Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2 3
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-046
மழை மேகமாய் உருமாறவா...



பூவினை மெல்ல வருடிச்செல்லும் காற்றை போல
      மிகவும் மெல்லிய உரையாடலில் எழுந்த ஓர் உன்னத உறவு 

இயல்பான நிலையில் வார்த்தைகள் அதன் இனிமையை இயற்ற
      வார்த்தைகளின் மென்மை, மெல்லிய சூழல் ஒன்றை உருவாக்கியது
      அச்சூழலில் உருகிய எண்ணம், அதன் நேசத்தொடு பின்னிக்கொண்டது.

பின்னியது எண்ணம் மட்டுமே என்று நினைத்த மாயத்தில்
      நிகழ்ந்த உரிமைகளின் பரிமாற்றம் உணர்த்தியது  - தொலைத்த என் மனதினை.
      தொலைந்த பொழுதில் வினவிய மனம், வினாக்களுக்கு இரையானது
      வினாக்கள் விடையில்லாமல் தவித்த போதும், மனமோ தவிப்பே இன்றி என்னை உன்னோடு இன்னும் ஆழமாய் செதுக்கியது.

ஆழம் பெருகிய வண்ணம், மனம் உள்ளூர கரைய தொடங்கியது
     கரைந்தவாரே உன்னில் இருக்கும் -  உன் அன்பை, பார்த்து ரசித்தது

ரசித்தவை ஏனோ சிறு சிறு இடர் ஈட்ட, மகிழ்வோடு ஏற்றது
      அச்சிறு இடர்களை ஏற்றவாறே புன்னகை அணிந்து கடக்க நேர்ந்தாலும்
      என்னில் உள்புகுந்த உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் உரைந்தே போனது

உரைந்தது நான் ஆயினும் கண்கள் ஏனோ உன்னை மட்டும் தேடியது
      கண்ணோடு காண இயலாமல் மொழியோடு மட்டுமே இணைகிறோம் ஆயின்
      மொழி வழியில் கவிதையாய் உருமாறி உரைகிறேன் உன்னில் நானாய்

உன்னோடு சேர துடிக்கும் என் மனதை
      பசுமை நிறைந்த சோலையில் பூக்கும் பூவின் மீது விழ, எண்ணி தவிக்கும் மழை துளி வழியே
நானும் ஓர் மழை மேகமாய் உருமாறவா 🌿🌧️💚


August 23, 2024, 02:47:43 pm
1
Re: கவிதையும் கானமும்-046 ஆள மயக்குதடி 
உன் சிரிப்புல - என்
ஆவி துடிக்குதடி !

இந்த பாவி மனசுல
தாவிக் குதிச்சு வந்து நின்னவ நீ தானடி !

சொல்லி போனாயடி என்னுள்ளே
உன் வார்த்தைகள் பல சொல்லி போனாயடி !

பாதியில வந்த பந்தம் நீயடி - இப்ப
பாத மறந்து போனதென்ன சொல்லடி !

புன்னகை செய்தவளும் நீதானடி - இன்று
புறக்கணித்தவளும் நீதானடி !

கதை பேசியவளும் நீதானடி - இன்று
கத்தி வீசியவளும் நீதானடி !

கனவில் வந்தவளும் நீதானடி - கடைசியில்
கனவாய் போனவளும் நீதானடி !

கன்னி உந்தன் கள்ளச்சிரிப்ப
காதலுன்னு நான் நினைச்சேன் ! எனக்குள்ளே
கண்டபடி நான் சிரிச்சேன் !

அனுதினம் உன்னோட நான் பேச எனக்குள்ளே
அடிக்கடி  ஒத்திகை நான் பார்த்தேன்!

கடிகார நொடி முள்ளாய் கடந்துக்கொண்டே இருந்தேன்
என் காதலை உன்னிடம் சொல்ல நகர்ந்து கொண்டே இருந்தேன்!

காதல் சொல்ல
ஆவலோடு நான்?
கைகள் கோர்த்து அவனோடு நீ !

