GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on May 22, 2023, 10:32:48 pm

Title: கவிதையும் கானமும்-024
Post by: Administrator on May 22, 2023, 10:32:48 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-024


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk024.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-024
Post by: AniTa on May 23, 2023, 08:23:58 am
அவன் அவ்வளவு அழகு இல்லை,
அடர்த்தியான கருமை நிறம் உள்ளவன்,
செல்வமிக்க குடும்ப பின்னணியும் இல்லை,
கிளியை பிடித்து குரங்கு கையில்
கொடுப்பதா..
இத்தனை கருத்து தடைகளையும்
மீறி உன்னை நேசித்த ஒரு உள்ளத்தை
நீ காயப்படுத்தினாயே..

உன் கண்ணில் விழுந்தவள்
நான்,
உன் குரலை ரசித்தவள்
நான்,
ஆண்களுக்கு உரிய கம்பீரத்தை
உன்னில் ஸ்பரிசித்தவள்
நான்,
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு
வினாடியும் உன் வசீகரமான
முகத்தை பார்க்க தவறவிட்டது இல்லை
நான்,
என்மீது அன்பு கொண்ட நூறு பேர்
கண் முன்னே இருந்தாலும்...
உன்னை காண ஆசைப்பட்டது
நான்...

என்னுடன் நீ உரையாட தவறவிட்ட
நாட்கள் பல,
ஆனால் நான் உன்னை ரசிக்க
தவறவிட்ட நாட்களே இல்லை..
உன் சுக, துக்க நிகழ்வுகளில்
நீ அழையாமலே கலந்துக்கொண்ட
தருணங்கள் பல...
எந்த சூல்நிலையிலாவது எனது
ஆறுதல் அல்லது வாழ்த்துக்கள்
உன் துணை நிற்கும் என்று
நினைத்து, நான் ஏமாந்து
நின்ற தருணங்கள் அவை...

உன்னிடம் அன்பு எதிர்பாக்காமல்
என் அன்பை ஏற்றுக்கொள் என்று தந்த
என்னை, நீ புரிந்து கொள்ளாமல்
உதாசீனம் படுத்தினாயே ...
அப்பொழுதும் உன் மனம்
நோகக்கூடாது என்று
என் கோவத்தை மறைத்தேன்...

பல எதிர்ப்பு, கோவங்கள்,
அடிகள், அவதூறுகள்
என் மீது தாக்கப்பட்டாலும்
அவை உன்னிடம் சேராமல்
தடுத்தவள் நான்...
உன்னால் ஏற்பட்ட காயங்கள்
இவை, ஆனாலும் உன்
தவறில்லை என்று என் மனம்
ஒவ்வொரு முறையும்
எனக்கு சொல்லும்...
😅 😔 அப்பாவி காதலி நான்...

உனக்காக நான் என்று இருக்கும்
என்னை நீ புரிந்துகொள்ளாமல்
கோபித்து கொண்டாயே ..
உனக்கு என் அன்பை எப்படி
எடுத்து சொல்வேன்...

எடுத்துச்சொல்லி புரியும் அன்பு
பிச்சை எடுப்பதை விட
கேவலம் அல்லவா...!
பல வருடம் சிரமப்பட்ட எனக்கு
இதுக்குமேலும் சிரமப்பட வைக்காமல்
இன்னொரு மங்கையுடன்
சென்றாய்...
இது எனக்கு 6 வது
மகிழ்ச்சியான வருடம்,
சிரிப்பில் நான் ....
காதல் தோல்வியில்
கண்ணீருடன் நீ ....
Title: Re: கவிதையும் கானமும்-024
Post by: kathija on May 23, 2023, 09:02:28 am
என் அன்பு சகோதரி RiJiA வுக்கு 😍😍😍
என்னுடைய காதலுடன்❤️❤️❤️ தொடங்குகிறேன்
என் கவிதையை ❤️❤️❤️

காதலின் கோபம்:

