1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-055
« on: June 05, 2025, 05:46:35 pm »
யார் இவள்.....?
விடியாத இரவு...
அங்கே ஓர் நிலவு மட்டுமல்ல,
இரு நிலவு காட்சி கொள்கிறது....
சுற்றி இருக்கும் மரங்கள்
அவள் அழகில் கிசுகிசுக்கின்றன...
வவ்வால்கள் துள்ளி குதித்து றெக்கை
விரிகின்றன....
புதையுண்ட பிணங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்தாள் அவள் பேரழகில்...
யார் இவள்...?
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
அவள் கதை சொல்கின்றன...
இருந்தும் அவள் பார்வை மட்டும்,
அந்த மாளிகையை விட்டு அகலவில்லை...
அவள் வருகையை கண்ட அந்த மாளிகையின் கதவுகள் தானாகவே திறக்கிறன...
இருள் சூழ்ந்த அந்த அறையில்....
நிலவொளியில் அவள் நிழல் மட்டுமே
அவளுக்குத் துணையாக.....யார் இவள்?
அவள் இதழின் ஓரம் சிறு புன்னகை மலர்கின்றது...
எங்கையோ எப்பவோ கேட்ட ஓர் இசை...
அந்த இசை ஒலிக்கும் திசையை நோக்கி
விரைந்தது அவள் கால்கள்...
அறையின் கதவு தானாகவே திறக்க..
காத்திருந்தது பேரதிர்ச்சி....
அவள் கண்களையே அவளால்
நம்ப முடியவில்லை...
அருகில் சென்றாள்... வினா
எழுப்பினாள்...
கின்னரப்பெட்டியிலிருந்து
(piano) ஒலித்த அந்த
இசையை மீட்டியது நீயா? யார் நீ?
உனக்கு உனக்கு எப்படி தெரியும் இந்த இசை? யார் நீ.....? என்று வினா எழுப்பிக்
கொண்டே அந்த முகத்தை பார்க்க
முயல்கிறாள்...
மீண்டும் மீண்டும் பார்க்க முயல்கிறாள்..
இருந்தும் பலனில்லை...
சற்று அமைதிகொண்டாள்...
மயான அமைதியில்
ஓர் கம்பீர குரல் ஒலித்தது...
"இங்க என்ன பண்ற?
"எதுக்கு இங்க வந்த?
"செஞ்சதுலாம் போதாதா?
"யார் நீ யார் நீ என்று கதறுகிறாயே
நீ யார் என்று நான் சொல்லவா...?
சொல்லடி என் அழகு பெண்ணே..
நீ யார் என்று நான் சொல்லவா... ?
உன் வாழ்க்கை பக்கங்களில் நான்
எழுதப்படாத கதை....
இன்னும் சொல்ல போனால்
என் தலை எழுத்தை கிறுக்கியவள் நீ...
என்ன யோசிக்கிற?
உன்னை சுமந்த இந்த இதயத்தில்
இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டி கொண்டுதான் இருக்கிறது போ இங்கிருந்து.....
போயிறு...போயிறு...
ஆனா போகும் போது திரும்பி மட்டும் பார்க்காமல் போ,,,என்று
சொன்னது அந்த ஆன்மா...
அந்த மாளிகையை விட்டு பிரிய
மனமில்லாமல் அழுதபடி
அங்கிருந்து வெளியேறினாள்.....
ஒலித்த இசை...
பார்த்த உருவம்...
கேட்ட குரல்...
இவை யாவும் நிஜம் தானா என்று
யோசிக்க தொடங்கினாள்...
"ஒருமுறை அந்த மாளிகைய திரும்பி பார்க்கலாமா?..
இல்ல வேண்டாம்...
ஒருவேள பார்த்தா என்ன ஆகும்..?
பார்க்கலாமா...?
வேண்டாமா ...
பார்க்கலாமா...?
வேண்டாமா... ? இல்ல பார்க்கலாம்..
என்ன ஆனாலும் பரவால" என்று யோசித்த அவள்,,
இதயம் வேகமாக துடிக்க...
சற்று தயகத்தோடு,,,
திரும்பி பார்க்கிறாள்..
