Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Misty Sky

Pages: [1] 2 3 ... 5
1
"திரை தாண்டிய தேடல் நீயடி"
"திரையில் மலரும் என் காதலும் நீயடி"


"இரவின் மெல்லிய இருளில்,
என் கைப்பேசி ஒளிர்ந்திருக்க"
"இரவின் மடியில் உலகம் சாய்ந்திருக்க"
"என் கண்களில் உன் முகம் மட்டுமே நிறைந்திருக்க"
"என் கண் இமைகள் மூடாமல் உனக்காய் விழித்திருக்க"
"என் இதயமோ உன்னிடம் பேச துடித்திருக்க"
"உன்னிடமிருந்து எப்போது அழைப்பு வருமென என் மனம் தவித்திருக்க"
"நட்சத்திரங்கள் மின்னும் வானம் ஒருபுறம்"
"நம் நேசம் பேசும் திரை மறுபுறம்"

"இருள் சூழ்ந்த இரவினில் என்
இதயத்தில் உந்தன் நினைவு"
"அருகினில் நீ இல்லா நேரத்திலே இந்த மின்னணுத் திரை தான் நம் உறவு"
"சுவரோடு நான் சாய"
"திரையோடு நீ பேச"
"என் கையில் இருக்கும் சிறு மின்னணுத் திரையில் கண்ணாடிப் பிம்பமாய் உன் முகம் பார்க்கிறேன்"
"ஜன்னல் வழியே நிலவு நம்
சல்லாபத்தைக் கண்டு சிரிக்குதே"
"தனித்தனி அறையில் நாம் இருந்தாலும் நம் காதல் மட்டும் காற்றோடு இனிக்குதே"
"தனிமைச் சிறையில் நான் வாடினாலும், உன் குரல் கேட்கும் அந்தக் கணம் ஆனந்தமாகும்"
"சில நேரங்களில் நம் மௌனங்கள் கூட மொழியாகும்"
"இந்த நள்ளிரவு நமக்கொரு வழியாகும்"
"விடியும் வரை இந்த மின்மினி வெளிச்சம் நம் காதலைச் சொல்லும் ஒரு சாட்சியாகும்"

"நம் இருவரின் அறைகள் நடுவே பெரும் தூரங்கள்"
"ஆனாலும் குறையவில்லை நம் காதலின் ஈரங்கள்"
"மைல்கல் தூரத்தில் நாம் பிரிந்திருந்தாலும், காதலெனும் நூலில் நாம் பிணைந்திருக்கிறோம்"
"உன் புன்னகையின் சிரிப்பொலி கேட்டு என் இதயம் மகிழ்ந்திட"
"தூரம் என்பது இங்கே சுருங்கிப் போகிட"
மின்னணுத்திரைகள் கூட நமக்கு வரமாய் மாறிட"
"உன் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதையாய்"
"என் பார்வைகள் அதை ரசிக்கும் ஓவியமாய்"
"காலங்கள் கடந்து நின்றாலும் நம்
காதல் மட்டும் மாறாத காவியமாய்"

"பகலில் நடந்த சின்னச் சின்ன கதைகளும், ரகசியங்களும் ஒவ்வொன்றாய் நீ சொல்லச் சொல்ல அங்கே சந்தோஷ மழையில் நான் நனையத் தொடங்கினேன்"
"நீ அழகாய் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்தச் சத்தம், என் அறையின் தனிமையை அறவே விரட்டுதடி"
"காதலோடு கிண்டலும், கேலியும் நம் பேச்சில் கலந்திருக்க"
"நேரம் போவதே தெரியாமல் நாம் இருவரும் தூங்காமல் விழித்திருக்க"
"நம் உரையாடலில் என் நெஞ்சமோ சந்தோஷ வெள்ளத்தில் பொங்குதடி"
"சார்ஜ் குறைகிறது என நீ எச்சரிக்க"
"காதல் குறையவில்லையே என நான் வம்பு இழுக்க"
"மின்சாரக் கம்பிகள் வழியே பாயும் மின்னோட்டமாய், நம் மகிழ்ச்சி இருபுறமும் கரைபுரண்டு ஓடுதடி"

"இந்த நள்ளிரவு உரையாடல்கள் ஓயப்போவதில்லை தூக்கம் நம்மைத் தழுவும் வரை அல்ல"
"நம் காதல் உலகை ஆளும் வரை"
"நூறு ஜென்மம் எடுத்தாலும் நான் உன் மேல் வைத்த காதல் குறையாது"
"உன் முகம் பார்த்து நான் வாழ இந்த ஒரு யுகம் போதாது"
"விண்மீன்கள் உதிர்ந்து போனாலும், நம் விழி பார்த்த காதலின் ஒளி என்றும் மங்காது"
"சுவர்கள் மறைந்து, திரைகள் உடைந்து, நம் இருவரின் கரங்கள் கோர்க்கும் அந்த நிஜமான விடியலுக்காய் காத்திருக்கிறது என் உயிர்"
"நம் விரல்கள் கோர்க்கும் அந்தப் பொன்னாள் வரை, காலத்தின் ஒவ்வொரு நொடியும் உன் நினைவால் நிரம்பட்டும்"
"மின்னணுத் திரையின் எல்லைகள் தாண்டி, நம் காதல் அண்டத்தின் எல்லைகளைத் தேடிப் பறக்கட்டும்"

"நம் நள்ளிரவு உரையாடல்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை இருண்ட இரவில் ஒளிர்ந்த அணையாத காதல் தீபங்கள்"
"விடியலை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்"
"ஒவ்வொரு தடையும் நம் காதலின் பாதையில் தூசியாகட்டும்"
"இருள் விலகிச் செல்லட்டும்"
"புதிய விடியல் புலரட்டும்"
"நம் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்"
"நம் உறவு என்றும் பிரகாசமாகட்டும்"
"இணையம் இன்றி உலகம் இயங்காது என்பார்கள், உன் இணை இன்றி என் இதயம் இயங்காது"

"என் உலகம் உன்னைச் சார்ந்தே சுழல்கிறது"
"உன் வருகைக்காக இந்த இதயம் ஏங்குகிறது"
"உன் பிரிவின் வலி தாங்காமல் தவிக்கிறேன்"
"நம் காதலை நெஞ்சில் சுமந்து உனக்காய் காத்திருக்கிறேன்"
"சீக்கிரம் வந்துவிடு, ஒவ்வொரு நொடியும் விடியலாய் புலர"
"என் வாழ்வில் வசந்தம் மலர"
"நீ வருவாயென உனக்காய் காத்திருக்கிறேன்,
என் பிரியமானவளே,
என் அன்பிற்குரியவளே,
என் என்னவளே" 💜💜

சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் MISTY SKY 💜💜

2
"காலம் கடந்த பயணங்கள்"

"பிரிவின் வலி"
"விடைபெறும் ஆண்டில் தொலைத்தவை ஏராளம், கனவுகளும், களிப்புகளும் கரைந்தன கண்ணீரில்"
"சுமைகளோடு நகரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு சோகப் பதிவாய் மனதில் ஆறாத தழும்பாய்"
"என் வாழ்க்கையெனும் பயணத்தில் விடைபெறும் தருணத்தில் நான் ஒரு விழும்பாய்"

"நேற்று முளைத்த செடியல்ல என் வலிகளும், வேதனைகளும், பல ஆண்டுகளாய் வேரூன்றி நிற்கும் ஆலமரம்"
"காலங்கள் ஓடினாலும், காயங்கள் ஆறவில்லை"
"என் கண்ணீரைத் துடைக்க இங்கே கைகளும் இல்லை"
"என் விழிகள் வலியோடு விழித்திருந்த இரவுகள் ஆயிரம்"
"என் மனம் மௌனமாய் கதறி அழுத தருணங்கள் ஏராளம்"
"என் இளமைப் பருவம் இன்பத்தில் கழியவில்லை"
"என் மனதிலிருக்கும் பாரங்கள் இன்றும் அழியவில்லை"
"வலிகளைச் சுமந்தே என் முதுகெலும்பு தேய்ந்தது"

"நிழல் கூடத் துணையின்றி விலகிப் போனதுண்டு"
"நிஜங்கள் சுட்டெரிக்கத் தனிமையில் தவித்ததுண்டு"
"ஏன் எனக்கு இந்தச் சோதனையென்று இறைவனிடம் நான் சண்டையிட்ட நாட்களுமுண்டு"
"தனிமை எனும் கொடுமையில் வலிகளோடு தவித்த பத்தாண்டுகள்,
விதி செய்த சதியில் தொலைந்த என் கனவுகள்"
"என் அம்மாவின் அன்பும், பாசமும் இன்றும் பொக்கிஷமாய் அழியாத நினைவுகள்"

"என் இதயத்தின் ஓரம் வடியும் குருதிக்கு, இன்னமும் மருந்து சொல்ல ஒருவருமே இல்லை"
"போராடிச் சலித்த என் உடலோ இன்று நிரந்தரமாக ஓய்வெடுக்கக் கேட்கின்றது"
"ஆனால், வாழ்க்கை என்னை இன்னும் ஒரு புதிய போருக்கு அழைக்கின்றது"


"விளிம்பில் புதியதோர் பயணம்"

"பத்து ஆண்டு கால இருட்டு,
என் பகலையும் விழுங்கி நின்றது"
"தனிமையின் கோரப் பற்கள்,
என் சதையைத் துளைத்துத் தின்றது"
"கடந்து வந்த கசப்புகள் எல்லாம்
என் சிறகுகளுக்கு உரமாகும்"
"என் வாழ்க்கையெனும் நீண்ட நெடுஞ்சாலையில் இன்னும் பல சவால்களோடு, வலிகளைச் சுமந்த பாரத்தோடு நடக்கிறேன்"
"நேற்றைய நினைவுகள் நிழலாய் என்னைத் தொடர"
"நாளைய விடியலை விளிம்பில் நின்று பார்க்கிறேன்"

"கடந்த கால வலிகள் கண்ணீராய் வழிகின்றது"
"முட்கள் நிறைந்த பாதையில் கால்கள் வலிக்கின்றது"
"சோகங்கள் என்னைச் சூழ்ந்த போதும், என் வைராக்கியம் மட்டும் இன்னும் தளரவில்லை"
"விடைபெறும் தருணம் இதுவல்ல என்கிற நம்பிக்கையோடும்,
இது என் துயரங்கள் விடைபெறும் உன்னதத் தருணம் என்கிற புது விடியலோடும் பயணிக்கிறேன்"
"பத்தாண்டுகள் அழுத என் கண்கள் என்றாவது ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும்"
"பயணத்தின் விளிம்பில் என் வாழ்க்கையெனும் ஓட்டத்தில் ஓர் புதிய ஒளி பிறக்கட்டும்"

"விழுந்த இடமெல்லாம் நான் புதைந்து போகவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறேன் ஓர் புதிய விருட்சமாய்"
"நான் விளிம்பில் நிற்பது வீழ்வதற்கு அல்ல, வானத்தைத் தொடும் உயரத்தில் பாய்வதற்கு"
"என் பயணத்தின் அடுத்த அடியில்
ஒரு விளிம்பு தெரிகிறது,
"யாரோ சொல்கிறார்கள் நான் வீழப்போகிறேன் என்று....
"ஆனால் என் இதயம் சொல்கிறது இது வீழ்ச்சியல்ல என்று...."
"ஒவ்வொரு வலிகளும், வீழ்ச்சியும் எனக்கு புதிய தொடக்கத்தின் வாசலாகும்"
"ஆயிரம் முறை வீழ்ந்தாலும்,
ஆயிரம் முறை எழுவேன்"
"வானத்தைத் தொடும் உயரம் வரை,
என் பயணத்தைத் தொடர்ந்திடுவேன்"

"அப்படியே ஒருவேளை நான் வீழ்ந்தாலும் நான் மடிவதில்லை, விதைகளாக முளைப்பேன்"
"என்னை அழுத்திய மண்,
என் வேர்களுக்கு உரமாகும்"
"அப்படியே நான் வீழ்ந்தாலும்,
எனக்குப் பயமில்லை"
"ஏனெனில், இங்கே மண்ணில் நான் இறந்தாலும், வானில் நிரந்தரமாக என் அம்மாவின் காலடியில் இருந்திடுவேன்"
"அவளின் மடியில் மீண்டும் பிறப்பெடுப்பேன்"
"கருவறையின் கதகதப்பை மீண்டும் உணர்ந்திடுவேன்"
"அவளின் நிபந்தனையற்ற அன்பில்,
முடிவற்ற அமைதியையும், நிம்மதியையும் அடைந்திடுவேன்"
"அவளின் அரவணைப்பில் மீண்டும் குழந்தையாவேன்"
"சொர்க்கத்தை விட மேலான
அம்மாவின் உலகில் நான் ஐக்கியமாவேன்"
"என் இறுதிப் பெருமூச்சு,
அவள் காலடியிலேயே கலக்கும்"
"என் ஒவ்வொரு மூச்சிலும் அவளின் நினைவே"
"என் இறுதிப் பயணமும் அவளிடமே"

"வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் MISTY SKY 💜💜


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026 😇😇🕊️🕊️

4
"இருண்ட இரவின் மௌனக் குரல்"
"மூடுபனி படர்ந்த பாதையில்,
நிலவொளி தவழும் மயானத்தில்,
நிசப்தம் சூழ்ந்த இரவில்,
கல்லறைகள் வரிசை கட்டி நிற்க,
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"
காலம் உறைந்ததோர் தோற்றமங்கே"

"இருண்ட வானில் வெள்ளித் தட்டுபோல் முழுமதி ஒளிர்ந்திடுதே"
"வானில் கருமை படர்ந்த இருளில் முழு நிலவின் இடையே மேகக் கூட்டங்கள் மெல்ல மெல்ல நகர்ந்திடுதே"
"வானில் வட்டமிடும் வௌவால்கள்"
"வெளவால்களின் சிறகசைக்கும் சத்தம் இரவின் அமைதியை கிழித்திடுதே"
"கல்வெட்டுக்கள் சொல்லும் கதைகள்
காலம் கடந்தும் வாழ்ந்திடுதே"
"அடர்ந்த மரங்களின் கிளைகளும் நிழலில் ஆடுகிறதே"
"பழைய தேவாலயத்தின் கோபுரம்,
கோதிக் கட்டிடக் கலையின் பெருமை
அழிந்த காலத்தின் மர்மமாய் உயர்ந்து நிற்கிறதே"
"கண்களில் மர்மம் மிளிர்ந்திடுதே"
"தனிமையில் அமானுஷ்ய குரல் கேட்கிறதே"
"இதயத்தில் ஓர் அச்சம் பரவுகிறதே"
"இருளின் ஆழத்தில் மறைந்திருக்கும், அறியாத ரகசியங்கள் என்னவோ??"

"கல்லறைக் கற்களின் மீது காலத்தின் சுவடுகள் பதிந்திருக்க"
"கல்லறைத் தோட்டத்தின் நிசப்தத்தில் மரணத்தின் மௌனம் பரவியிருக்க"
"மறைந்த உயிர்களின் கதைகள்
பெருங்கூச்சலாய் காற்றில் ஒலித்திருக்க"
"வெண்புடவை உடுத்திய ஓரு உருவம்
மெல்ல மெல்ல அசைந்து நடக்க"
"நிழல் போல மிதக்கும் அந்த உருவத்தை பார்ப்பவர் நெஞ்சில் ஒரு அச்சம் விதைக்க"
"அந்த அச்சத்தால் மனதிற்குள் ஒரு பதட்டம் முளைக்க"
"அடர்ந்த மரங்கள் கிளைகளை விரித்து மரணத்தின் தழுவலைக் காட்டுமங்கே"
"எந்த சோகத்தின் விளைவோ இது??"
"எந்த உயிரின் துயரமோ அது??"


"ஓலமாய் கதறி அழும் ஆன்மா"
"மூடுபனி மெல்லியதாக தவழும் இரவில், ஒரு மெல்லிய சலசலப்புடன் அது மிதக்கிறதோ??"
"வாழ்வின் ஒளியை இழந்த நொடியில், யாருமின்றி அது வெறுமையில் அலைகிறதோ??"
"உடல் அது மண்ணில் புதைந்தாலும்,
உயிர் அது காற்றினில் கலந்தாலும்,
அந்த ஆன்மா நிம்மதி இல்லாமல், கண்ணீர்த் துளிகளோடு காற்றோடு காற்றாக இந்தத் தனிமையில் அது எதையோ தேடுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் ஆசைகளும், கனவுகளும் இந்தக் கல்லறைக்குள்லேயே அது புதைந்ததோ??"
"அந்த ஆன்மாவின் நிறைவேறா ஏக்கங்கள் கடந்த கால நினைவுகளில் மோதி அது அழுகிறதோ??"
"அந்த ஆன்மாவின் பாசங்களும், சொந்தங்களும், பந்தங்களும் அனைத்தும் பறிபோனதோ??"

"அந்த ஆன்மாவின் கல்லறைக் கல்லும் பேசாத மௌனம், அதன் கதையின் மீதியைச் சொல்லாமல் போனதே"
"அன்பு, பாசம், காதல் அனைத்தும் வெறும் தூசி படர்ந்த நினைவுகளாய் மாறிப் போனதே"
"இன்று இந்த இருண்ட உலகினில்
அந்த ஆன்மா ஒரு சாபமாய் அலைகிறதே"
"பிரிவின் வலி ஒரு கடலெனப் பெருக,
அதன் ஆழத்தில், பெரும் சோகத்தில் அந்த ஆன்மா  மூழ்குகிறதே"

"அவளின் இதயமும் துடித்தது ஒரு காலத்தில் அன்பிற்காக, பாசத்திற்காக ஏங்கியது"
"இன்று அது வெறும் வெற்றிடம்,
வலியும் வேதனையும் மட்டுமே மிஞ்சியது"
"ஒரு காலத்தில் அவளும் பூமியில் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தவள்
சிரித்தாள், பேசினாள், காதலும் கொண்டாள்"
"பல கனவுகளுடன் ஒரு பெண்ணாக இருந்தவள்"
"இன்று அவளின் உடல் மண்ணோடு மறைய, நினைவுகளின் சுமையோடு அலைகிறாள்"
"வெண்மையான ஆடை அவளின் அடையாளம்"
"இங்கே அவளின் அழுகையின் துயரத்தைக் கேட்கவும் யாருமில்லை"
"இங்கே அவளிற்கு ஆறுதல் சொல்லவும் யாருமில்லை"
"மின்மினிப் பூச்சியாய் அவளின் ஆசைகள், இருளில் ஒரு வெளிச்சம் தேடுகின்றன"
"ஆனால் அவளின் பாதையோ இருளிலேயே தொடர்கின்றன"
"அவளின் உறவுகளைத் தேடி அவளின் ஆன்மா அலைகிறது"
"ஒருமுறை அவர்களைத் கட்டித் தழுவ வேண்டுமென்று"
"ஒருமுறை பாசத்தை மீண்டும் உணர வேண்டுமென்று"

"இது கடவுள் எழுதி வைத்த விதியோ,
அல்லது இது சூழ்ச்சியால் நேர்ந்த சதியோ"
"இந்தக் கல்லறைத் தோட்டம் அவளின் வீடு, மௌனம் அவளின் மொழி, தனிமை அவளின் துணை"
"அமைதி தேடி அலைகிறாள், விடியலின் ஒளியில் கரைந்திட,
இந்த இருளின் பிடியிலிருந்து விடுபட"
"வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் மரணத்தின் அழியாத சாம்ராஜ்யம், ஒரு துளி கண்ணீருடன் அவளின் மனம் இங்கே அமைதி தேடுகிறதே"