காதலின் கோபம் கூட ஒரு அழகு
உன்னை நான் பார்க்க
 
என்னை நீ பார்ப்பாயா
என்னை நீ பார்ப்பாயா
அட என்னை நீ பார்ப்பாயா

 என்பதில்
 தோன்றும் அந்த இனம் புரியாதா
 உணர்வு
 
இருவருக்குள்ளும் உருவாக      தொடங்குகிறது காதல் அரும்பு

நாட்கள் ஒவ்வொன்றாய் நகர பார்க்கவில்லை என்பதில் தொடங்குகிறது

அந்த செல்ல கோபம்
அந்த
செல்ல கோபம்

ஒரு தருணத்தில் இருவர் மனமும் திறக்க காதல் வெளிப்படும் நேரம்

உலகின் அனைத்து இன்பமும்
ஒரு சேர பெற்ற உணர்வு

உன்னில் நான்
உன்னில் நான்

என்னில் நீ
என்னில்  நீ மட்டும்தானடா என்று
தோன்றும்

உலகமே அழகாய் தெரியும் தினம் பார்த்த விஷயங்களும் புதிதாய் தோன்றும்

தன் ஆனந்தம் மொத்தம் ஆனவன்
தன் ஆனந்தம் மொத்தம் ஆனவன்

 தன்னில் புதைந்தவள்
தன்னில் புதைந்தவள்

என்று ஒருவருக்கொருவர்
எண்ண அலைகளில்
தன் அவர்களை புகுத்த

மற்றொருவர் தன் அவர்களிடம் உரையாடும் பொழுது

தோன்றும் கோபம் அதுவே தொடக்கம் ஆகிறது

காரணம்
பொறாமை அல்ல

அது காதலின் உச்சம்
அது காதலின் உச்சம்

யாருக்கும் விட்டு கொடுக்க மனமின்றி
எப்படி வெளிப்படுத்துவது என்று புரியாமல்

நான் சரியாக நினைக்கிறேனா
நான் சரியாக தான் நினைக்கிறேனா

என்று மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தொடர

சரியா தவறா என்று மனதுக்கும் எண்ணக்துக்கும்  இடையில் போராட்டம் முடிவதற்குள்ளாகவே

வெளிப்பட்டு விடுகிறது கோபம்


கோபம் அது அன்பின் எதிரி
உறவின் பிரிவு
மகிழ்ச்சியின் தடை

காதலே காதலே என்று உருகிய
நெஞ்சம்

கோபம் ஒன்றை நாளும்
 ஏந்தி ஏந்தி

வெறுப்பின் உச்சம் ஆகிறது


பார்க்க முடியுமா என்று உதித்தது மறைந்து

ஏன் பார்த்தோம்
ஏன் பார்த்தோம்
ஏன் தான் பார்த்தோம் 

என்று தோன்றுகிறது


மனித மனம் தான் எத்தனை விந்தையடா


இருவரும் எதிரியை போல் அமர் கின்றனர்

ஒரு ஒரு புறம்

தேவையற்றதை மனதில் ஏத்தி உழன்று கொண்டிருக்கிறது

இன்றைய நிலையில் இந்த எண்ணம்தான் நீடிக்கிறது

பிரிந்த பின் வருந்தி பயன் இல்லை


தன்னவர்கள்  தன்னை விட்டு
போவதில்லை

தன்னை எண்ணி தான் இப்படி
என்று மனதில் ஏற்றுங்கள்


கோபம் காதலின் கொலைகாரன்


தான் நேசித்த நெஞ்சை தானே புன் படுத்து வதா

ஓ மனமே உன்னில் அன்பை என்றும் நிறுத்தி


உன் உறவை வலுப்படுத்து

உன்னவர்கள் உன்னில்
 உன்னவர்கள் உன்னில்


கோபம் வேண்டாம் நெஞ்சே💕💕💕💕💕💕
Title: Re: கவிதையும் கானமும்-024
Post by: Barbie Doll on May 23, 2023, 01:00:07 pm

கள்ளமில்லா காதல் மொழியால், கனவுகளுக்குள் புகுந்து கொண்டான்..!
விண்மீன் ஒளியாய், வெட்கம் விலக்கி விழிகள் முழுதும் நிறைந்து கொண்டான்..!

காதல் கவிதையாக, மனமுழுதும் மழைச் சாரலை பொழிய வைத்தான்..!
பார்வையினால் பேசி பேசி, பேச்சினாலே பேதை மனதை வென்றெடுத்தான்..!

