See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Happy Birthday Charvi
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday ( 17 July 2025) Wishes To Our Lovable Friend CHARVI Wishes Her All The Very Best & Good Luck👍 July 16, 2025, 11:58:29 pm |
1 |
|
முடிவில்லா புரிதல்
முடிவில்லா புரிதல் உன்னை புரிந்து கொள்ள நான் மீண்டும் ஒரு ஜென்மம் பிறந்து வர வேண்டும். ஏன் தெரியுமா, புரிந்து கொள்ள நினைத்த போது பிரிந்து செல்ல வேண்டி இருந்தது. பிரிந்து செல்லுகையில் புரிந்து கொண்டு இருக்கலாமோ என்று மனம் திண்டாடியது. புரிதல் ஒரு புரியாத கதையானால் நம் காதலே ஒரு தொடர்கதை. Always love and peace ❤️ Harry Potter ❤️ August 14, 2025, 03:21:17 pm |
1 |
|
கவிதையும் கானமும்-060
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-060 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். ![]() மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். October 06, 2025, 06:25:18 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
என் மனதில் இருக்கும் என் அம்முவின் வரிகள் என் வாயிலாக... மறந்துவிடாத காதல்... நீ தான் என் உலகம் என்று வாழும் என்னிடத்தில்... என் பாசம் எல்லாம் வேஷம் என்கிறாய்... என் மனதுக்குள் இருக்கும் உன் மீதான காதல்... நான் மண்ணில் புதையும்வரை உன்னுடன் பேசும்... நீ என்னோடு பேசுவதில்லை என்றாலும்... உன் நினைவுகள் என்னோடுதான் பேசுகிறது... அன்று ஆறுதல் சொல்லி அரவணைக்க நீ இருந்தாய்... இன்று என்னை அரவணைக்க... என்னருகில் உன் நினைவுகளும் என் கண்ணீரும்தான்... உன் புகைப்படம் பார்த்த என் நண்பர்கள் கேட்டார்கள்... நீ யாரென்று... காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்... இன்று மரத்தை கோடாரி கொண்டு வெட்டி வீழ்த்துவது போல... உன் வார்த்தை கோடாரியால் என்னை தினம் கொள்கிறாய்... என் அன்பை புரிந்துக்கொண்டு உன் செல்ல தீண்டல்களோடு... என்னை தீண்ட போவது எப்போது என்னுயிரே..... நெஞ்சினில் புதைந்திருக்கும் உன் நினைவுகள்... இமைகளை கடந்து கண்ணீராய் வழிந்தோடுகிறது... உயிருக்குள் உண்டான வலிகளை... ஊமையாக அழுது தீர்த்து கொண்டு... வெளியே சிரிப்பு என்னும் முகத்திரை அணிந்து.... போகர் எழுதிய ஏட்டு ஓலைகளை நான் படிக்கவில்லை... படித்திருந்தால் நானோ கூடுவிட்டு கூடுபாய்ந்து... நீ தினம் தினம் ரசிக்கும் உன் Royal enfield ஆக மாறியிருப்பேன்... சிறிய பூவினுள் பெரியக்கனி ஒளிந்திருப்பது போல... என் சின்ன இதயத்தில் பேரழகனாக ஒளிந்திருப்பது நீ தானேடா... கருவை சுமக்கும் போது பெண் சுகமான வலியாக சுமப்பாள் என்றார்கள்... நானோ உன் கருவை சுமக்காமலே சுகமாக சுமக்கிறேன் உன்னை... ஏக்கத்தோடு அன்று உனக்காக காத்திருந்ததிற்கும்... கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும் சிறு வித்தியாசம்தான்... அன்று எனக்காக நீ இருந்தாய், இன்றும் இருக்கிறாய் ஆனால் விலகி... என்றும் உனக்காக நான் இருக்கிறேன்... மறந்துவிடாத காதலை என்னி என்னுடன் நீ வரும் நாளுக்காய் கண்ணீருடன் காத்திருக்கிறேன்..... மறந்துவிடதே காதலை.... மறந்து போல என்னையும்....... October 07, 2025, 10:15:25 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
