See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: Sivarudran Kavithaigal
காதல் கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்க்கும் ! கடிகார நேரத்தை நொடிக்கு நொடி கண்கள் உத்துப் பார்க்கும் ! கை விரல் ஐந்தும் அடிக்கடி தலைமுடியைக் கோதிக் கொள்ளும்! காரியமே இல்லாமல் காதலி வீட்டு முன்பு கர்ணம் போட்டு வித்தை காட்டும்! அவள் வெளியே எட்டிப் பார்க்கும் நேரத்தில் குட்டி இதயம் வெளியே எகிரி குதிக்கும் ! கண்கள் உருண்டு திரளும் ! கைகள் நடுங்கி பரபரக்கும் ! காரியமே இல்லாமல் கால்கள் அங்கும் இங்கும் நடை போடும் ! அவள் அழைப்பு ஏதுமின்றி அலைபேசி துவண்டு கிடக்கும் ! பாழாய் போன காதலால் படாத பாடுபடுதே பாதி ஆண்களின் வாழ்க்கை . December 05, 2023, 10:47:53 am |
1 |
கவிதையும் கானமும் - புகைப்படங்கள்
இதுவரை நடைபெற்ற கவிதையும் கானமும் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம். கவிதையும் கானமும்-001 *********************** கவிதையும் கானமும்-002 *********************** கவிதையும் கானமும்-003 *********************** கவிதையும் கானமும்-004 *********************** கவிதையும் கானமும்-005 *********************** கவிதையும் கானமும்-006 *********************** கவிதையும் கானமும்-007 *********************** கவிதையும் கானமும்-008 *********************** கவிதையும் கானமும்-009 *********************** கவிதையும் கானமும்-010 *********************** கவிதையும் கானமும்-011 *********************** கவிதையும் கானமும்-012 *********************** கவிதையும் கானமும்-013 *********************** கவிதையும் கானமும்-014 *********************** கவிதையும் கானமும்-015 *********************** கவிதையும் கானமும்-016 *********************** கவிதையும் கானமும்-017 *********************** கவிதையும் கானமும்-018 *********************** கவிதையும் கானமும்-019 *********************** கவிதையும் கானமும்-020 *********************** கவிதையும் கானமும்-021 *********************** கவிதையும் கானமும்-022 *********************** கவிதையும் கானமும்-023 *********************** கவிதையும் கானமும்-024 *********************** கவிதையும் கானமும்-025 *********************** கவிதையும் கானமும்-026 *********************** கவிதையும் கானமும்-027 *********************** கவிதையும் கானமும்-028 *********************** கவிதையும் கானமும்-029 *********************** கவிதையும் கானமும்-030 *********************** கவிதையும் கானமும்-031 *********************** கவிதையும் கானமும்-032 *********************** கவிதையும் கானமும்-033 *********************** கவிதையும் கானமும்-034 *********************** கவிதையும் கானமும்-035 *********************** கவிதையும் கானமும்-036 *********************** கவிதையும் கானமும்-037 *********************** கவிதையும் கானமும்-038 *********************** கவிதையும் கானமும்-039 *********************** கவிதையும் கானமும்-040 *********************** கவிதையும் கானமும்-041 March 19, 2024, 12:16:24 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-045
