GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Coffee on November 13, 2022, 10:10:50 pm

Title: கவிதையும் கானமும்-010
Post by: Coffee on November 13, 2022, 10:10:50 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk010.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-010
Post by: LOVELY GIRL on November 13, 2022, 11:37:57 pm
வலிகளை விட கொடுமையனது
நாம் நேசிக்கும் ஒருவரிடம் நாம் விரும்பும் போது பேச முடியாமல் போவது..

தொலைத்தூரக் காதலில் என்னைத் தொலைத்தவள் நான்..

முகத்தை நேரில் கண்டதும் இல்லை
நெருங்கி கட்டி அணைத்ததும் இல்லை

உன் தோள் சாய்ந்து துன்பங்களை தீர்த்ததும் இல்லை

என்றோ ஒரு நாள் உன்னை பார்ப்பேன் என்று நானும்..
அந்த நாட்களுகாக காத்திருக்கும் நீயும்..

நமக்கிடையே தொலைவுகள் அதிகமாய் இருந்தாலும் .
தோற்பதில்லையடா நம் காதல்..

உணர்வை விவரிக்க முடியாது,
என்னால் உண்மையில் முடியாது,
நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை,
நாளின் ஒவ்வொரு நொடியும் நான் உன்னை இழக்கிறேன்,
நான் உன்னை எப்போதும் இழக்கிறேன்,
எல்லா நேரத்திலும் இது மிகவும் கடினமாக உள்ளது,
அன்பே நான் உன்னை விரைவில் பார்க்க வேண்டும்,
நான் உன் பிரிவை பெரிதும் உணர்கிறேன்..!

உண்மையான அன்பில், குறுகிய தூரம் மிகப்பெரியது மற்றும் மிகப்பெரிய தூரம் பாலமாக முடியும்..!

தொலை தூரம் நீ இருந்தாலும் என் சந்தோசத்தை பகிர்ந்திடவும் கவலையில் தோல் சாய்ந்திடவும் தவறாமல் என்னுளே வருகை தருகிறது உன் நினைவுகள்..!

என் கண்ணா நீ வருவாய் என்று காத்திருக்கும் உந்தன் SRI..!

என் கவி பாடும் குயிலுக்கு நன்றி..
என் கவி பாடும் RIJIA உங்கள் குரலுக்கும் நன்றி
Title: Re: கவிதையும் கானமும்-010
Post by: Sanjana on November 14, 2022, 05:07:37 am

அழாதே… மலைகளும் வயல்களும் நம்மை பிரிக்கும்
ஆனால் அவைகளை தாண்டி நான் உன்னை நினைக்கிறேன்.
விடியல் உதயமாகும் போது நான் உன்னை நினைக்கின்றேன்
அந்தி சாயும் நேரத்தில் நான் உன்னை நினைக்கிறேன்
எப்போது நட்சத்திரங்களின் இராணுவம் கூடுகிறதோ
அப்போதும் உன்னை நினைக்கிறேன்…
ஏனெனில் இதயத்தில் காதல் ஒளிரும் என்றும்…

ஒரு காலை நாம் இருவரும் சந்தித்தவேளை
இரண்டு இதயங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தன
யாருமே புரிந்து கொள்ளவில்லை அவ் உறவின் ஆழத்தை
ஒருவருக்கொருவர் ஆழ்ந்த விசுவாசமுள்ளவர்கள்,
ஆனால் இன்று நாம் பிரிந்து செல்ல வேண்டும்!
சக்தி வாய்ந்த உள்ளுணர்வு ஒன்றிணைத்தது,
இன்று அதுவே நம்மை பிரிக்கிறது
அது விதியின் போக்காகும்,
ஆனால் இதயத்தில் காதல் ஒளிரும் என்றும்…

அன்று எங்களைப் பார்த்து சந்திரன் சிரித்தான்
நட்சத்திரங்கள் முன்னால் காதல் ஒப்புதல் வாக்குமூலமா என்று,
இன்றும் எங்களைப் பார்த்து சிரிக்கின்றான்
உங்கள் காதல் எங்கே என்று ….
துரோகம் நம்மை பிரிக்கின்றது என்று அவனுக்கு தெரியுமா?
மனக்கசப்பு  நம்மை பிரிக்கின்றது என்று அவனுக்கு தெரியுமா?
புரிந்துணர்வு இல்லாமை நம்மை பிரிக்கின்றது என்று  தெரியுமா?
ஆனால் இதயத்தில் காதல் என்றும் ஒளிரும் என்று சந்திரனுக்கு தெரியும் …

என் இதயம் காலியாக உள்ளது
நான் உன்னை இன்னும் நேசிக்கிறேன்
என்னை முழுமையாக்கினாய் நீ
உன்னை நினைத்து கசப்புடன் அழுகிறேன்
ஒவ்வொரு அடியும் உன்னை நினைக்கிறேன்
ஒவ்வொரு நொடியும் என் ஆழமான காயம்
நினைவூட்டும் உன் உறவை….
 ஆனால் இதயத்தில் காதல் ஒளிரும் என்றும்…

"நேசித்தேன், நம்பினேன், பிரிந்தேன் "


"LOVE FAILURE IS NOT LIFE FAILURE"   . THIS IS MY MOTTO FOR MY LIFE...

