என் தூக்கம்,
பயிற்சி இல்லாமல் பரிசளிக்கும் சூதாட்ட வாழ்க்கை போல்.

காலமும் கட்டுப்பாடுகளும் சேர்ந்தபோது,
காதலும் கூட என்னை விட்டுப் போனது.

வெற்றிக்கு முன்பே வெறுமை வந்தது,
வெளிச்சத்தில் நான் தோற்ற வலிகள் இருந்தது.
விளக்கின்றி போன என் தோழனின் முகம்,
விழிகளுக்குள் உருகும் என் அக்காவின் நிழல்.

இறங்கினேன் கனவுக்கு… ஏறினேன் மேடைக்கு,
தூக்கமில்லா இரவுகள், இன்பமில்லா பகல்கள்,
இனிமை கொண்ட உறவுகள் எனக்குள் இருந்த சுவடுகள்.

சேர்த்தேன் வெற்றிகள், சிந்தினேன் உறவுகள்,
சிறகு இல்லா அந்த பறவை போல் .

சிரிப்பின்றி சிகரம் சேர்த்த என் காலடி ஓசை,
சில நேரம் என்னிடம் கேட்கிறது – “இது உனக்கான தேசமா?”

எங்கே என் அம்மாவின் கதை சொல்லும் குரல்?
எங்கே என் அப்பாவின் அமைதியான உறைச்சல்?
எங்கே என் நண்பனின் சிரிப்பு கொண்ட மழை?
எங்கே என் காதலியின் முகம்?

தடம் போன நேரங்கள், தடுமாறும் நினைவுகள்,
தவிர்க்க முடியாத பணி, தவிக்கும் என் உயிர்கள் .
நீங்கிய ஒவ்வொரு நிமிடமும்
நிழலாய் நடக்கும் என் நிமிட சுவடுகள்.

உணர்வுகள் மட்டும் அறிந்த பாதைகள்…
மீள முடியாத சில தருணங்கள்,
மறக்க முடியாத சில முகங்கள்…

இது அனைத்தும் என்னை பற்றி நான் அறிந்த பக்கம்.
இபடிக்கு உங்கள் தோழன்
Harry Potter
Always peace ✌️and love  ❤️

6
Yeeengaaaaa!!!!! Vanakkam SM thozha thozhi ❤️
Can you play this song “Enge Antha venilla (MALE VERSION)” from varusamellam vasantham movie
Actually it’s one of my playlist.

Singer: Unni Menon
Music: shrpi

Ithula Oru lines varum enakage elunthuna mari ❤️
நீ இருந்தால்
என்ன பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா

Avalothan Ithuku mela oru mukiyamana visiyam “ yarukavathu depression ah apo Nama koomapatty ku vanga” Yengaaaaa!!!😂

Anyways, always peace and love ❤️
Harry Potter💥

7
*அவளின் அழுகுரல்*

அந்தகார இரவினில்,
அலறும் ஆலயத்தின் அருகில்,
அலைபாயும் ஆவிகள் அச்சத்தில் அணைந்தன,
அவளின் அழுகுரல் அண்டமெங்கும் அலைந்தது,
அடங்காத ஆவிகள் அவலமாய் அசைந்தன,
அறியாத் துயரில், அலைகடலாய் ஆர்ப்பரித்தன.

கல்லறைக் காட்டின் கரையில், கருமேகம் கலைந்தது,
கண்களற்ற கோபுரம் காலத்தை கலங்கடித்தது,
கரையோரக் காற்றில் கலங்கிய கானங்கள்,கதறிடக் கேட்டன.
கலங்காத காவியத்தின் கனமான காட்சியாய்,
கண்மூடாக் கனவுகள் காணாமற்போயின.

