4
« on: February 13, 2025, 01:09:34 pm »
காதலுக்கு கவிதை
"காதலித்துப் பார் முகத்தில் ஒளிவட்டம் தோன்றும்" என்று
கூறினார் கவிஞர் வைரமுத்து.
ஒளிவட்டம் இல்லாத முகத்திலும்கூட காதல் தோன்றும்
என்பது எனது கூற்று...
காதல் ஒருவகைப் போதை,
அது பேதையைப் பொறுத்து!
காதல் ஊடுருவாத மனமும் இல்லை,
காதலில் விழாத மனிதர்களும் குறைவு.
பள்ளிப் பருவத்தில் காதல்,
அனைத்துப் பெண்களும் அழகாகத் தெரியும்.
ஆனால் பொழுதுபோக்கான காதல் நீடிக்காது.
கல்லூரிகளின் காதல்,
நேரம் செலவிடும் கதைகள் பேசிடும்.
புதுப் பெண்கள் வந்தால்,
காதல் பழையதாகிவிடும்.
வேலையின் போது காதல்,
தனது பளுவை மறைக்க,
கவலை மறக்க நம்மை,
நாம் ஏமாற்றிக்கொள்வது.
இவை அனைத்தையும் கடந்து,
வருவதுதான் காதல்!!!
ஒரே மனமாகக் கலப்பது,
ஒரே உணர்வாக இருப்பது.
விட்டுக்கொடுக்காமல் வாழ்வது,
மனதில் ஒருவரை மட்டும் வைத்திருப்பது.
ஒரு சிலர் மட்டுமே இதைக் கடைபிடிப்பார்,
மற்றவர்களோ பொழுதுபோக்குக் காதலர்கள்.
மாறிவரும் சமுதாயம்,
மனிதரையும் மாற்றுகிறது.
காதலின் நினைவாகக் காட்டிய தாஜ்மஹாள் கூட,
தனது இரண்டாம் காதலிக்காகத் தானே!
காதல் நிரந்தரமானது,
ஆனால் மனிதனின் மனமோ நிரந்தரமில்லாதது.
காதலைக் கொலை செய்யாமல் காதல் செய்வோம்,
காதலை வாழவைப்போம்.
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐
நீல வானம்