See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
AzhaGi yin Kavithaigal
June 15, 2026, 08:52:02 pm |
1 |
|
Re: AzhaGi yin Kavithaigal
அப்பா... கைகளைப் பிடித்து நடக்கும் இந்த மூன்று நிழல்கள், ஒரு குடும்பத்தின் முழு உலகம்! மகளுக்கு முதல் ஹீரோ அப்பா, மகனுக்கு முதல் வழிகாட்டி அப்பா, இருவரின் கனவுகளுக்கும் உயிர் கொடுப்பவர் அப்பா! சூரியன் மறைந்தாலும் ஒளி குறையலாம், ஆனால் பிள்ளைகளுக்காக எரியும் அப்பாவின் அன்பு ஒருபோதும் குறையாது. ஒரு கையில் மகள்…மற்றொரு கையில் மகன்… நடுவில் நடப்பது மனிதன் அல்ல, தன் குடும்பத்தின் சொர்க்கத்தை சுமக்கும் ஒரு அப்பா! ❤️ “உலகம் முழுவதும் தேடினாலும், அப்பாவின் அன்புக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை!” ஒரு கையில் என் தேவதை மகள், மற்றொரு கையில் என் வீரன் மகன், நடுவில் நான் நடப்பதல்ல… என் இதயத்தின் இரண்டு துடிப்புகளை அழைத்துச் செல்கிறேன்! மகளின் சிரிப்பில் நிலவொளி இருக்கிறது, மகனின் பார்வையில் எதிர்காலம் இருக்கிறது, இருவரின் அன்பில் என் வாழ்நாளின் முழு சந்தோஷமும் இருக்கிறது! நான் சேர்த்து வைத்த சொத்து எதுவுமில்லை, ஆனால் என்னை “அப்பா” என்று அழைக்கும் இரண்டு உயிர்கள் இருக்கின்றன… அதுவே இந்த உலகின் மிகப்பெரிய செல்வம்! காலம் மாறலாம்…வயது கூடலாம்… ஆனால் என் கைகளைப் பிடித்த இந்த இரண்டு கரங்கள், என் உயிர் இருக்கும் வரை என் இதயத்தில் குழந்தைகளாகவே இருப்பார்கள்! மகளின் அன்பும்…மகனின் பாசமும்… கிடைத்தவன் தான் இந்த உலகின் உண்மையான ராஜா!” 👑 அந்தியிச் சிவப்பின் அமுத ஒளியில் அப்பா கைபிடித்து நடக்கும் என் அன்புச் செல்வங்களே! கைகள் கோர்த்து, கவலை மறந்து,காலடி எடுத்து வைத்து, எதிர்காலம் நோக்கிச் செல்லும்,என் இனிய இரு கண்கள்! தந்தை என்னும் பெயர் தாங்கி என் தோள் கொடுத்த பலம், உங்கள் உலகை அமைக்கும் ஒரு புதிய வழி. சிறு கைகள் என் கையைப் பற்ற நான் பெற்ற இன்பம், எந்த செல்வம் கொடுத்தாலும் ஈடாகாது என் குழந்தைகளுக்கு. இந்த மாலைப் பொழுதில் நாம் நடக்கும் இந்தப் பயணம், நம் உறவின் இனிமையை என்றென்றும் பாடும் கவிதை..... அப்பாவைப் பற்றி கவிதை எழுதத் தெரிந்த எனக்கு, அப்பாவின் அரவணைப்பு மட்டும் எழுத முடியவில்லை… விவரம் தெரிந்த நாள் முதல், “அப்பா” என்ற வார்த்தையை விட, “அம்மா” என்ற உயிரைத்தான் பார்த்து வளர்ந்தேன். அம்மாவே எனக்கு அப்பாவாகி, அப்பாவே செய்ய வேண்டிய கடமைகளையும் தன் கண்ணீரை மறைத்து செய்தார். கிடைக்காத ஆசைகள் ஆயிரம் இருந்தாலும், அதை குறையென்று நினைக்கவில்லை… ஏனெனில், அம்மாவின் அன்பு இரண்டு இதயங்களின் பாசமாக இருந்தது. ஆனால் ஒரு ஆசை மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது… எனக்குக் கிடைக்காத அன்பும், எனக்குக் கிடைக்காத