See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11
My place on 10.5.2023
April 26, 2023, 12:52:06 am |
1 |
Re: 📸 NATURE CLICKS 📸
July 12, 2024, 05:08:40 pm |
1 |
Re: Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்)
கவிதையும் கானமும் 044அத்தியாயம் THANK YOU TO ALL GTC ADMIN, STAFF'S & FRIENDS FOR SUPPORTING US ALWAYS👍 SPECIAL THANKS To All Poets,,,Innocent Boy 💐 Kanmani 💐Limat 💐,Shree 💐,Misty Sky, sivarudran 💐& Eagle13 💐THANK YOU TO ALL👏👏👏👏👏 THANKS TO Coffee BoY💐 CB❣ ALWAYS EDITING KING👏💐 Thank you For beautiful BANNERS❣ PRGM TIME LE NA YARAKACHUM NAME TAG PANNI THANKS SOLAME VIDURKELAM SRY FOR THAT..THANK YOU SO MUCH❣ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Hi Misty Sky..This Week KG prgm patriye karuthu oru intro voice kudungenu keten..athule yenakaage rombe alaga oru kavithai solirtinge..atuvum rombe short Time le elutirkinge Thank You So Much. For Alagu Kavithai ..anthe kavithai inge share panirken😊👏💐 அன்பின் குரலிலே மழலை மனம் நீ அன்பின் குரலிலே மழலை மனம் நீ சந்தோசக் குரலிலே குயிலின் கூவள் நீ சந்தோசக் குரலிலே குயிலின் கூவள் நீ மெவுன குரலிலே மதியின் அழகு நீ மெவுன குரலிலே மதியின் அழகு நீ கொட்டித் தீர்க்கும் மழை போல் புதுக்கவிதையே உன் அழகிய குரல் கொட்டித் தீர்க்கும் மழை போல் புதுக்கவிதையே உன் அழகிய குரல் என்னை மயக்கிய குரல் என்னைப் பிடித்து வைத்துக் கொண்ட குரல் எல்லாமே உன் அழகிய குரல் இதோடு முடிக்கிறேன் என் நிரல் இதோடு முடிக்கிறேன் என் நிரல் July 29, 2024, 11:55:02 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-046
மழை மேகமாய் உருமாறவா... பூவினை மெல்ல வருடிச்செல்லும் காற்றை போல மிகவும் மெல்லிய உரையாடலில் எழுந்த ஓர் உன்னத உறவு இயல்பான நிலையில் வார்த்தைகள் அதன் இனிமையை இயற்ற வார்த்தைகளின் மென்மை, மெல்லிய சூழல் ஒன்றை உருவாக்கியது அச்சூழலில் உருகிய எண்ணம், அதன் நேசத்தொடு பின்னிக்கொண்டது. பின்னியது எண்ணம் மட்டுமே என்று நினைத்த மாயத்தில் நிகழ்ந்த உரிமைகளின் பரிமாற்றம் உணர்த்தியது - தொலைத்த என் மனதினை. தொலைந்த பொழுதில் வினவிய மனம், வினாக்களுக்கு இரையானது வினாக்கள் விடையில்லாமல் தவித்த போதும், மனமோ தவிப்பே இன்றி என்னை உன்னோடு இன்னும் ஆழமாய் செதுக்கியது. ஆழம் பெருகிய வண்ணம், மனம் உள்ளூர கரைய தொடங்கியது கரைந்தவாரே உன்னில் இருக்கும் - உன் அன்பை, பார்த்து ரசித்தது ரசித்தவை ஏனோ சிறு சிறு இடர் ஈட்ட, மகிழ்வோடு ஏற்றது அச்சிறு இடர்களை ஏற்றவாறே புன்னகை அணிந்து கடக்க நேர்ந்தாலும் என்னில் உள்புகுந்த உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் உரைந்தே போனது உரைந்தது நான் ஆயினும் கண்கள் ஏனோ உன்னை மட்டும் தேடியது கண்ணோடு காண இயலாமல் மொழியோடு மட்டுமே இணைகிறோம் ஆயின் மொழி வழியில் கவிதையாய் உருமாறி உரைகிறேன் உன்னில் நானாய் உன்னோடு சேர துடிக்கும் என் மனதை பசுமை நிறைந்த சோலையில் பூக்கும் பூவின் மீது விழ, எண்ணி தவிக்கும் மழை துளி வழியே நானும் ஓர் மழை மேகமாய் உருமாறவா 🌿🌧️💚 August 23, 2024, 02:47:43 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