THANK YOU KG TEAM and GTC  FOR THIS OPPORTUNITY.

WITH LOVE
YOUR SANJU
Title: Re: கவிதையும் கானமும்-010
Post by: Barbie Doll on November 14, 2022, 10:13:41 am
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் எப்பொழுதும் அழகான நினைவுகளை கொடுக்கும்..

வெறுக்கவும், மறக்கவும் முடியாத காதலை எனக்கு கொடுத்தவன் நீ..
காலை முதல் இரவு வரை என்னுடனே பயணித்து, தூங்கும் போது கூட கனவாக வந்த என் காதலே..

இன்று கண் விழித்து பார்க்கிறேன் உன்னுடைய குறுஞ்செய்தி இல்லை, என்னை சுற்றி எங்கும் தனிமையையே உணர்கிறேன்.. காதலிக்க தெரிந்த நமக்கு வாழத் தெரியவில்லையா என்ன?.. ஆம், வாழத் தெரியவில்லை..

எப்படியும் பேசிவிடுவாய் என்ற தைரியத்தில் சண்டையிட்டேன் இத்தனை நாள்.. ஆனால் இன்றோ என்னிடம் பேசிவிடாதே என மனம் கெஞ்சுகின்றது.. ஆமாம் சேர்ந்து வாழ முடியாத நாம் பேசி என்ன பயன்?..

நாம் இருவரும் நம் காதலை உணர்ந்த தருணம் எத்தனை அழகானது என்று எண்ணும் போது மனம் கனக்கிறது.. நான் ஏன் உன்னை பார்த்தேன், எதற்காக நீ என்னிடம் பேசினாய் என ஆயிரம் கேள்விகள் என்னுள்.. விடை தெரியாத கேள்வியாகி போனது நம் காதல்..

நீ வாழ வேண்டும்... உனக்கான வாழ்க்கையை நீ வாழ வேண்டும் சென்று விடு என்னை விட்டு..
நம் காதலின் தண்டனை எனக்கு மட்டும் போதும்,, என் காதல் பொய்யானது என்று உன்னுள்ளே விதைத்துவிடு.. அப்போது தான் என் நினைவுகள் உன்னை விட்டு அகலும்..

அன்புடன் ✓✓BarBie DoLL✓✓
Title: Re: கவிதையும் கானமும்-010
Post by: RavaNaN on November 14, 2022, 10:51:40 am


நாவினால் போரிட்டு
நாள்முழுக்க பேசாது
கசிந்தோடும் கண்ணீரும்
காரணமில்லா கலவரமும் (மனதில்)
முகம்கானா மூர்க்கமும்
முடிவில்லா மௌனமும்
 
மனம்முழுக்க ஏக்கமும்
மாறாத  அன்பும்
மறக்கமுடியா நாணமும்
மனமயங்கும் புன்னகையும்

இப்படி
மனமுழுக நிறைந்திருக்க
மங்கையவள் மனமிறங்க 
மன்னிப்பும் கோரிவிட்டேன்
மௌனமும் கலையாதோ
மனமும்தான் நிறையாதோ

காதலோடு கைகோர்த்து
காரணமின்றி காதலித்து
காலம்முழுக்க காதலோடு
சென்றிடுவோம் உலவிரவு (date night)
                         - இப்படிக்கு இராவணன் என்கிற பச்சப்பிள்ளை
Title: Re: கவிதையும் கானமும்-010
Post by: NATURE LOVER on November 14, 2022, 11:28:20 am
வருடி விட்டு செல்லும்
உருவமில்லா காற்றைப் போல....
அவளின் அன்பில் நான் கரைந்து போய்விட்டேன்....
தேடினாலும் அவளின் அந்த அன்பு மீண்டும்
கிடைக்கப் போவதில்லை!!!!!
"பெண்னே உன்னுடன் நான் இருந்த நினைவுகளை
மறைக்கப்போவதும் இல்லை!!!
மறக்கப்போவதும் இல்லை!!!"

"முதல் முறை அவளின் அழிகிய நிலவு போன்ற முகத்தை பார்த்து தான் அழகின் பிரமிப்பின் உண்மையை உணர்ந்தேன்!!! ஆனால் இன்று அவளின் அழகிய நிலவு முகத்தை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய கண் விழிகளைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்!!!
ஆனால் இன்று அவளையே என் விழிகளால் நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் பேச்சின் ஓசையை கேட்டு தான் ஓசையின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய பேச்சின் ஓசையை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய சிரிப்பின் ஒலியைக் கேட்டு தான் ஒலியின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய சிரிப்பின் ஒலியை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை இப்படி ஒட்டு மொத்த அழகை படைத்த அந்த கடவுளின் அழகிய பிரம்மிப்பை கண்டு வியந்து போனேன்"!!!!
இன்று அவளின் பிரிவால் என்னையே நான் தொலைத்ததாக உணர்கிறேன்!!!