நாழிகையும் நாள் கடந்து போனது.. உலகம் மறந்து, உள்ளம் மயங்கி, ஒருவன் அன்பில் திழைத்த நொடி..!
மச்சில் ஏறி கூச்சல் போட்டு.. என் மகிழ்ச்சி இவன் தான் என, மையல் கொண்டேன் மனதில் கண்டபடி..!

கண்ட கனவின் இனிமை உடைந்து, கனவுகளுக்கு தடையும் விதித்தேன்..!
கண்கள் உறங்க, உள்ளம் மட்டும் உறங்க மறுத்து, நினைவுகளாலே வதைக்க கண்டேன்..!

எதிரும் புதிருமாய், அமர்ந்து கொண்டு தனிமை சிறையை தந்துவிட்டாய்..!
சுற்றும் முற்றும், தேடி நிற்க நம்பிக்கை முறித்து கதற வைத்தாய்..!

காதல் தர்க்கம் என்றால் அது காற்றோடு போய்விடும்.. !
ஆனால் வாழ்க்கை தர்க்கம், இடைவெளியை விதைத்து போனது..!

பேச மறுத்தாய் நீ பேச மறுத்தாய்..?
பேச்சிலே விஷமதை தோய்த்து வைத்தாய்..!

தலையணை நனைத்த, கண்ணீர் துளிகள் என் காதலை சொல்ல மறுக்கிறது..!
கோபங்கள் நியாயமற்றதாய் போகும் போது, சமாதானங்கள் அங்கு தேவையற்றதாய் ஆகிறது..!

அடக்குமுறையின் அநீதியை, கண்முன்னே உணர்கின்றேன்..!
இலகுவான காதல், இன்று கழுத்தை இறுக்க காண்கின்றேன்..!

நம்பிக்கைகள் நமத்து போனால், நரைத்து போகும் எவ் உறவும்..!
மரியாதைகள் தூரம் நின்றால், மனமுடைந்து போவோம் அனுதினமும்..!
புரிதலில் பிழையிருந்தும், விட்டுக் கொடுத்து பிரிவை தவிர்க்க போராடியும்..!

இங்கே பிரிவுக்காக பாசம் மறந்து சீற்றத்தினை பரிசளித்தாய்.. !
காயம் கொடுக்காமல் விலகுகிறேன்..!
காதலுடன் காத்திருக்கிறேன்..!

நுனிக் கிளையில் ஊசலாடும் நம் காதல் ..??
மூச்சு‌ முட்ட உணர்கின்றேன்..! இயலாமையால் உடைகின்றேன்..! இணக்கமில்லா இவ்வுறவில் சீற்றம் மட்டும் மிச்சமிருக்க.....

உன் சந்தோஷத்தின் வழி தேட உன்னை விட்டு விலகி நிற்பேன்...
நீ இருந்த இதயத்தில்,.. நீ மட்டுமே இருப்பாய் என்ற உறுதியுடன்...!
Title: Re: கவிதையும் கானமும்-024
Post by: Yash on May 23, 2023, 01:04:43 pm
எங்கும் சத்தங்களாகவே வியாபித்திருக்கும் இப்பூங்காவிலே

இங்கு இரு இதயங்களோ சத்தம் இல்லாமல் விசுப்பலகையிலே!!

இன்னும் கொஞ்சம் காதலிப்போம்

வலியும் ஒரு வகை காதல் தானே

கடல் கடந்த மணித்துளிகள் போல

நிமிடங்கள் கடந்தும், அவளுக்கு  கோபம் இன்னும் கரையவில்லை

சின்ன சின்ன மழை தூரலில்

கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளிடம்

மிஞ்சி நின்றது இந்த ஆனந்தமான மணித்துளிகள்

சிந்தித்தேன், என் இதயம் ஒரு மாயக் கண்ணாடியோ

உன் பிம்பத்தை மட்டும் பிரதிபலிக்கிறதே

என்னவளே என் கண் பாவையை பார்

அதில் உள்ள ஐரிஸ் வண்ணங்களை மட்டும் ஈர்ப்பவை அல்ல

உன் உள்ளத்தில் உள்ளதையும் எதிரொலிக்கும் வண்ணமயமாய்

யார் முதலில் பேச வேண்டும் என்ற கோரிக்கை தானே உனக்கு

விண்ணப்பிக்கிறேன்,என் தீர்ந்து போகாத மனநிலையை தீர்க்கமாய்

உன் மௌனம் என்னை பலவீனப்படுத்தவில்லை மாறாக பக்குவப்படுத்தியது

இந்த நிமிடம்..,,,!!!!

