Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Naveen

Pages: [1]
1


ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை -அரை பழம்

செய்முறை

1. அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.

6. அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.

7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.

8. மட்டன்அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

9. தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

10. பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும்.

11. சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

குறிப்பு

1. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி, (பிரட் ஹல்வா, தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, கேரட் ஹல்வா) ஏதேனும் ஒரு ஸ்வீட், எண்ணெய் கத்திரிக்காயுடன் சாப்பிடலாம்.

2. பிரியாணியை வடித்து தட்டியும் செய்யலாம், குக்கரிலும் செய்யலாம். லேயராக தம் போட்டும் செய்யலாம்.


Pages: [1]