Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #10 MY PLACE ON 3RD APRIL (MONDAy)

March 23, 2023, 01:22:39 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 MY PLACE ON 8th MAY 2023
April 19, 2023, 10:45:45 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#025 Hi SM Team and GTC Friends.. intha vaaramum enaku place kedachuthula enaku romba santhosam..

Intha vaaram naan ketka irukum song KRISHNA padathilirnthu இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி

ISAIAMAIPAALAR : S.A. RAJKUMAR

FAVOURITE LINES :

என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே,
உன்ன சேராமல் உள்ளம் வாடாதே,
உன்ன அனச்சாலும் நெனச்சாலும்
சுகம் தனம்மா..


Dedicate to all my GTC friends..

April 23, 2023, 07:45:13 pm
1
Re: கவிதையும் கானமும்-023 என் அன்புள்ள இசையே,

இத்தனை வருட வாழ்வில்
உன்னை பல ராகங்களில்,
பல குரல்களில்,
பல வாத்தியங்களில்,
கேட்டு, உணர்ந்து
ரசித்திருக்கிறேன்...

உணர்ச்சிகளை சொற்களாய்,
ஓவியமாய் வெளிப்படுத்த
தெரியாமல் சிக்கி தவிக்கும்
வாழ்க்கையில்..
நீ மட்டும் எவ்வாறு
உணர்வுகளை துல்லியமாக
வெளிப்படுத்துகிறாய்...

காதல், கண்ணீர், காமம், குரோதம்
என்று நீண்டு கிடக்கும்
உணர்வுகளை, நீ அழகாக
வெளிப்படுத்தும் ரகசியம்
என்னவோ  !!!
மனிதர்களுக்குள் இருக்கும்
தயக்கம் உன்னில்
இல்லாததால !

மண்ணில் பிறந்து,
மண்ணில் புதைகின்ற வரை
இயக்க படுவது உன்னால் தான்.
அதனால் என்னவோ, உன்னில்
கலந்து வரும் வார்த்தைகள்,
அதன் மொழிகளை கடந்து
நீ எல்லோராலும் ரசிக்க
படுபவனாக இருக்கிறாய்.
உன் ராஜாங்கத்தில் இப்புவியில்
வாழும் அனைத்து ஜீவராசிகளுமே
அடிமை தான்...

வாழ்வில் எல்லா நேரங்களிலும்
எனக்கு உயிர் நண்பனாக
இருப்பது நீ தான், இனிமேல்
இருக்க போவதும் நீ தான்.

என் தனிமையில் அமைதியாய்,
என் ஆனந்தத்தில் சிரிப்பாய்,
என் துயரத்தில் கண்ணீராய்,
இது மட்டுமா...
என் கோபத்திலும் என்னை
அணைத்து கொள்கிறாயே...
உன்னை விட ஆறுதல்
எனக்கு வேறு ஏது  !!!

நன்றி இசையே ...!



இக் கவி, GTC யின் குயில் RJ RiJiA அவர்களுக்கு dedicate seigiren. இசையின் கவி குயிலுக்கு dedicate செய்யாமல் இருந்தால் தவறல்லவா 🤗.

May 16, 2023, 11:37:59 pm
1
Re: கவிதையும் கானமும்-024 அவன் அவ்வளவு அழகு இல்லை,
அடர்த்தியான கருமை நிறம் உள்ளவன்,
செல்வமிக்க குடும்ப பின்னணியும் இல்லை,
கிளியை பிடித்து குரங்கு கையில்
கொடுப்பதா..
இத்தனை கருத்து தடைகளையும்
மீறி உன்னை நேசித்த ஒரு உள்ளத்தை
நீ காயப்படுத்தினாயே..

உன் கண்ணில் விழுந்தவள்
நான்,
உன் குரலை ரசித்தவள்
நான்,
ஆண்களுக்கு உரிய கம்பீரத்தை
உன்னில் ஸ்பரிசித்தவள்
நான்,
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு
வினாடியும் உன் வசீகரமான
முகத்தை பார்க்க தவறவிட்டது இல்லை
நான்,
என்மீது அன்பு கொண்ட நூறு பேர்
கண் முன்னே இருந்தாலும்...
உன்னை காண ஆசைப்பட்டது
நான்...

என்னுடன் நீ உரையாட தவறவிட்ட
நாட்கள் பல,
ஆனால் நான் உன்னை ரசிக்க
தவறவிட்ட நாட்களே இல்லை..
உன் சுக, துக்க நிகழ்வுகளில்
நீ அழையாமலே கலந்துக்கொண்ட
தருணங்கள் பல...
எந்த சூல்நிலையிலாவது எனது
ஆறுதல் அல்லது வாழ்த்துக்கள்
உன் துணை நிற்கும் என்று
நினைத்து, நான் ஏமாந்து
நின்ற தருணங்கள் அவை...

உன்னிடம் அன்பு எதிர்பாக்காமல்
என் அன்பை ஏற்றுக்கொள் என்று தந்த
என்னை, நீ புரிந்து கொள்ளாமல்
உதாசீனம் படுத்தினாயே ...
அப்பொழுதும் உன் மனம்
நோகக்கூடாது என்று
என் கோவத்தை மறைத்தேன்...