அரவணைப்பும், என் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் “அப்பா இல்லை” என்ற வெற்றிடம் இருக்கக் கூடாது… அவர்கள் சிரிப்பில் நான் சிரிக்க வேண்டும், அவர்கள் கனவில் நான் துணையாக இருக்க வேண்டும், நான் காணாத சொர்க்கத்தை அவர்களின் வாழ்வில் தர வேண்டும். ஏனெனில்… ஒரு குழந்தையின் முதல் ஹீரோ அப்பா, முதல் உலகம் அம்மா. என் குழந்தைகள் மட்டும், “எங்கள் அப்பா… எங்கள் பெருமை!” என்று நெஞ்சு நிறைந்து சொல்லும் வாழ்க்கையை அவர்களுக்கு பரிசாகத் தர வேண்டும். எனக்குக் கிடைக்காத வாழ்க்கையை நினைத்து அழுவதில்லை… என் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாழ்க்கையை நினைத்தே இன்று நான் வாழ்கிறேன்… ❤️ June 15, 2026, 08:53:35 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-073
சொல்லல் இசை செல்லல் இசை துள்ளல் இசை தள்ளல் இசை இவை அனைத்து இசைதான் ஆனால் முகம் தெரியாத ஒருத்தர் மொழி தெரியாத ஒருத்தரோடு மனதளவில் பேசுவது இசை தான் இந்த உலகில் நிறைய மருந்து கிடைக்கிறது ஆனால் எனக்கு கிடைத்த நான் விரும்பும் இசை மருந்து சொல்லாமல் சொல்லும் சொல்லல் செல்லை இசை கோபம் கொண்டு என் மேல் பேசாமல் இருக்கும் அந்த இசை என்னைக் கூட கோபப்படுத்தும் அந்த இசையை கொடுத்தவர்களின் மீது என் கோபம் கூட அது ஒரு இசை தான் என்னை தட்டி பேசும் இசை என்னை திட்டி பேசு மெசேஜ் என்னை பேசாமலே திட்டும் இசை என்னை அவளை சரி செய்ய எனக்கு சொல்லாமலே எனக்குள் சொல்லும் ஒரு இசை அதற்காக இந்த கவிதை அவளிடம் அவளிடம் சொல்கிறேன் இந்த இசை காதல் இசையா நட்பு இசையா கவிதை இசையா கடலோரம் துள்ளும் அலை இசையா எல்லோருக்கும் இசை மருந்தாக தான் இருக்கும் எனக்கு அவளிடம் இருந்து வரும் போது அந்த மௌனம் இசை ஏனோ என்ன நோயாளி ஆக்குகிறது அவளை விட்டு செல்லவும் முடியாமல் நான் சொன்ன அந்த விளையாட்டு என்ற இசை என்னை அவளிடம் கட்டி போடுகிறது என் உண்மையைச் அவளிடம் நான் எப்படி சொல்வேன் உண்மை இசையை உண்மை என்று நம்பாதவரிடம். நான் கவிதை என்னும் இசையை அனைவரிடம் சொல்வது என் காதலை இசைக்காக அல்ல அவர்கள் வாழ்க்கையில் சிறக்க வேண்டும் நிறைய உண்மைகளை தெரிய வேண்டும் அவர்களுக்குள் இருக்கும் திறமையையும் குணத்தினையும் அறிய வேண்டும் அதை வைத்து அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் அதுதான் என் கவிதை இசை அது சேராது காதல் எனும் இசை நான் நிச்சயமாக சொல்வேன் என்னை போல் உண்மையாக இருக்க இந்த உலகத்தில் சற்று கடினம் தான் யாவருக்கும் காரணம் நான் மனதால் பேசுகிறேன் மௌனத்தாலும் பேசுகிறேன். இந்த கவிதையை நீ எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல நீ சரியான ஒன்றோடு வாழ்வில் கலந்து கிடக்க வேண்டும் என்று அது நானா இருக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை உனக்கு