See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
YASH
Hai Gtc, Stars, Moon, Rainbow வேற என்னலாம் இருக்கு இங்க Haan Gold(Jesi) 🤭😂 👉🏻Yash என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர்🤭💁🏻♂️ 👉🏻கே ஜி எஃப் படம் பார்த்து மட்டும் இந்த Nick நான் தேர்ந்தெடுக்கவில்லை, நிஜ வாழ்க்கையிலும் அவர் என்ன என்று பார்த்துதான் இந்த nick நான் தேர்வு செய்தேன்🧢 👉🏻சேவைத் துறை என்னுடைய அல்டிமேட் Goal என்பதால் அரசுத் துறையை தேர்ந்தெடுத்து வேலை பார்த்து வருகிறேன்😇 👉🏻அம்மா ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய Promise வாங்கிட்டாங்க😆 ஒருபக்கம் அதெல்லாம் Follow பண்ண கஷ்டமா இருந்தாலும் ஒரு Mennism ah அந்த Promise என்னை Grow up செய்தது🥰அம்மா சொன்னதே பெண்களை சகோதரியாக நினைத்து பேசு என்று😇❤️ 👉🏻விவசாயம் பார்க்க ரொம்ப பிடிக்கும் வேலை விட்டு வந்ததும் தோட்டத்திற்கு சென்று விடுவேன் அங்கே இருக்கும் இளநீர் என்னுடைய சரக்கு, வாழைத் தாரில் உள்ள குருவிக் கூட்டை எப்பொழுதும் பார்ப்பேன் குஞ்சு பொரித்து இருக்கா என்று அதில் ஒரு சந்தோசம்😇 👉🏻சாயங்காலம் நேரமானால் என் நண்பர்கள் என் வீட்டில் பசு மாட்டின் பாலை காலி பண்ண🤭.. அவர்களே பாலை கரந்து டீ வைத்துவிடுவார்கள் அம்மாவுக்கு வேலை மிச்சம்🤭 👉🏻Gtc ah நான் தேர்ந்தெடுத்தது என்னுடைய Work Relaxment காக அந்தவகையில் இது மிகச்சிறந்த பிளாட்பார்ம்💯💐நிறைய நண்பர்கள் சகோதரிகள் சகோதரர்கள் இங்கு கிடைத்து உள்ளார்கள் அதற்கு GTC ku நன்றி🥰❤️ 👉🏻கண்டிப்பாக Yash ஒருநாள் Jesi(Gold) ah தூக்கிட்டு தான் போக போறான்,Sry Coffee boy🤭[/color] November 17, 2022, 03:05:05 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-021
சிவப்பு ரோஜா ரத்தத்தில் குளித்ததோ உன் உதடாக கார்மேகம் உடல் மெலிந்ததோ உன் புருவமாக அழகான கைகளில் அரங்கேறிய மருதாணியை ரசிப்பதா முழுநிலா முகத்தில் மெருகேறிய வெட்கத்தை ரசிப்பதா அழகு சாதனங்களுக்கே அழகு ஊட்டியவளாய் அவள் என் கண் முன்னே உன் நெஞ்சோரம் தொட்ட கை வளையல்கள் முதல் நெற்றிச்சுட்டி வரை மின்னிய அணிகலன் முன்னணியில் பின்னிய என் இதயம் என் நெஞ்சோரம் தொட்ட வார்த்தைகள் "என் வரம் நீ போதுமே அதற்கு வரதட்சணை எதற்கு என் வரலட்சுமியே" பின்னணியில் உன் சுற்றத்தார் மகிழ்ச்சியில் சூழ முன்னணியில் உன் கால் கொலுசு என்னை நெகிழ்ச்சியில் ஆள நகரா நொடிகள் அசையா நிமிடங்கள் ஆடா மணிகள் சட்டென நிகழ!! கண்களால் கைது செய்தாய் ஒவ்வொரு கண நிமிடமும் உந்தன் கண்களின் சிறைச்சாலையில் சிறைபடுவதையே விரும்பினேன்!! ஜாமின் இருந்தும்!!! அவளை நெருங்கும் பொழுதெல்லாம் பதட்டம் கொள்கிறேன் தூரம் நின்றால் துயரம் கொள்கிறேன் மச்சான் இது என்னடா Feelings என்று நண்பனை கேட்க Eiffel டவரில் இருந்து குதிப்பது மாதிரியான பீலிங்ஸ் மச்சான் என்று நண்பன் கூற Eiffel Tower la இருந்து குதிப்பதற்கான முடிவை தைரியமாக எடுத்தேன்!! April 11, 2023, 11:28:06 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-022