அவளின் மனம் புன்னகைத்த போது பூக்களும் மலர்ந்தது!!!
அவளின் மனம் வாடிய போது பூக்களும் வாடியது!!!
இங்கு பூக்கள் என்று நான் சொல்வது பெண்ணே உன்னைத்தான்! ஏனென்றால் பெண்னே நீயே ஒரு பூவைப் போன்றவள் தான்!!!
பெண்னே இன்று உந்தன் பிரிவால் என் மனமும் வாடிப் போனது!!!

சுவாசிக்க முடியாத ஒரு கிரகத்தில் என்னால் எப்படி உயிர் வாழ முடியாதோ, ஆதே போன்று தான் நீ இல்லாத இந்த வாழ்க்கையை வாழ நினைத்து வாழ முடியால் தினம் தினம் கண்ணீர் சிந்துகிறேன்!!!
பெண்னே உன்னையும், உன்னுடன் சந்தோஷாமாக கழித்த அந்த நாட்களையும் என்னால் மறக்கவும் முடியாது!... வெறுக்கவும் முடியாது!...

நம் உறவின் நினைவுகளை கண்ணீர் துளி விட்டு அழிக்க முயற்ச்சிக்கிறேன்!!
ஆனால் என் கண்ணீர் துளியிலும் கூட உந்தன் நினைவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து செல்கிறதே தவிர, உந்தன் நினைவுகளை  மட்டும் என் மனதில் இருந்து என்னால் அழிக்கவே முடியவில்லை!!!

தினம் தினம் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும். எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளை சந்தித்து விடமாட்டோமா என்கின்ற அந்த ஒரு தருணத்தை எதிர் நோக்கி நான் என் மனதில் மகிழ்ச்சியோடும், சந்தோஷ்சத்தோடும், வலிகளோடும், கண்களில் கண்ணீரோடும் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். என்னவளே உனக்காக!!!

TRUE LOVE NEVER EVER FAILS !!!
உண்மையான காதல் ஒருபோதும் தோல்வியடைவதில்லை!!!

இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்
Title: Re: கவிதையும் கானமும்-010
Post by: RoJa on November 14, 2022, 10:15:58 pm
Anbai anaithavanum ne
azhuga vaithavanum ne
Sirikka vaithavanum ne
Sithara vaithavanum ne
Pasam vaithavanum ne
Pali potavanum ne
Maranthalum innum ennul ne
eppoluthum ne
Ennai thedi eppo varuvai ne
Kadhalodu kathirukkum nan..
Title: Re: கவிதையும் கானமும்-010
Post by: Yash on November 15, 2022, 04:15:02 pm
தனிமையில் அமர்ந்து சிந்தித்தேன் எங்கே இருக்கிறது நம் காதல் என்று..

நம் பார்வை பரிமாறுகையிலா?

நம் வார்த்தைகள் மரணிக்கும் மௌனத்திலா?

உன் கன்னக் குழியில் விழுந்த சிரிப்பிலா?

நம் விரல்கள் பின்னும் ஸ்பரிசத்தில்?

இல்லை, வேண்டாம் என்று சொன்னால் வேணும் என்றும், வேண்டும் என்று சொன்னால் வேண்டாம் என்றும் அடம்பிடிக்கும் உன் குழந்தை தனத்திலா?

எங்கிருக்கிறது உண்மையான காதல்!

உன்னோடு இடைவெளியின்றி இணையத் துடித்து இணையாது இறுகிப்போன இதயம் இது

சிகப்பு விளக்கு போட்டதை  மறந்து சிக்னலை கடக்கும் அனுபவம்!

வேகத்தடையில் ஏற்றிவிட்டு வேகத்தை குறைக்கும் நான்!

ஹாரன் சப்தம் கேட்காத நிலையில் ஒரு பயணம்!

குடிக்கும் தேநீரில் எனக்கு மட்டும் இனிப்பு இல்லை!

எவ்வளவு விலை கொடுத்தும் புன்னகையை வாங்க முடியவில்லை!

எனக்குள் மட்டும் நிசப்தம் நிலவுகிறது என்னை நானே தனிமைக்குள் அடைக்கிறேன் வாடிய பூவாக! ஒளியிழந்த நிலவாக!

காதல் தோல்வியா?
மன உளைச்சலா?
இல்லை வேறு ஏதுமா ?
தலைப்பு வைக்க தெரியவில்லை எனக்கு!

என்னை கடந்து செல்லும் தென்றல் காற்றே! என் என்னவளை தீண்டும் தருணம் என் தனிமையையும் அவளின் காதோரம் சொல்லி செல்லு !

முகவரி இல்லா கடிதமாய் தொலைந்து போனேன்! வா என் முகவரியாக✨🧢

                                                                                                   #🧢