பல எதிர்ப்பு, கோவங்கள்,
அடிகள், அவதூறுகள்
என் மீது தாக்கப்பட்டாலும்
அவை உன்னிடம் சேராமல்
தடுத்தவள் நான்...
உன்னால் ஏற்பட்ட காயங்கள்
இவை, ஆனாலும் உன்
தவறில்லை என்று என் மனம்
ஒவ்வொரு முறையும்
எனக்கு சொல்லும்...
😅 😔 அப்பாவி காதலி நான்...

உனக்காக நான் என்று இருக்கும்
என்னை நீ புரிந்துகொள்ளாமல்
கோபித்து கொண்டாயே ..
உனக்கு என் அன்பை எப்படி
எடுத்து சொல்வேன்...

எடுத்துச்சொல்லி புரியும் அன்பு
பிச்சை எடுப்பதை விட
கேவலம் அல்லவா...!
பல வருடம் சிரமப்பட்ட எனக்கு
இதுக்குமேலும் சிரமப்பட வைக்காமல்
இன்னொரு மங்கையுடன்
சென்றாய்...
இது எனக்கு 6 வது
மகிழ்ச்சியான வருடம்,
சிரிப்பில் நான் ....
காதல் தோல்வியில்
கண்ணீருடன் நீ ....

May 23, 2023, 08:23:58 am
1
Re: கவிதையும் கானமும்-024 என் அன்பு சகோதரி RiJiA வுக்கு 😍😍😍
என்னுடைய காதலுடன்❤️❤️❤️ தொடங்குகிறேன்
என் கவிதையை ❤️❤️❤️

காதலின் கோபம்:

காதலின் கோபம் கூட ஒரு அழகு
உன்னை நான் பார்க்க
 
என்னை நீ பார்ப்பாயா
என்னை நீ பார்ப்பாயா
அட என்னை நீ பார்ப்பாயா

 என்பதில்
 தோன்றும் அந்த இனம் புரியாதா
 உணர்வு
 
இருவருக்குள்ளும் உருவாக      தொடங்குகிறது காதல் அரும்பு

நாட்கள் ஒவ்வொன்றாய் நகர பார்க்கவில்லை என்பதில் தொடங்குகிறது

அந்த செல்ல கோபம்
அந்த
செல்ல கோபம்

ஒரு தருணத்தில் இருவர் மனமும் திறக்க காதல் வெளிப்படும் நேரம்

உலகின் அனைத்து இன்பமும்
ஒரு சேர பெற்ற உணர்வு

உன்னில் நான்
உன்னில் நான்

என்னில் நீ
என்னில்  நீ மட்டும்தானடா என்று
தோன்றும்

உலகமே அழகாய் தெரியும் தினம் பார்த்த விஷயங்களும் புதிதாய் தோன்றும்

தன் ஆனந்தம் மொத்தம் ஆனவன்
தன் ஆனந்தம் மொத்தம் ஆனவன்

 தன்னில் புதைந்தவள்
தன்னில் புதைந்தவள்

என்று ஒருவருக்கொருவர்
எண்ண அலைகளில்
தன் அவர்களை புகுத்த

மற்றொருவர் தன் அவர்களிடம் உரையாடும் பொழுது

தோன்றும் கோபம் அதுவே தொடக்கம் ஆகிறது

காரணம்
பொறாமை அல்ல

அது காதலின் உச்சம்
அது காதலின் உச்சம்

யாருக்கும் விட்டு கொடுக்க மனமின்றி
எப்படி வெளிப்படுத்துவது என்று புரியாமல்

நான் சரியாக நினைக்கிறேனா
நான் சரியாக தான் நினைக்கிறேனா

என்று மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தொடர

சரியா தவறா என்று மனதுக்கும் எண்ணக்துக்கும்  இடையில் போராட்டம் முடிவதற்குள்ளாகவே

வெளிப்பட்டு விடுகிறது கோபம்


கோபம் அது அன்பின் எதிரி
உறவின் பிரிவு
மகிழ்ச்சியின் தடை

காதலே காதலே என்று உருகிய
நெஞ்சம்

கோபம் ஒன்றை நாளும்
 ஏந்தி ஏந்தி

வெறுப்பின் உச்சம் ஆகிறது


பார்க்க முடியுமா என்று உதித்தது மறைந்து

ஏன் பார்த்தோம்
ஏன் பார்த்தோம்
ஏன் தான் பார்த்தோம் 

என்று தோன்றுகிறது


மனித மனம் தான் எத்தனை விந்தையடா


இருவரும் எதிரியை போல் அமர் கின்றனர்

ஒரு ஒரு புறம்

தேவையற்றதை மனதில் ஏத்தி உழன்று கொண்டிருக்கிறது

இன்றைய நிலையில் இந்த எண்ணம்தான் நீடிக்கிறது

பிரிந்த பின் வருந்தி பயன் இல்லை


தன்னவர்கள்  தன்னை விட்டு
போவதில்லை

தன்னை எண்ணி தான் இப்படி
என்று மனதில் ஏற்றுங்கள்


கோபம் காதலின் கொலைகாரன்


தான் நேசித்த நெஞ்சை தானே புன் படுத்து வதா

ஓ மனமே உன்னில் அன்பை என்றும் நிறுத்தி


உன் உறவை வலுப்படுத்து

உன்னவர்கள் உன்னில்
 உன்னவர்கள் உன்னில்


கோபம் வேண்டாம் நெஞ்சே💕💕💕💕💕💕

May 23, 2023, 09:02:28 am
1
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#043


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 42இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 43இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#043


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
----------------------------------------------------------

October 08, 2023, 10:54:32 am
1