நீண்ட நிழல்போல நிலவினில் நீந்தியவள்,
நேசமற்ற நினைவுகள் நெஞ்சினில் நீங்காதவள்.
நிலைகுலைந்த நெஞ்சங்கள் நிசப்தமாய் நடுங்கின,
நிறமற்ற நிசப்தத்தில் நிலைதவறிக் கிடந்தன.
நாளைய நம்பிக்கை
நாசமாய் நசிந்திட,
நம்பிக்கை நாடி நிஜமற்று நின்றன.
நரகத்தின் நுழைவாயில் நழுவியே நின்றது,
நானிலம் நடுங்கி நிசப்தமாய்ப் போனது.

மூடுபனி மூடிய மயானத்தின் மூலையில்,
மூச்சிரைக்கும் மௌனம் முழுமையாய் மிதந்தது.
முடிவற்ற மரணத்தில் முழக்கங்கள் மிதந்திட,
முன்னோர்கள் முகத்தில் முடிவற்ற வேதனை.
முழங்காலிட்டு முறையிட்டாள்,மெலிந்தவள்.

பறவைகள் பறந்தன, பயத்தில் பதறின,
பல்லாயிரம் பேய்கள் பின்னாலே தொடர்ந்தன.
பதறிய பாறைகள் பாதையில் சிதறின.
பண்பற்ற பயங்கரம் பரப்பியே பாய்ந்தது,
பயங்கரப் பிம்பங்கள் பலவிதமாய்ப் பதிந்தன.
பாதகப் புயல்கள் பாய்ந்தோடும் போது,
பாசம் பதைத்துப் பாழாகிப் போனது.

வானத்து வட்டநிலா வாட்டமாய் நின்றது,
வயலின் பகுதி வெறிச்சோடிக் கிடந்தது.
வலியற்ற வரிகள் வார்த்தைகளில் வாழ்ந்தன,
வேதனை வெளிப்பட்டது- விடிவை எதிர்பார்த்தது.
விடியாத இரவில் விசித்திர வேதனை,
விண்மீன்கள் வெட்கி வெளிறியே நின்றன.
விதியற்ற விளையாட்டு, விழிகளில் விரிந்தது,
விஷமப் புயலென வேகமாய்ப் பாய்ந்தது.

சோகத்தின் சுவடுகளில், சூனியத்தின் சொந்தமாய்,
சொல்லாத கதைகளின், சூட்சும சலனமாய்,
சொற்களற்ற சொற்களால், சுழன்றோடும் சத்தியமாய்,
சுடரற்ற சூனியத்தில், சுருண்டோடும் சுடராய்.
சுமைகளைச் சுமந்தாள், சுழன்றோடும் காலம்போல்,
சுழன்றேடும் சுழலைப்போல், சுடுகாட்டுச் சூழலில்.
சூரியனின் சுடரும், சூனியமாய்ப் போனது.

மயானத்தின் மையத்தில், மண்டியிட்டாள் மதிமயங்க,
மரணத்தின் மாளிகையில், மனம் நொந்து மாள;
மனிதர்கள் மறந்த, மகத்தான காவியம்.

துயரத்தின் திரையில், தொலைந்ததோர் திசை,
துயரத்தின் ஆழத்தில், துடித்ததோர் திசை;
துணக்கற்ற துயரம், துளிர்விட்டதே அங்கே,
துணக்கற்ற நினைவுகள், துடித்ததோர் துன்பம்.
தூயவள் துயரத்தில், தூக்கத்தை இழந்தாள்,
தூக்கம் தொலைந்ததும் , துயரம் தொடர்ந்தது.
தூய்மையற்ற துயரில், தூங்கியே கிடந்தாள்,
தூங்கியே கிடந்தாள், துயரத்தில் மூழ்கினாள்.

நிலவொளி நீளும், நிசப்த இரவினில்,
நீங்காத சோகம், நிலமெங்கும் பரவும்;
நாளைய நாட்களிலும், நடுங்கும் ஓலமாய்,
நிரந்தரச் சோகமாய், நிலைத்து நிற்கும்.


