Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#083


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 82இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 83இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#083


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்

April 13, 2025, 05:41:04 pm
1
Re: கவிதையும் கானமும்-055 என் நிழலே
கலங்கிய உள்ளதை கருபிண்டமாக்க
நினைத்த கணத்தில்
கண் தான் கலங்கியது
கருத்து அல்ல என்ற எண்ணத்தை
உன் பார்வைக்கு உணர்த்த
உரு கொண்ட என் உடலை
கருக்கி தான் காட்ட முடிந்தது ...............
கருகிய நானோ கடவுள் கண்ட நீயோ யார்?
உடல் தான் உருவம் என்று நினைத்தாய் நீ
உண்மை தான் உறவென்று நினைத்தேன் நான் ////
பரிமாறி கொண்டேன்
என் உண்மையை உன் உண்மை உறவுக்காக
பரிமாறிய வேளையோ
எமனின் விருப்பனான நேரமாய் மாற
நான் கருகியதும் உயிர் போனதே என் உண்மையே/
உண்மை என்றும் உயிர் தான் உறவு இல்லை என்று உன் கனவில் நான் சொல்ல
உண்மையே நீ தான் என்று சொன்னாய்
இப்போது தான் தெரிந்ததா என்று நான் கேட்டேன்
ஆமாம் என்று சொன்னதும்
உன் உண்மையான உயிரும் போனதே
இப்போது நீயும் உண்மைதான் என் நிழலே ...

இவன்
Golden sparrow 💞🌹💚

June 10, 2025, 07:22:34 pm
1
Re: கவிதையும் கானமும்-056
புயலையும் தென்றலாய் வசப்படுத்தும் எமது GTC கவிஞர்களுக்கு எனது சிறு கிறுக்கல்கள் சமர்ப்பனம்....


சிற்பியும் நாங்களே சிலையும் நாங்களே!


மனிதனுக்குள் ஒருவனாக
பூமியிலே பிறக்கிறோம் !
தாய்மொழி குழைத்த பால் குடித்து
தாமாய் இங்கே வளர்கிறோம்!

கற்பனையின் இறக்கை கட்டி
எங்கெங்கோ பறக்கிறோம்!
கண் காணா தேசமெல்லாம்
கால் பதித்து பார்க்கிறோம்!

வானவில்லை கையிலேந்தி
வானத்திலே திரிகிறோம்!
நிலாப்பெண்ணை நினைவிலேந்தி
உலாவொன்று வருகிறோம்!

கடல் அலைகள் கால்கள் தொட
அதையும் கவிதை என்கிறோம்!
காதலின் கரங்கள் பிடித்து
அழகுப் பூக்கள் என்கிறோம்!

சமூகத்தின் அவலம் கண்டு
எழுத்தில் நியாயம் கேட்கிறோம்!
கண்ணீரற்ற அழுகையினால்
காகிதங்கள் நிறைக்கிறோம்!

தாய்மையின் உணர்வுகளை
தனக்குள்ளும் சுமக்கிறோம்!
கவிதையாம் பிள்ளைகளை
தரணிக்காக வளர்க்கிறோம்!

ஊருக்காக கவிதையெழுதி
உள்ளம் பூரிக்கிறோம்!
ஊர் உறங்கும் வேளையிலும்
உணர்வுகொண்டு விழிக்கிறோம்!

மனதில் வந்த ஊனத்திற்கு
மருந்தொன்று அளிக்கிறோம்!
மலரினது மௌனத்திற்கும்
காதல்கொண்டு துடிக்கிறோம்!

பெருமை கண்டு பெருமிதங்கள்
கொள்ளாதவர்களாய் இருக்கிறோம்!
சிறுமை கண்டு பொறுமைகொண்டு
சிரித்துக்கொண்டே மறக்கிறோம்!

வாழ்த்துக்களின் ஏணி கொண்டு
உயரம் ஏறி மகிழ்கிறோம்!
வானத்திலும் பாதை அமைத்து
ஒய்யாரமாய் நடக்கிறோம்!

இருபதின் இளமையோடு
அறுபதிலும் வாழ்வோம்!
இன்பதுன்பம் இரண்டினையும்
ஒன்றை போலப் பார்க்கிறோம்!

