GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on February 20, 2023, 07:38:46 pm

Title: கவிதையும் கானமும்-018
Post by: Administrator on February 20, 2023, 07:38:46 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-018


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk018.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-018
Post by: Barbie Doll on February 20, 2023, 11:04:14 pm


அதிகாலை நேரம், கீச் கீச்சென பறவைகளின் ரீங்காரம்.!

மனமோ.. இனிமையான இசையை, தாளம் போடும்!

இசைக் கருவிகளின்.. மொத்த இனிமையும் தாங்கிய, சப்த நாதம்!

பறவைகளின் மொழி ரசித்து, வானம் பாடும் புன்னகை கீதம்.!

அங்கோ.....

அங்குமிங்கும் இரை தேடி சுறுசுறுப்பாக வானெங்கும் பறக்கும், பறவை கூட்டம்!.

இதெல்லவோ வாழ்க்கை.. என சிலிர்த்தே, வியக்கும் ..இதுதான் சொர்க்கம்!.

.......அதோ ஒரு நாள் வந்ததே ..?

யுத்தமின்றி சிறைப் பிடித்தாய், 'அன்பை' ஆயுதமாக்கி.!

சிறைப் பிடித்து, ஆட்டி வைத்தாய் சின்னஞ்சிறு ஜீவன்களை, எதிரியாகி!

உழைத்து உண்ணும், பெருமையை பிடுங்கி, கூண்டு சிறைக்குள் பூட்டி வைத்தாய்!

கொஞ்சமாக, கொஞ்சிக்கொஞ்சி பொம்மை போல, மாற்றி வைத்தாய்!

கூண்டு பறவையின், காதல் எங்கே?
மழை ரசித்து, நடனமாடிய சிறகெங்கே?
சிறகிருந்தும், சில்லு சில்லாக உடைந்த அதன் கனவுகள் எங்கே?

இளங்காலையில் ஆனந்தமாக பறந்தேனே!
பாசத்தினால், என் கடைமைக்கு விலை கொடுத்ததேனோ!

என் புலம்பல், உன் செவிகளில் விழவில்லையா?

என்று..? என் விடுதலை சொல்லிவிடயா!


மகிழ்ச்சியின், தேடுதலை முடக்கி.. இதுதான் வாழ்க்கையென  பழக்கப் படுத்தினாயே!

 தனித்து வாழுதல், பறவைக்கில்லை..
அதன் சொந்தங்கள் அழித்து, உன் சொந்தமாக்கினாயே!

......பறவை பேசும் வார்த்தை கேள்..!

திசையறியா பறவை கூட, திகட்டாமல் தாயை தேடும்..!
திசைமாறி வந்து விட்டேன், திரும்பி செல்ல வழி கொடும்.!
 
நான் பேசும் வார்த்தை புரிந்துவிட்டால், உன் பாசம் வெறுத்தேன், என புரிய வைப்பேன்!
 
அடிமை வாழ்க்கை, அறவே வெறுக்கும் ஐந்தறிவு ஜீவன் நான்!
அஹிம்சை வழியில் கேட்கின்றேன்..!
என்னுலகில் எனை வாழவிடு!

.......அங்கே ஒரு மழலை மொழி..
........அவளிடமே வினவி நின்றேன் என் வாய்மொழி..?

சிறை வாழ்க்கை மிகவே கொடிதாகும்!
என் தவறென்ன? இங்கு கூறுவாயா?

தண்டனை போதும் , எங்களுக்கு?
மனிதநேயம் உணர்ந்து நடப்பாயா?

கூண்டை பார்த்து, கவிதை போல் சிரிப்பவளே!
உணவு அளித்து, என்னையே உற்று நோக்குபவளே!

என் முக வாடல், அறிவாயா?
என் ஏக்கம் நீக்க துணிவாயா?

துன்பம் நீக்கும் 'கடவுள்' போல்!
என் சிறகு விரித்து ..பறக்க.. வைப்பாயா?

பறக்க வைத்தாளே அழகு நிலா!
மகிழ்ச்சியின் ஆராவரம், என் மனதிலா!

கண்களில் நன்றி கூறி விடை பெற்றேன்!
சுதந்திர காற்றை சுவாசித்தேன்..!