Hi SM Team, I always admire Sangeetha Megam, cos it really serves as my stress burster as u know. I always thank you for the effort which u make to entertain us. This week my song is Song name : Siru thodithalile Movie name : Laadam Singers : Bombay Jayshree and Haricharan Music Director : Dharan Kumar Lyrics : Yugabharathi I specially dedicate this song to my dear P 💜🍍 Intha song la Jayshree mam voice, I really love it to the core. And unga yarukum sollave vena na evlo periya flute paithiyam nu, ithula iruka flute parts totally kills me. I wish all of u enjoy this song.Thank you 💜 August 27, 2024, 01:48:37 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#069
சங்கீத மேகம் நிகழ்ச்சியை வெற்றிபெற பாடுபடும் அனைவர்க்கும் வாழ்த்துகள் .. நானும் ஒரு பாடல் கேட்கலாம்னு வந்திருக்கேன். விஜய் ஆன்டனி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த .........ரோமியோ .. கேட்க விரும்பும் பாடல் : சிடு சிடு என்றாலும் பிடித்த வரிகள் உயிரே உயிரே ஒருநாள் உணர்வாய் எனையே உறவே உறவே நெடுநாள் கனவே அமைதியில் நீ வாழவே பூவே இரைச்சலை நான் தாங்குவேன் எனக்கென நீ போதுமே மானே அரசனைப் போல் வாழுவேன் இந்த பாடலை யாருக்காக கேட்கிறேனு மனசுக்குள்ள யாரோ கேக்குறது புரியுது .. எனக்கு இந்த பாடல் பிடிக்கும் என்பதாலேயே கேட்கிறேன் ..வேற யாருக்காகவும் கேட்கலை .. August 27, 2024, 03:43:18 pm |
1 |
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #19
My place - 25/9/24
September 09, 2024, 12:29:11 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-047
தரணியில் அன்னையை போல் நம்மைக் காக்கும் தெய்வம் இன்னும் தோன்றவில்லையே..! ஒருவர் இருக்கும் பொழுது அவர்கள் அருமை பலருக்கு புரிவதில்லை.. அவர்கள் இல்லாத பொழுது ஏற்படும் வலி நாம் அனைவரும் உணர்ந்ததே!! அப்படி பெற்றோரை இழந்து வாழும் என் அம்முவிற்கு இந்த படைப்பு சமர்ப்பணம்🙏 ஐயிரு திங்கள் அங்கம் சுமந்து ஐயமர நாளும் காத்தாய்! கருவாய் என்னை உணர்ந்ததுமே உருவம் மனதிற்குள் தந்தாய்! வெளிவரா என்னோடு வெளிப்படுத்தினாய் உன் உணர்வுகளை! அசைவுகளை கண்டே ஆனந்தம் கொண்டாய் அழகாய் உன் நெஞ்சில்! நாட்கள் செல்லச் செல்ல நான் வெளிவரும் நாட்களை எண்ணினாய்! மாதமோ நெருங்கி வர மனமெங்கும் மாற்றெங்கள் பல கண்டாய்! உள்ளுக்குள்ளே நான் உதைக்க உனக்கோ ஆனந்த கொண்டாட்டம்! உருண்டு படுக்க உடல் விழைந்தாலும் உறக்கமில்லா திண்டாட்டம்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் கண்டு மனமெங்கும் பூரித்தாய்! நெருங்கி வரும் நாளை எண்ணி மனதிற்குள் பயமும் கொண்டாய்! வலியை மெதுவாய் உணர்கையில் மகிழ்ச்சியே அடைந்தாய்! தசைகள் கிழிய எலும்புகள் உடைய எனக்காய் தாங்கிக் கொண்டாய்! உதிரம் சொட்ட உனக்கும் வலிக்க என்னை ஈன்றாய் என்தாயே! பட்ட துன்பம் அத்தனையும் பாலகன் என் முகம் காணவோ? தொட்டு