"இசை உலகெங்கிலும் திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை" "இசை இல்லாத இடங்களும் இல்லை இசையை நேசிக்காத இதயங்களும் இல்லை" "எங்கும் இசை, எதிலும் இசை திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை" "இசை நம் உயிருள்ள ஆன்மாவை இசைவிப்பது இசையே" "இசை நம் மனதினை மகிழ்ச்சியடையச் செய்வது இசையே" "இசை நம் உள்ளத்தை சாந்தப்படுத்தி மனதை அமைதி பெறச் செய்வது இசையே" "இசை நம் உடலில் உற்சாகத்தை உண்டாக்கி நம்மை நடனமாடச் செய்வது இசையே" "இசை நம் உணர்வுகளைத் தூண்டி நமக்கு உயிரோட்டம் அளிப்பது இசையே" "இசை நம் உடலை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கி நம்மை நலமாக வைத்திருக்க உதவுவது இசையே" "இசை நம் இதயத்தை இதமாக்கி நம்மை புத்துணர்ச்சி அடையச் செய்வது இசையே" "எங்கும் இசை, எதிலும் இசை திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை" "இசை நம் கண்களுக்கு சுகமான உறக்கத்தை அளிப்பதும் இசையே" "இசை நம் நெஞ்சில் கனிவான இரக்கத்தை ஏற்படுத்துவதும் இசையே" "இசை நம் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த உதவுவதும் இசையே" "நம் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த உதவுவதும் இசையே" "இசை ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் அக்குழந்தையின் அழுகைச் சத்தமும் ஓர் இசையே" "அக்குழந்தையின் அழகிய மழலைச் சிரிப்புச் சத்தமும் ஓர் இசையே" "இசை ஒவ்வொரு மனிதனின் திருமணத்திலும் வாசிக்கும் மேள தாளங்களின் சத்தமும் ஓர் இசையே" "இசை ஒவ்வொரு மனிதனின் இறப்பிலும் சோகமிகுந்த ஒப்பாரிச் சத்தமும், தாரை தப்பட்டைச் சத்தமும் ஓர் இசையே" "இசை மனிதனின் ஒவ்வொரு இன்பத் தருணத்திலும் இசையே, மனிதனின் ஒவ்வொரு துன்பத் தருணத்திலும் இசையே" "எங்கும் இசை, எதிலும் இசை திசையெங்கும் நிறைந்திருக்கும் இசை" "இசை இயற்கையின் கொள்கை அழகில் கடல் அலைகளில் இருந்து வரும் ஓசைச் சத்தமும் ஓர் இசையே" "இசை இயற்கையின் இன்பச் சாரலில் அருவியில் இருந்து வரும் ஓசைச் சத்தமும் ஓர் இசையே" "இசை இயற்கையின் தென்றல் காற்றில் இருந்து வரும் ஓசைச் சத்தமும் ஓர் இசையே" "இசை மயிலின் அகவலும், குயிலின் கூவலும், தேனீயின் ரீங்காரமும், வண்டின் இரைச்சலும் ஓர் இசையே" "இசை ஆதி, பறை, வீணை, வயலின், கிட்டார், சித்தார், தம்புரா, யாழ், புல்லாங்குழல், மகுடி, கடம், நாதஸ்வரம், ஆர்மோனியம், பியானோ, டிரம்ஸ் இவற்றில் இருந்து வரும் இசை ஒலிகளில் நம் மன வலிகளை மறந்து இசையில் நம் இதயத்தை தொலைத்தோம்" "இசையில்லாத இடம் செழிப்பில்லாத பாலைவனத்தைப் போன்றது" "இசையைக் காதலிப்போம் ஒற்றுமையை வளர்ப்போம் இன்பம் பெறுவோம்" "ஏ.