"அவள் ஒரு இறந்த ஆன்மா,
வாழ்வும், மரணமும் அவளின் கதை,
முடிவற்ற இந்தத் தேடலில் அவளின் ஆன்மா சாந்தியை தேடுகிறது"
"இதயத்தில் ஓர் நடுக்கம் பிறக்க,
நினைவுகளின் சுவடுகளைத் தேடும்,
ஓர் ஆன்மாவின் தவிப்பு இதுவோ??"
"மீண்டும் ஒரு நாள் மறுஜென்மம் பெறுவாளோ??"
"அல்லது முடிவில்லா இந்தப் பயணத்தில் இப்படியே மீட்சி தேடி அலைவாளோ??"
"இந்த உலகமே ஒரு நாடக மேடை,
அதில் அவளொரு வேதனையான ஓவியமாய்"
"அவளின் கதை கண்ணீரில் எழுதப்பட்டது, முடிவே இல்லாத ஒரு சோகத்தின் காவியமாய்"

"வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் அன்பிற்குரியவன் MISTY SKY 💜💜

6
"உடைந்த என் இதயம் பேசுகிறேன்"
"கண்ணீரில் கரைகிறேன், கவிதையில் வாழ்கிறேன்,
உடைந்த என் இதயத்தின் வலியை
உரைக்கிறேன்"

"வானவில்லின் வர்ணங்களெல்லாம் கரைந்து போன அந்தக் கணம்,
வசந்த காலத்தின் பசுமையெல்லாம் கருகிச் சாம்பலான அந்தக் கணம்,
என் இதயமெனும் கூட்டில் நான் கட்டியிருந்த வண்ணக் கூடுகள் இடிந்து போன அந்தக் கணம்"

"என் உடைந்த இதயம்,
ஓயாத வலி,
கல்லால் எறிந்தாய்,
சின்னா பின்னமாய்,
வலியில் துடித்தேன்"
"உன் நினைவுகள் மட்டும்,
நீங்காத பொக்கிஷம்,
என் பேசாத மௌனம்,
என் கண்ணீரின் ஈரம்,
என் மனதின் பாரம்"

"நிழலாக நீயும் என் நினைவில் வாழ்கிறாய்,
மறக்க நினைத்தும் என் மனம் கேட்கவில்லை,
காலத்தின் கைகள் ஆறுதல் தரவில்லை"
"என் கண்ணீரின் சுவடுகள் காய்ந்திடவில்லை,
உன் நினைவில்லாமல் ஒரு பொழுதுமில்லை"
"உன் நினைவுகள் நிழலாய் என்னைப் பின் தொடர்கின்றன,
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் அது உன் பெயரை உச்சரிக்கின்றன"

"இரவுகள் நீள்கின்றன,
ஏனோ என் கண்கள் உன்னையே தேடி அலைகின்றன"
"தனிமையின் தாலாட்டில் என் இதயம் உறங்க மறுக்கிறது,
உன் நினைவுகளின் சுழலில் என் இதயம் சிக்கித் தவிக்கிறது"
"என் உயிர் மூச்சிலும்,
என் இதயத் துடிப்பிலும்,
உன் ஞாபகம் நிறைந்திருக்கிறது"
"கண்களில் கண்ணீர், நதியாய் பெருகி என் கன்னங்களில் வழிகிறது,
உடைந்த இதயத்தின் ஓலமாய் என் கண்ணீர் துளிகள் அது மண்ணில் விழுகிறது"

"என் ஒவ்வொரு கண்ணீரின் துளியிலும் ஆயிரமாயிரம் ஏக்கங்கள்,
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் எண்ணிலடங்கா சோகங்கள்"
"காலங்கள் கரைந்தாலும் என் இதயத்திலுள்ள உன் நினைவுகள் அழிவதில்லை,
என் விழிகளுக்குள் சிறைப்பட்ட உன் அழகிய பிம்பம் மங்குவதில்லை"
"நீ என்னை விட்டுப் பிரிந்த போதும், என் இதயம் உன்னைத் தேடும்,
ஒரு ஜென்மம் முழுவதும் இந்த ஏக்கத்தில் என் இதயம் வாடும்"
"இழந்ததை நினைத்து அழுவதில் பயனில்லை என்று என் மனம் சொல்கிறது,
ஆனால், என் இதயமோ அதை ஏற்க மறுக்கிறது"
"நீ இல்லாத வாழ்க்கை ஒரு வெறுமையான பாலைவனம்,
எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை உன் அன்பின் சோலைவனம்"
"ஒருவேளை காலம் மருந்தாகலாம், அல்லது அதுவும் பொய்யாகலாம்"
"காலம் அது ஆறாத ரணமாய் மாறலாம்,
அல்லது மறந்த நினைவாய் கரையலாம்"
"ஆனால், என் நினைவுகளின் ஆழம் மாறாது,
என் உடைந்த இதயத்தின் கதை மறையாது"


"மீண்டெழும் என் ஆன்மா"
"நம்பிக்கையின் ஒளிக்கீற்று,
மௌனத்தின் மொழியில் மனம் பேசிற்று"
"கவிழ்ந்த வானம் ஒருநாள் நிமிரலாம்,
காய்ந்த நிலம் ஒருநாள் துளிர்க்கலாம்"
"இருளின் ஆழத்திலும் ஒரு சிறு ஒளிக்கீற்று தெரிகிறது,
என் உடைந்த இதயத்திலும் ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர்கிறது"
"எரிந்த சாம்பலிலிருந்து எழுந்த பீனிக்ஸ் பறவையைப் போல்,
என் இதயமும் ஒருநாள் உயிர் பெறும்"
"என் வலிகள் நிரந்தரமில்லை,
கண்ணீர் மட்டும் என் அடையாளமில்லை"

"என் கண்ணீரின் கசப்பு காய்ந்திடலாம் மெல்ல மெல்ல"
"என் இதழில் புன்னகை துளிர்க்கலாம் மெல்ல மெல்ல"
"எனக்குள் மீண்டும் ஒரு காதல் வரலாம்,
காதல் புதிய ரூபம் எடுக்கலாம்,
என் சோகக் கண்ணீரின் நதி ஒருநாள் வறண்டு போகலாம்,
என் நெஞ்சில் புதிய சந்தோஷ நீரூற்றுகள் சுரக்கலாம்,
அல்லது நான் நானாக மலரலாம்,
என் உடைந்த இதயத்தை நானே மெல்ல மெல்லச் சீராக்கலாம்,
புதிய வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுகோலாக இருக்கலாம்"
"காலம் பதில் சொல்லும்,
உடைந்த என் இதயம் ஒருநாள் முழுமையாகலாம்"

