3
« on: August 29, 2024, 09:45:20 pm »
அன்று..கனவுதேவதைக் கதைகளின் மீது நம்பிக்கையற்ற ஒருவனாய் நான்..
அக்கதையின் கருவிற்கு உயிர்க்கொடுக்க வந்தவளாய் நீ.. ஏன் வந்தாய்?
அவள்..பௌர்ணமியின் வெண்-வட்ட நிலவொளிப் பிரகாசத்தையே மங்கவைக்கக்கூடிய முகஜூவாலை..
பூமியின் காந்தயீர்ப்பு விசையை விஞ்சிய விழியீர்ப்பு விசை...
கப்பல் கரைசேர உதவுமாம் கலங்கரைவிளக்கம்..
நான் அவள் மனம்சேர விளக்கமாய் ஜொலிக்கும் அவள் மூக்குத்தி..
சிகரத்தின் இடையே பசுமைப் பள்ளதாக்குகளாய் அவள் கன்னங்குழி.. அதில் அவ்வப்போது தற்கொலைசெய்து முக்தியடையும் என் பார்வைகள்..
பட்டைத்தீட்டிய கோஹினூர் வைரமாய் கடைவாயோரம் அச் சிங்கப்பல்..
கோதுமை நிறமேனியைப் பொருந்திய "நெற்களஞ்சியத்தின்"என் கனவு தேவதையே...
அன்று... கல்லூரியில் ஒற்றைக் காகித ரோஜாவின் பரிமாற்றத்தில் நம் நட்பு..
பரிணாமமடைந்து தொடர..,
வகுப்பில் புத்தகப் பரிமாற்றிப் படிப்பு..
மாலை அடுமனையில் இரு கோப்பை தேநீருடன் உன் அக்கறைப் பேச்சு சர்க்கரைத் தித்திப்பு..
உன் விடுதிவரை உன்னுடன் நான் கைகோராமல் மனம்கோர்த்து நடந்து செல்லும் நிமிடம் என்னுள்ளே பூரிப்பு..
ஸ்மார்ட்போன் இல்லாததால் ஹார்ட்போனாய் என் நோக்கியாவில் உன்னை நோக்கிய என் முகநூல் உரையாடலில் நேசிப்பு..
இவை இன்று நினைத்தாலும் என் உள் நெஞ்சில் பூக்கும் மத்தாப்பு..
அன்று.. அக்காகித ரோஜா., காதல் ரோஜாவாய் என்னுள் உயிர்த்து மலர., சொல்லவந்த காதல் சொல்லா ஆசையுடன் செல்லாக்காசாய் என்னுள் சிதரிய அத்தருணம்..
நாளை நாளை என்று தள்ளிப்போட்ட மனம்..
காதல் ரோஜாவின் தண்டை என் மன ஊன்றுகோளாக்கி., தைரியத்துடன் அக்கணம்..
அடுமனை நோக்கிய என் பயணம்..
நம் நாற்காலியில் நீ உன் தேநீர்க் கோப்பையோடு கண்ணில் காதலோடு எதிரே உன் கண்ணாலனோடு பார்த்த நொடி இன்பமரணம்..
காதல் ரோஜா காகித ரோஜாவாகவே இருந்திருக்கலாம் என்று யோசித்த மனம்..
ஏன் எனக்கு இந்த நிலை வரணும்..
ஹாஹாஹா.. இதுவே என்னை போன்று பல இதயம் முரளிகளின் சொல்லபடாத ஒரு தலைக்காதல்களின் வலி கலந்த சிறப்பு...
- இதயம் 💔 முரளியாய் உங்கள்
✍️ H❤️U❤️N❤️K ✍️