உனக்காக வந்தேன் சிவருத்ரன் - ஆனால்
உன்னருகே வேறொருத்தன் !

 நான்
கண்ட காட்சி என் கண்ணுக்குள்ளே அனலாச்சி
என் காதலின் கடைசி மூச்சியும் நின்னாச்சி !

உன் காதல் அவனோடு
  - கடைசியில்
என் கையில் திருவோடு !

மங்கை உனக்காக கொண்டு வந்த மலரை
மறைத்துக் கொண்டேன்
என் மனதோடு !

எழுதி முடித்த என் டைரியில் எழுதாமல்விட்ட பக்கங்கள் நீ !
கிழிக்க மனமின்றி கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்
ஒரு தலை காதலோடு கவிதைகளை !

மறக்காமல் வந்துவிடு
மறு ஜென்மத்தில் உன்னை தந்ததுவிடு !

August 29, 2024, 04:56:37 pm
1
Re: கவிதையும் கானமும்-046 அன்று..கனவுதேவதைக் கதைகளின் மீது நம்பிக்கையற்ற ஒருவனாய் நான்..

அக்கதையின் கருவிற்கு உயிர்க்கொடுக்க வந்தவளாய் நீ.. ஏன் வந்தாய்?

அவள்..பௌர்ணமியின் வெண்-வட்ட நிலவொளிப் பிரகாசத்தையே மங்கவைக்கக்கூடிய முகஜூவாலை..

பூமியின் காந்தயீர்ப்பு விசையை விஞ்சிய விழியீர்ப்பு விசை...

கப்பல் கரைசேர உதவுமாம் கலங்கரைவிளக்கம்..

நான் அவள் மனம்சேர விளக்கமாய்  ஜொலிக்கும் அவள் மூக்குத்தி..

சிகரத்தின் இடையே பசுமைப் பள்ளதாக்குகளாய் அவள் கன்னங்குழி.. அதில் அவ்வப்போது தற்கொலைசெய்து முக்தியடையும் என் பார்வைகள்..

பட்டைத்தீட்டிய கோஹினூர் வைரமாய் கடைவாயோரம் அச் சிங்கப்பல்..

 கோதுமை நிறமேனியைப் பொருந்திய "நெற்களஞ்சியத்தின்"என் கனவு தேவதையே...   

அன்று... கல்லூரியில் ஒற்றைக் காகித ரோஜாவின் பரிமாற்றத்தில் நம் நட்பு..

பரிணாமமடைந்து தொடர..,
வகுப்பில் புத்தகப் பரிமாற்றிப் படிப்பு..

மாலை அடுமனையில் இரு கோப்பை தேநீருடன் உன் அக்கறைப் பேச்சு சர்க்கரைத் தித்திப்பு..

உன் விடுதிவரை உன்னுடன் நான் கைகோராமல் மனம்கோர்த்து நடந்து செல்லும் நிமிடம் என்னுள்ளே பூரிப்பு..

ஸ்மார்ட்போன் இல்லாததால் ஹார்ட்போனாய் என் நோக்கியாவில் உன்னை நோக்கிய என் முகநூல் உரையாடலில் நேசிப்பு..

இவை இன்று நினைத்தாலும் என் உள் நெஞ்சில் பூக்கும் மத்தாப்பு..

அன்று.. அக்காகித ரோஜா., காதல் ரோஜாவாய் என்னுள் உயிர்த்து மலர., சொல்லவந்த காதல் சொல்லா ஆசையுடன் செல்லாக்காசாய் என்னுள் சிதரிய அத்தருணம்..

நாளை நாளை என்று தள்ளிப்போட்ட மனம்..

காதல் ரோஜாவின் தண்டை என் மன ஊன்றுகோளாக்கி., தைரியத்துடன் அக்கணம்..

அடுமனை நோக்கிய என் பயணம்..

நம் நாற்காலியில் நீ உன் தேநீர்க் கோப்பையோடு கண்ணில் காதலோடு எதிரே உன் கண்ணாலனோடு பார்த்த நொடி இன்பமரணம்..