"புது வசந்தத்தின் மெல்லிய அசைவு,
அறியாத ஒரு திசையிலிருந்து, மெல்லியதாய் ஒரு தென்றல்,
அது உன் வருகையின் முதல் அறிவிப்பாய் உணர்கிறேன்"
"வறண்ட என் வாழ்வில் பெய்த ஒரு மழைத்துளி,
அது என் நெஞ்சில் அழகிய பூவாய் மலரும்,
நம்பிக்கையின் நாற்று ஒன்று என் வாழ்வில் துளிரும்"
"நான் இழந்த நம்பிக்கைகள் மீண்டும் துளிர்விட,
உன் நம்பக வார்த்தைகள் எனக்கு உயிரூட்டிட"
"உன் பார்வை என் பழைய வலிகளைத் துடைத்தது,
உன் குரல் என் சோக ராகத்தை மாற்றியது,
உன் பாசத்தின் அரவணைப்பில் எனக்குள் காதல் மலர்ந்தது,
உன் அன்பின் ஒளியில் என் உலகம் ஒளிர்ந்தது,
உன் கரத்தின் அணைப்பில் யாவும் நிறைந்தது,
உடைந்த என் இதயம் மெல்ல மெல்ல ஒன்றானது"
"என் இதயத்தில் புதிய வசந்தத்தின் பூக்கள் பூத்தன,
நம்பிக்கையின் வழியில் என் இதயம் மீண்டும் உயிர் பெற்றன"

"நம்பிக்கை ஒருபோதும் இறப்பதில்லை நான் உனக்காக முழுமையாய் வாழ்கிறேன்,
உன் அன்பின் அணைப்பில் முழு பாதுகாப்பாய் உணர்கிறேன்"
"ஆம், மீண்டும் ஒருமுறை காதல் என் இதயத்தை வாழ்த்தியது,
உன் வடிவத்தில் எனக்கு ஒரு புதிய விடியலைத் தந்தது,
உன் அன்பு என் ஆன்மாவை முழுமையாக்கியது"
"உடைந்த நான், இப்போது ஒரு புதிய படைப்பு,
பயணம் தொடரும், உன் கையோடு கை கோர்த்து,
காதல் தீராது, காலம் கடந்து நிற்கும்"
"காயம் காய்ந்த இதயம் இப்போது பாடுகிறது,
நம் காதலின் மகிமையை, உலகறியப் பாடுகிறது"
"காதல் மிகவும் மென்மையானது"
"காதல் மிகவும் மென்மையானது"

"நம்பிக்கையோடு என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் அன்பிற்குரியவன் MISTY SKY 💜💜

7
"போர் - ஈரெழுத்தில் கோரமான ஒரு சொல்"
"போர், போர் என்பது வெறும் ஈரெழுத்து சொற்கள் அல்ல, அது ஆயிரமாயிரம் குடும்பங்களின் இதயத்தை துளைத்து,
அவர்களின் சந்தோஷத்தையும், எதிர்காலத்தையும் சிதைத்து, பல அப்பாவி உயிர்களை விழுங்கும் ஒரு கோர நிகழ்வு"
"போரின் கொடிய கோரப்பிடியில் சிக்கி உயிர் நீத்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி உயிர்களுக்கு என் மனதின் கனத்த வலியின் சுமையோடு இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்"

"யுகம் யுகமாய் போர், யுத்தத்தின் நிழல் நீள்கிறது"
"குருதியில் கண்ணீரின் துளிகள் வழிகிறது"
"குருதி தோய்ந்த மண்
கதறி அழும் வானம்
வெட்டுண்ட உடல்கள்
சாம்பலான கனவுகள்"

"போர் என்றால் இழப்பு,
அப்பாவி மனித உயிர்களைப் பறிக்கும் கொடிய பிடிப்பு"
"போர் வன்முறையின் உச்சம்,
குருதி தெறிக்கும் யுத்தம்,
பல உயிர்களை விழுங்கும் அச்சம்"
"காலம் கரைந்த போர், மக்களின் கதறல் ஓலம்,
"அன்பான கரங்கள் துண்டான கோலம்"

"போர்க்களம் இரக்கமும், கருணையும் இல்லாத ஒரு மனசாட்சியற்ற கொலைகளம்"
"அங்கே எத்தனை உயிர்களின் பலி,
" அங்கே எத்தனை குடும்பங்களின் சிதைவு"
"அமைதி தொலைந்தது அங்கே
போரின் கூச்சல் மட்டும் அங்கே
இதில் மக்களின் அமைதி நிலை எங்கே?"
"அமைதியின் கீதம், போர் முரசின் ஒலியில் மறைந்தது"
"அன்பின் மொழிகள், ஆயுதங்களின் இரைச்சலில் அழிந்தது"

"சரித்திரப் பக்கங்கள், செங்குருதி கதைகள் பேசும்"
"செங்குருதி ஆறுகளும்,
செதுக்கிய வேதனைச் சாலைகளும்"
"தலைமுறை தலைமுறையாய் தொடரும் சாபத்தின் நிழல்,
"நீண்ட போரின் வடு, நெஞ்சில் ஆறாத காயம்,
"தலைமுறை தாண்டியும், தொடரும் துயர மாயம்"
"மண்மேல் விழுந்த குருதி துளிகள் விண்ணை எட்டும் கண்ணீர் துளிகள்"
"குருதி தோய்ந்த போர்க்களத்தின் காட்சி இது,
"மனிதாபிமானம் தொலைந்த கொடுமையின் சாட்சி இது"

"வெடித்த குண்டுகளின் பேரிரைச்சல் காதைப் பிளக்கிறது,
"அன்னையின் அலறலும், சேயின் அழுகையும் மனதை உலுக்குகிறது"
"வெடித்த குண்டுகளின் தீயில் கருகும் தேகம்,
"துண்டான அங்கங்கள், மரணத்தின் கோர வேகம்"
"வெடித்த குண்டுகளின் ஓசை ஓய்ந்தாலும், அழுகையின் எதிரொலி மட்டும் ஓயவில்லை"

"எரிந்த நிலங்களும், இடிந்த வீடுகளும் சாட்சி,
"மௌனத்தின் மொழியில், மரணத்தின் ஓலம் காட்சி"
"கிராமங்களும், வயல்வெளிகளும் எரிந்தன"
"நகரங்களும், கோட்டைகளும் சரிந்தன"
"பல உயிர்கள் மண்ணுக்குள் புதைந்தன"
"வாழ்வுகள் தொலைந்தன"
"கனவுகள் அழிந்தன"
"மனிதனின் வாழ்க்கை இருளில் சிதைந்தன"
"அன்னையின் மடியில் உயிர்கள் உதிர்ந்தன"
"இதயத்தின் ஆழத்தில் ஆறாத ரணங்கள் எழுந்தன"
"தந்தையின் மனதில் தாங்காத துயரத்தின் வலி"
"குழந்தைகளின் கண்களில் மரணத்தின் பயம்,
"குழந்தைகளின் கண்கள், கேள்விகள் கேட்கின்றன,
"ஏன் இந்த போர்? ஏன் இந்த அழிவு?என்றே கேட்கின்றன"
"குழந்தைகளின் விழிகளில், கேள்விக்குறிகளின் கூட்டம்,
எப்போது முடியும் இந்த ஓட்டம்?"
"குழந்தைகளின் விழிகள், தொலைந்த சிரிப்பைத் தேடும்"
"அன்னையின் கரங்கள், அணைக்க யாருமின்றி வாடும்"
"தந்தையின் மனதில், தாங்க முடியாத பாரம்"
"எதிர்காலக் கனவுகள், உடைந்த கண்ணாடிச் சாரம்"
"கோட்டைகள் மாறலாம், கொடும் வலி மாறாது"
"தாயின் கண்ணீரும், தந்தையின் சாபமும் தீராது"

