GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on January 23, 2023, 07:05:31 pm

Title: கவிதையும் கானமும்-015
Post by: Administrator on January 23, 2023, 07:05:31 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-015


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk015.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-015
Post by: Eagle 13 on January 23, 2023, 09:16:05 pm
இணையம்

இன்று
ஆனாதோ

இளைஞர்களின்
!இதயம்!

! இணையம் அதனால்

அறிவோம்
இன்று எதையும்!

இணையம்

அதனால்

சிதையும்,

உறவுகள்,

உணர்வுகள்

கனவுகள்

இன்னும்

பலவும்,

சமூக ஊடகம்-

நவீன உலகின் நாடகம் .

செய்திகளை

உடனக்குடன் தந்தாய்!

வியாதிகளை உடனும் கொண்டு வந்தாய்! உடலையும் உள்ளத்தையும்

எங்கள்

அடிமையாக்கிவிட்டாய்!,

எங்கள் பொழுதுபோக்கில்

உன்னை

உடைமையாக்கிவிட்டாய்!

உன்னை ஒவ்வொரு பொழுதும் பின் தொடர்வதை கடமையாக்கிவிட்டாய்! 
சிலநேரம்

எங்களை

சிந்திக்க வைக்கிறாய்!
இன்னல்களை

சந்திக்க வைக்கிறாய்!

எங்கள் விளையாட்டுகளை கைப்பேசியினுள்

கொண்டு வந்தாய் !

அதனால் எங்கள் உடலமைப்புை கேள்விகுறிக்கு

கொண்டு சென்றாய்!

உன்னால்: இன்று!

எங்கள் உறக்கம் இறக்கமற்று  கிடக்கிறது
  சிலருக்கு உடல்பருமன் பறக்கிறது!

எங்கள் உறவின இணைப்பு பாலாமா?

இல்லை!

மனித இனத்திற்கே அடிமைக்கோலமா? தெரியவில்லை!

உன்னால் எங்களுக்கு நன்மையும் நடக்கிறது!

உன்னால் ஏற்படும் தீமைகளை சொன்னால், மனம் ஏற்க மறுக்கிறது!.

தேவைகளே! புதிய கண்டுபிடிப்பு களுக்கு காரணமாம்!

தேவையற்றவைகளையும் நீ சேர்த்து   வைத்திருப்பது   எங்களின் சாபங்களா? !.
Title: Re: கவிதையும் கானமும்-015
Post by: AniTa on January 23, 2023, 10:20:10 pm
சுதந்திர பறவையாக
சுற்றி திரிந்து,
நிஜ ஸ்பரிசங்களை உணர்ந்து,
உணர்ச்சிகளை உவமையாக்கி
இலக்கியமாக வாழ்ந்த மனிதனே !!!

இப்பொழுது ஏனோ இந்த
ஆறு அங்குலத்தில்
அடங்கிப் போனயோ !

சுலபம் என்ற ஒரு வார்த்தையில்
உன் சிறகுகளை ஒடித்துக்கொண்டு
கூண்டில் அமர்ந்தாயே...

உரையாடலை வசதியாக்கிக்கொள்ள
ஆசைப்பட்டாயோ..
மனிதர்களின் ஸ்பரிசங்களை
உணர தவறவிட்டு,
இன்று நல்லவர்கள் யார்!
கெட்டவர்கள் யார்!  என்று
பிரித்துப் பார்க்க கூட தெரியாமல்
வலையில் மாட்டிக்கொள்ளும்
குருவிகளைப்போல் வாழ்கிறாயே...

இயற்கையின் மடியில்,
ஓடித் திரிந்து விளையாடி
உடல் ஆரோக்கியத்துடன்
பெரிதும் புகழ்பெறாத
விளையாட்டு வீரர்கள் அன்று...

இன்று கைபேசி விளையாட்டுகளின்
புகழ்ச்சியில் மயங்கி
உன் தனித் திறமைகளை
செயலாக்க தவறவிட்டு,
நோயாளிகளாய்
மண்ணில் அடங்குகிறாயே !!!

சுலபம் என்ற வார்த்தையில்
உன் சோம்பேறித்தனத்தை ஒளிக்காதே !

கைபேசியை கையாள பழகிக்கொள் !

புதிய தலைமுறையினருக்கு
உன்னையே பாடமாக வழிகாட்டிக்கொள் !

Title: Re: கவிதையும் கானமும்-015
Post by: Barbie Doll on January 24, 2023, 08:20:44 am



இன்று கைப்பேசியால் வாழ்க்கை தொலைத்தவர்களும் உண்டு..!

கைப்பேசியால் வாழ்ந்தவர்களும் உண்டு..!

தொலைவைக் கூட பக்கமாக்கும் இந்த கைப்பேசியால் நாம் பெற்ற நன்மைகள் பல..!

கைப்பேசியால் அரசியல் கற்றோம்..!
கல்வி கற்றோம்..!
சமையல் கற்றோம்... !
மொழிகள் கற்றோம்..!
நடனம் கற்றோம்.. !
பாடல் கற்றோம்.. !
இன்னும் பல கலைகள் கற்றோம்.. !
ஏன்
அகிலமும் கைப்பேசி மூலமாகவே கற்றுக் கொண்டிருக்கிறோம்..!