என் சிறகுகளுக்கு வானம் சிறிதல்லவா.!
உலகம் மறந்து, உயரே பறந்து உவகை கொள்ளும் நாளல்லவா.!

 
Title: Re: கவிதையும் கானமும்-018
Post by: Eagle 13 on February 21, 2023, 09:18:57 am
சிறையில்

அடையவா நான் பிறந்தேன்! என் சிறகை  விரித்து பறக்கவே நான் பிறந்தேன் !

நாடு, காடு தாண்டி - தினமும்

உணவைத்தேடி!

என் எச்சத்தால் உருவான மரங்கள்

கோடி,

மணிதனின் அபகரிப்பால் காடுகளும்

ஆனாது வாடி! கைப்பேசி கோபுரங்கள் எங்களுக்கு தந்தது அழிவை தேடி! தினமும் வீடுகளில் உணவைத்தேடி

அலைக்கின்றோம்!

கோடைகளில் தண்ணீருக்கே

நிலைக்குலைகின்றோம்!

நான் கூட்டில் வாழ்ந்தால் உங்கள்

முகம் மட்டும் தான் எனக்கு தெரியும் !

நான் கூட்டை தாண்டி சென்றால் இந்த யுகமே எனக்கு புரியும்!

 எங்களை விட்டுவிடுங்கள் சுதந்திரமாய்!

நாங்கள் உலகை சுற்றிவருவோம், யுகயுகமாய்!

(https://i.postimg.cc/tgnKSf7s/images-44.jpg) (https://postimages.org/)
Title: Re: கவிதையும் கானமும்-018
Post by: Ishan on February 21, 2023, 01:31:03 pm
சுதந்திரமாய் போகிறேன்,
சுற்றி திரிய போகிறேன்,
வேறுலகம் காண போகிறேன்,
வேற்று வகை பிறவிகளை
என்னோடு இணையாக்க போகிறேன்.....

இறகை விரிக்க போகிறேன்
இமயம் வரை பயணம் தொடர போகிறேன்..
இயற்கையை ரசிக்க போகிறேன்...
இன்னல்கள் பல எதிர்க்க போகிறேன்....

வானம் ரசிக்க போகிறேன்,
வானில் வட்டமிட போகிறேன்,
வாழ்வின் அர்த்தம் காண போகிறேன்,
வாழ்வின் எல்லை வரை வாழ போகிறேன்....

காட்டில் வசிக்க போகிறேன்,
கானம் ஒன்று இசைக்க போகிறேன்,
கவனிப்பார் மானிடனின் கண்களில்,
நான் அழகியாக போகிறேன்......

நான், இளைப்பாறும் நேரம்
இலையும், குச்சியும் இதமாய் அமைத்து
ராஜமாளிகையாக்க போகிறேன்,
ராஜ வாழ்வை வாழ போகிறேன், 
நிலவின் ஒளியில்  சுதந்திரமாய்  உறங்க போகிறேன்.......
Title: Re: கவிதையும் கானமும்-018
Post by: Vaanmugil on February 21, 2023, 01:33:09 pm
பறவையை போல்,
சுதந்திரம் காண துடிக்கும் பெண் இனம்....

சிறு கூட்டுக்குள்ளே சிக்கி தவிக்கிறது
என் போன்ற பெண் இனமே....

கூண்டு பறவையாய் நானிருந்தேன்
கூச்சலிட்டு தவித்திருந்தேன்,
கூண்டை விட்டு பறக்கவே...
சுதந்திரம் எந்நாள் என்று காத்திருந்தேன்....

பெண் என்ற இனமே,
பேழை பெட்டிக்குள் அடைத்துவிட்டு,
லட்சிய பாதையை தொட துடிக்க,
லாபகரமாய் எதுவும் இல்லை,

கூறு போட்டு குத்தகைக்கு,
குமரியென பெண் கேட்க,
கூடியிருந்த சாதி சனமும்,
கூட்டத்திலே யாரோ ஒருவனாம்!
மனம்முடிக்க வந்த மணமகனாம்!
மாசியில திருமணமாம்,
மகிழ்ச்சியில் கூடியிருக்க.....

பெண் மனம் புரியலையே
பெத்தவளும் கடனிலே
காலத்தை கடத்த
கண்கலங்கி கேட்டாளே....