Gtc நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள். உழைப்பால் நாம் உயர்ந்திடுவோம், உலகையே மாற்றிடுவோம்.... உழைக்கும் கரங்கள்... இரண்டு வர்க்கம் இனி இல்லை எழுந்து வா சிவந்து நிற்கும் நெஞ்சத்தோடு நடக்க போவது புது யுகம் நீ விதைத்த வியர்வைகள் கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்தை கர்ப்பம் தரிக்க வைத்தாய் உழைக்கும் கரங்களால்… காலம் நமதென்று கதவு திறக்கும் உழைப்பாளிக்கு சிறந்த வழி வகுக்கும் அவன் கரங்கள் இருக்கும் விலங்குகள் அனைத்தையும் உடைக்கும் சில அதிகாரத்தை முடிக்கும் உலகை ஆளும் கரங்களே உழைக்கும் கரங்கள்… கற்கள் சிலையானதும் கற்பனை சிந்தனை இலக்கியமானதும் விளைநிலம் செழிக்க வேளாண்மை செய்ததும் காடுகள் திருத்தி நாடானதும் தொழிற்சாலைகள் படைத்து ஏழ்மை ஒழித்ததும் கற்காலத்தை நகர்த்தி கணினி யுகம் ஆனாதும் உழைக்கும் கரங்களாலே… இயந்திரம் இயங்க மென்பொருள் இல்லை எனில் இளமையும் முதுமையும் மனிதனுக்கு நரகமாய் மட்டுமே நகர்ந்திருக்கும் உழைப்பு தான் மனிதனின் முதன்மை அடையாளம் உழைப்பை மறப்பது சுவாசத்தை மறப்பதற்கு சமன் உழைக்கும் கரங்களை மறப்பது உயிரை விடுவதற்கு சமன்... April 28, 2023, 12:27:58 am |
1 |
Re: கவிதையும் கானமும்-024
கள்ளமில்லா காதல் மொழியால், கனவுகளுக்குள் புகுந்து கொண்டான்..! விண்மீன் ஒளியாய், வெட்கம் விலக்கி விழிகள் முழுதும் நிறைந்து கொண்டான்..! காதல் கவிதையாக, மனமுழுதும் மழைச் சாரலை பொழிய வைத்தான்..! பார்வையினால் பேசி பேசி, பேச்சினாலே பேதை மனதை வென்றெடுத்தான்..! நாழிகையும் நாள் கடந்து போனது.. உலகம் மறந்து, உள்ளம் மயங்கி, ஒருவன் அன்பில் திழைத்த நொடி..! மச்சில் ஏறி கூச்சல் போட்டு.. என் மகிழ்ச்சி இவன் தான் என, மையல் கொண்டேன் மனதில் கண்டபடி..! கண்ட கனவின் இனிமை உடைந்து, கனவுகளுக்கு தடையும் விதித்தேன்..! கண்கள் உறங்க, உள்ளம் மட்டும் உறங்க மறுத்து, நினைவுகளாலே வதைக்க கண்டேன்..! எதிரும் புதிருமாய், அமர்ந்து கொண்டு தனிமை சிறையை தந்துவிட்டாய்..! சுற்றும் முற்றும், தேடி நிற்க நம்பிக்கை முறித்து கதற வைத்தாய்..! காதல் தர்க்கம் என்றால் அது காற்றோடு போய்விடும்.. ! ஆனால் வாழ்க்கை தர்க்கம், இடைவெளியை விதைத்து போனது..! பேச மறுத்தாய் நீ பேச மறுத்தாய்..? பேச்சிலே