கற்பனை செய்தேன் எனது பிருந்தாவனத்தின் ராஜகுமாரி நீதான் என்று

சிற்பனை கேட்டேன் இவள் சிலையை எனக்கு வடித்து தருவாயா என்று

இதுவரை பிரிக்கப்படாத பிரம்மனின் கவிதை புத்தகத்தில் இருந்து தவறி வந்த கவிதையா நீ

உன் சிக்கல் அற்ற நான்கடி கூந்தலில் நான் சிக்கி போனதை எவரிடம் சொல்வேன்!!

உன் ஹைக்கூ இதழ்களால் இந்த புதுக்கவிஞன் படும் பாடு எவர் அறிவார்??

காதலெனும் பாதரசம் பூசிதான் காத்திருக்கிறேன்

காலம் மாற்றம் அடைந்தாலும் காதல் கண்ணாடி பிம்பம் தான்

6 மணி அளவிலும் கூட  தீபம் ஏற்றியாய் இங்கு அமர போகிறாய்

 எப்படியும் இந்த பூங்காவை விட்டு கிளம்பி தான் ஆக வேண்டும்

 அந்த மன தைரியத்தில் உன் மௌனத்தோடு நானும் பயணம் செய்கிறேன்

உன் மௌனமே எனது வசந்த காலம்! 🤭
Title: Re: கவிதையும் கானமும்-024
Post by: LOVELY GIRL on May 23, 2023, 03:12:21 pm
காதல் ஒரு அழகான உணர்வு...!
நாம் இருவரும் காதல் என்னும் அழகான உணர்வில்
சிக்கி இருக்கும் வேளையில் ,
ஆயிரம் கணக்கான சண்டைகள் வருவதுண்டு..!

நான் உன்னை வெறுத்து ஒதுங்கினாலும் ,
சிரித்து நெருங்கி வரும் உன் அன்பு உனது பலவீனம்,,!
 
உனக்கு ஒரு வலி என்றால்
முதலில் துடிப்பது என் விழி என்பது எனது பலவீனம்..!

என்னதான் நமக்குள் சண்டைகள் வந்தாலும்
உன் முகம் காணாமல் நானோ ,
என் முகம் காணாமல் நீயோ
ஒருநாளும் இருந்தது இல்லை..!

சண்டைகள் போடாமல்
சகித்து கொள்ளும் உறவை விட ,
சண்டைகள் போட்டாலும்
பிரியாமல் இருக்கும் உறவே பலமானது..

எங்கே அன்பு அதிகம்
இருக்கிறதோ..!
அங்கே சண்டைகள் அதிகம் வரும் ,
எங்கே சண்டை அதிகம் வருகிறதோ..
அங்கே சமாதானமும் அதிகம் இருக்கும்..!

இன்றும் என்றும் உன்னுடன் சண்டையிட்டு சமாதானம் ஆகும்
நான் உந்தன் பாரதி....!
Title: Re: கவிதையும் கானமும்-024
Post by: Sanjana on May 24, 2023, 05:55:35 pm
என் அழகான ராட்சசியே...

சின்ன சின்ன சண்டையிட்டு என்
இதயத்தை திருடிச் சென்றாயே
என்னவளே உன்னை தோற்கடிக்க
எனக்கு மனமில்லை
நானே இறங்கி வருகிறேன்...

என் இதயமாவது இடைவெளி விட்டு துடிக்கும்
உன் நினைவுகள் அந்த இடைவெளியை கூட தருவதில்லை
ஆயிரம் சண்டைகள் போட்டாலும் 
உன் அன்பிற்காக ஏங்கி இருந்தது என் மனசு
காதல் சண்டைகள் என்றாலே
சும்மா சண்டைகள் தானே
அதிக அன்பு கொண்டவளே...