"எப்போது இந்த வேதனை தீரும்?"
"எப்போது கருணையின் கரம் நீளும்?"
"இந்தக் கோரமான கோலம் என்றும் மாறாதா?"
"அன்பும் கருணையும் மீண்டும் துளிர்க்காதா?"
"போரின் வெறி அடங்கி அமைதி நிலவுமா?"
"துண்டான கரங்கள் மீண்டும் இணையுமா?"
"குருதி தோய்ந்த பூமியில் அமைதி மலருமா?"
"வெறுப்பின் சுவர்கள் இடிந்து விழுமா?"
"அன்பின் கரம் கோர்க்கும் காலம் வருமா?"

"தலைமுறைகள் கடந்தும், தழும்புகள் ஆறவில்லை"
"போரின் பேய் நிழல், பூமியை விட்டு அகலவில்லை"
"எரிந்த சாம்பல் மேடுகளும்,
சரிந்த கோட்டைகளும் என்றும் மறப்பதில்லை"
"இன்னும் கேட்கிறது, இதயத்தின் ஆழத்தில் ஒரு குரல்,
"அமைதி வேண்டும், அன்பின் அரவணைப்பில் ஒரு புது விடியல் வேண்டும்"
"ஆனாலும், அன்பெனும் ஒரு தீபம், அணையாமல் எரிகிறது"
"அமைதியின் நம்பிக்கை இதயத்தில் துடிக்கிறது"
"அமைதிக்கான ஏக்கம், இதயத்தில் ஆழமாய்ப் பாய்கிறது"
"நம்பிக்கையெனும் ஒரு மெல்லிய கீற்று, இருளில் ஒளிரும்"
"அமைதிக்கான ஒரு மெல்லிய ஆசை, நெஞ்சில் துளிரும்"
"ஒரு புதிய விடியல், அன்பின் கதிர்களுடன் வரும்,
"அன்பின் கரங்கள் நீட்டுவோம்"
"புதிய உலகை அன்பால் படைப்போம்"
"குருதி தோய்ந்த பூமியைத் துடைப்போம்"
"கண்ணீரைத் துடைத்து புன்னகை பூப்போம்"

"போரின் சூழல் உடையட்டும், சமாதானம் மலரட்டும்"
"சமாதானத்தின் வெள்ளைக்கொடி பறக்கட்டும்"
"வெறுப்பின் கார்மேகம் விலகட்டும்"
"மனிதநேயம் வெல்லட்டும், மனங்கள் மாறட்டும்"
"அன்பின் கரம் நீளட்டும், வெறுப்பின் சுவர் உடையட்டும்"
"அன்பும், கருணையும் உலகை ஆளட்டும்"
"போரின் கொடுமை ஒரு கனவாக மாறட்டும்"
"நீண்ட போரின் வடு, மெல்ல மெல்ல மறையட்டும்"
"யுகம் யுகமாய் அமைதி, பூமியில் தங்கட்டும்"
"அமைதியின் கீதம் ஒலிக்கட்டும், புதிய விடியல் பிறக்கட்டும்"
"அமைதியின் ராகம் இசைகட்டும், உடைந்த மனதை இணைக்கட்டும்"
"மனிதனின் மனதில் சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும்"
"இறந்தவர்களின் நினைவில் கண்ணீர் துடைப்போம்"
"அன்பால் அமைதியான புது உலகை உருவாக்குவோம்"

"உலகெங்கிலும் போர்கள் ஒழிந்தட வேண்டும்"
"மனிதகுலம் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட வேண்டும்"
"அன்பும், கருணையும் உலகெங்கும் ஒளிர்ந்திட வேண்டும்"
"புதியதாய் ஒரு புது விடியல் பிறந்திட வேண்டும்"

"நம்பிக்கையோடு என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு
உங்கள் MISTY SKY 💙💙

8
"நிலவொளி காவியம்
வானத்தின் நடுவே நீயொரு ஓவியம்"
"நிலா இரவின் மடியில் ஒளிரும் முத்து,
வான்வெளியில் நீ ஒரு அழகிய சொத்து"
"நிலா இரவின் ராணி நீயே,
வான்வெளியில் ஒளிரும் பேரழகே!!!
இருள் சூழ்ந்த இரவில் ஒளி தரும் தேவதையே!!!
குளிர்ந்த உன் ஒளி வீசும் அழகிய வேளையிலே,
மனம் அமைதி கொள்ளும் பொன் மாலையிலே!!!
"வெண்ணிலவே, உன் அமைதியின் ஒளியில்,
உலகம் உறங்கும் அமைதியின் வழியில்"

"நிலா பௌர்ணமி இரவில் உன் முழு வடிவம்,
அழகின் உச்சம், அது அமைதியின் பிம்பம்!!!
பௌர்ணமி இரவில் உன் முழு ஒளி வீசும்,
உன் ஒளியில் நான் கண்ட கனவுகள் அனைத்தும் எழ,
உன் அழகில் நான் தொலைத்த என் கவலைகள் பல"

"நிலா என் தனிமைக்கு அழகு சேர்க்கும் ஒற்றை அழகு நிலா"
"நிலா மின்சாரம் இல்லா வானில் இரவில் என் தனிமையைப் போக்க எனக்குத் துணையாய், ஒளி விளக்காய் வந்த ஒற்றை அழகு நிலா"

"நிலா நிழல் விரிக்கும் இரவினிலே,
வான்வெளியில் ஒளி வீசுடும் என்
வெண்ணிலவே"
"நீயே என் தனிமையின் தோழியே"
"நீயே என் தனிமையின் தோழியே"