விஷமதை தோய்த்து வைத்தாய்..! தலையணை நனைத்த, கண்ணீர் துளிகள் என் காதலை சொல்ல மறுக்கிறது..! கோபங்கள் நியாயமற்றதாய் போகும் போது, சமாதானங்கள் அங்கு தேவையற்றதாய் ஆகிறது..! அடக்குமுறையின் அநீதியை, கண்முன்னே உணர்கின்றேன்..! இலகுவான காதல், இன்று கழுத்தை இறுக்க காண்கின்றேன்..! நம்பிக்கைகள் நமத்து போனால், நரைத்து போகும் எவ் உறவும்..! மரியாதைகள் தூரம் நின்றால், மனமுடைந்து போவோம் அனுதினமும்..! புரிதலில் பிழையிருந்தும், விட்டுக் கொடுத்து பிரிவை தவிர்க்க போராடியும்..! இங்கே பிரிவுக்காக பாசம் மறந்து சீற்றத்தினை பரிசளித்தாய்.. ! காயம் கொடுக்காமல் விலகுகிறேன்..! காதலுடன் காத்திருக்கிறேன்..! நுனிக் கிளையில் ஊசலாடும் நம் காதல் ..?? மூச்சு முட்ட உணர்கின்றேன்..! இயலாமையால் உடைகின்றேன்..! இணக்கமில்லா இவ்வுறவில் சீற்றம் மட்டும் மிச்சமிருக்க..... உன் சந்தோஷத்தின் வழி தேட உன்னை விட்டு விலகி நிற்பேன்... நீ இருந்த இதயத்தில்,.. நீ மட்டுமே இருப்பாய் என்ற உறுதியுடன்...! May 23, 2023, 01:00:07 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-024
காதல் ஒரு அழகான உணர்வு...! நாம் இருவரும் காதல் என்னும் அழகான உணர்வில் சிக்கி இருக்கும் வேளையில் , ஆயிரம் கணக்கான சண்டைகள் வருவதுண்டு..! நான் உன்னை வெறுத்து ஒதுங்கினாலும் , சிரித்து நெருங்கி வரும் உன் அன்பு உனது பலவீனம்,,! உனக்கு ஒரு வலி என்றால் முதலில் துடிப்பது என் விழி என்பது எனது பலவீனம்..! என்னதான் நமக்குள் சண்டைகள் வந்தாலும் உன் முகம் காணாமல் நானோ , என் முகம் காணாமல் நீயோ ஒருநாளும் இருந்தது இல்லை..! சண்டைகள் போடாமல் சகித்து கொள்ளும் உறவை விட , சண்டைகள் போட்டாலும் பிரியாமல் இருக்கும் உறவே பலமானது.. எங்கே அன்பு அதிகம் இருக்கிறதோ..! அங்கே சண்டைகள் அதிகம் வரும் , எங்கே சண்டை அதிகம் வருகிறதோ.. அங்கே சமாதானமும் அதிகம் இருக்கும்..! இன்றும் என்றும் உன்னுடன் சண்டையிட்டு சமாதானம் ஆகும் நான் உந்தன் பாரதி....! May 23, 2023, 03:12:21 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-024
என் அழகான ராட்சசியே... சின்ன சின்ன சண்டையிட்டு என் இதயத்தை திருடிச் சென்றாயே என்னவளே உன்னை தோற்கடிக்க எனக்கு மனமில்லை நானே இறங்கி வருகிறேன்... என் இதயமாவது இடைவெளி விட்டு துடிக்கும் உன் நினைவுகள் அந்த இடைவெளியை கூட தருவதில்லை ஆயிரம் சண்டைகள் போட்டாலும் உன் அன்பிற்காக ஏங்கி இருந்தது என் மனசு காதல் சண்டைகள் என்றாலே சும்மா சண்டைகள் தானே அதிக அன்பு கொண்டவளே... சண்டைக்கு பிறகு பேசும் போது வரும் சுகமானது அவ் உணர்வை கூற இவ் உலகில் வார்த்தையே இல்லை கோடிகள் கொடுத்தாலும் பெற