ஆர். ரகுமான் இசைக்கு பெருமை சேர்த்த ஆஸ்கார் நாயகனே" "தன் இசையால் திரையுலகை ஆளும் மன்னவனே" "ரோஜாவில் முதல் ஆரம்பத்தில் தொடங்கி ராயன் வரை இசையால் சாதித்தவர்" "அனைவரும் வியக்கும் வகையில் இசையமைத்தவர்" "தன் இசையால் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர்" "பாடல்களைப் பாடி இசையமைப்பதில் வல்லவர்" "சிறிதும் தலைக்கனம் கர்வமில்லாத தூய மனம் கொண்ட நல்லவர்" "எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொன்னவர்" "முயற்சி திருவினையாக்கும் என்று நிருபித்துக்காட்டியவர்" "தன் கடும் முயற்சியால் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று காட்டியவர்" "வந்தே மாத்திரம் பாடலுக்கு இசையமைத்து, பாடலைப் பாடி வையகம் முழுக்க அறியப்பட்டவர்" "தமிழ் மொழி மட்டுமில்லாது பிற மொழிகளுக்கும் இசையமைத்து உலக மக்களால் போற்றப்பட்டவர்" "ஏ.ஆர். ரகுமான் இசைக்கு பெருமை சேர்த்த ஆஸ்கார் நாயகனே, அகிலம் போற்றும் தென்னவனே" "உன் இசைப் பயணத்தை என்றும் நீ தொடர்க..." "வளமோடு, நலமோடு நீ நீடூழி வாழ்க... வளமோடு, நலமோடு நீ நீடூழி வாழ்க..." "எல்லாப் புகழும் இறைவனுக்கே" "எல்லாப் புகழும் இறைவனுக்கே" சந்தோஷமிக்க மனநிறைவுடன் முடிக்கின்றேன்!!! இப்படிக்கு உங்கள் MISTY SKY 💙💙 August 14, 2024, 06:50:02 pm |
1 |
கவிதையும் கானமும்-046
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-046 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். August 20, 2024, 04:24:31 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-046
சொல்லாத காதல் வாழ்க்கை என்னும் பயணத்தில் தொடரும் ஒவ்வொரு உறவும் ஒருநாள் முடிவு பெறும் -- அதிலும் சில முடிவை சொல்லாத உறவு இறுதி வரை உடன் வரும்! அதுபோன்ற ஒரு சொல்லாத காதலை பற்றி எந்தன் பார்வையில்... பார்த்த நாள்முதலாய் பரவசமென்று எதையும் காணவில்லை பழகும் நாட்களில் தான் படிக்கத் தொடங்கினேன் உன் பார்வைகளை..... உன் பார்வை வரிகள் ஒவ்வொன்றும் என்மீது படும் வேளையில் ஒவ்வொறு முறையும் ஒருவித தாக்குதலுக்கு பலியானேன்.., எத்திசையில் நீ திரும்பி பார்த்தாலும் என்னை நோக்குவதை போல் என்னவென்று தெரியாமலே என்னை இழக்கத் தொடங்கினேன்.., சூரியனின் நேர்க்கோட்டில் சந்திக்கும் நிலவாக நீயும் நானும் தனி கிரகத்தில் தினம் தினம் நின்றோம்.., நிற்கும் நாட்களிலெல்லாம் இருவருக்கும் இடையே வார்த்தைகள் பரிமாரிக்கொள்ளவில்லை ஆனாலூம் கண்களின் வழியே பல மொழிகள் வழிந்தோடியது! திங்கள் முதல் வெள்ளி வரை நாட்கள் கழிவது தெரியாமல் உன்னிடத்தில் நான் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தேன் "வெள்ளி நிலவே" உன் விழிகள் என்னிடம் விடை பெற்றுச் செல்லும் விடுமுறை நாட்களையெல்லாம் வெறுத்து நின்று பார்த்தேன்... ஞாயிறு அது முடியும்போதும் தொடரும் திங்களோடும் உன் ஞாபகமோடும் திசைகள் எல்லாம் நான் சுற்றி திரிந்தேன் உன் வருகைக்காக.... தினம் தினம் உரிமைகள் உன்னிடம் அதிகரிக்க அதனை அறியாத என் உள்ளம் உனக்கென்று முழுவதுமாக என்னை