Always peace and love ✌️❤️
Harry Potter 💥

8
Makkal anaivarukum vanakkam❤️

SM team ku periya vanakkam. Nan yaru theriuma nan than Harry Potter 😂
Song: sotta sotta nanaiyuthu Tajmahal ( male version)
Movie: Taj Mahal
Singer : Srinivas
Music by : A. R. Rahman

Ithula oru line varum
“உனக்காக பரிசு
ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்”

Thank you guys💥
Always peace and love ✌️❤️
Harry Potter ❤️

10
என் வலியின் அடையாளம்
இது ஒரு நிலை காணாத பதிவு…
பிறரை சிரிக்க வைத்த நாட்களில்
நான் அழுத சுவடிதான் இது.

மௌனத்தின் மொழியில் பதிந்த
மனம் கிழிந்த கவிதை…
பார்க்க ஒரு வரி போல் தெரிந்தாலும்,
படிக்க ஒரு வாழ்க்கை போதும்.

Title: காதலின் கானல் நதி

ஏழு ஆண்டுகள் எழுதப்பட்ட ஓர் நூல்,
அது முடிந்தது ஒரு கதையாய்,
ஆனால் பிறந்தது…ஒரு கவிதையாய்.

ஏங்கிய என் விழிகளில் நீர் சுமக்க,
ஏதோ ஒரு கனவில் மட்டும் நீ என் காதலியாக!!!

இங்கே எல்லாம் இருக்கிறது….
இனிமையான வீடு, உயர்ந்த வேலை,
உணவு, உரிமை.
இல்லாதது ஒன்றே ஒன்று….
இரவிலும் பகலிலும்
என் சுவாசத்தின் அரைபாதியாகிய
நீ… நானும்… நாமும்.

நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்,
தொலைவில் இருந்தும் விசாரிக்கிறாய்,
இருந்தும் நான் உனதில்லை என ஒப்புகொண்டவள் நீ…

ஆனால் ஏன்?

என் பக்கம் நிழலாய் நடக்கிறாய்?

ஏன் இன்னும் கவனிக்கிறாய்?
ஏன் நம் கையில் ஏதுமில்லை எனச் சொல்லிக்கொண்டே,
என் வாழ்க்கையின் துணையாய் நிற்கிறாய்??

நம் கடைசி பயணம்….
பேருந்தின் ஒரு பயணக் காட்சி.
நானோ நின்றேன்…
நீயோ சென்றாய்.

நான் நினைத்தது…
என்னை விட்டு சென்றது
ஒரு பேருந்து மட்டும்தான்…

ஆனால் இல்லை…
அந்த சுழற்சியில் சுழன்றது சக்கரம் மட்டும் அல்ல,
நீயே… என் காதலியான நீயும்
அதோடு சென்றுவிட்டாய்.

நான் சாலையில் நின்றேன்,
உன் திரும்ப வராமையின்
ஒவ்வொரு சத்தத்தையும்
நினைவாய்க் கேட்டுக்கொண்டே…

நீ ஒரு வலி… ஆனாலும் மருந்து.
நீ ஒரு புண்… ஆனாலும் பாசமாய்.
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்,
நிம்மதி.
அதே நேரம்,
நிம்மதியில்லா ஓர் நிலவை போல் நான்…

“நீ ஏன் இப்படி நடக்கிறாய்?”
எனக்கே தெரியவில்லை…
நிழலாக வாழ,
நேசித்தபடி விலக,
நினைத்தபடி மறக்க,
இது காதலா?

உனக்கு புரியவில்லையா இந்த வேதனை!

நீ நேசிக்கிறாய் இருந்தும் விலகுகிறாய்.
நீ நினைக்கிறாய் இருந்தும் நெருங்க மறுக்கிறாய் .
நீ வாழ்த்துகிறாய் இருந்தும் என்ன பலன்,
கடந்து செல்ல என் பக்கம் பாதை இல்லை.

