Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2 3
Post info No. of Likes
கவிதையும் கானமும்-066 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-066


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.





மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

April 07, 2026, 06:26:13 pm
1
Re: கவிதையும் கானமும்-066
நீ கொடுத்த காப்பியின் மனத்தையும் அதில் வரும் ஆவியில் என் இதயமும் ஆவியாய் போகிறதே மாமா என்று நீ அழைத்த நொடியினில் என்னை மறந்து உன் அழகை ரசித்த அந்த நொடியில் என் நெஞ்சில் தோன்றிய சில வரிகள்

மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

இதுவரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா மாமா மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் நான் வாழ!!!

எப்போது நீ அழகு???
நிம்மதி நான் தேடி
உன்மடி சாயும்போது
என் தலை நீ கோதி
ஆறுதல் சொல்கையில்
அடி பெண்ணே நீ அழகு...

ஆயிரம் முறை முயன்று
சில முறை நான் தோற்று
தேம்பி அழும் நிலை கொண்டு
உன் தோள் நான் சாய
ஆறுதல் சொல்லும் போது
அடி பெண்ணே நீ அழகு...

அன்பாய் உன் குறு நகையும்
அம்மாவின் நினைவு சொல்லும்
உன் அன்படி ஆயிரம் வேண்டும்
எப்போதும் நீ வேண்டும்...
என்று நீ உணர்ந்து எனக்காக
நான் இருக்கிறேன் என்ற
நம்பிக்கையும் நீயும்
எப்போதும் அடி பெண்ணே
எந்நாளும் எனக்கழகு...

April 08, 2026, 07:15:11 am
1
Re: கவிதையும் கானமும்-066 நீ என்னை பார்ப்பாயா

ஒளிந்து கண்டேனே...
மறைந்து நடந்தேனே...
கரைந்து சென்றேனே...

என்னை பார்ப்பாயா ?

தயங்கி கிடந்தேனே...
மயங்கி விழுந்தேனே...
இயங்கி மீண்டேனே...

என்னை பார்ப்பாயா ?

நீ செய்த குறும்பையுமே...
என் மனசு விரும்பியதாமே...
என்னிடம் திரும்பவில்லையே...

என்னை பார்ப்பாயா ?

உன்னோடு பேசும் எந்த நாள்...
என்னோட வாழ்வோ அந்த நாள்...
சந்தோசம் பொங்கும் இன்ப நாள்...

என்னை பார்ப்பாயா ?

கனவினில் வாழும் வாழ்க்கையை...
நிஜத்தினில் வாழ பார்க்கிறேன்...
ஒருமுறை வாய்ப்பு கொடுப்பாயா...

நீ என்னை பார்ப்பாயா ?[/b][/left]

- முகேஷ் ராஜா


After Long time i have wriitten This poetry....

Thank you Wings Nanbii Enna Again Kavitha elutha vachathukku...❤️

Thank you to GTC giving me this chance...❤️

This Kavithai dedicated to all Cute One side lovers...❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

April 08, 2026, 11:25:25 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102 My place
April 13, 2026, 12:11:39 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102 Azhaipaya Azhaipaya- song
Kadhalil Sodhapuvadhu Yeppadi - film name
by Karthik singing

Enaku piditha padal kelugal kelugal ketu konde erungal

April 13, 2026, 01:34:16 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102 My place
April 13, 2026, 05:22:40 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102 🎶 Sangeetha Megam – Episode 102
Not just a program… but a weekly festival of joy, rhythm, and smiles!
Every episode drifts in like a gentle musical breeze, filling our hearts with laughter, calm, and pure happiness — a true stress‑buster after a long day. 🌈💫
💐 Our heartfelt gratitude to the ever‑energetic GTC FM Team — the RJs, the coordinator, the coffee boy, and the entire backstage crew — for colouring our weeks with music and magic.
Week after week, you transform ordinary evenings into soulful, unforgettable moments. 🌟💖

HI  சங்கீத மேகம் Team எனக்கு மிகவும் பிடித்த பாடல்-- Nee Avalidam Sol / Tere Ishk Mein
🌧️🎶 This song is lovingly dedicated to MB

Singers/ A. R. Ameen and Jonita Gandhi
Music & Lyrics A. R. Rahman  , Mashook Rahman

ஒரு மனிதன் தன்னுடைய காதலை நேராக சொல்ல முடியாமல், “அவளிடம் நீ சொல்லு…” என்று யாரையோ கேட்கிறான். அதுல ஒரு தயக்கம், ஒரு பயம், அதைவிட அதிகமா ஒரு ஆழமான உண்மை காதல் இருக்கிறது.சொல்ல முடியாத காதல்
புரியாத வலி
“அவளிடம் சொல்லு…” என்ற longing
இதையெல்லாம் மிக emotionalஆ காட்டும் ஒரு love pain song.

“En uyirin nizhal illaiye” என்ற வரி ரொம்ப ஆழமானது.
அதாவது,

“என் உயிருக்கு நிழல் கூட இல்லை…
அவள் இல்லாமல் நான் முழுமையானவன் இல்லை…”
என்பதை உணர்த்துகிறது.