உயிரைவிட்ட உடலாய்
இந்தப் பூமியிலே புதைவோம் !
புதைந்த பின்னும் இப்புவியிலே
இன்பக் கவிதைகளாய் வாழ்வோம் !

தமிழ்மொழி எனும் பளிங்கினை
சிந்தனை எனும் சிற்றுளிகொண்டு
கற்பனை துணையுடன் உருகொடுத்து
சமுதாய நோக்குடனே என்றும் நாம்
கவிதைகள் பலபல வடிவமைக்கும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

சீரான எண்ணமுடன் சீர்மாறாமல்
சீர்கெட்ட சமூகமும் திருந்திடவே
சீரான பாதையில் சென்றிடவே
சிதைந்திட்ட நெஞ்சங்கள் சீர்பெற
சிந்தையின் துளிகளால் வடித்திடும்
சிற்பியும் நாமே சிலையும் நாமே !

பாரேப்பார்க்கும்படி பாடல்களை படைப்பவன் கவிஞன் ..!
பரதேசியாக வாழ்ந்தாலும் பார்பாராட்டும்படி
வாழ்பவனே நல்ல மனிதன்..!

என்றும் நட்புடன் நான் உங்கள்


July 08, 2025, 07:39:25 pm
1
Re: கவிதையும் கானமும்-056 கவிதைகள் சொல்லவா

நித்தம் உன்னை நாட்குறிப்பில்
எழுதாத நாட்கள் இல்லை,
தொலைவில் நிலவினை கண்டபோதும்,
சில்லென் தென்றல் தீண்டும்போதும்,
மனம் கவரும் மலர் வாசம் நெஞ்சை வருடும்போதும்,
மழையில் நான் நனைகின்றபோதும்,
பனித்துளி இலைநுனியில் படரும்போது,
கவிதைகள் கொண்டு அலங்கரித்தேன்
உன்னை...,

இருளும் ஒளியும்,
நிசப்தமும் இசையும்,
சிரிப்பும் கண்ணீரும்,
சோகமும் மகிழ்ச்சியும் ,
உன்னைபற்றி சொல்லும்
எனது நாட்குறிப்பில்...,

சூரியனின் ஒளிகீற்று
தாமரையை தீண்டுவதுபோல
தினமும் என்னை தீண்டுகிறாய்
பெண்ணே உன் நினைவுகளால்...,
இரவில் நான் தூங்கும் முன்னும்
அதிகாலை கண் விழிக்கும் போதும்,
உன்பற்றியே எழுதும் என் பேனா...!
பல தடவைகள் மௌனம் கலைந்து
உன்னிடம் சொல்லா காதல்
எனது நாட்குறிப்பில்
கொட்டிகிடக்கிறது....






July 11, 2025, 11:48:07 pm
1
Re: கவிதையும் கானமும்-056 மறக்க முடியாத என் நிமிடங்கள்

கல்லாய் மாறிய என் கனவுகளின் பயணம்!!!

சிறுவயதில் சிரித்தேன், சிறகு இல்லாமல் பறந்தேன்,
சின்னதாய் சொந்தங்கள், இருந்தும் சிங்காரமாய் நின்றேன்,
மழலைக் கனவுகளில் கலந்தேன்,
மழையில் நனைந்த பூவை போல் மிதந்தேன்.

படிக்கவே வந்தேன், வேலைக்கு ஓடிய பாதையில்,
படர்ந்தது கனவுகள், பசுமையில்லா பாதையில் .
பணத்தால் பறந்து போன என் பதற்றக் காலம்,
படிப்புக்கே பிழைப்பாய் மாறிய பயணம்.

நட்பில் நான் நிழலாய் இருந்தேன்,
நண்பர்கள் பேசும் வரை சிரித்தேன்,
நெஞ்சத்தில் அந்த குரல்கள் புதைந்துகொண்டிருந்தது,
இன்று அந்தக் குரலும் காற்றில் அழிந்தது.

பனித்துளிகளோடு வந்த என் கல்லூரி நாட்கள்,
பாரம்பரியங்களை விட்டுப் போன சாயல்கள்.
பார்ட் டைம் வேலை என்ற பெயரில் பரந்த என் தூக்கம்,
பயிற்சி இல்லாமல் பரிசளிக்கும் சூதாட்ட வாழ்க்கை போல்.