உண்மை சரியாக தெரிய வேண்டும் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிக சரியான இசை மருந்து மௌனத்தால் பேசும் இசை மருந்து தான் அது மனதினை தொட்டு என் மனதின் ஆழத்தை நுழைந்து ஆழத்தை நிச்சயம் கண்டுபிடிக்கும் முடியாமல் அதற்குள்ளே தொலைந்து போகும் அந்த மௌன இசையே என் வாழ்க்கையில் மறக்க முடியாத இசை நான் தேடுவதும் அதுதான் நான் தொட நினைப்பதும் அதுதான் நான் கடலின் மீது நின்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாய் ஆனால் நான் கடலின் ஆழத்தையே கடந்து நின்று கொண்டிருக்கிறேன் அதை சற்று புரிந்து கொள் அன்று தெரியும் என் காதல் இசை என்ன என் கவிதை இசை என்ன. இந்த கவிதை இசை இன்று சேர்கிறது என்றால் அது அந்த ஈசனின் இசை. உனக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு, பிடித்தது போல் நடிக்காதே பிடிக்காதது போல் நடிக்காதே புடிக்க வேண்டும் என்று நினைக்காதே ஆனா இவை எல்லாம் இல்லாத அழகி இசையை நீ உன் மனதிற்குள் இருக்கும் காயத்தை கடந்து அதை மறந்து நீ வாழ நானும் நான் உனக்கு சொல்கிறேன் . காதல் எனும் கவிதை இசை எல்லாம் கிடைக்க இறைவனை தேடுவது போல் உன்னுள்ளும் இருக்கும் இறவியே கொஞ்சம் தேடு பின்பு தெரிவேன் இறைவன் என்னும் நான். September 06, 2026, 11:16:52 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-074
"உடைந்த இதயம்" "காதலின் வடுக்கள்" "கண்ணாடி போல மின்னிய இதயம், கைய நழுவி விழுந்ததடி" "ஒன்றாய் இருந்த நினைவுகளெல்லாம், இன்று சிதறிச் சில்லுகளாய் ஆனதடி" "உடைந்த இதயத்தின் ஒவ்வொரு துண்டும், உன் பெயர் சொல்லியே அலறுதடி" "உடைந்த சில்லின் விளிம்பினிலே, என் ஆயுள் ரேகை முடியுதடி" "சுவாசக் காற்றும் சுமையாய் மாறி, நெஞ்சின் கூட்டை நெருக்குதடி" "பேசித் தீர்த்த வார்த்தைகளெல்லாம், முட்களாய் மாறி குத்துதடி" "ஒட்ட வைக்க முயன்றாலும், விரிசல்கள் என்றும் மறையாது" "உடைந்த என் மனதின் வலிகளையெல்லாம், சொல்ல வார்த்தைகள் போதாது" "சிதறிய சில்லின் கூர்முனைகள், தினமும் மனதை தைக்கிறதே" "சேர்த்து வைத்த ஆசையெல்லாம், காற்றில் தூசியாய் பறக்கிறதே" "நம் காதலில் திடீரென பிரிவின் நிழல் மெல்ல மெல்லச் சூழ்ந்ததே" "ஊடலின்றித் தொடர்ந்த பாதையில் நம் காதலும் இருண்டதே" "மௌனமே பதிலாய் மாறியபோது, என் மனதின் ஆழம் வரை வலித்ததே" "பிரிவெனும் பெரும் துயரில் என் இதயமோ வலியால் துடித்ததே" "விதியின் விளையாட்டு, நாமும் பிரிய நேர்ந்ததே" "பிரிவின் வலி, இதயத்தை பிளக்கும் கூர்மையான வாளாய் மாறியதே" "மௌனமாய் சிந்தும் என் கண்ணீர்த்துளிகள், சிதைந்த சில்லில் பிரதிபலிக்கும்" "சொல்ல நினைக்கிற சொற்களெல்லாம், தொண்டை குழியில் தேங்கி நிற்கும்" "நிறமிழந்த என் உலகில் உன் நினைவுகள் மட்டுமே செந்நிற ரோஜாவாய்" "கறுப்பு வெள்ளை உலகினிலே, செவ்வண்ண