3
« on: September 19, 2024, 01:56:35 pm »
அம்மா பசிக்குது என்று நான் சொன்னால் அடுப்பாங்கரைக்கு வேகம் எடுக்கும் என் அம்மாவின் கால்கள் !
அதிர்ஷ்டம் என்னை விட்டு எட்டி நிற்கும் போதெல்லாம் நான் தலைசாய என் அருகே நின்றது
என் அம்மாவின் தோள்கள் !
என் கண்ணீர் துளிகள் மண்ணைத் தொடுமுன்னே என் கண்ணை
எட்டித்துடைக்கும் என் அம்மாவின் கைகள் !
நான் துவண்டு விழும் போது என்னை தாங்கி பிடிக்கும் என் அம்மாவின் மடி !
அன்று நான் அசையாமல் அப்படியே இருப்பது கண்டு நீ துடித்த உன் அலறல் சத்தம் கேட்டு நான் உயிர் கொண்டேன் அம்மா !
அன்று உன் கருவறையின் இருட்டிலும் கூட நீயே எனக்கு வெளிச்சமானாய் !
இன்று தனியறை வெளிச்சத்திலும் நீ இருண்டு இருக்கிறாயே !
எனக்காய் ஓடிய உன் கால்கள் இன்று ஓய்ந்து போகவே உன் கால்களாய் நானானேன் !
என் கண்ணீர் துடைத்த
உன் கைகள் இன்று தோய்ந்து போகவே உன் கைகளாய் நானானேன் !
என் தலை சாய்த்த உன் தோள்கள் இன்று துவண்டு போகவே உன் தோளோடு தோளாய் நானானேன் !
அன்று நீயே நானாக
இன்று நானே நீயாக !
நாளெல்லாம் நாமாக !
இங்கே ஓர் தாயுக்கும்
நான் தாயாக !
ஆம் !
தாய்க்கும் தயானேன்
என் சின்ன குழந்தை
உந்தன் சின்னத்தாயாய் நானானேன் !