சண்டைக்கு பிறகு பேசும் போது வரும் சுகமானது
அவ் உணர்வை கூற இவ் உலகில் வார்த்தையே இல்லை
கோடிகள் கொடுத்தாலும் பெற முடியாத இன்பமடி
சண்டை வாழ்கையில் பிரிந்து வாழ்வதை விட
காதல் வாழ்க்கையில் சேர்ந்து சண்டையிடலாம்...

அதிக அன்பு கொண்டவளும் நீயே
அதிக கோபம் கொள்பவளும் நீயே
என் மனதில் குடி இருப்பவளும் நீயே
என் வாழ்வின் அஸ்திவாரமும் நீயே
ஓடோடி வா என்னிடமே என் உயிரே....

ஓய் மீண்டும் வாடி பிள்ளை
என் அழகான ராட்சசியே
செல்ல சண்டையிடலாம்
ஆயுள் முழுவதும் கைதியாக இருப்பேன்
உன் இதயமே சிறையாக இருந்தால்...


குறிப்பு:
பெரும்பாலும் சண்டை போடுவது நான்தான், எனவே என் கவிதையில் இருப்பதைப் போல, உணர்ந்து செயல்படும் காதலன்/எதிர்கால கணவன் கிடைக்கணும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தான் இந்த கவிதையை ஒரு ஆணின் பார்வையில் இருந்து எழுதி இருக்கிறேன்....
Title: Re: கவிதையும் கானமும்-024
Post by: Dhiya on May 25, 2023, 02:08:13 am
ஊடல் பொழுதினில் நான் வெல்ல நினைப்பது அவனை அல்ல என்னை, அவனிடமே செல்லும் என் மனதை...

அவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் உள்வாங்கி ரசிக்கும் நான் அவனின் ஊடலையும் காதலுக்கு நிகராக ரசிக்கிறேன்..

ஏன் எனில் அவன் ஊடலில் வெளிப்படும் அக்கறை காதல் கரையும் நொடிகளை விட பொக்கிஷம் ஆனவை..


என் உணவை மறக்கும் வேளையில் அவனின் கோபம் தாய்க்கு நிகரானது
.

வீடு திரும்ப தாமதம் ஆகும் நொடிகளில் அவனின் கோபம் தந்தைக்கு நிகரானது


என் துயரங்களை அவனிடம் மறைக்க முயன்றும் அவன் அறியும் தருணத்தின் கோபம் உற்ற தோழிக்கு நிகரானது.



அவனின் கருத்தை ஒதுக்கி நான் சுயமாய் எடுக்கும் முடிவுகளில் அவனது கோபம் ஆசானுக்கு நிகரானது...

பிறர் உடனான ஊடலில் ரௌத்திரம் கொள்ளும் அவன் முகம், என்னுடன் சிறு பிள்ளையாய் சண்டை இடுவது என்ன விந்தையோ...

பல பரிமாணங்களில் அவன் ஊடல் கொண்டாலும் அவனிடமே மையல் கொள்ளும் மனதை நான் வரமாக பெற்றேனோ...


இல்லை ஊடல் பொழுதிலும் தாய் பறவையாய் தன் சிறகுகளுக்குள் காக்கும் அவனையே நான் வரமாக பெற்றேனோ....

இனி அவனுடனான அனைத்து பிறவிகளிலும்
நான் வேண்டுவது...

ஊடலில் அவன் சூரியனாய் என்னை பொசிக்கினாலும் அவனுக்காகவே மலரும் சூரிய காந்தியாக பிறக்க வேண்டும்...

சுயமரியாதையில் கட்டுண்டு அவனை விலக நினைக்கும் மனதை பெறாமல் இருக்க வரம் வேண்டும்....

அவன் பாறையாய் இருகினாலும் பாறையின் இடையில் வேர் விட்ட கொடியாய் அவனுள் மலர வேண்டும்....

ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும் அவன் கண்களை காதலுடன் சங்கமிக்கும் வரம் வேண்டும்.....