 காதல் ரோஜா காகித ரோஜாவாகவே இருந்திருக்கலாம் என்று யோசித்த மனம்..

 ஏன் எனக்கு இந்த நிலை வரணும்..

ஹாஹாஹா.. இதுவே என்னை போன்று பல இதயம் முரளிகளின் சொல்லபடாத ஒரு தலைக்காதல்களின் வலி கலந்த சிறப்பு...

     - இதயம் 💔 முரளியாய் உங்கள்

                 ✍️ H❤️U❤️N❤️K ✍️

August 29, 2024, 09:45:20 pm
1
Re: கவிதையும் கானமும்-046 "எதிர்பார்ப்பது என் தவறா??
இல்லை, என் ஏக்கங்களை அறியாமல் இருப்பது அவள் தவறா??
"ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏங்கிக் கொண்டிருப்பது என் தவறா??
"இல்லை, எண்ணங்களை எடுத்துரைக்க தெரியாமல் இருப்பது அவள் தவறா??
"ஏக்கங்களை கட்டுப்படுத்தவா??
"இல்லை உணர்ச்சிகளை கொட்டித் தீர்க்கவா??
"சொல்லத் தெரியாத நிலையில் நானும்!!!
"சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் அவளும்!!!
"தினமும் இப்படித் தான் நகர்கிறது ரனம் மிகுந்த எனது நாட்கள்!!!

"புத்தம்புது ஓவியமாய்
பொன்னிற காவியமாய்
கண்ணில் தென்பட்டவள்
என்னில் தேவதையானவள்"

"முதன்முறை நான் உன்னைப் பார்த்த போது
எனக்குள் ஏதோ செய்தது"
"அது விண்ணில் என்னைப் பறக்கச் செய்தது"
"அது என்னையே என்னை மறக்கச் செய்தது"
"எல்லாமே எனக்குள் புதிதானது என்னுள் சுகமானது!!!
"எல்லாமே எனக்குள் புதிதானது என்னுள் சுகமானது!!!

"வார்த்தைகளைத் தொலைத்து போர் புரிந்தேன் உள்ளுக்குள்
மௌனங்களைக் கலைத்து உன்னிடம் பேச என் மனம் சில நொடிகள் தவித்தது"
"என் மனம் சில நொடிகள் தவித்தது"

"உலகத்தைப் புதிதாய் உருமாற்றியவள் நீயடி!!!
"உலகத்தைப் புதிதாய் உருமாற்றியவள் நீயடி!!!
"என் உலகமே நீயென உன்னுள் தொலைந்து மாறிப்போனேன் நானடி!!!
"என் உலகமே நீயென உன்னுள் தொலைந்து மாறிப்போனேன் நானடி!!!

"முதல்முறை உன் முகம் கண்ட உணர்வு வியந்தேன், ரசித்தேன், பிரமித்தேன் ரகசியமாய் உன்னை ரசித்தே சுவாசிக்கிறேன்!!!
"ரகசியமாய் உன்னை ரசித்தே சுவாசிக்கிறேன்!!!

"கொட்டும் மழையில் அவளுடன் கைகோர்த்து நடக்க ஆசை!!!
"முழு பவுர்ணமி நிலவில் கடற்கரையில் அவளுடன் தோள் சாய்ந்து கதை பேசி, மடி சாய்ந்து உறங்க ஆசை!!!

"பெண்ணே உன் புன்னகையே போதுமென்று தூரமாய் இருந்து ரசித்து என் உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது எந்தன் ஒருதலை காதல் இன்றும் உயிருடன்!!!

"என் காதலை அவள் எப்படி மறுத்து வாழ்கின்றாளோ அதைவிட அதிகமாய் அவளின் நினைவுகளை சேர்த்து சேமித்து திரிகின்றது எந்தன் ஒருதலை காதல் இன்றும் உணர்வுடன்!!!

"தண்ணீரே இல்லாத பாலைவனம் போல என்னுடன் அவள் இல்லாது இருந்தாலும் என் இதயம் அவளின் நினைவுகளை சுமந்துகொண்டு தான் இருக்கிறது எந்தன் ஒருதலை காதல் இன்றும் அழகுடன்!!!

