See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
BLACK & WHITE
💕Vaazhka oodi oodi
Alanji thirinji Odanji mudunji Aarambichaa edatha thedi Vandhu nikkum da 💕 💕Ellam mudinja pinnae Eriya pora podhaiya pora Sorgam naragam ponadhukku Saatchi illada💕 💕Indha nodi irukka Vaazhndtukkom Neram nalla irundha Polachirukkom Edhuvum inga sariyum illa Thavarum illa poda💕 💕Kolaiyum veeranum onnu Veeramaana kolaiyum undhu Dharmamum dhrogamum onnu onnu Dharmam kaakka dhrogam seivadhundu💕 💕Yaarayumm nambaatha Ingae nambunnaa maaratha Pagai theera Porkalam pogatha Ponnaal neeyum poridu Edhaiyum yosikkadha💕 December 13, 2022, 12:58:55 am |
1 |
Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்)
" கவிதையும் கானமும் " - இது வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.பொதுமன்றத்தில் கொடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஏற்ப நீங்கள் பதிவிட்ட உங்கள் கவிதைகளை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி KAVITHAIYUM GAANAMUM : This program is telecast every Sunday at 9 PM IST. A program that organizes your poems that you have posted according to the given photo in the forum. இங்கே பின்னூட்டங்கள் / கருத்துக்கள் பதிவிடும் பொழுது நிகழ்ச்சியின் எண் அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள். எந்த வார நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். While posting feedback/comments here, Please include the episode number or broadcast date. It's helpful to know which week's show you're posting your comments about. January 09, 2023, 11:06:42 am |
1 |
Program Feedback -பின்னூட்டங்கள் ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)
January 16, 2023, 05:39:14 am |
1 |
காதலே
கேள்விகள் கரைதனில் நடந்து, கால் நனைத்து நடத்தலில், அகமகிழ்ந்து நினைவுகளின் அசைபோடுதலுடன் கழிகிறது அந்தி நேரம்! அன்று மலர்ந்த, அழகிய பூவின் வாசம் நுகர்ந்து, நறுமணத்தினுடே மலர்ந்த அவன் முகம்! கண்ணாடி பார்த்து, சிகையலங்காரம் செய்கையில், பிம்பமாக தோன்றி மறையும் அவன் முகம்! வைத்தியமில்லா நோயொன்று, இதயம் திருடிச் செல்கையில், அமைதியுடன் நோக்கும் அவன் கண்கள்! தலைப்பிட மறந்து, என்றோ ஒருநாள் எழுதப்பட்ட மடலில், பளிச்சிடும் அவன் பெயர்! காரணமில்லா கேள்வியா? இது காதலுக்கான அறிகுறியா? யார் சொல்வார் இதற்கான பதிலை? கேள்விகளுடனே கரைகிறது இந்த நொடி. March 14, 2023, 11:36:11 am |
1 |
Re: BLACK & WHITE
KG- 017 BEAUTIFUL MEMORIES❣ April 17, 2023, 07:00:28 pm |
1 |
Happy Birthday EAGLE13
May 13, 2023, 11:11:49 am |
1 |
கவிதையும் கானமும்-024
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-024 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். May 22, 2023, 10:32:48 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-024
அவன் அவ்வளவு அழகு இல்லை, அடர்த்தியான கருமை நிறம் உள்ளவன், செல்வமிக்க குடும்ப பின்னணியும் இல்லை, கிளியை பிடித்து குரங்கு கையில் கொடுப்பதா.. இத்தனை கருத்து தடைகளையும் மீறி உன்னை நேசித்த ஒரு உள்ளத்தை நீ காயப்படுத்தினாயே.. உன் கண்ணில் விழுந்தவள் நான், உன் குரலை ரசித்தவள் நான், ஆண்களுக்கு உரிய கம்பீரத்தை உன்னில் ஸ்பரிசித்தவள் நான், உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உன் வசீகரமான முகத்தை பார்க்க தவறவிட்டது இல்லை நான், என்மீது அன்பு கொண்ட நூறு பேர் கண் முன்னே இருந்தாலும்... உன்னை காண ஆசைப்பட்டது நான்... என்னுடன் நீ உரையாட தவறவிட்ட நாட்கள் பல, ஆனால் நான் உன்னை ரசிக்க தவறவிட்ட நாட்களே இல்லை.. உன் சுக, துக்க நிகழ்வுகளில் நீ அழையாமலே கலந்துக்கொண்ட தருணங்கள் பல... எந்த சூல்நிலையிலாவது எனது ஆறுதல் அல்லது வாழ்த்துக்கள் உன் துணை நிற்கும் என்று நினைத்து, நான் ஏமாந்து நின்ற தருணங்கள் அவை... உன்னிடம் அன்பு எதிர்பாக்காமல் என் அன்பை ஏற்றுக்கொள் என்று தந்த என்னை, நீ புரிந்து கொள்ளாமல் உதாசீனம் படுத்தினாயே ... அப்பொழுதும் உன் மனம் நோகக்கூடாது என்று என் கோவத்தை மறைத்தேன்... பல எதிர்ப்பு, கோவங்கள், அடிகள், அவதூறுகள் என் மீது தாக்கப்பட்டாலும் அவை உன்னிடம் சேராமல் தடுத்தவள் நான்... உன்னால் ஏற்பட்ட காயங்கள் இவை, ஆனாலும் உன் தவறில்லை என்று என் மனம் ஒவ்வொரு முறையும் எனக்கு சொல்லும்... 😅 😔 அப்பாவி காதலி நான்... உனக்காக நான் என்று இருக்கும் என்னை நீ புரிந்துகொள்ளாமல் கோபித்து கொண்டாயே .. உனக்கு என் அன்பை எப்படி எடுத்து சொல்வேன்... எடுத்துச்சொல்லி புரியும் அன்பு பிச்சை எடுப்பதை விட கேவலம் அல்லவா...! பல வருடம் சிரமப்பட்ட எனக்கு இதுக்குமேலும் சிரமப்பட வைக்காமல் இன்னொரு மங்கையுடன் சென்றாய்... இது எனக்கு 6 வது மகிழ்ச்சியான வருடம், சிரிப்பில் நான் .... காதல் தோல்வியில் கண்ணீருடன் நீ .... May 23, 2023, 08:23:58 am |
1 |
Re: BLACK & WHITE
HAPPY BROTHER'S DAY MY BROTHER YASH🥰❤
May 24, 2023, 03:39:43 pm |
1 |
Happy Birthday RIYANA QUEEN
Global Tamil Chat (GTC) Wishes RIYANA QUEEN on Her Birthday (27-May) Happy Birthday RIYANA QUEEN 🎂🎉🍫🍬🥳 May 27, 2023, 12:06:15 am |
1 |