மாற்றியது!! உள்ளம் முழுமையாக மாறும் வேளையில் தான் உயிரே உனக்கும் எனக்கும் ஊடல் தோன்ற வேண்டுமா பார்வை வரிகளை கண்டு பைத்தியமானவன் அதிலிருந்து மீண்டு வர வைத்தியம் தெரியாமல் வாயடைத்து நின்றேன்... "எதிர் பாராமல் வாழ்வில் சந்தித்தேன் எதிர் பாராமல் காதலித்தேன் எதிர் பாராமல் காதலித்தது என் தவறா ? -- இல்லை அதனை ஏற்க முடியாதது உன் தவறா" என உன்னிடம் உண்மைகளை கேட்க வந்தவன் ! உறைந்து போய் நின்றேன் உன் நிழலாக வேறொருவன் இருப்பதை கண்டு!! "உதடுகளை திறந்து உள்ளம் புரிந்து சொல்லும் காதலெல்லாம் சொர்கத்தில் சேரும்! சொல்லப்படாத எந்தன் காதல் எந்த பிரிவை சேரும்" எந்த பிரிவிலும் சேர்க்க முடியாத என் காதலும் சேரமுடியாமல் பிரியும் நேரம் வந்தது... அன்பின் ஆசைகள் பொங்கி வந்த நாளொன்றில் எனக்கான உரிமைகளும் உனக்கில்லை என்றாள்! முதல் முறை உதிரங்கள் கொதித்தது உயிரில் நீ கலந்த பின்பு உரிமையில் எல்லைகள் எனக்கு தெரியவில்லை... எதைவும் தெரியும் முன்பே பிறிந்திருக்க வேண்டிய நேரம் வந்தது..... தனிமையின் தீயில் தவிக்க நான் ஆளானேன்... நொடியிலும் நிமிடத்திலும் மாறி மாறி என் மனம் மரணம் அடைந்தது.... நாள்காட்டிகள் எல்லாம் நான் படும் வேதனையில் பயணம் செய்ய வந்தது... மீண்டும் சந்திக்கும் நாளை எண்ணி6 "மரணதீயில் மறைந்து கிடந்தவன்" மறுபிறவி எடுக்க ஜனனம் தோன்றியது! ஜன்னலின் ஓரம் அந்த நிலவினைக் காண ஜென்மங்களை கடந்து வருவேன்!! காதல் நோயால் சூழப்பட்டவன் உன் கண்கள் தீண்டும் ஒவ்வொரு தீண்டலிலும் விடுபட்டு வெளியே வந்தேன்.... கண்ணியத்தை காத்து வந்த காதலையும் காலத்தையும் நாம் புரிந்து கொண்டதால் -- இன்று பிரிந்து நிற்கிறோமா ?? இல்லை நாம் இருவரும் பிரிந்து நிற்பதால் நான் புரிந்துகொண்டேனா ?? என புரியாமல் புலம்புகிறேன்! பூவே இந்த புதிரான உலகில்!! தெற்கில் நீயும் வடக்கில் நானுமாக திசைகளில் காவலில் நின்றோம்... காவலாக காத்து கிடப்பதில் என்ன பயன் எதற்கும் தான் எனக்கு காரணங்கள் தெரியவில்லையே!!!!!! காதல் வந்த போது காதலென்று அதனை அறிந்துகொள்ள அறிகுறிகள் ஆயிரம் கிடைக்கின்றது! ஆனால் பிரிகின்ற போது ஏனோ கண்ணீர் வடிக்கின்றது!! நீயாக நிறைந்து கிடந்த உயிரெல்லாம் இன்று தீயாக எரிந்து கொண்டிருக்கின்றது! வட்டமிட்ட என் வாழ்வில் திட்டமிட்டவள் எங்கே என்று அது தேடித்தவிக்கின்றது!! இன்பங்களை துறந்து வாழும் இந்த வாழ்வில் இன்றும் ஒயவில்லை ஓவியமே உன் பிம்பம்... வண்ணமற்ற என் இளமையில் வரையாத உன் உருவம் என்னை கறையானாக அறித்துக்கொண்டிருக்கின்றது... பக்குவம் வந்தாலும் பகுத்தறிவு வந்தாலும் பித்தனாக அலைகின்றேன்... தேடலின் நோக்கம் தெரியாதவன் "தேவதையே உன்னைத் தேடி" தெருக்களின் விமர்சனங்களுக்கு விடையளிக்க வழியின்றி வாயடைத்து போனேன்.... பாதைகள் நீண்டு கிடந்தது பாதங்கள் நடக்க தொடங்கியது "உறங்க நேரமின்றி" நடந்து கொண்டிருந்தவன் வயதில் இருள் சூழுமென்று இதயம் நினைக்க மறந்துவிட்டது!! நினைக்க மறந்து நின்ற அந்த வேளையிலும் மறந்தும் உன்னை மீண்டும் மீண்டும் நினைத்தேன்..... உன் நினைவொன்று