See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-048
சுனாமியில் எழும் பேரலைகளைவிட ஆபத்தானது, தனிமையில் எழும் பெண்ணின் நினைவலைகள்...! தனிமை என்னும் மெழுகின் வெப்பம் என்னை சுட்டெரிக்க..! நிலவொளியாய் உந்தன் நினைவலைகள் என்னை தழுவ சில வரிகள் என்னில் உனக்காக..! வானத்தின் தூரம் போலவே எனது உயிரின் புன்னகையை நான் பார்க்கிறேன்... மெதுவாக எழுந்து நடக்கத்துடிக்கும் அந்த பாதங்களை நான் முத்தமிட வேண்டும்.... எனது மனதின் வலிமையை உடைத்தெறிகிறது அந்த - ஊமையான நிழல் படம்... யாராலுமே நிரப்ப முடியாது என் இருளினை என் இன்னொரு உயிரின் புன்னகையைத்தவிர... அந்த அழகான நினைவுகளை கடத்திச்செல்லும் நிமிடங்களுக்கு ஈடாக இன்னொரு உலகம் செய்தாலும் போதாது எழுத நினைக்கிறேன்.... உன்னை வாசித்த படியே நீ என் அருகில் இல்லாத வலிகளைச்சொல்லி.... என்னைச்சுற்றிய கோடுகளை உன் நினைவுகள் நிரப்புகிறது.... உன்னைச்சேரும் நாட்களை எண்ணியே என் இளமை இறக்கிறது... யாராலுமே உணர முடியாத ரணங்களை என் உயிர் சுமந்து செல்கிறது..... இது ஒரு கொடூரமான மௌனப்பயணம் உன்னை அடையும் நாள் வரைக்கும்.... என் விழிகளில் விழுந்த நீ, ஏன் விலகிச்செல்ல மறுத்தாய் ஏன் விதையாய் முளைத்தாய் தினம் உனைத்தாங்க நினைக்கிறது மனசு அதே கணம் உன் அருகாமையை இழந்து தவிக்கிறது உசுரு.... என் மரணத்தை வென்றவன் நீ... என் இளமையை சுண்டி இழுத்தவன் நீ... என் விதியினிலே விதையாய் வீழ்ந்தவனும் நீ.... காற்றெல்லாம் தேடுகிறேன் என் காதோரம் உன் - குரலை காணவில்லை.. காதலனானாய், மனாளனானாய், என் குழந்தையும் நீயானாய் உன்னோடு நான் வாழாமலே.. தனிமை என் மீது சரிந்து விழுகிறது நான் சாய்ந்து கொள்வதெப்போது உன் மார்பின் மேலே...? October 01, 2024, 08:57:45 am |
1 |
Re: கவிதையும் கானமும்-048
தனிமை சிலர் மட்டுமே தாங்கிகொள்ளும் ஆயுதம் தனிமை தாக்கி கொள்ளும் ஆயுதமும் கூட தனிமையில் கடக்கும் நிமிடங்கள் சிலருக்கு சிறந்ததோர் அறிவினை கொடுக்கும் தனிமை சிலருக்கு நரகத்தினை காட்டும் தனிமையில் சாத்தானும் ஞானம் பெறுகின்றான் தனிமையில் புத்தனும் சாத்தான் ஆகின்றான்.! தனிமை விந்தையானது ஆண் பெண் இருவரை இணைப்பதுண்டு தனிமையால் இரு உறவுகள் பிறிவதும் உண்டு தனிமை படைப்புகளின் பிறப்பிடம் தனிமை அழிவின் ஆரம்பமும் கூட.., இளமையின் தனிமை காதலால் சிலரை மகிழ்விக்கும்., தனிமை காதல் பிரிவை தந்தது நிமிடங்களையும் கசந்திடச்செய்யும்., நான் கொண்ட தனிமையில் இக்கவியை படைத்தேன்.... தனிமையை நேசிக்க கற்றுகொண்டேன் நிழல் பிரிந்தாலும் நான் உன்னை பிரியேன் என என்னை அணைத்து கொண்டது தனிமை., எனக்கும் உன்னை பிரிய மனமில்லை பற்றி கொண்டேன் உன்னை என் இனிய தனிமையே.. தனிமை இருள் அல்ல தனிமையை நேசிக்க கற்றுகொண்டால் தனிமை இறைவன் தந்த அருள்ளென்பாய்.. தனிமையை கையாள கற்றுக்கொண்டால் நமனை கண்டாலும் போடா என்பாய்.., தனிமையில் நொருங்கி போகாதே தனிமையை உனதாக்கிகொள் படைத்தவனும் தனிமையில் தானே இருக்கின்றான் மானிடன் உனக்கு மட்டுமல்ல...கடவுள் கூட தனிமைவிரும்பியே.. Gtc தோழர் தோழிக்கு இக்கவியை சமர்பிக்கிறேன் நன்றிகள் பல..!!!!! உங்கள் நண்பன் Dan_Bilzerian 😍😍😍🥳🥳🥳🥳 October 01, 2024, 09:04:24 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-048
❣️❤️என்னுயிர் அன்பனே!❤️❣️ என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! தனிமை ஒரு வரம் என இருந்தேன் இன்று என்நிலை அறியும் வரை தனிமை எனக்கான அரண் என்னிடம் என்னை உணர்த்தும் வரை தனிமையில் நான் உன்னை நினைக்கவும் இல்லை உணரவும் இல்லை உன்னை தேடவும் இல்லை என பொய் உரைத்தேன் ஆம் உன்னை தேடவும் இல்லை உணரவும் இல்லை... என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! அழகான நாட்கள் தந்த நினைவுகள் வெளிச்சமாய் என்னுடன் இருக்க அவ்வொளியில் தொலைத்த உன்னை தேடினேன்... என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வாயோ .... என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே!!! தனிமை சோகமா வரமா சோகமே வரமாக ஆனதோ !!! என் நிலை மாறும் ... என் வாழ்வில் இனிமை கூடும் நாள் நீ வரும் நாளோ .... அந்த நாளும் என்று வருமோ என் தனிமை சாபம் தீர உன்னுடன் சேரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! வழி துணையாய் நீ வேண்டும் நம் வாழ்வும் சீராகும் உன் விழியில் ஒளி கண்டேன் நம் வாழ்வின் வழி உணர்தேன் தனிமை துயர் துடைத்தாய் என் தந்தையுமாய் ஆனாய் நீ நீயே என் ஒளி என் தனிமை தீர்க்கும் வழி என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வையோ என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே !!! அழகான அந்நாட்கள் மீண்டும் வாழ கிடைக்குமோ நான் தொலைத்த நீயும் எனை தழுவிய தனிமையும் நீ அறியும் காலம் எப்பொழுது ..... வருவாயோ அன்பனே!!! நீ எனை சேரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! என்றும் தனிமையில் ❣️தென்றல்❣️ October 05, 2024, 12:04:11 pm |
1 |