"இது முடிவல்ல.......ஆரம்பம்"
விடியாத இரவு...
அங்கே ஓர் நிலவு மட்டுமல்ல,
இரு நிலவு காட்சி கொள்கிறது....
சுற்றி இருக்கும் மரங்கள்
அவள் அழகில் கிசுகிசுக்கின்றன...
வவ்வால்கள் துள்ளி குதித்து றெக்கை
விரிகின்றன....
புதையுண்ட பிணங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்தாள் அவள் பேரழகில்...
யார் இவள்...?
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
அவள் கதை சொல்கின்றன...
இருந்தும் அவள் பார்வை மட்டும்,
அந்த மாளிகையை விட்டு அகலவில்லை...
அவள் வருகையை கண்ட அந்த மாளிகையின் கதவுகள் தானாகவே திறக்கிறன...
இருள் சூழ்ந்த அந்த அறையில்....
நிலவொளியில் அவள் நிழல் மட்டுமே
அவளுக்குத் துணையாக.....யார் இவள்?
அவள் இதழின் ஓரம் சிறு புன்னகை மலர்கின்றது...
எங்கையோ எப்பவோ கேட்ட ஓர் இசை...
அந்த இசை ஒலிக்கும் திசையை நோக்கி
விரைந்தது அவள் கால்கள்...
அறையின் கதவு தானாகவே திறக்க..
காத்திருந்தது பேரதிர்ச்சி....
அவள் கண்களையே அவளால்
நம்ப முடியவில்லை...
அருகில் சென்றாள்... வினா
எழுப்பினாள்...
கின்னரப்பெட்டியிலிருந்து
(piano) ஒலித்த அந்த
இசையை மீட்டியது நீயா? யார் நீ?
உனக்கு உனக்கு எப்படி தெரியும் இந்த இசை? யார் நீ.....? என்று வினா எழுப்பிக்
கொண்டே அந்த முகத்தை பார்க்க
முயல்கிறாள்...
மீண்டும் மீண்டும் பார்க்க முயல்கிறாள்..
இருந்தும் பலனில்லை...
சற்று அமைதிகொண்டாள்...
மயான அமைதியில்
ஓர் கம்பீர குரல் ஒலித்தது...
"இங்க என்ன பண்ற?
"எதுக்கு இங்க வந்த?
"செஞ்சதுலாம் போதாதா?
"யார் நீ யார் நீ என்று கதறுகிறாயே
நீ யார் என்று நான் சொல்லவா...?
சொல்லடி என் அழகு பெண்ணே..
நீ யார் என்று நான் சொல்லவா... ?
உன் வாழ்க்கை பக்கங்களில் நான்
எழுதப்படாத கதை....
இன்னும் சொல்ல போனால்
என் தலை எழுத்தை கிறுக்கியவள் நீ...
என்ன யோசிக்கிற?
உன்னை சுமந்த இந்த இதயத்தில்
இன்னும் கொஞ்சம் ஈரம் ஒட்டி கொண்டுதான் இருக்கிறது போ இங்கிருந்து.....
போயிறு...போயிறு...
ஆனா போகும் போது திரும்பி மட்டும் பார்க்காமல் போ,,,என்று
சொன்னது அந்த ஆன்மா...
அந்த மாளிகையை விட்டு பிரிய
மனமில்லாமல் அழுதபடி
அங்கிருந்து வெளியேறினாள்.....
ஒலித்த இசை...
பார்த்த உருவம்...
கேட்ட குரல்...
இவை யாவும் நிஜம் தானா என்று
யோசிக்க தொடங்கினாள்...
"ஒருமுறை அந்த மாளிகைய திரும்பி பார்க்கலாமா?..
இல்ல வேண்டாம்...
ஒருவேள பார்த்தா என்ன ஆகும்..?
பார்க்கலாமா...?
வேண்டாமா ...
பார்க்கலாமா...?
வேண்டாமா... ? இல்ல பார்க்கலாம்..
என்ன ஆனாலும் பரவால" என்று யோசித்த அவள்,,
இதயம் வேகமாக துடிக்க...
சற்று தயகத்தோடு,,,
திரும்பி பார்க்கிறாள்..
"இது முடிவல்ல.......ஆரம்பம்"