காலமெல்லாம்
உன்ன கரை சேர்க்க தவித்திருந்தேன்
கடவுளென வந்திருக்கான்
கழுத்த நீட்டி கட்டிகடின்னு
கை கூப்பி கேட்டாலே...

பெத்த மனம் கேட்கையில
பாவி நான் என் செய்வேன்...
என் லட்சியத்தை மூட்டை கட்டி
மூன்று முடிச்சி வாங்கிட்டேன்....

சுதந்திரமா பறக்கத்தான்
சூட்சமம்தான் செய்ய தெரியலையே
சூழ்நிலை கைதியாய் கண்ணீரீல நான் இருக்க,
நடந்ததை நினைச்சு நான் தவிக்க....

கட்டிக்கிட்ட மவராசன்,
கண்ணீர கண்டுகிட்டு
ஏனென்று கேட்காம,
என் மனம் அறிந்தானே.....
கூண்டை விட்டு பறக்கவிட்டானே...
சுதந்திரமாய்  பெண்ணின்
இலட்சிய பாதைக்கு வழி வகுத்தானே.....
Title: Re: கவிதையும் கானமும்-018
Post by: Sanjana on February 21, 2023, 04:50:17 pm

தன் குஞ்சுகளுக்காக இரை தேடி
விடியலில் புறப்பட்ட பட்சி
சிறகு விரித்து பறந்து சென்று
கண்பார்வையை தரையில் பதித்து
கண்டு பிடித்த உணவினை
அலகினால் கொத்தி எடுத்த இரையினை
கொண்டு செல்ல முன்
இரக்கமற்ற கயவர்களின் தடத்தினுள் அகப்பட்டு
கூண்டினில் சிக்கியதே
மனிதம் இல்லாத மனிதனின் கண்களில் தென்பட்டு சிறைபட்டதே…

பறவைகள் வாழிடங்களை சூரையாடினோம்
நிர் நிலைகளை வற்றவிட்டோம்
இயற்கை வளங்களை அழித்தோம்
வானையும் மண்ணையும் அளந்த பறவைகளை
இரும்புக் கூண்டுகளில் அடைத்தோம்
அழகான சிறகுகளை விரிப்பதை மறக்கடித்தோம்
இனிய தேவ கானத்தை இசைக்காமல்
சாவு கானத்தை தினம் இசைக்க வைத்தோம்
தனிமையில் வாடிய பறவையின் வதனம் தினம் பார்த்தோம்...

மனிதநேயம் உள்ள கையினால் விடுபட்டு
கூண்டு பறவையின் சிறகு
காற்றை கிழித்துக் கொண்டு
இருப்பிடத்தை நோக்கி சுதந்திரமாக பறந்ததே
இதுவே உண்மையான மாற்றம்
பிற உயிரினத்தின் மனதை வெல்வதற்கு
சிறைபிடிக்கவோ தேவை இல்லை
அவற்றை சுதந்திரமாக வாழ விட்டாலே போதும்….

சிறகடித்து பறந்த அந்த பட்சி
சுதந்திரமாக பறக்கும் காட்சி பார்த்தோம்
அகதியாக இருக்கும் எம் உறவுகளின் நிலைமையை உணர்ந்தோம்
இப் பறவைகளின் சிறை கதவுகளின் விடுதலையும்
எம் இனத்தின் விடுதலையும் ஒன்றே 
நாமும் சுதந்திர பறவையாக பறக்க தவிக்கிறோம்
விடியலுக்காக காத்திருக்கின்றோம்...
Title: Re: கவிதையும் கானமும்-018
Post by: RoJa on February 22, 2023, 12:38:33 pm
சிந்தனையில் சிறந்தவள்,
இல்லறத்தில் இனியவள்,
விருப்பங்களில் விந்தையவள்,
அறிவினில் அளவில்லாதவள்,
அழகினில் அமுதானவள்,
பாசத்தில் பணிவானவள்,
கருணையில் கரும்பானவள்,
கருத்தில் கனலானவள்,
பொறுமையில் பொலிவானவள்,
வித்தைகளில் வில்லானவள்,
பழகுவதில் பண்பானவள்,
தாய்மையில் தவமானவள்,
சினத்தால் சிறையிடுபவள்,
தேடல்களில் தேவதையானவள்,
மனதால் மகத்தானவள்,
மன்னிப்பில் மயிலிறகானவள்,
காதலில் கவிதையானவள்,
நட்பில் நம்பிக்கையானவள் ,
மனையில் மலரானவள்,
சமையலில் சாகசமானவள்,
வெட்கத்தில் வெள்ளந்தியவள்,
சிரிப்பில் சித்திரமானவள்,
அக்கரையில் அதிசயமவள்,