முடியாத இன்பமடி சண்டை வாழ்கையில் பிரிந்து வாழ்வதை விட காதல் வாழ்க்கையில் சேர்ந்து சண்டையிடலாம்... அதிக அன்பு கொண்டவளும் நீயே அதிக கோபம் கொள்பவளும் நீயே என் மனதில் குடி இருப்பவளும் நீயே என் வாழ்வின் அஸ்திவாரமும் நீயே ஓடோடி வா என்னிடமே என் உயிரே.... ஓய் மீண்டும் வாடி பிள்ளை என் அழகான ராட்சசியே செல்ல சண்டையிடலாம் ஆயுள் முழுவதும் கைதியாக இருப்பேன் உன் இதயமே சிறையாக இருந்தால்... குறிப்பு: பெரும்பாலும் சண்டை போடுவது நான்தான், எனவே என் கவிதையில் இருப்பதைப் போல, உணர்ந்து செயல்படும் காதலன்/எதிர்கால கணவன் கிடைக்கணும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தான் இந்த கவிதையை ஒரு ஆணின் பார்வையில் இருந்து எழுதி இருக்கிறேன்.... May 24, 2023, 05:55:35 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-025
முன்னோரின் கூற்றுபடி.... தோல்வியே வெற்றிக்கு முதல் படி.... தோல்வி என்பது வாழ்கையின் நியதி, வெற்றி என்பது தோல்வியின் இறுதி, தோல்வி இல்லையேல் வாழ்வில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை... தோல்வியை கற்றுக்கொண்டு தோல்வியின் உந்துதலில் பெற்றுக்கொள்வது வெற்றியே...... தோல்வியை தழுவ பொறுமை அவசியம், தோல்வி என்ற போதிலும், துவளாத மனம் அவசியம்...... விடா முயற்சியே வெற்றியின் ஓர் அங்கம்.... வீழ்ந்தாலும் தொடர்வது மன உறுதியின் ஓர் அங்கமே.... வெற்றி இலக்கை அடைய தோல்வி என்ற பாதையையும், தன்னம்பிக்கையும், மன வலிமையையும் வெற்றியின் ஊக்கமே..... வரலாற்று கதைகளில் கஜினியின் படையெடுப்பு 17 முறையும் தோல்வியாம்.... விடாமுயற்சியின் தூண்டுதலால் 18 ஆம் முறை வெற்றியாம்.... என்று வரலாறு கூறுகிறது.... வீழ்பவன் எழ தன்னம்பிக்கை என்ற கையை நீட்ட வேண்டும் வெற்றி என்ற பாதைக்கு சாமரம் வீச வேண்டும்.... தோல்வியை தோற்கடிப்பவன் வெற்றி வீரன் ஆகிறான்..... தோல்வியின் முடிவுரை வாய்ப்புறுகையின் (வெற்றியின்) முதல் உரை..... May 28, 2023, 11:00:23 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-025
CONGRATS TO GTC FM AND GTC.. KAVITHAIYUM GAANAMUM REACHED ITS 25.TH PROGRAM.🎶🎤🎵💐💐💐 CONGRATS TO ALL POETS OF KG 💐💐💐 கவிதையும் கானமும் குழுவினருக்கு வாழ்த்துகள் ( RJ RIJIA,COFFEE BOY, DJ ISHAN, RJ MIST, OMICRON,DISCOVERY)💐💐💐💐💐💐💐💐💐 கவிதையும் கானமும் நிகழ்ச்சி இன்று தனது 25 வது நிகழ்ச்சியை கொண்டாடுவதும் ஒரு மாபெரும் வெற்றியே என கூறிக்கொண்டு எனது கவிதைக்குள் செல்கிறேன்.. தோல்வியின் விளிம்பில் வெற்றி ! தோல்வியின் விளிம்பில் வெற்றி ! தாவாடா ! மனிதா ! தாவு .. தோல்வி .. வெற்றியின் ஓர் அங்கம் .. தோல்வியில்லாமல் வெற்றியில்லை .. தோல்வியின் அறுவடையே வெற்றிப் பாதையின் திறவு கோல் .. வெற்றி மகிழ்வை தரும்.. வெற்றி இறுமாப்பைத் தரும் .. அகந்தையைத் தரும் .. தோல்விதான் வாழ்க்கையின் புரிதலைத் தரும் .. தோல்விதான் அனுபவ பாடத்தின் ஆணிவேர் .. உலக அறிவியலின் தந்தை தோல்வியெனும் சக்தியே ! தாமஸ் அல்வா எடிசன் முதல் ஐன்ஸ்டீன் வரை தோல்வியின் படிக்கட்டில் ஏறியே வெற்றியைக் கண்டவர்கள் .. தோல்வியை ஆய்வு செய்பவனே வெற்றியின் கிரீடத்தை சூடுகின்றான் .. தோல்வியின் விளிம்பில் தாவாதவன் வெற்றியை இழந்து இரண்டும் கெட்ட சூனியத்தில் வீழ்கிறான் .. அதுவே வெற்றி தோல்வியை புரியும் படி நிலையாகும் .. முயற்சி திருவினையாக்கும் என்பர் .. முயற்சி.. வெற்றி தோல்வியை முடிவு செய்யும் காரணியாகும் .. முயற்சி இல்லாவிடில் வெற்றி தோல்வியைக் காணமுடியாது .. தோல்வி கூட வெற்றிதான் .. வெற்றியின் சிறப்பு எதுவாக இருக்கவேண்டும் நம்மையும் ..பிறரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் .. அதுவரைதான் அது வெற்றி ! இல்லையேல் அதுவும் தோல்விதான் அது தோல்விக்கே அழைத்துச் செல்லும் வெற்றிப்பாதையாகும் .. உன் வெற்றி .. இந்த உலகிற்கு பயன்பட வேண்டும் .. இந்த உலகையே மாற்றவேண்டும் .. மனிதத்தைக் காக்கவேண்டும் .. வெற்றி தோல்வியற்ற உன்னத நிலையை உருவாக்க வேண்டும் அதுவே " சமநிலை" எனும் வெற்றியாகும் .. சமநிலை வெற்றியை நோக்கிச் செல்வோம்………. NOTE: இந்த புகைப்படத்துக்குத்தான் நான் இவ்வளவு வரிகள் எழுதி இருக்கேன்...இன்னும் சில வரிகள் எழுதினேன், ஆனால் 45 வரிகள் வரை எழுத அனுமதி. அதைச் சுருக்க வேண்டியிருந்தது... வாழ்கையில் நாம் அனைவரும் கடந்து வந்த பாதையின் பின்பம் இந்த புகைப்படம்....அருமையான தேர்வு கவிதையும் கானமும் குழு...THANK YOU KG TEAM. BY CHE (MY HERO): "வெற்றிகளைக் கொண்டாடாமல், தோல்விகளைக் கடந்து வாழ்க." May 28, 2023, 11:36:28 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-025
தோல்வி என்பது தண்டனை, நாம் தொடர்ந்து செய்யும் தவறுகளுக்கு.... மறுபுறம் வெற்றி என்பது விருது நாம் தொடர்ந்து செய்யும் சரியான விஷயங்களுக்கு தோல்வி நம்மை விரக்தியில் தள்ளுகிறது, வெற்றி நம்மை வானத்துக்கு உயரச் செய்கிறது, நான் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன், நான் வெற்றியா தோல்வியா? எந்தப் பக்கம் என்பதை நான் மட்டுமே முடிவு செய்ய முடியும்... நான் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறேன், வாழ்க்கையை பின்னோக்கி மட்டுமே புரிந்துகொள்கிறேன்..... திரும்பிப் பார்க்கும்போது, கடந்த காலத் தவறுகளை