காலமும் கட்டுப்பாடுகளும் சேர்ந்தபோது,
காதலும் கூட என்னை விட்டுப் போனது.

வெற்றிக்கு முன்பே வெறுமை வந்தது,
வெளிச்சத்தில் நான் தோற்ற வலிகள் இருந்தது.
விளக்கின்றி போன என் தோழனின் முகம்,
விழிகளுக்குள் உருகும் என் அக்காவின் நிழல்.

இறங்கினேன் கனவுக்கு… ஏறினேன் மேடைக்கு,
தூக்கமில்லா இரவுகள், இன்பமில்லா பகல்கள்,
இனிமை கொண்ட உறவுகள் எனக்குள் இருந்த சுவடுகள்.

சேர்த்தேன் வெற்றிகள், சிந்தினேன் உறவுகள்,
சிறகு இல்லா அந்த பறவை போல் .

சிரிப்பின்றி சிகரம் சேர்த்த என் காலடி ஓசை,
சில நேரம் என்னிடம் கேட்கிறது – “இது உனக்கான தேசமா?”

எங்கே என் அம்மாவின் கதை சொல்லும் குரல்?
எங்கே என் அப்பாவின் அமைதியான உறைச்சல்?
எங்கே என் நண்பனின் சிரிப்பு கொண்ட மழை?
எங்கே என் காதலியின் முகம்?

தடம் போன நேரங்கள், தடுமாறும் நினைவுகள்,
தவிர்க்க முடியாத பணி, தவிக்கும் என் உயிர்கள் .
நீங்கிய ஒவ்வொரு நிமிடமும்
நிழலாய் நடக்கும் என் நிமிட சுவடுகள்.

உணர்வுகள் மட்டும் அறிந்த பாதைகள்…
மீள முடியாத சில தருணங்கள்,
மறக்க முடியாத சில முகங்கள்…

இது அனைத்தும் என்னை பற்றி நான் அறிந்த பக்கம்.
இபடிக்கு உங்கள் தோழன்
Harry Potter
Always peace ✌️and love  ❤️

July 15, 2025, 02:21:44 am
1
Re: கவிதையும் கானமும்-057
கவிதை என்றாலே என் சிந்தையில் வருவது என் அம்முவின் நினைவலைகள் தான் அதுவும் எங்கள் இருவருக்கும் பிடித்த மழை கவிகள் என்றால் சொல்லவா வேண்டும் என் சிந்தனையின் கிறுக்கல்களில் சில வரிகள் நமது கவிதையும் காணமும் நிகழ்ச்சிக்காக அன்பர்கள் அனைவரும் மழையின் சிந்தனையோடு நமது தொகுப்பாளர் Rijia வின் குரல் மழையோடு கொஞ்சம் நனைவோமா....!


மனதோடு மழைக்காலம்.....


வானமகளின் வைரச்சலங்கைகள்
அறுந்து விழுந்தனவோ
மண்ணெங்கும் மழைத்துளிகள்;
உன்னைப் பார்க்கையில்
உயிரனுக்கள் மீண்டூம்
பிறந்தனவோ என்
வானெங்கும் விடிவெள்ளிகள்!!

முதன்முதலாய் என் விழியீர்ப்பு விசைகளில் நீ விழுந்தபோது
கனவுகளின் தேவதை
சிறகுகள் நீங்கி
சேலையில் நிற்கிறதோ!
என வியந்ததாய்
‌ஞாபகம்.
உன்னால் அறியாத
வெட்ககங்கள் பூசிக்கொண்டு
பூமீக்குச் சென்றது என்முகம்.

அந்நிமிடம் தொட்டு அடியேனின்
கடமைகளும் கனவுகளும்
காலத்தோடு உன்னுள் அடங்கின.
செல்போனில் உன் குரல் சினுங்கிட
பொழுதுகள் விடியும்.
உன்னை தூங்க வைத்த பின்தான்
இரவுகள் அடையும்..
இப்படியாய் என் நொடிகள்
ஒவ்வொன்றும் உன்னிடம்
அடைபட்டுகொள்கிறது
ஆனந்தமாய்............