முகதிரை கொண்ட என் கண்மணியே என்னவளை நான் கண்டுகொண்டேன் சிரித்த முகக்தின் பின்னே சிதறிய இதயம் .. அன்பான அவளிடம் நான் பேசும்முன்னே அவளின் மழலை பருவத்தின் இரணங்களறியேன்... கல்லும் கசிந்துருகும் என் அன்பானவளின் அரவணைப்பில் .... ஆனாலும் அவளறியால் பெற்றவரின் உடன்பிறந்தோரின் அரவணைப்பு.. உருண்டு ஓடும் நாட்களில் உலகின் வேகத்தில் அவள் பலரை கடந்தாலும் உதட்டோர புன்சிரிப்பில் மூடி மறைத்தால் மனம் கொண்ட வலிகளை... ஆனாலும் அவள் யாருக்கும் மறுக்கவில்லை அன்பைகொடுப்பதில்.. நான் சிரிக்க மறந்தாலும் என்னை சிரிக்க வைப்பாள்.. கவலையில் மூழ்கி போனால் என்னை மீட்டெடுப்பால் தாய்போல என்னவளின் இனிய இயல்பதுவாம்... நான் கோவத்தில் இருந்தாலும் அவள் வெறுப்பை உமிழ்ந்ததில்லை... மழைக்காலம் வெயிலை அறியுமோ...? அவளின் சிறு பிராயமுதல் அவளுணர்ந்த வெறுப்பும் மறுப்பும் கரைகாணயியலாது...! நண்பர்கள் உறவினர்கள் அறியாத அவளின் மறுமுகம் நான் கண்டுகொண்டேன் .. என்னவளோ அத்தருணமுதல் என் சேயாகி போனல்.. சிலநேரம் குறும்புக்காரி சிலநேரம் கோவக்காரி சிலநேரம் வழிகாட்டி சிலநேரம் கண்டிப்பான அன்னை சிலநேரம் தோழியாக சிலநேரம் துணையாக எவ்வாறு இருப்பினும் என்னவள் என்னிடத்தில் சிறந்தவளே... அவள்காட்டாத அம்முகத்தின் அனைத்திலும் நான் இருந்து அன்பினில் திளைத்திடச்செய்வேன்.. இவ்வுலகில் அவளின் மறுமுகம் மகிழ்ச்சியில் இருக்க இறைவனை வேண்டுவேன்.. இவ்வுலகமும் இவ்வுலகின் நேரமும் காணாது, காணாது...... அவளின் ஆயுட்காலம் கடந்த பின்பும் நித்திய ஆன்மாவாக அவளை அரவணைத்து கொள்வேன் என்றும் என்னுடன்..... (Pē) October 07, 2025, 11:05:57 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
சிறுவயதில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, முயல் என அழகழகாய் முகமூடிகள் அம்மாவிடம் கெஞ்சிக்கூத்தாடி வாங்கிய ஞாபகம் இருக்கிறது. இப்போது வளர்ந்துவிட்டேன்; சந்தோசமாய் இருப்பதாய் காட்டிக்கொள்ளத்தான் முகமூடி தேவைப்படுகிறது. உலக மேடையின் திரைச்சீலை மெல்லத்திறக்கிறது. என் பாத்திரத்தின் பணி எவரோ கைப்பொம்மையாக இயங்கத்தொடங்குகின்றது. வெளுக்கப்பட்ட முகத்தோடும் வரையப்பட்ட சிரிப்போடும் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டிய பாவி நான். ஒப்பனைக்குள் ஓர் முகம் உண்டு, உண்மையான உணர்வுண்டு, கதைக்கு அது தேவையில்லையென்று ஒதுக்கி இயக்குகின்றார்கள். சிரிக்கிறேன். சுற்றியும் பலர் முகமூடியோடு திரிகிறார்கள். சகமனிதர் உணர்வுகள் புரியாமல் நடக்கும் மனித முகமூடியிட்ட மிருகங்கள் சிலர் நயவஞ்சக நாவொடும், செயலோடும் நல்லவர் என முகமூடியிட்டு சிலர்; தோளோடு தோள் நின்று தோழமை முகமூடியோடு துரோகிகள் சிலர், மனித முகமூடிகள் நடுவே மனிதர்களை தேடி நான். உண்மையாய் யாரும் அன்பு காட்ட மாட்டார்களா என ஏங்கி பரிவு காட்ட மாட்டார்களா என தேங்கி நடக்கும் நாடகத்தை வெளி நின்று பார்ப்பதா? உள்நின்று பார்ப்பதா எனக் குழம்பி நிற்கிறேன். மண்ணினுள் போய் முடியும் கதைக்கு மண் மேல் எத்தனை போட்டிகள், பொறாமைகள். இருக்கும் சிறு காலத்தையேனும் மனிதத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்ந்து விட முடியாதா? கைகள் நடுங்குகின்றன. இரும்புக்கவசத்தின் தொடுதல் நீங்கி அன்போடு என்னைத்தொட யாருமில்லையா என மனம் வெதும்புகின்றது. எனை மூடிய கவசத்தை கழட்டி விட ஏங்குகிறேன் - இருந்தும் வேசத்திற்குள் இருந்து வெளிவர மனம் ஏனோ பயப்படுகிறது. என் மேல் கட்டமைக்கப்பட்ட விம்பம் என்னைப்பார்த்து சிரிக்கிறது. உண்மைக்கு பெறுமதி இல்லை எனச்சொல்லி சிரிக்கிறது? இத்தனை கஸ்டங்களோடும் கடவுளை இறைஞ்சி என்னைப்போல் எத்தனை உயிர் மன்றாடி மாண்டிருக்கும்? அவனும் கடவுள் என முகமூடியிட்ட கயவன் போலும். October 08, 2025, 04:27:45 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