"நிலா அமைதியின் அழகிய வடிவம் நீ!!!
கடல் அலைகள் உன் ஒளியில் நடனமாட,
மரங்கள் உன் நிழலில் உறங்க,
பறவைகளும் உன் ஒளியில் கூடு திரும்ப,
பூக்களும் உன் ஒளியில் புன்னகை விரிய,
குழந்தைகளின் கனவில் நீ மிதக்க,
காதலர்களின் இதயத்தில் காதல் மலர,
காதலர்களின் இதயத்தில் நீ கவிதை ஒளியாய் ஒளிர்கிறாய்
காதலர்களின் இதயத்தில் நீ கவிதை ஒளியாய் ஒளிர்கிறாய்"

"நிலா உன் குளிர்ந்த கதிர்கள் என் மனதை அமைதிப்படுத்த,
உன் மென்மையும், வெண்மையும் என் தனிமையின் துயரத்தை மறக்கச் செய்ய,
நிலா உன் மென்மையின் ஒளி பட்டால் என் மனமும் அடையுமே அமைதி,
உன் வெண்மையின் ஒளி கண்டால் என் கண்களுக்குக் கிடைக்குமே வெகுமதி!!!
உன் அழகில் என் எண்ணங்கள் உன்னில் கரைந்து போக,
உன் அழகிய தோற்றம் என் மனதை ஈர்க்க,
உன் அமைதியான ஒளி என் மனதை ஆட்கொள்ள!!!
நீ மட்டும் போதும் இந்த இரவில்
என் தனிமைக்கு நீ துணை நிற்க
என் தனிமைக்கு நீ துணை நிற்க"

"நிலா வானத்தில் என்றும் நீ ஒரு வரைந்த ஓவியமாய் இருக்க,
என் மனதில் என்றும் நீ ஒரு ஒன்றைக் காவியமாய் நிற்க,
காலம் கடந்தும் என்றும் நீ ஒரு மாறாத அதிசயமாய் உன்னைப் பார்க்க,
வெண்ணிலவே, உன் அழகு என்றும் நிலைக்கும்,
வெண்ணிலவே, உன் அழகிலே என்
மனம் மயங்கி நின்றேனே!!!
"என் இதயத்தில் நீ என்றும் ஒளிர்வாய்"
"என் இதயத்தில் நீ என்றும் ஒளிர்வாய்"

"நிலா வானில் நீ மறைந்தாலும், உன் நினைவுகள் மறையாது,
என் காதல் உன்னில் என்றும் குறையாது!!!
உன் வருகைக்காக என் கண்கள் ஏங்கி தவிக்கும்,
என் இதயம் உன்னை மட்டும் தாங்கி துடிக்கும்!!!
என் காதல் நிலவே, நீயே என் துணை,
உன் ஒளியில் நான் கண்டேன் என் வாழ்வின் இணை!!!
உன் நினைவில் என் காதல் என்றும் நிலைக்கும்,
உன் ஒளியில் என் இதயம் என்றும் துடிக்கும்"

"இருண்ட வானில் தனித்து ஓடும் எரி நட்சத்திரம் போல,
"யாரும் அறியா என் மனதின் ஆழத்தில், வேதனையின் சுமை, கடலெனப் புரள்கிறது"
"என் மனதின் வலியை யார் அறிவார்?
"என் கண்ணீரின் கதையை யார் கேட்பார்?
"யாருமில்லா இந்த பாதையில்,
நான் மட்டும் தனியே நடக்கிறேன் என் விதி வழியில்,
"என் நிழல் கூட என்னை விட்டு விலகுகிறது,
"நினைவுகளின் சுமை என் மனதை வாட்டுகிறது,
"கண்ணீரின் துளிகள் என் கண்களை மூடுகிறது,
"என் மௌனத்தின் வலி,
"என் இதயத்தின் அழுகையின் ஓலம்,
"யாரும் அறியா என் தனிமையின் வேதனை,
"இந்த இருளிலும் ஒரு ஒளியாய், எனக்கு வழித் துணையாய் வந்த "அழகிய என் பொன் நிலவே"
"அழகிய என் பொன் நிலவே"
உனக்காய் வாழ்கிறேன்!!!
உன்னுள் வாழ்கிறேன்!!!
உன்னுள் ரசிக்கிறேன்!!!
உன்னுள் மகிழ்கிறேன்!!!
என்றும் உன்னுடன் நான்!!!
என்றும் அன்புடன் நான்!!!
"இயற்கையின் கோடிக்கணக்கான படைப்புகள் ஒவ்வொன்றும் அழகு,
இதற்கு ஈடாகுமோ செயற்கை படைப்பு"
"இயற்கையின் எழில், என்றும் மாறாதது"
"என்றும் மறையாதது இயற்கையின் மேல் நான் வைத்த நேசம்"
"இயற்கையை நேசித்து, இயற்கையை சுவாசித்து
இயற்கையோடு நாம் இணைவோமே
இன்பமுடன் இனிதாய் வாழ்வோமே
இன்பமுடன் இனிதாய் வாழ்வோமே"

"சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு
உங்கள் MISTY SKY 💙💙

9
HI SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER NiLa and All my Lovable GTC FRIENDS... KEEP ROCKING.....
SANGEETA MEGAM PROGRAM ROMBA NALLA POGUTHU RJ'S ODA ANTHA EFFORTS AND COFFEE BOY ODA EDITING VERA LEVEL AND ELLARAYUM SEMAIYAA VECHU KALAIKURINGA AM HAPPY TO HEAR THAT😂😂😂

SPECIALLY I DEDICATE THIS SONG TO JESI😂
ALWAYS YOU AND ME JESI😂😂
INGA ENNA SOLTHU JESI JESI SOLTHAA💜💜

பாடல் பெயர்:
ஏன்… இதயம்…உடைத்தாய் நொறுங்கவே…என் மறு இதயம் தருவேன்…நீ உடைக்கவே…
அந்த நேரம் அந்தி நேரம்…
கண் பார்த்து கந்தலாகி…
போன நேரம் ஏதோ ஆச்சே…

திரைப்படம் பெயர்: Vinnai Thaandi Varuvaayaa
பாடியவர்கள்: Blaaze and Viyay Prakash
இசை: A.R.RAHMAN💜💜
பாடல் வரிகள்:  Thamarai & Blaaze

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
ஹோசன்னா என் வாசல் தாண்டி போனாளே… ஹோசன்னா…
வேறொன்றும் செய்யாமலே…
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூறாகிறேன்…
அவள் போன பின்பு…
எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்…
வண்ண வண்ண பட்டு பூச்சி…
பூ தேடி பூ தேடி…
அங்கும் இங்கும் அலைகின்றதே…
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே…
ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா…
ஹோசன்னா மேகம் உன்னை தொட்டாச்சா…
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிறேன் நான்…
உன்னை அள்ளி கையில் வைத்து…
பொத்தி கொள்கிறேன்…

Really intha song la A.R.Rahman sir oda melody oda antha beats mixed music romba alagaa irukum kekurathuku...
Once again This song dedicated to my Jesi😂😂💜💜

Once again i thanks to SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS.....