"நாட்கள் அதிவேகத்தில் நகர்கின்றது ஆனால் நானோ இன்னும் அப்படியே நிற்கின்றேன் அவள் என்னை விட்டு சென்ற இடத்தில் என்றும் அவளின் நினைவுகளோடு!!!

"பெண்ணே உன் நினைவுகளை
என் கண்ணீர் துளி விட்டு அழிக்க முயற்ச்சிக்கிறேன்.... ஆனால் என் கண்ணீர் துளியிலும் கூட உன் நினைவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து செல்கிறதே தவிர, பெண்ணே உன் நினைவுகளை மட்டும் என் மனதில் இருந்து என்னால் அழிக்க முடியவில்லை!!!

"அவள் எனக்கு இல்லை என்று உறுதியாக தெரிந்த பிறகும் இன்னும் உயிரோடு வாழ்கிறேன்.... அவளோடு கழித்த அந்த மகிழ்ச்சியான நாட்களை என் நெஞ்சில் சுமந்து கொண்டே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எந்தன் சுகமான அந்த ஒருதலை காதலோடு!!!

"பெண்ணே இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சரி...
"எப்போதும் என் காதல் தொடருமடி"
"எப்போதும் என் காதல் தொடருமடி"
"எப்போதும் நீ எனக்கு அழகு தேவதையடி"
"எப்போதும் நீ எனக்கு அழகு தேவதையடி"
"பெண்ணே உன்னை நேசிக்குமளவிற்கு வேறு யாரையும் நான் நேசித்ததுமில்லை, யோசித்ததுமில்லை"

"அப்போது இருந்த என் ஒருதலைக் காதல் இன்று இருத்தலைக் காதலாக மாறிப்போனது வியந்தேன், பிரமித்தேன், மெய்சிலிர்த்தேன்!!!
"நான் புதிதாக பிறந்ததைப் போல உணர்கிறேன்"
"நான் புதிதாக பிறந்ததைப் போல உணர்கிறேன்"
"காதல் மிகவும் மென்மையானது"
"காதல் மிகவும் மென்மையானது"
"சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உன் அன்பிற்குரியவன் MISTY SKY 💙💙


September 07, 2024, 07:33:35 pm
1
கவிதையும் கானமும்-047 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-047


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

September 09, 2024, 06:20:38 pm
1
Re: கவிதையும் கானமும்-047 தரணியில் அன்னையை போல்
நம்மைக் காக்கும் தெய்வம்
இன்னும் தோன்றவில்லையே..!


ஒருவர் இருக்கும் பொழுது அவர்கள் அருமை பலருக்கு புரிவதில்லை.. அவர்கள் இல்லாத பொழுது ஏற்படும் வலி நாம் அனைவரும் உணர்ந்ததே!! அப்படி பெற்றோரை இழந்து வாழும் என் அம்முவிற்கு இந்த படைப்பு சமர்ப்பணம்🙏

ஐயிரு திங்கள்
அங்கம் சுமந்து
ஐயமர நாளும் காத்தாய்!

கருவாய் என்னை
உணர்ந்ததுமே
உருவம் மனதிற்குள் தந்தாய்!

வெளிவரா என்னோடு
வெளிப்படுத்தினாய்
உன் உணர்வுகளை!

அசைவுகளை கண்டே
ஆனந்தம் கொண்டாய்
அழகாய் உன் நெஞ்சில்!

நாட்கள் செல்லச் செல்ல
நான் வெளிவரும்
நாட்களை எண்ணினாய்!

மாதமோ நெருங்கி வர
மனமெங்கும்
மாற்றெங்கள் பல கண்டாய்!

உள்ளுக்குள்ளே
நான் உதைக்க
உனக்கோ ஆனந்த கொண்டாட்டம்!

உருண்டு படுக்க
உடல் விழைந்தாலும்
உறக்கமில்லா திண்டாட்டம்!

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாற்றம் கண்டு
மனமெங்கும் பூரித்தாய்!