ஓர்நாள்
அடைமழை உதவியுடன்
ஒற்றைக் குடையின்கீழ்
உன் கைப்பிடித்து நடக்கையில்
பச்சை நிற சேலையின்
முந்தானை கொண்டு என்
தலை துடைத்தாய்
அவ்வப்போது.
ஆனந்தம்
உன்னோடு எனக்கும்...
குடைப்பிடித்தாலும் தொடாமல்
விடமாட்டேன் என
உன்னை நனைத்த
மழையை நினைத்து
உள்ளம் வெந்தாலும்
இயற்கையை வென்றவள்
என்னவள் என்ற
பெருமைகள் எனக்குண்டு.
ஏனெனில் உன் சினுங்கலில்
சிலிர்க்கவே சிந்திய
துளிகள் என்னவளின்
அடிமைகள்;

குடையை விட்டு விலகி உன்
நடையழகை பார்த்தபொழுது தான்
எனக்கு புரிந்தது.
ஆம்,
பார்ப்பதற்கு பசுமை.
ஈரமான நந்தவனமும்
மழை சாரலில் சிறிது நனைந்த சேலையோடு
என ரசிக்கையில்
பொய்க் கோபத்தில்
ஜென்மங்கள் தாண்டி
அழைத்துச் சென்றாய்..

மழையோடு ஒதுங்கி
நின்ற பேருந்தில்
ஓரமாய் இடம் பிடித்தோம்
நனைந்தே இருவரும்.
இப்போது பயணம்.
ஓட்டுனரின் கட்டளைக்குப்
படிந்து பேருந்து
பாய்கையில் உயிரோடு
எனக்கு மரணம்.
கண்ணயர்ந்து உன்
தோளில் சாய்கையில்
மீண்டும் ஜனனம்....

அது ஏனோ
விளங்கவில்லை
மழை வந்தால்
மனதுக்கு பிடித்தவள்
என உன்னை
அடையளம் காட்டி
ஏதேதோ
எழுதுகிறேன்.
எழுதிக்கொண்டே வருகையில்
கற்பணையின் எழுத்துகள்
குறைந்து போனது.
கண்தூக்கிப் பார்த்தால்
கணமழை காணாமல்
போயிருந்தது.
ம்ம்ம்ம்.........
இது தான்
மனதோடு மழைக்காலமோ.....?

August 19, 2025, 08:43:47 am
1
Re: Shasuvin Kavithaigal Hi Shaswath  Brother 3 kavithai  nalla irukku👏👏👏
August 28, 2025, 04:53:40 pm
1
Re: கவிதையும் கானமும்-058
கால் முளைத்த மலர்களெல்லாம்
தோட்டங்களில் நடமாடுகின்றன ...!
மனிதப்பிறவிக்கு மகளாய் வரம் வாங்கி !


என் மகளுக்காக.....


உன்னை கையில் ஏந்தி கொஞ்சுகையில் என் நினைவலைகளில் சில சிதறல்கள் இதோ.. 

எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ நீ
எனக்கு மகளாக பிறந்தாய்...
ஒரு கோடி வண்ணத்து பூச்சியின் வண்ணங்களை
அழகு முகத்தில் கொண்டாய்....
உந்தன் இலவம் பஞ்சு பாதம்
உதைக்க எந்தன் கர்வம் போகும்,
முகத்தில் அம்மாவின் அழகை கொண்டாயே அம்மா....
 எந்தன் அம்மா
கனவில் காணாத புதையல் தந்தானே
பிரம்மா அந்த பிரம்மா.....
எல்லை காணாத பறவையின் சிறகில்
ஏறிப்பறப்பாயே வாழ்விலே
வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
வானம் கூட எல்லை இல்லையே
பூமித்தாயே நிலவைபோலே உன்னை சுற்றி..
என் வாழ்கையே
நிலத்தில் நீ வாழ உரங்கள் போலாவேன்
செடியே மல்லி செடியே
நீ பூக்கும் நேரத்தில் மஞ்சள் நீராட்டி
மகிழ்வேன் நானும் மகிழ்வேன்....
பூக்கள் நீ சூடி பாக்கள் நான் பாடி
உந்தன் திருமணம் நடக்குமே
இறைவனே உந்தன் திருமணம் கண்டு
வியந்துபோகும் படி செய்வேனே
உன்னை பிரியும் அந்த நேரம்
நெஞ்சில் இடியுடன் மழையுந்தான்..