இருந்தால் போதுமே.... மலரின் மணமாக மணம் வீசுவேன் என்று எண்ணம் கொண்டு உன் நினைவொன்றில் "வார்த்தைகளாக வளம் வந்து சுமைகள் பல வென்று" சுற்றி இருந்தவர்களையெல்லாம் இருள் சூழாமல் என்னை பார்க்க வைத்தேன்.... இருளில் மூழ்கி கிடந்தவனுக்கு முழுவதுமாக ஒளியினை கொடுத்து அவ்வொளியால் உலகில் உதயமாகும் முன்னே உயிரே நீ ஒதுங்கி போன உண்மையை ஒருபோதும் உணர முடியாமல் தவித்தேன்!! உண்மையை உணர முடியாமல் போன பின்பு என் வாழ்வில் ஒளியேற்றுவது? யாறென்று இவ்வுலகம் கேட்டால் எப்படி நான் பதிலளிப்பேன்?? வருடங்கள் சந்திப்பில் உன் காதல் வேறொருவர் மீது இருக்கும் போது காலங்களுக்கு எப்படி நான் பதிலளிப்பேன் இருளில் கிடந்த என் வாழ்விற்கு வெளிச்சத்தை கொடுத்தவளே!!! இந்த சமுகம் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி நான் பதிலளிப்பேன்?? இதழை பிரிக்காமல் மறைத்துக்கொள்ளும் மலரின் தேன்துளிகள் ஒருபோதும் தேனிக்களுக்கு கிடைப்பதில்லை! அதுபோல சொல்லப்படாத காதலெல்லாம் சுகம் பெறாத சோகத்தையே சாரும்!! அதில் இன்று முதல் சொல்லப்படாத என் காதலும் சேரும்...!!!! என்றென்றும் உங்கள் August 21, 2024, 11:16:17 am |
1 |
Re: கவிதையும் கானமும்-046
மழை மேகமாய் உருமாறவா... பூவினை மெல்ல வருடிச்செல்லும் காற்றை போல மிகவும் மெல்லிய உரையாடலில் எழுந்த ஓர் உன்னத உறவு இயல்பான நிலையில் வார்த்தைகள் அதன் இனிமையை இயற்ற வார்த்தைகளின் மென்மை, மெல்லிய சூழல் ஒன்றை உருவாக்கியது அச்சூழலில் உருகிய எண்ணம், அதன் நேசத்தொடு பின்னிக்கொண்டது. பின்னியது எண்ணம் மட்டுமே என்று நினைத்த மாயத்தில் நிகழ்ந்த உரிமைகளின் பரிமாற்றம் உணர்த்தியது - தொலைத்த என் மனதினை. தொலைந்த பொழுதில் வினவிய மனம், வினாக்களுக்கு இரையானது வினாக்கள் விடையில்லாமல் தவித்த போதும், மனமோ தவிப்பே இன்றி என்னை உன்னோடு இன்னும் ஆழமாய் செதுக்கியது. ஆழம் பெருகிய வண்ணம், மனம் உள்ளூர கரைய தொடங்கியது கரைந்தவாரே உன்னில் இருக்கும் - உன் அன்பை, பார்த்து ரசித்தது ரசித்தவை ஏனோ சிறு சிறு இடர் ஈட்ட, மகிழ்வோடு ஏற்றது அச்சிறு இடர்களை ஏற்றவாறே புன்னகை அணிந்து கடக்க நேர்ந்தாலும் என்னில் உள்புகுந்த உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் உரைந்தே போனது உரைந்தது நான் ஆயினும் கண்கள் ஏனோ உன்னை மட்டும் தேடியது கண்ணோடு காண இயலாமல் மொழியோடு மட்டுமே இணைகிறோம் ஆயின் மொழி வழியில் கவிதையாய் உருமாறி உரைகிறேன் உன்னில் நானாய் உன்னோடு சேர துடிக்கும் என் மனதை பசுமை நிறைந்த சோலையில் பூக்கும் பூவின் மீது விழ, எண்ணி தவிக்கும் மழை துளி வழியே நானும் ஓர் மழை மேகமாய் உருமாறவா 🌿🌧️💚 August 23, 2024, 02:47:43 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-046