புதுத்துணி உடுத்தி, அழகாக அலங்கரித்து புகைப்படம் எடுக்க புறப்பட்டு சென்ற காலம் எங்கோ போனது..!

வேலை தேடி தெரு தெருவாக அலைந்த காலம் எங்கோ போனது..!

இன்று கைப்பேசி இருந்தால் போதும் பல நூறு புகைப்படம் நம் கையில் இருக்கும்..!


நல்லதை தேடினால் நல்லதே கொடுக்கும்.. தீயதை தேடினால் தீயதை கொடுக்கும் அட்சய பாத்திரம் தான் இந்த கைப்பேசி..!!

கைப்பேசியை நம் கைக்குள் அடக்கி விட்டோம் என்று மமதை கொள்ளாதே மனிதா..!

கைப்பேசிக்கு அடிமையாகி நம் வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்..!

சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் உலகில் நம் வேலைகளை எளிதாக்கினாலும், இந்த கைப்பேசியால் சோம்பேறி ஆனவர்கள் பலபேர்..!

கைப்பேசியே உலகம் என்று உறவுகளை மறந்தவர்கள் பலபேர்..!

இரவெது பகலெது என்றில்லாமல் என்நேரமும் கைப்பேசியே கதி என்றாகி போனோம்..!

ஓடியாடி விளையாட வேண்டிய சிறு குழந்தைகள் கூட கைப்பேசியில் மூழ்கி கிடக்கின்றனர்..!

பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி, கதைப் பேசி மகிழும் தாத்தா பாட்டிகள் கூட கைப்பேசியில் கதைப் பேசுகின்றனர்..!

கைப்பேசி மூலம் பகிரும் அத்தனை வாழ்த்துக்களும் மனிதன் முகம் பார்த்து சிரிக்க மறுக்கிறது..!


முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் இவை மூலம் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகினாலும், நம் சொந்த குடும்பம் மறந்து விட்டோம் என்பதை மறுக்க முடியாது..!!


நம்மை ஆட்கொள்ளும் இந்த கைப்பேசியை அளவாக பயன் படுத்தி அளவில்லா நன்மைகளை பெறுவோம் ...!

இளைய தலைமுறையின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுப்போம்..!




 
Title: Re: கவிதையும் கானமும்-015
Post by: Sanjana on January 24, 2023, 02:09:01 pm

அனைத்து நரகமும் வலையில் தளர்வானது,
என் நட்பு வட்டம் பெரியது,
மற்றும் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வேகமாக வளர்ந்து வருகிறது,
நான் பிரபலம் என்ற ஒரு உணர்வு,
என் நண்பர்களுக்கு என்னை தெரியாது,
நட்பை எதிர்மறையாக பார்க்க நான் இணைக்கப்பட்டிருக்கிறேன்,
அது நன்றாக இருக்கிறது…

நான் சிறிய விஷயங்களைப் பற்றி கிசுகிசுக்கிறேன்,
சொற்பொழிவு செய்திகளை பரப்புகிறேன்,
என் வலைப்பதிவை அழித்து விட்டால்,
யாரும் கவலைப்படவில்லை,
எனக்கும் கவலையில்லை,
ஏனெனில் இறுதியில் பார்த்தால் எதுவும் உண்மை இல்லை.

பின்தொடர்பவர்கள், கருத்துகள், விருப்பங்கள்
இதற்கெல்லாம் யார் உண்மையில் பணம் செலுத்துகிறார்கள்?
Twitter, Snapchat, Instagram, Facebook, Youtube
நான் உண்மையில் எல்லாவற்றையும் பின்தொடர்ந்து ஓட வேண்டுமா?

தெரியாத முகங்கள், போலி புன்னகை
மற்றும் ஆண்கள் மூச்சிரைப்பதைப் பாருங்கள்.
இங்கே விளம்பரம், அங்கே தயாரிக்கப் பட்ட பொருட்கள்
இது எல்லாம் உண்மையில் அற்புதமானதா?

MIAMI, NEW YORK, BERLIN, PARIS, BARCELONA
தவறான கண் இமைகள், குளிர்ச்சியான போஸ்கள், அழகு ஊட்டும் மேக்கப்
நம்மையெல்லாம் பொறாமைப் பட்டு பார்க்க  விரும்புகிறார்கள்,
எதையோ சாதித்த உணர்வு அவர்களுக்கு...