நெருங்கி வரும்
நாளை எண்ணி
மனதிற்குள் பயமும் கொண்டாய்!

வலியை மெதுவாய்
உணர்கையில்
மகிழ்ச்சியே அடைந்தாய்!

தசைகள் கிழிய
எலும்புகள் உடைய
எனக்காய் தாங்கிக் கொண்டாய்!

உதிரம் சொட்ட
உனக்கும் வலிக்க
என்னை ஈன்றாய் என்தாயே!

பட்ட துன்பம்
அத்தனையும்
பாலகன் என் முகம் காணவோ?

தொட்டு என்னை
தூக்கிடவே - பட்ட
தொல்லையெல்லாம் மறந்தாயே!

உந்தன் உதிரத்தைப்
பாலாய் எனக்களித்து
இரத்த ஓட்டம் கொடுத்தாயே!

என்னுள் துடிக்கும்
இதயத்தை விட
அதிகமாய் எனக்காய் துடித்தாயே!

தந்தை கையில்
என்னைத் தந்து
தவழக் கண்டு அகங்குளிர்ந்தாய்!


நான் பிறக்க நீ பட்ட கஷ்டம் என்னென்னவோ என்று  நான் என்னி பார்க்கும் முன்னே நான் வளர நீ அடுத்த ஒரு யுத்தத்தை தொடங்கி விட்டாய்!

எனக்காக வெயில் மழை பாராமல் நீ உழைக்க
உன் அங்கம் குளிர அந்த கார்மேகம் மழையாய் தூவையிலே என் மகரந்த பூவை தழுவ எனக்கு மட்டுமே உரிமை உண்டென குடை விரித்தேன்!

நீ பட்ட துயரை கண்டு என் உடல் தோலை உரித்து அதில் ஒரு குடை உருவாக்கி உன்னை காக்க என் மனம் துடிக்க ஆனால் இந்த ஜனனம் குடுத்த என் வாழும் தெய்வத்திற்கு உன் ஆயுள் முழுக்க பணிவிடை செய்ய வேண்டி என் மனதை கல்லாக்கி ஏதோ ஒரு துணியில் ஆன ஒரு குடை விரித்தேன் என் வாழும் தெய்வமே!




September 10, 2024, 09:00:11 am
1
Re: கவிதையும் கானமும்-047
உன் கார்குழலை வருடும் காற்றாக


உருவம் அறியா பொழுது முதல் தோன்றிய நேசம்
அவளோடு என்னை ஓர் உயரிய உயிரின் பொருளாகவைத்தது.

உயிராக நான் என்று ஆன பின் - அவளோடு
உயர்வாக எண்ணிய அனைத்தும் துகள்களாக மாறின

தன்னோடு தான் கொண்ட துயர்களை சிறு பணிவோடு ஏற்றவாறே
தன் நேசத்தை, உயிர் பொருளின் சிறப்பாக தனக்குள்
சேமித்தாள்

தன்னைப்பற்றிய சஞ்சலம் சிறிதளவு கூட கொள்ளாமல்
தன் தனித்துவமான அன்பின் வழியில் தூய சுடர் ஏற்றுவாள்
 
தன் கருவிழிகளுக்குள் சிறு தூசு அண்டாதவாறு தனக்குள் தூய்மையாக தனக்கென அடைகாப்பாள் 

அன்பின் அனைத்துமாக தான் என இருப்பினும்
தாம் பெற்ற இடர் ஏதும் செயல் இழந்தவாறு கையாளுவாள்
 
தனக்கென தேவை ஏதும் ஏற்காமல் என் தேவையை பெரிதென கண்டாள்

எனக்காய் நீ  இருந்த நாட்கள் அனைத்தும் உணர்த்தியவை யாதெனில்
உன்னில் நானாய் என்றும் உனக்காக நான் வேண்டும் என்று
 
உன்னிடத்தில் மடி  சாய்ந்து என்னை மறந்த நேரங்களில் கூடாத மதிப்பு
ஏனோ எனக்காய் நீ  உழைத்த நேரங்களில் கண்ணீர் மல்க கூடியது