10
HI SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER NiLa and All my Lovable GTC FRIENDS... ONCE AGAIN AM HAPPY TO PARTICIPATE SANGEETA MEGAM PROGRAM.... KEEP ROCKING.....

இந்த முறை நான் சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் கேட்கவிருக்கும் விருப்பப் பாடல் என் அம்மாவிற்கும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 💜💜

SPECIALLY I DEDICATE THIS SONG TO MY AMMA... REALLY I MISS YOU AMMA🥺🥺AND I LOVE YOU AMMA💜💜

பாடல் பெயர்:
யா………ர் யா……ர் சிவம்
நீ…… நான்……… சிவம்
வாழ்வே……… தவம்
அன்பே……… சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்
சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும்
நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

திரைப்படம் பெயர்: Anbe Sivam
பாடியவர்கள்: Kamal Haasan and Karthik
இசை: Vidyasagar
பாடல் வரிகள்:  Vaira muthu

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
யார் யார் சிவம்…………
நீ நான் சிவம்…………
வாழ்வே தவம்......
அன்பே சிவம்......
இதயம் என்பது சதைதான் என்றால்
எறிதழல் தின்றுவிடும்....
அன்பின் கருவி இதயம்
என்றால் சாவை வென்றுவிடும்.....
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

இந்த பாடல் எனக்கும் என் அம்மாவிற்கும் மிகவும் பிடித்த பாடல்..... இந்தப் பாடலில் வரும் வரிகள் அனைத்தும் கேட்க மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்....

Once again i thanks to SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS.....

11
Birthday Wishes / Re: Happy Birthday Rhiya
« on: December 09, 2024, 04:05:06 pm »
🎊🎊🎉🎉🍫🍫Wish you a Happy Birthday RHIYA 🍫🍫🎉🎉🎊🎊God Bless You 😇😇Keep smiling always
“Wishing you a day filled with love, cake, joy, and all the other wonderful things you deserve. Have a great birthday, dear friend.” 🎊🎊🎉🎉🍫🍫🎂🎂🥳🥳

12
Birthday Wishes / Re: Happy Birthday Wings
« on: December 04, 2024, 04:12:30 pm »
🎉🎉🎊🎊🍫🍫Wish you a Happy Birthday Wings 🍫🍫🎊🎊🎉🎉 God bless you😇😇Keep smiling always 😊😊
“Wishing you a year filled with endless opportunities and the courage to chase your dreams. Happy birthday, my inspiring friend!”🎊🎊🎉🎉🍫🍫

13
Birthday Wishes / Re: Happy Birthday Nila
« on: December 01, 2024, 01:38:35 am »
🎊🎊🎉🎉🍫🍫🥳🥳Wish you a Happy Birthday NiLa🥳🥳🍫🍫🎉🎉🎊🎊
On your birthday, I want to remind you of how incredible and strong you are. Here’s to another year of growth and grace. “May your birthday be the beginning of a year filled with positivity, hope, and the confidence to overcome any challenge. Happy birthday, my resilient friend!”
Happy Birthday NiLa 🍫🍫🎊🎊 God Bless You 😇😇

14
Birthday Wishes / Re: Happy Birthday Shree
« on: November 27, 2024, 05:48:01 am »
💜💜🥳🥳🎂🎂WISH YOU A VERY HAPPY BIRTHDAY SHREE 🎂🎂🥳🥳💜💜
GOD BLESS YOU AND STAY BLESSED💜💜
STAY HEALTHY AND BE HAPPY ALWAYS 💜💜
KEEP SMILING ALWAYS💜💜🥰🥰

என் அன்பிற்குரியவளே💜💜
உன் பிறந்த நாளை கொண்டாட விரும்புவது என் வாழ்வின் மகிழ்ச்சி!
உன் அன்பும், உன் சந்தோஷமும், உன் இன்பமும் என் வாழ்க்கையை ஒளியோட்டி நிறைப்படுத்துகிறது.
உன் முகத்தில் நான் காணும் அந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வருட உன் பிறந்த நாளிலிருந்து இனி வரும் அனைத்து வருடங்களிலும் உனக்கு எல்லா மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்க நன்றியுடன் எல்லாம் வல்ல அந்த இறைவனிடன் நான் பிரார்த்திக்கிறேன்😇😇😇

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள், என் அழகிய அன்பிற்குரியவளே💜💜🥳🥳🎂🎂😇😇🥰🥰🍫🍫🍫🍬🍬🍬

15
First i congrats to Thendral, Jasvi to became a New RJ's

HI SANGEETA MEGAM TEAM, and RJ's NiLa, Thendral, Jasvi and all my Lovable GTC FRIENDS... ONCE AGAIN AM HAPPY TO PARTICIPATE SANGEETA MEGAM PROGRAM.... KEEP ROCKING.....

சங்கீத மேகம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் மற்றும் வெற்றிகரமாகவும் ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..... சங்கீத மேகம் TEAM-க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....

எனக்கு பிடித்த பாடல்:
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு

திரைப்படம் பெயர்:  அலைபாயுதே
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம் & எஸ்.பி. சரண்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல் வரிகள்: வைரமுத்து

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
நீராட்டும் நேரத்தில்…
என் அன்னையாகின்றாய்…
வாலாட்டும் நேரத்தில்…
என் பிள்ளையாகின்றாய்…

என் கண்ணீா் என் தண்ணீா்…
எல்லாமே நீயன்பே…
என் இன்பம் என் துன்பம்…
எல்லாமே நீயன்பே…
என் வாழ்வும் என் சாவும்…
உன் கண்ணில் அசைவிலே…

உன் உள்ளம் நான் காண…
என்னாயுள் போதாது…
என் அன்பை நான் சொல்ல…
உன் காலம் போதாது…

கொண்டாலும் கொன்றாலும்…
என் சொந்தம் நீதானே…
நின்றாலும் சென்றாலும்…
உன் சொந்தம் நான்தானே…
உன் வேட்கை பின்னாலே…
என் வாழ்க்கை வளையுமே…

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..... ஏ.ஆர். ரகுமான் இசை மற்றும் இந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும் கேட்க மிகவும் அழகாக இருக்கும்...

SPECIALLY I DEDICATE THIS SONG TO MY LOVE AND MY LIFE (S)💙💙.... AND MY FRIENDS THENDRAL, JODHA, MANSI, JASVI, HANSOM HUNK, NILA, WINGS, HEARTKILLER, ALEEM, AND MORE ALL MY LOVABLE GTC FRIENDS....

Once again i thanks to SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS.....

Pages: [1] 2 3 ... 5