இதுதானா உன் காதல்.
இருந்தும் இதுதான்,
என் நரகம்.

வெற்றி என் கையிலிருந்தும்
வெறுமையாக உணர்கிறேன்…
நீயின்றி!!

என் எல்லா துன்பங்களிலும்
நீ பின்னால் நின்றாய்…
என் எல்லா தவறுகளிலும்
நீ கண்டிப்பாய் இருந்தாய்!!!

என் எதிர்பார்ப்புகளை நீ தாண்டினாலும்,
நீ என் நிழலுக்கே ஒளியாய் இருக்கிறாய்.
இருக்கட்டும்… பரிதாபம்தான்.
தொலைவில் நீ இருப்பதை தாங்கிக்கொண்டேன்,
என்னால் முடியாதென்றும் தெரிந்தபோதும்
நீயே என் காதலியென்று நம்பிக்கையோடு இருந்தேன்.

நான் விரும்பிய அன்பில்,
நீ சுடர்விட்டு விலகினாய்…
என் உயிரின் ஓரத்தில் நீ இருந்தாலும்,
என் வசமாக இருக்காத கானல் நீர் போல் நீ…

எட்ட முடியாத நிழலாய்,
என் ஆசைகளைக் கரைத்தாய்.

நீ விட்டுப் போனது ஒரு நாள்…
ஆனால் நான்…. நீயில்லாத நாட்களைக் கடக்க
இன்று வரை முயல்கிறேன்.

Always peace ✌️
Harry Potter ❤️

11
Birthday Wishes / Re: Happy Birthday ISHA
« on: May 18, 2025, 04:32:23 am »
என் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! நீ என் வாழ்வில் கிடைத்த ஒரு வரம். நாம் ஒன்றாகச் சிரித்த தருணங்களும், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொன்ன நேரங்களும் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. இந்த இனிய நாளில், இறைவன் உங்களுக்கு health, wealth, and happiness ஆகிய அனைத்தையும் நிறைவாகக் கொடுக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

உறவுகள் என்றும் நிலைக்கட்டும்,
பாசம் என்றும் அதிகரிக்கட்டும்!
துன்பங்கள் தூரமாகட்டும்,
சந்தோஷம் உனதாகட்டும்!

Wish you a happy birthday Isha sister ❤️
Always love and peace ✌️❤️
Harry Potter 😁

12
Birthday Wishes / Re: Happy Birthday Butterfly
« on: May 10, 2025, 12:31:34 am »
Hey! Happy birthday! Wishing you the best day ever. So glad we became friends, and I hope this year brings you everything you're hoping for. Have an awesome one! 😊

Always peace ✌️
Harry Potter ❤️

13
Festival Day Wishes / Re: Happy Labour's Day 2025
« on: May 01, 2025, 06:45:17 am »
உழைப்பின் கரம் உயரும்போது,
உலகம் போற்றும் உயர்வை.
வியர்வை துளிகள் சிந்தும்போதும்,
வெற்றி வந்து சேரும் மெல்ல.

சமத்துவக் கொடி பறக்கட்டும்,
சகோதரத்துவம் நிலைக்கட்டும்.
தொழிலாளர் தின நன்னாளில்,
தோழமை என்றும் தொடரட்டும்.

Always peace ✌️
Harry Potter ❤️

14
Hi makkale…Nan than Harry Potter. Welcome to great girigalan magic show.
 ;D
Apdiye Antha youth movie la irunthu “Aalthota boopathi” song play panunga 😀.

Singer : Shankar Mahadevan

Music by : Mani Sharma

Requested by: Nan than (Harry potter)🪄

Song play panrathu: of course Neenga than

Song keka porathu: vera yaru namadhan.

Vera ethavathu sollanam yosichen but brain work agala. Apo than idea vanthurhu Ena sollalam nu yosikiren apdingrathe sollalam nu soliten.😂

Vera ena ipo nan solla poren na ….siringa siringa santhosama irunga.