என் இனியவளே உன்னோடு பேசிய நாட்கள் உன்னோடு பேசிய பொழுதுகள் இனி கிடைக்குமா கண்மணியே .... கதிரவன் வரும் முன் , கதிரவனைப்போல வருவாள் வாசலில் கோலம்போட என்னவள் .... அவளை காண்பதற்காவே காலையில் கண்விழிப்பேன் ரீங்காரத்தை இதயத்தில் வைத்தேன் .... அவளது அழகில் மயங்கியது எனது உள்ளம் அவள் கோலம் வாசலில் மட்டும் போடவில்லை ..... எனது இதயத்திலும் போட்டுவிட்டால் கோலத்தின் புள்ளிகளோடு ஆரம்பித்த காதல் ….. காதல் மலர்ந்த தருணம்.. அவளை நேசிக்க தொடங்கினேன் சுவாசிக்க விரும்பினேன் வாழ்நாள் முழுவதும் ….. அவள் போகும் பாதியில் அவளின் கால்தடங்களில் எனது கால்தடத்தையும் பதித்தேன் ஒன்றாக பயணிக்க ….. மின்சாரம் பாய்ததுபோல இருந்தது அவள் என்னை பார்த்த பார்வை அன்றே நினைத்தேன் அவள் தான் எனது சம்சாரம் என்று ….. இதயத்தில் மலர்ந்த காதலை சொல்ல துணிந்தேன் மலரை கையில் ஏந்தியபடி சென்றேன் என் தேவதை காண ….. நான் அன்று கண்ட காட்சி இதயத்தில் அம்பை எய்ததுபோல் அவள் அவளுக்கு பிடித்தவனுடன் ….. நான் தனிமையில் மலர்ந்த மொட்டு கருகியது போல எனது காதல் கருகியது அன்று உணர்ந்தேன் இதயத்தின் வலியை கண்கள் புரிந்துகொள்ளும் என்று …. எனது மனதின் நிலைமை தண்ணீரில் இருக்கும் மீனை தரையில் போட்டதுபோல் துள்ளியது ….. அன்று நான் மறைத்தது மலரை மட்டும் அல்ல எனது மனதையும் தான் … புதைத்தேன் காதலை என் இனியவளுக்காக ….. நீலவானம் August 27, 2024, 11:49:45 am |
1 |
Re: கவிதையும் கானமும்-046
❣️❣️ சொல்லாத என் காதல்❣️❣️ காதலின் ஆழம் அறியவில்லை என்னுள் காதல் பூக்கும் வரை ஒரு தலை காதலின் பாரம் மனம் இங்கு தாங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் துடிக்க மறுக்கும் இதயத்தை கையில் ஏந்தி சுமக்கிறேன் என்றாவது ஒரு நாள் அது துடிப்பது உனக்காக என்று உறைக்கவே . எப்படியும் சொல்லிவிடும் உறுதியுடன் சென்றவள் நின்றேன் சிலையாகிறேன் என்னுள்ளே ஆயிரம் உறையாடல்கள் அவன் முன்னாள் ஊமையாகிறேன். எழுதிசெல்லும் விதியின் கையோ மறந்து போனதே என் எழுத்தை என்கிறேன் வலி மறந்த இதயத்தின் மொழி அறிய மௌனமாகிறேன். முயன்று எடுத்த முயற்ச்சியுடன் சோலையில் உனைக்கண்டு விக்கி நிற்கிறேன் என்னவன் ஆகி இருக்க வேண்டிய நீ உன் அவளுடன் உன்னைக் காண்கிறேன். இந்த முறையும் துடிக்க மறுக்கும் இதயத்தை கையில் ஏந்தி சுமக்கிறேன் தோற்று நான் ஒதுங்கி நிற்கையில் யுகமாய் கடக்கும் உன் நினைவுகள்.... என் காதல் என்னுள்ளே கானல் நீராய்.... உன் காதல் அவளுடன் கல்யாண தேராய்....வாழ்க பல்லாண்டு !!! நேசமிகு ❣️தென்றல்❣️ August 28, 2024, 11:34:45 am |
1 |
Re: கவிதையும் கானமும்-046
ஆள மயக்குதடி உன் சிரிப்புல - என் ஆவி துடிக்குதடி ! இந்த பாவி மனசுல தாவிக் குதிச்சு வந்து நின்னவ நீ தானடி ! சொல்லி போனாயடி என்னுள்ளே உன் வார்த்தைகள் பல சொல்லி போனாயடி ! பாதியில வந்த பந்தம் நீயடி - இப்ப பாத மறந்து போனதென்ன சொல்லடி ! புன்னகை செய்தவளும் நீதானடி - இன்று புறக்கணித்தவளும் நீதானடி ! கதை பேசியவளும் நீதானடி - இன்று கத்தி வீசியவளும் நீதானடி ! கனவில் வந்தவளும் நீதானடி - கடைசியில் கனவாய் போனவளும் நீதானடி ! கன்னி உந்தன் கள்ளச்சிரிப்ப காதலுன்னு நான் நினைச்சேன் ! எனக்குள்ளே கண்டபடி நான் சிரிச்சேன் ! அனுதினம் உன்னோட நான் பேச