இத்தனை இருந்தும் அடிமை சிறை,
அகலவில்லை அவளை விட்டு,
சிறகடித்து பறந்து விட ஆசையிருந்தும்,
சிறகொடிந்த மடந்தை ஆனாள் பெண்ணாய் பிறந்து..

சம உரிமை கிடைத்த பின்பு,
மனிதன் கொஞ்சம் மாறிவிட்டான்,
பெண்ணை மதிக்க பழகி விட்டான்,
இன்று கிடைத்தது நிம்மதி,
வாழப் போகிறேன் என் வாழ்வை,


புதிய காற்று சுவாசிக்கிறேன்,
புதிய உறவு காண்கிறேன்,
தொலைந்து போன என் நாட்கள்,
மீண்டும் கிடைத்தது,
சந்தோஷத்தில் நான் தடுமாறி போகிறேன்,
நரகமாய் இருந்த என் பூமி,
சொர்க்கம் ஆகிறது இப்பொழுது,
உலகம் எங்கும் சிறகடிக்க போகிறேன்,
உற்சாகமாய் சுற்றித் திரியப்போகிறேன்,
என்றும் நான் நானாக.
Title: Re: கவிதையும் கானமும்-018
Post by: kittY on February 23, 2023, 11:34:13 am
கொஞ்சி கொஞ்சி வளர்த்தாலும் கொய்யாப்பழம் தந்தாலும்.... அஞ்சி அஞ்சி வாழ எனக்கு விருப்பமில்லை....

கூண்டுகுள்ளே அடைத்து செல்வமாய் வளர்த்தாலும் தேவை இல்லை அது எதுவும்....என் சிறகை விரித்து இறக்கை அடித்து வானில் சுற்றி வர வேண்டுமே....

மரத்தின் உச்சியில் கூடு கட்டி கதைகள் பேச தோணுதே!!...விடியலை  கண்டவுடன் கூட்டமாய் கூட்டை விட்டு உலாவி வர தோணுதே..

இந்த மானிடம் செயல் கண்டு வருந்துகிறேன் ... எங்கே சென்று முறையிடுவேன், நீதி எப்படி பெற்றிடுவேன்... கூண்டுக்குளே கைதியாய் அடைத்து வைக்களாகுமோ.... அப்படி என்ன தவறு செய்தேன் உங்கள் கண்களில் பட்டது பாவம் தான்....

பாவப்பட்ட ஜீவன் நாங்கள் வார்த்தை புரியா  ஊமை நாங்கள்....இத்தனை செயல் பார்க்கும் நீங்கள் கண்கள் இருந்தும் குரடர்களோ...

அடைத்து வைத்து ரசிக்கின்றீரே.... எங்கள் உணர்வை உணரவில்லை..

கொஞ்சி கொஞ்சி பேசினாலும்... கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் அடைக்கலமும் வேண்டாம் அடைத்து வைக்கவும் வேண்டாம்... உலகம் பார்க்க சிறகை விரித்து
...வானவில்லை ரசிக்கணும்....கொட்டும் மழையில் நனையனும்.... சிறு கூட்டை அமைக்கணும்... நேரம் பார்த்து வசிக்கணும்... உறவுகளை ரசிக்கனும்... எட்டா தூரம் பரக்கனும்....

அடைத்தும் வைக்கும் கரங்களே...விடுதலை தர  மறுக்கின்றிரே... இன்னொரு ஜென்மம் இருக்குமென்றால்... மானிடா எம் நிலை அறிய நீ இறக்கயுடன் பிறக்க வேண்டும் நான் கரங்களுடன் பிறக்க வேண்டும்.....
இருந்தும் மனிதா உம் தவறை நாங்கள் செய்ய நினைக்கல புரிய வைக்க முடியல😒.....