வாடி நின்றபடி சோர்ந்து சாய்ந்திருந்தேன், அடர்த்தி மிகுந்த அகத்தினுள் உறைய மறுத்த குமரல்களின் உறப்பு, என் முகத்தின் பொலிவிற்கு தடை விதித்தது அன்று ஓர் நாள் என் முன்னே தோன்றினாய் காலமே பூவின் காம்பில் மிதக்கும் முள்படுக்கை மீது அச்சம் கொண்டேன் எனவோ, இரண்டு முட்கள் மட்டுமே இருப்பினும், மணிக்கூண்டில் ஒளிந்திருந்து, என் முகத்தில் இகழ்ச்சி ஊட்டி மகிந்தாயே காலமே நீ முன்னோக்கி அடி மேல் அடி வைக்க, பாதையற்ற போர்வெளியில் நின்றிருந்தேன், படிக்கட்டுகள் அமைத்து தோள்கொடுத்தாய் முதல் படி நீ ஏறவே, படித்து உயர ஊக்கம் அளித்தாய், சூழ்நிலை பாராமல் எதிலும் வெற்றி பெற வலிமை வழங்கினாய் மேலும் படிகள் ஏறவே, மனிதத்தை கண்ணில் எட்டும்படி செய்தாய், அதனின் அகத்தின் அழகு என்னை வந்து சேரவே வழி வகுத்தாய் முன்னோக்கி சென்றபடியே, பாறை தடுக்காமல் பாதை முடக்காமல், திட்டமிடுதலின்றி செல்லும் வழி முழுதும் நன்மையே வந்து சேருமாறு செய்தாய் முன்னோக்கியபடியே பயணிக்க உதவிய நீ சட்டென்று ஒறைந்துவிட்டாய் இன்று பின்னோக்கி திரும்புகிறாய், ஒரைந்திருந்த துயரங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றன காலமே கணக்கில்லா படிகள் உன்னிடம் மட்டுமே, இருந்தும் ஏன் முன்னேற்ற மறுக்கிறாய்? வழி காட்டும் முட்களாக இருந்தாய், பெருக்கெடுத்து திடீர் வலிகள் பதிப்பது ஏன்? படர்ந்து விரிந்த பொலிவு மறைந்து குறுகிய பாவனையில்..இன்று மீண்டும் நான், வெற்றி காண துவங்கிய காலத்தில், புன்னகையற்ற தோற்றத்தை வெளிக்காட்ட தயக்கம் இருந்தது இல்லை, இன்று அமுதை அளந்துவிட்டு துயரத்தின் சிறுமையை இவுலகிற்கு காட்ட விருப்பமில்லை குறைந்தபட்சம் சிறித்தபடி முகமூதி ஒன்று கொடு, என் நடுக்கம் மறைத்து நடிக்க துவங்கவே . October 08, 2025, 07:35:29 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
அவள் புன்னகையின் பின்னால் 🌸 முகத்தில் புன்னகை மலர்கிறது, உலகம் அதை ஏற்றுக்கொள்கிறது. அவள் சிரிக்கிறாள், அவள் கண்கள் ஜொலிக்கின்றன, ஆனால் யாரும் கேட்கவில்லை அவள் அழுகையை. அந்த புன்னகையின் பின்னால் மறைந்திருக்கும், உறங்காத இரவுகள், சொல்லாத வேதனைகள். போதாதவளாக உணரும் அச்சமும், இழந்த அன்பின் எரியும் நெஞ்சமும். மனதை உடைத்தவர்கள், ஆன்மாவை காயப்படுத்தினர், அவள் அமைதியில் அனைத்தையும் மறைத்தாள். முகமூடி அணிந்து அமைதியாக, எனக்கு பரவாயில்லை என்று நடித்தாள். அவள் கண்கள் மட்டும் உண்மை சொன்னது, மௌனத்தில் இரத்தம் வடிந்தது. உலகம் பார்க்கும் புன்னகை மாயை, உள்ளம் மட்டும் தாங்கும் காயம். உலகம் நேசிக்கும் வெளிச்ச முகங்கள், உடைந்த உள்ளங்கள் யாரும் காண்பதில்லை. அதனால் அவள் தினமும் சிரிக்கிறாள், தன் துயரை மௌனத்தில் மறைக்கிறாள். அவள் முகமூடி பொய்யல்ல, அது அவளின் தற்காப்புக் கவசம். குளிர்ந்த கனவுகள், மங்கிய நேசம், அவற்றின் நிழலில் அவள் வாழ்கிறாள். ஒவ்வொரு விடியலும், புதிய சிரிப்பை தீட்டுகிறாள், உண்மையை மறைத்து, வாழ்வை தாங்குகிறாள். உலகம் அவள் துன்பம் காணவில்லை, ஆனால் அவள் இன்னும் நிமிர்ந்து நிற்கிறாள். காயப்பட்டும், அவள் ஒளி தாங்குகிறாள், மௌனத்தில் ஒரு சக்தி உருவாகிறது. ஒருநாளும் அவளுக்கு முகமூடி தேவையில்லை, அவள் புன்னகை உண்மையாக மலரும் நாளில் அவள் இதயம் மீண்டும் மலரும், அவள் ஆன்மா சிறகை விரிக்கும் October 08, 2025, 07:52:25 pm |
1 |