சிறிய இடைவேளையை கூட உனது புன்னகையில் இதழ் கூப்பி
என் நேரத்தை பொன் போன்று மதிப்பிட செய்தாய்

வார்த்தைகளால் விவரிக்க முடியாத உன் அன்பில் நீந்திய என்னை
ஏனோ ஒரு புயல் இன்னொரு கரை கொண்டு சேர்த்தது

புயலை கண்டு அஞ்சிய நான் வசிப்பது முழுதும் உன் சுயநலமே இல்லாத அன்பின் வகையின் பொருட்டாய்

கரை கடந்து புயல் போன பின்னும்
உன் நினைவை கடக்க தெரியாத நான் கொள்ளும் எண்ணம் யாதெனில் 
புயல் ஓய்ந்த பின்  மழையின் சாரலை கண்டு ரசிக்கும் அமைதியான சூழலில் மெல்ல உன் கார்குழலை வருடும் காற்றாக நான் மாற வேண்டுமென


September 12, 2024, 07:07:04 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#071 Hi sm team
Vanthu vitten enna nala irukengala😁😁😁
Irandu manthayil pirindtha aadugal meendum santhitha pothu pesamudiyavillaye😂😂😂

Song name:பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு

Singers:S. P. Balasubramanyam, Chithra
Movie : Kamarasu
 
Piditha varigal:அக்பரது ராஜ்யத்தில் நீ அனார்கலி
சந்தான தேர் நானா வந்த சலீம் நானடி

ஏதெனின் தோட்டத்தில் எவளும் நானாக
ஆதமின் நெஞ்சத்தில் ஆனந்த தேனாக
இரவும் பகலும்
இணைந்து கலந்த
ஞாபகம் இருக்குதா
இதயமும் சிவக்குதா

மன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி
நெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி

லைலாவே நான் காதல் பைத்தியம் ஆனேனே
மஜ்னுவின் மனசுக்கு வைத்தியம் ஆவாயா

கனவில் மலர்ந்த
காதல் கதைகள்
ஆயிரம் உலகிலே
அனைத்தும் நம் கதைகளே


Intha song keta apdi nenjamellam love ah irukum😍😍😍
Love panugaya ulagam alaga terium😍😍😍
Nala irupom nala irupom yellarum nala irupom😁😁😁

Poitu vare😂😂

September 15, 2024, 08:00:33 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#071 Hallooo GTC makkeley ❤ !! 

Song name : Ullalla from petta

Fav lyrics : Kaiyil kedachathu tholanjaa
Innum romba pudichathu kedaikkum
Aana aasai adakkida therinjaa
Inga ellaam kaaladiyil kedakkum

Soldrathuku onnum ila ellam song keathutu poi thungunga byee 🤣🤣

September 16, 2024, 10:53:51 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#071
Hi SM team,

Successful 70 episodes and into 71 st. Congratulations on this 🎉 👏. A special mention to Salikama script ezhuthura DON Nila, konjam script miss aana kuda bangama vechu seyra Coffee boy and namma new RJ Thendral Goldie ma. Thank you for giving us such an entertaining show. Though all are busy, beyond ur schedules ur effort for this show makes us to feel proud of u. Thank you team.

This week I m going to request a special song
Song name : uravugal thodarkathai cover by Pk
https://youtu.be/mkj9odTTO48?si=es-vPfllxpMBXcWH
Movie : aval apadithan

Intha song specially dedicated to some of my dears and intha week it's so special. Intha week nama dears oda bday week so it's a special week of gtc.

My lovely dears Misty Sky, AsLaN, Mansi, Limat, Dharshini My advance birthday wishes. It's a special dedication to u all.


Also I dedicate this song to my dear girls gang Globe,Mumi, RiJiA, Thendral, Puttu, NiLa, Jasvi, Jodha, Shalini, Aaradhna, Wings, Heartkiller, Butterfly and all my dear lovable friends

Thank you



September 16, 2024, 10:39:33 pm
1