இங்கே விடுமுறை, அங்கே செல்ஃபி,
நீங்கள் உண்மையில் இன்னும் இந்த இடத்தில் தான் இருக்கிறீர்களா?
பின்தொடர்பவர்கள், நண்பர்கள், சந்தாதாரர்கள்
இவர்களில் யார் உங்களுடன் பயணிக்கிறார்கள்?
அதை வடிகட்டி, பெரிய சாதனை செய்த உணர்வு
இறுதியில் பார்த்தால் எதுவும் உண்மை இல்லை.
எதுவும் உண்மை இல்லை !!!
Title: கவிதையும் கானமும்-015
Post by: Killivalavan on January 25, 2023, 02:26:21 pm
நான் சடலமாகி என்னுயிர்
இவ்வுடலின் உள்ளேயே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது

என் முதுகுத் தண்டில்
துவங்கி கணுக்கால்
வரைப் பயணிக்கிறேன்

இடது கைப் நடுவிரல் நகம்
துவங்கி வலது நடுவிரல்
நகம் வரைப் பயணிக்கிறேன்

நெற்றிப் பொட்டிலிருந்து
நொட்டாங்கால் பெருவிரல்
வரைப் பயணிக்கிறேன்

உச்சந்தலையில் இருந்து
உள்ளங்கால் வரையிலும்
பயணிக்கிறேன்

இருதயத்தில் துவங்கி
இடுப்பெலும்புச் சதை
வரைப் பயணிக்கிறேன்

எதையுமே விட்டு வைக்காமல்
முழுக் கூட்டையும் அலசிக்
கொண்டிருக்கிறேன்

இரத்த ஈரத்தில் நனைந்தாலும்
தப்பித்து விடலாம் என்றுத்
தேடிக் கொண்டிருக்கிறேன்

ஈரல் புழு முதல் சிறு
துளைக் கூட விடாமல்
துலாவிக் கொண்டிருக்கிறேன்

இந்த இருட்டில் எந்தப் பாதையையும்
தராமல் நீ நிறைந்து அனைத்தையும்
மறைத்துக் கொண்டிருக்கிறாய்

நீ இருக்கும் ஒரேக் காரணத்தால்
இக்கூட்டை விட்டுக் கூட உயிரைப்
பிரிக்கக் கூட முடியவில்லை

நிம்மதியாய் விலகி சாகவும்
கூட விடாத நீ ஏன் இன்னும்
இடைவெளியை அதிகரித்துத்
தொலைவாகிப் போனாய்..??
Title: Re: கவிதையும் கானமும்-015
Post by: NATURE LOVER on January 25, 2023, 05:07:28 pm
"விஞ்ஞானம் அறிவியலும் வளர வளர!!
"விஞ்ஞானம் அறிவியலும் வளர வளர!!
"ஏனோ விரக்தியும் அதிகமாச்சு!!

"விட்டில் இருக்க அடங்க மறுத்த காலம் போயி.... இப்போ வாட்ஸ் அப் உள்ளே நம் பழக்கம் முடங்கிப் போச்சு!!!
"கூடிப் பேசி சந்தோஷமாக குலவியது இப்போ குரலக் கூட மறந்து போச்சு!!!
"இந்த போதை மிகுந்த கைபேசியால் இங்கு பல உறவும் மறந்தே போச்சு!!!

"பக்கத்தில் இருப்பவனை ஏனோ பார்க்கக் கூட தோனல... பத்து நிமிடம் நம் கைபேசியை மறந்து பயணிக்க முடியல"...

"ஆறு அங்குல அளவுல நீ உலத்தையே அடக்கிவச்ச"
"ஓடி விளையாடி திரிஞ்சவன நீ ஒரு மூலையில இருக்கவச்ச"
"சுறுசுறுப்பா இருந்தவன சோம்பேரியா ஆக்கிவச்ச....  உடல் உழைப்பை மறக்கவச்சி அவன் கொழுப்ப ஏத்திவச்ச"
"முகம் அறிந்த உறவுகளை முழுசா நீ மறக்க வச்ச....  முகம் தெரியாத மனிதர்களை நீ முகநூலில் தேடவச்ச"

"முகநூலில் கணக்கு வெச்சு நம்ம முற்றிலுமா முடங்கிப் போனோம்!!!
"முகநூலில் கணக்கு வெச்சு நம்ம முற்றிலுமா முடங்கிப் போனோம்!!!
"சுக துக்கம் அனைத்தையும் அதன் சுவரில் எழுதியே உறங்கிப் போனோம்!!!

"செல்ஃபியைக் கானும் போது"
"செல்ஃபியைக் கானும் போது"
எனக்கு ஒன்று மட்டும் புரியுது
உலகமே அனாதயாய் இன்று உலவுதுன்னு தெரியுது"

"வாட்ஸ் ஆப், பேஸ் புக் என்று டெக்னாலஜி வளர்ச்சியை நோக்கி போகுது!!!
"மனிதனின் சுற்றமும், நட்பும் வீழிச்சியை நோக்கி போகுது!!!

"பல நூறு மைல் தொலைவை நிமிடத்தில் தாண்டினாய்....  பிரிந்து வாழும் உறவுகளை பக்கத்தில் காட்டினாய்"
"அவசர உலகத்தில் மிக அவசியமாய் ஆகின்றாய்....  அலைக்கற்றை பல கொண்டு அகிலத்தை ஆள்கின்றாய்"
"மக்களை கட்டிப்போடும் வித்தையில் நீ வல்லவன்"
"உன்னைச் சரியாக கையாண்டால் என்றும் நீ நல்லவன்"

"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!!!
"கைபேசியை அளவோடு பயன்படுத்தினால் நம் அனைவருக்கும் நன்று!!!