Always peace ✌️
Harry Potter ❤️

15
Title : எஞ்சிய நம்பிக்கை 💫


வானம் கருகிச் சிவந்த நேரம்,
புகை மண்டலம் சூழ்ந்த ஊரின் ஓரம்.
அழிவின் தாண்டவம் ஆடி ஓய்ந்த பின்னும்,
எஞ்சிய மௌனம் ஒரு பெரும் சோகம்.

உடைந்த சுவர்கள், கூரையிழந்த வீடுகள்,
காலத்தின் கோரப் பற்கள் பதித்த தழும்புகள்.
ஒரு காலத்தில் சிரிப்பும் கும்மாளமும் ஒலித்த இடம்,
இன்று கண்ணீரும் பெருமூச்சும் கேட்கும் களம்.

அந்தப் பாழடைந்த தெருவின் நடுவே,
சிறுமி ஒருத்தி தனித்து நிற்கிறாள் இடுவே.
தோளில் ஒரு கந்தல் பொம்மை சாய்ந்திருக்க,
விழிகளில் இழந்த காலத்தின் நிழல் படர்ந்திருக்க.

அவள் பாதங்களின் கீழே தேங்கி நின்ற நீர்,
கடந்த காலத்தின் கண்ணீர்த் துளிகளின் எதிர்.
அதில் தெரியும் தலைகீழ் உருவங்கள் மூன்றும்,
அவள் இழந்த உறவுகளின் மௌனமான கூக்குரல் போலும்.

அந்த உருவங்களின் கைகள் ஒன்றோடொன்று பின்னி,
ஒரு காலத்தில் இருந்த அன்பின் பிணைப்பைச் சொல்லி.
இப்போது அந்தப் பிணைப்பு அறுந்து போன சோகம்,
சிறு நெஞ்சில் ஒரு ஆறாத ரணமாக ஊறும்.

வானில் இன்னும் கரிய மேகங்கள் திரண்டு,
அச்சத்தின் நிழலை நீட்டிப் பயமுறுத்தக் கூடும்.
சுற்றியுள்ள தீயின் எச்சங்கள் இன்னும் கனன்று,
நினைவுகளின் வலியை அவ்வப்போது உயிர்ப்பிக்கலாம்.

ஆனால் அந்தச் சிறுமியின் கண்களில் ஒரு ஒளி,
தோல்வியடையாத மன உறுதியின் தெளிவு.
இடிபாடுகளின் ஊடே மெல்ல முளைக்கும் புல் போல்,
மீண்டும் ஒரு வாழ்வு மலரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை போல்.

அவள் சின்னஞ்சிறு கைகள் இன்னும் திறந்தே,
அன்பையும் அரவணைப்பையும் ஏந்தத் துடிக்கலாம்.
உடைந்த உலகைச் சேர்த்து மீண்டும் கட்டும் கனவு,
அவள் தூய மனதில் ஆழப்பதிந்து இருக்கலாம்.

இந்தக் கோரமான அழிவின் சாட்சியாய் நிற்கும் அவள்,
வெறும் குழந்தை மட்டுமல்ல, ஒரு வலிமையின் கவிதை.
நாளை விடியும், புதிய உலகம் பிறக்கும் என்ற
உறுதியான நம்பிக்கையின் உயிருள்ள சாவி.

The end 💫

Moral of the kavithai

முடிவில், இந்த கவிதை வெறும் சோகத்தின் பதிவல்ல, மாறாக அந்தச் சிறுமியின் கண்களில் மின்னும் நம்பிக்கையின் கீதம். அவளே புதிய உலகத்திற்கான விடியலின் அடையாளம், இருளுக்குப் பின் ஒளி வரும் என்ற உறுதியின் சின்னம்.

Focus on hope…always peace ✌️
Harry Potter ❤️


Pages: [1] 2