எனக்குள்ளே அடிக்கடி ஒத்திகை நான் பார்த்தேன்! கடிகார நொடி முள்ளாய் கடந்துக்கொண்டே இருந்தேன் என் காதலை உன்னிடம் சொல்ல நகர்ந்து கொண்டே இருந்தேன்! காதல் சொல்ல ஆவலோடு நான்? கைகள் கோர்த்து அவனோடு நீ ! உனக்காக வந்தேன் சிவருத்ரன் - ஆனால் உன்னருகே வேறொருத்தன் ! நான் கண்ட காட்சி என் கண்ணுக்குள்ளே அனலாச்சி என் காதலின் கடைசி மூச்சியும் நின்னாச்சி ! உன் காதல் அவனோடு - கடைசியில் என் கையில் திருவோடு ! மங்கை உனக்காக கொண்டு வந்த மலரை மறைத்துக் கொண்டேன் என் மனதோடு ! எழுதி முடித்த என் டைரியில் எழுதாமல்விட்ட பக்கங்கள் நீ ! கிழிக்க மனமின்றி கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன் ஒரு தலை காதலோடு கவிதைகளை ! மறக்காமல் வந்துவிடு மறு ஜென்மத்தில் உன்னை தந்ததுவிடு ! August 29, 2024, 04:56:37 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-046
அன்று..கனவுதேவதைக் கதைகளின் மீது நம்பிக்கையற்ற ஒருவனாய் நான்.. அக்கதையின் கருவிற்கு உயிர்க்கொடுக்க வந்தவளாய் நீ.. ஏன் வந்தாய்? அவள்..பௌர்ணமியின் வெண்-வட்ட நிலவொளிப் பிரகாசத்தையே மங்கவைக்கக்கூடிய முகஜூவாலை.. பூமியின் காந்தயீர்ப்பு விசையை விஞ்சிய விழியீர்ப்பு விசை... கப்பல் கரைசேர உதவுமாம் கலங்கரைவிளக்கம்.. நான் அவள் மனம்சேர விளக்கமாய் ஜொலிக்கும் அவள் மூக்குத்தி.. சிகரத்தின் இடையே பசுமைப் பள்ளதாக்குகளாய் அவள் கன்னங்குழி.. அதில் அவ்வப்போது தற்கொலைசெய்து முக்தியடையும் என் பார்வைகள்.. பட்டைத்தீட்டிய கோஹினூர் வைரமாய் கடைவாயோரம் அச் சிங்கப்பல்.. கோதுமை நிறமேனியைப் பொருந்திய "நெற்களஞ்சியத்தின்"என் கனவு தேவதையே... அன்று... கல்லூரியில் ஒற்றைக் காகித ரோஜாவின் பரிமாற்றத்தில் நம் நட்பு.. பரிணாமமடைந்து தொடர.., வகுப்பில் புத்தகப் பரிமாற்றிப் படிப்பு.. மாலை அடுமனையில் இரு கோப்பை தேநீருடன் உன் அக்கறைப் பேச்சு சர்க்கரைத் தித்திப்பு.. உன் விடுதிவரை உன்னுடன் நான் கைகோராமல் மனம்கோர்த்து நடந்து செல்லும் நிமிடம் என்னுள்ளே பூரிப்பு.. ஸ்மார்ட்போன் இல்லாததால் ஹார்ட்போனாய் என் நோக்கியாவில் உன்னை நோக்கிய என் முகநூல் உரையாடலில் நேசிப்பு.. இவை இன்று நினைத்தாலும் என் உள் நெஞ்சில் பூக்கும் மத்தாப்பு.. அன்று.. அக்காகித ரோஜா., காதல் ரோஜாவாய் என்னுள் உயிர்த்து மலர., சொல்லவந்த காதல் சொல்லா ஆசையுடன் செல்லாக்காசாய் என்னுள் சிதரிய அத்தருணம்.. நாளை நாளை என்று தள்ளிப்போட்ட மனம்.. காதல் ரோஜாவின் தண்டை என் மன ஊன்றுகோளாக்கி., தைரியத்துடன் அக்கணம்.. அடுமனை நோக்கிய என் பயணம்.. நம் நாற்காலியில் நீ உன் தேநீர்க் கோப்பையோடு கண்ணில் காதலோடு எதிரே உன் கண்ணாலனோடு பார்த்த நொடி இன்பமரணம்.. காதல் ரோஜா காகித ரோஜாவாகவே இருந்திருக்கலாம் என்று யோசித்த மனம்.. ஏன் எனக்கு இந்த நிலை வரணும்.. ஹாஹாஹா.. இதுவே என்னை போன்று பல இதயம் முரளிகளின் சொல்லபடாத ஒரு தலைக்காதல்களின் வலி கலந்த சிறப்பு... - இதயம் 💔 முரளியாய் உங்கள் ✍️ H❤️U❤️N❤️K ✍️ August 29, 2024, 09:45:20 pm |
1 |