என்னை தூக்கிடவே - பட்ட தொல்லையெல்லாம் மறந்தாயே! உந்தன் உதிரத்தைப் பாலாய் எனக்களித்து இரத்த ஓட்டம் கொடுத்தாயே! என்னுள் துடிக்கும் இதயத்தை விட அதிகமாய் எனக்காய் துடித்தாயே! தந்தை கையில் என்னைத் தந்து தவழக் கண்டு அகங்குளிர்ந்தாய்! நான் பிறக்க நீ பட்ட கஷ்டம் என்னென்னவோ என்று நான் என்னி பார்க்கும் முன்னே நான் வளர நீ அடுத்த ஒரு யுத்தத்தை தொடங்கி விட்டாய்! எனக்காக வெயில் மழை பாராமல் நீ உழைக்க உன் அங்கம் குளிர அந்த கார்மேகம் மழையாய் தூவையிலே என் மகரந்த பூவை தழுவ எனக்கு மட்டுமே உரிமை உண்டென குடை விரித்தேன்! நீ பட்ட துயரை கண்டு என் உடல் தோலை உரித்து அதில் ஒரு குடை உருவாக்கி உன்னை காக்க என் மனம் துடிக்க ஆனால் இந்த ஜனனம் குடுத்த என் வாழும் தெய்வத்திற்கு உன் ஆயுள் முழுக்க பணிவிடை செய்ய வேண்டி என் மனதை கல்லாக்கி ஏதோ ஒரு துணியில் ஆன ஒரு குடை விரித்தேன் என் வாழும் தெய்வமே! September 10, 2024, 09:00:11 am |
1 |
Re: கவிதையும் கானமும்-047
உன் கார்குழலை வருடும் காற்றாக உருவம் அறியா பொழுது முதல் தோன்றிய நேசம் அவளோடு என்னை ஓர் உயரிய உயிரின் பொருளாகவைத்தது. உயிராக நான் என்று ஆன பின் - அவளோடு உயர்வாக எண்ணிய அனைத்தும் துகள்களாக மாறின தன்னோடு தான் கொண்ட துயர்களை சிறு பணிவோடு ஏற்றவாறே தன் நேசத்தை, உயிர் பொருளின் சிறப்பாக தனக்குள் சேமித்தாள் தன்னைப்பற்றிய சஞ்சலம் சிறிதளவு கூட கொள்ளாமல் தன் தனித்துவமான அன்பின் வழியில் தூய சுடர் ஏற்றுவாள் தன் கருவிழிகளுக்குள் சிறு தூசு அண்டாதவாறு தனக்குள் தூய்மையாக தனக்கென அடைகாப்பாள் அன்பின் அனைத்துமாக தான் என இருப்பினும் தாம் பெற்ற இடர் ஏதும் செயல் இழந்தவாறு கையாளுவாள் தனக்கென தேவை ஏதும் ஏற்காமல் என் தேவையை பெரிதென கண்டாள் எனக்காய் நீ இருந்த நாட்கள் அனைத்தும் உணர்த்தியவை யாதெனில் உன்னில் நானாய் என்றும் உனக்காக நான் வேண்டும் என்று உன்னிடத்தில் மடி சாய்ந்து என்னை மறந்த நேரங்களில் கூடாத மதிப்பு ஏனோ எனக்காய் நீ உழைத்த நேரங்களில் கண்ணீர் மல்க கூடியது சிறிய இடைவேளையை கூட உனது புன்னகையில் இதழ் கூப்பி என் நேரத்தை பொன் போன்று மதிப்பிட செய்தாய் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உன் அன்பில் நீந்திய என்னை ஏனோ ஒரு புயல் இன்னொரு கரை கொண்டு சேர்த்தது புயலை கண்டு அஞ்சிய நான் வசிப்பது முழுதும் உன் சுயநலமே இல்லாத அன்பின் வகையின் பொருட்டாய் கரை கடந்து புயல் போன பின்னும் உன் நினைவை கடக்க தெரியாத நான் கொள்ளும் எண்ணம் யாதெனில் புயல் ஓய்ந்த பின் மழையின் சாரலை கண்டு ரசிக்கும் அமைதியான சூழலில் மெல்ல உன் கார்குழலை வருடும் காற்றாக நான் மாற வேண்டுமென September 12, 2024, 07:07:04 pm |
1 |
Happy Birthday Misty Sky
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (25-09-2024) Wishes To Our Lovable Friend MISTY SKY Wishes Him All The Very Best & Good Luck👍 🎊💫🎁 Wishing You A Beautiful Day With Good Health And Happiness Forever🎊💫🎁
🍫🍬🍰Be Happy With Your Loved Ones May Your Dreams All Come True🍫🍬🍰 September 24, 2024, 11:58:13 pm |
1 |