ஒருத்தன் தன்னுடைய உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி வைத்திருப்பது
அவளிடம் சொல்ல முடியாத ஒரு சோகமான காதல்
அவள் இல்லாத வாழ்க்கை வெறுமை ஆகிவிட்டது என்ற உணர்வு

இந்த மாதிரி பாடல்கள் ஏன் மனசை தொடுகிறது தெரியுமா?
நாம சொல்ல முடியாத உணர்வுகளை தான் இது சொல்லுது. அதனால தான் கேட்கும் போது ஒரு “real feel” வரும்.

வாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு அழகான உணர்வை அனுபவிப்போம்… IPPADIKKU UNGAL MDU


April 13, 2026, 06:20:15 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102 hiii sm team.. hiii rj Wings..
This week my choose song is:thendrale
movie :kadhal desam
Singers : Unnikrishnan, Mano and Dominique Cerejo
Music by : A. R. Rahman
fav line is: Malarin kaadhal panikku theriyum
En manadhin kaadhal theriyumaa
Solla varthai kodi dhan
Unnai neril kandaal mounam en... Thoonga vaikka paadinen naan
Thookamindri vaadinen..

thanku❤️❤️

April 13, 2026, 07:49:52 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#102 Hi friends, when people talk about SM Programs, there's a lot to say, but I won't get into all of it. Right now, our RJ wings her SM Program is just outstanding! Her presentation style and voice are so nice to listen to.wings keep up the great work. And I really have to add, Coffee Boy's editing It's absolutely amazing how he matches it to every character. Plus, our RJ Rijia's poetry program it really is fantastic as well You should keep continuing to move forward with it. and I'm also asking for a song
 Song name : Unnale Ennalum En Jeevan Yaazhuthe
 Song movie name Theri
RJ please sing a couple of lines of this song if you're able to

April 13, 2026, 09:18:05 pm
1
Re: கவிதையும் கானமும்-067
ஒரு கவிதை எழுத ஆசை...



உன் கார் குழலின் கருப்பு மை தனை
கொஞ்சம் கடன் வாங்கி ..
உன் கருப்பு பொட்டு
தனை தலைப்பாய் இட்டு..
உன் கண்கள் இரண்டை கொண்டு
உலகை கண்டு .....
உன் மூக்கின் நுனியில்
மூச்சு தனை கடன் வாங்கி....
உன் செவ்விதழின்
வரிகளை வசனமாக்கி....
உன் வெண் சங்கு கழுத்து தனை
வெள்ளை காகிதமாக்கி.....
உன் கன்னம் இரண்டில்
வண்ணம் குழைத்து....
உன் மார்பின் மீது
கொஞ்சம் உறங்கி....
உன் கைகள் இரண்டை
பிடித்து கொண்டு
பத்து விரலில்
முளைத்த குட்டி நகங்களைப் பற்றி ....
உன் பிஞ்சு பாதம்
நடக்க
பூமி புனிதம் அடையும் இரகசியத்தை ....
அந்த வருணபகவான் அளித்த மழையெனும் பரிசில் நீ கையில் குடையுடனும் அந்த செல்ல சிரிப்பில்
பல வெள்ளை மனதை
கொள்ளை கொண்ட அழகை கண்டு ...
குட்டி தேவதையே உன்னை பற்றி
ஒரு கவி எழுத கோடி ஆசைக் கண்மணியே....

கால் முளைத்த வண்ணத்துப் பூச்சிகள்
மனதுக்குள் தேன் குடிக்குது...

சின்னஞ்சிறிய இதயத்திற்குள்ளே
சிறகடித்துப் பறக்குது.

இறகு இல்லா வான்பறவைகள்
மழலையாய் இங்கு வந்ததோ?
இதயம் கவரும்
மனம் கொத்திப்பறவைகள்
நம்மையும் கவர வந்ததோ?

குட்டி குட்டி சேட்டைகளில் தான்
எத்தனையோ அழகு இருக்கு.
நீ செய்யும் குறும்பிலே தான்
எல்லையில்லா அன்பும் இருக்கு.

மானிடப் பிறவியில்
மகிழ்ச்சியை மட்டுமே
தந்திடும் பருவம் இதுதானே!

மகிழ்ச்சி தேனை அள்ளிப் பருகிட
மனமும் ஏங்குது தானே!

ஆதவனும் உன்னுடன் போட்டியிட்டு
ஓய்ந்தே போகிறான் மாலையில்.
நீ உறங்கிய பின்னே சந்திரனும்
மெதுவாய் வந்து போகிறான்.

உந்தன் முகத்தில் காணும் சிரிப்பில்
கடவுளும் அடிமை தான்.
நீ சொல்வதை செய்ய என்னை மாற்றிடும்
நீயும் கடவுள் தான்.

பிஞ்சு இதயத்திற்குள் நஞ்சு சேராது
நாமும் காத்திடுவோம்.
மழலையோடு சேர்ந்து மகிழ்ச்சியை
நாளும் பகிர்ந்திடுவோம்......

என்றும் உங்கள் நட்பில்

April 14, 2026, 05:40:42 am
1