என் உயிரினில் ஊடுருவிக் கண் சிமிட்டும் கடவுளவள்...
என் ஆனந்த ஆணணுக்களின் ஆர்ப்பரிப்பவள்
எந்தன் ஜீவனின் ஜீவன் ஈன்றெடுத்த ஜனனமவள்....
என் அன்னையின் அன்பை நீக்கமற புகட்டியவள்....
அவள் -
விரல்பட்ட விடம் இனித்து
குரல்கேட்ட விடம் கனிந்து
இதழ்பட்ட விடம் கரைந்து
என் இதய நரம்புகளை யாழென மீட்டுபவள்....

காமத்தில் கலவாத என் கண்ணின் முத்தம் - என் கண்மணியின் முத்தம்...
செல்ல மகள் உதிர்க்கும் தருணம்
சில்லிட்டுத் தெறிக்கும் உன் அன்னையின் இரத்தம்...

பொன்மகளவள் புன்னகையின் வெளிச்சப் பூவை
இரவல் வாங்கிட இளமதியோடு இன்னபிற
கோள்களும் தவம் கிடக்கும் தத்ரூபம்...

எந்தன் வாழ்வியக் கண்ணீரின் காயங்கள்
ஆற்றிடும் அதிசயம்
அவள் மார்புதைக்கும் பாத ஸ்பரிசத்தினால்...

அவள் வரும்வரை நேரம் போகவில்லை
வந்தபின் நேரம் போதவில்லை - அவள்
இன்னிசை மழலை மொழி கேட்டு களித்திட...

தென்பாண்டித் தெம்மாங்கும் யாசகம் கோரும் - மழலையவள்
உச்சரிக்கும் பைந்தமிழின் சங்கீதத்தில்........
எடுத்துக்காட்டு உவமையணி ஏங்கி நிற்கும்
எழில் பதுமையவளின் சேட்டைகளை எடுத்தாள்வதற்கு...
ஆக,
தமிழன்றி வேறெந்த மொழியும் இலக்கணம்
சமைக்க வில்லை..
ஆம் இந்த தமிழின் கவி வரிகளும் கூடவே...
தாரகையவள் உலவும் அழகியலில் ....

இங்ஙனம் வாழ்க்கையின் வழியில்
வந்தவள் வாழ்க்கையாகி போகிறாள் - அந்திமத்தின்
நிறைவேறாத ஆசைகளின் முற்பகுதியில்
வாழ்ந்துவிட்டு பிற்பகுதியில் விட்டு பிரிந்து செல்லும்
என் மகளுக்காக........

September 02, 2025, 06:29:16 am
1
Re: கவிதையும் கானமும்-058 🌿 அப்பா – சொல்லப்படாத பாசம் 🌿

வானத்தில் பறக்க வைக்க கைகளால் தூக்கும்,
தான் தரையில் குனிந்து நிற்கும் உறவு – அப்பா.

சிரிக்க சூரியனைத் தேவை இல்லை,
அவனது மகளின் சிரிப்பே போதும்.

தனக்கான கனவுகளை நிழலில் புதைத்து,
பிள்ளையின் கனவுகளை வெளிச்சத்தில் மலர வைப்பான்.

பலருக்கு கடைசி வரை புரியாத புதிர்,
அவரது வாழ்க்கையே – அப்பா.

அவன் பேசாமல் பாடம் கற்பிக்கிறான்,
அவன் பார்வையிலே எச்சரிக்கை மறைந்திருக்கிறது.

மகளின் கண்ணீரால் உருகும் இதயம்,
மகளின் சிரிப்பால் துடிக்கும் உயிர்.

தாய்க்கு பின் துணை இருக்கலாம்,
ஆனால் அப்பாவின் இடம் யாராலும் நிரப்ப முடியாது.

அவருக்கு நிகர் அவர் தான்,
அவரது தியாகத்துக்கு அளவே இல்லை.

ஆயிரம் புன்னகைகள் பூத்தாலும்,
அப்பாவுடன் பகிரும் புன்னகை தான் சிறந்தது.