காதல் ரோஜா சிவந்திருக்கக் கண்டேன்" "காதலால் இணைந்த நம் கைகள் பிரிந்து செல்ல, உதிர்கின்ற இதழாய் நானும் உடைந்து நின்றேன்" "வார்த்தைகள் மறைந்து போன பின்பும், வலியின் மெளனம் தொடர்கிறதே" "மனதின் ஆழத்தில் புதைந்த நினைவுகள், கருகிய கனலாய் சுடுகிறதே" "நம் கையில் பிடிந்திருப்பது மலரல்ல, மரித்துப்போன நம் காதலின் சாட்சி" "காதலெனும் தோட்டத்தில் சிறகடித்துப் பறந்தோம், பிரிவெனும் புயலை எதிர்பார்க்கவில்லையே" "விதி செய்த சதியால் விலகிச் சென்றாய் நீ" "வானம் பிளந்து வீழ்ந்ததாய் உணர்ந்தேன் நான்" "என் காதல் மாளிகை நொறுங்கிப் போனதே" "என் கண்ணீர்த் துளிகள் நதியாய் பெருகி ஓடியதே" "நம் காதலின் நினைவுகள் அனலாய் என்னைச் சுட்டதே" "உன் பிரிவின் வலியால் ஒவ்வொரு நொடியும் ஓர் யுகமாய் மாறியதே" "நினைவுகளின் அலைகள் ஓயாமல் என்னைத் தாக்க, நிம்மதி தேடியே நித்தம் வாடுகிறேன்" "என் ஆசைகள் அனைத்தும் கருகிய கனவாய் நானும் வாழ்கிறேன்" "நம் காதல் பிரிவின் வலி தாங்காமல் அணுஅணுவாய் சாகிறேன்" "என் கண்ணீர்த் துளிகள் காய்ந்த பின்னும், மனதில் காயம் மட்டும் ஆறவில்லையே" "வெறுமை சூழ்ந்த என் வாழ்க்கைப் பயணம், இன்னும் விடியலைத் தேடி நகரவில்லையே" "ஒரு துளி அன்பிற்காக ஏங்கிய என் இதயம், கண்ணீர்க் கடலில் மூழ்கியதே" "இனிவரும் பாதைகள் தனிமையே என்றாலும், கடந்து போகும் காலம் மருந்தாகுமோ?" "ஒன்று மட்டும் நிச்சயம் காதலின் சிகரம் நாம் தொட்ட தருணம், அழியாத நினைவாய் என்றென்றும் நிலைத்து நிற்கும்" "இந்த கவிதை உனக்காய், நம் காதலின் அழியாச் சின்னமாய்" "நம் பிரிவு ஒரு முடிவல்ல, மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையின் தொடக்கமானது" "நம் பாதைகள் வேறானாலும், இதயங்களின் பிணைப்பு புனிதமானது" 💜💜 சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!! இப்படிக்கு, உங்கள் MISTY SKY 💜💜 September 15, 2026, 03:31:17 pm |
1 |
|
Re: AzhaGi yin Kavithaigal
FOR STR TS (THAVASI) Anna: STR TS என்ற பெயரிலே ஒரு தனி ஸ்டைலு, பார்த்தாலே மனசுக்குள் வரும் புது வைபு! 😎 பேச்சிலே தெளிவு, பழக்கத்தில் அன்பு, பழகிப் பார்த்தால் புரியும் உன் நட்பின் சிறப்பு! ❤️ கூட்டத்தில் பலரும் வந்து போவார்கள், சிலர் மட்டும் இதயத்தில் இடம்பிடிப்பார்கள்! அந்தச் சிலரில் நீயும் ஒருவராக, நினைவுகளில் நிற்கிறாய் தனித்துவமானவராக! என் அண்ணனாக!!! 💐 உன் சிரிப்பில் சந்தோஷம் பூக்கட்டும், உன் சிந்தனையில் வெற்றிகள் சேரட்டும்! நீ செல்லும் பாதையெல்லாம் சிறப்பாகட்டும், உன் வாழ்க்கை முழுவதும் வசந்தம் வீசட்டும்! 🌈 பெயரில் மூன்றெழுத்து இருந்தாலும், பெருமை பேச ஆயிரம் விஷயங்கள் உண்டு! உன்னைப் போல நல்ல உள்ளம் கிடைப்பது, நட்பின் உலகத்தில் ஒரு வரம் என்று! October 09, 2026, 06:44:24 pm |
1 |