நினைத்துப் புன்னகைக்கிறேன்...... நான் வெற்றியில் அல்ல, தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டேன் நான் தோல்வியுற்றபோது நான் ஒருபோதும் விலகவில்லை ஆனால் வெற்றிபெறும் வரை தோல்வியடைந்தேன்..... தவறுகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் பாடங்கள் தவறுகள் போல் மறைக்கப்படுகின்றன தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் இருப்பதுதான் ஒரே தவறு...... தவறுகள் தோல்விக்கு வழிவகுக்கும் தோல்வி ஆபத்தானதும் அல்ல, வெற்றி இறுதியானதும் அல்ல, வெற்றி உறுதியான அடித்தளத்தை அமைப்பதன் மூலம் கிடைக்கும்...... வெற்றிக்குப் பின்னால் தோல்விகளே இதுவே வாழ்க்கையின் ரகசியம்....... May 28, 2023, 11:54:00 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-025
நண்பனே தோல்வியைக் கண்டு நீ ஓடாதே தோல்வியை தாண்டி ஓடு தோல்வி என்பது பெரிதாய் இருந்து உன்னை பயமுறுத்தினால் நீ அதை பெரியதாய் எண்ணாதே அதை தாண்டி செல் நீ அதை தாண்டி செல்லும்பொழுது வெற்றியின் வழியோ அழகாய் தெரியும். வெற்றி என்பது சிறு புள்ளிதான் அந்த சிறு புள்ளையை அடைய வேண்டும் என்றால் தோல்வி என்னும் பெரும் மையத்தை நீ தாண்ட வேண்டும் தோல்வி உன்னை பயமுறுத்தலாம் தோல்வி உன்னை நிலை குலைய வைக்கலாம் தோல்வி உன்னை சோர்வடைய வைக்கலாம் ஆனால் தோல்வியை எதிர்கொள்ளும் பொழுது வெற்றி என்னும் மகுடம் உன்னிடத்தில் சேரும். மகுடத்தை அடைய மண்ணைக் கவினாலும் தவறில்லை தோல்வியை கண்டு பின்னிட்டு ஓடாதே நண்பனே தோல்வியைத் தாண்டி முன்னிட்டு முன் சென்று ஓடு தோல்வி எனும் தடைகளைத் தாண்டு தோல்வி என்னும் பிளவுகளைத் தாண்டு தோல்வி எனும் சமுத்திரத்தின் அலைகளைத் தாண்டு தாண்டு தாண்டிக் கொண்டே இரு நண்பனே. தோல்வி என்பது முடிவல்ல வெற்றி என்றுமே நிரந்தரம் இல்லை தோல்வியும் வெற்றியும் இரண்டுமே உன்னை உயர்த்தும் படிகட்டுகள் தான் தோல்வியிலே நீ கற்றுக் கொள்கிறாய் வெற்றியிலே உன்னை நீயே வீரன் என்று அறிந்து கொள்கிறாய் நண்பா நீ உன் வாழ்க்கையில் சிறந்தவனாய் விளங்க வெற்றியும் தோல்வியும் இரண்டும் அவசியம். இவை இரண்டையும் நீ பழக்கப்படுத்திக் கொண்டால் இந்த உலகத்தில் உன்னை விட சிறந்தவன் யாருமில்லை வெற்றி என்பது கைகளை போன்றது தோல்வி என்பது கால்களை போன்றது நண்பனே நீ ஒரு கடினமான பொருளை எடுத்து நகற்ற வேண்டுமென்றால் கைகள் மட்டும் போதாது கால்களும் வேண்டும் செயல்பட கால்களும் கைகளும் அவசியம். இந்த உலகத்தில் நீ சிறப்பானவனாக செயல்பட வெற்றியும் தோல்வியும் அவசியம் தோல்வியை கண்டு நின்று விடாதே வெற்றிகாய் முன்னேறிக் கொண்டே இரு உன்னால் முடிந்தவரை முன்னேறிக் கொண்டே இரு வெற்றி உனதே. May 29, 2023, 12:44:33 am |
1 |