தன் வாழ்நாளையே போராடி,
பிள்ளையின் வாழ்வை கட்டியமைக்கும் கரங்கள் – அப்பா.

சுயநல உலகத்தில் சுயநலமற்ற,
அரிய உறவு அவர் தான்.

அப்பாவை இழந்தவர்களுக்கே உணர்வு வரும்,
உலகம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்று.

அம்மாவின் பிரசவ தழும்புகள் போலவே,
அப்பாவின் உழைப்பில் பிறந்த காயங்கள்.

மௌனத்தில் மறைத்த கனவுகள்,
பிள்ளையின் கண்களில் மலர வைக்கின்றன.

அவனது சிரிப்பு சில நேரங்களில் போலி,
ஆனால் அதன் காரணம் பிள்ளையின் கண்ணீரை மறைப்பதே.

வாழ்க்கை எத்தனை சிரமம் வந்தாலும்,
பிள்ளையை விட்டு கொடுக்காத ஒரே உறவு – அப்பா.

அவன் உழைப்பால் வீடு நிறையும்,
அவன் நிழலில் பாசம் பெருகும்.

அவன் வார்த்தைகள் கடினமாய் கேட்டாலும்,
அவன் இதயம் எப்போதும் மென்மை கொண்டது.

பாதையில் நிழலாய் பின்தொடரும் காவலன்,
சுவாசத்தில் வாழும் பாசம் – அப்பா

 என் முதல் ஹீரோ நீ தான்,
❤️ என் வாழ்வின் பாதுகாப்பு நீ தான்,
❤️ என் இதயத்தின் என்றும் நிலையான அன்பு – அப்பா, உன்னை நேசிக்கிறேன்!

September 02, 2025, 07:44:01 am
1
Re: கவிதையும் கானமும்-058 தந்தை
மண்ணில் உதிக்கும்
போது தாய் பெற்றெடுப்பால்
தினமும் நம்மை சுமப்பவர் தந்தை...
தனது வாழ்கை தம் குடும்பத்திற்கு
தத்தம் செய்தவர் தந்தை..
வாழ்கை இப்படித்தான்
என்று வழிகாட்டும் வழிகாட்டி அவர்..
ஆயிரம் ஆயிரம் பிரச்னை வந்தாலும்
அஞ்சாது எதிர்கொள்ள கற்றுதந்த ஆசான் அவர்..
தம்பிள்ளைக்கொன்று எனில்
தம் கண்ணில் உதிரம் வடிப்பவர்
கலங்காதே நான் உன்னுடன்
இருக்க எதையும் எதிர்கொள்
என்று ஆளுமை கற்பித்த குரு ..
உயர்விலும் தாழ்விலும்
தன்நிலைமாறதே என்றுரைப்பவர்
திருவிழாவில் தெய்வம் காண தம்
தோழில் சுமந்தார்
நான் அன்று பார்த்தது
தெய்வமன்று
என்னை சுமந்ததே அந்த தெய்வம் தான்...
கடினமாக நடந்து கொள்வதால்
தந்தையை வெறுப்பாக பார்கும்
நாம் தந்தையாகும் போது உணர்வோம்
அவர் செய்த நன்மை யாதென..
தந்தை பெண் பிள்ளைகளின்
கதாநாயகன் ..
தந்தை ஆண்பிள்ளைக்கு
அடையாளம் ...
கோடி தெய்வங்கள் நிகரில்லை
எம் தந்தைக்கு ..
அவரின் மகிழ்ச்சி புகழ் பணம்
யாதிலும் இல்லை
தம் பிள்ளைகளின் மடியில்
அவர் துயில் கொள்ளும் தருணத்தில்
வார்தைகளில் அடங்காத மகிழ்ச்சி ...
தனக்கென யாதும் கோராத
தன்னிகரில்லா நிஜ கர்ணன்
தந்தை...
குழந்தை பருவத்தில் குருவாக
குமார பருவத்தில் தோழனாகா
என்றும் என் முன் மாதிரி எம் தந்தை...
வார்த்தைகளில் சொல்ல வரிகள் காணதே
வணங்குகிறேன் உம்மை
எம் தந்தையே எம் தந்தையே...💕💕💕💕❤️😍🥰😘

September 02, 2025, 07:33:08 pm
1